Untitled Document
May 7, 2024 [GMT]
பாகிஸ்தானில் சொந்த குடும்பத்தை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!
[Tuesday 2022-02-01 08:00]

பாகிஸ்தானில் மொபைல் வீடியோ கேமுக்கு அடிமையான 14 வயது சிறுவன், தமது தாயார் உட்பட மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த சிறுவனின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டில் ஈர்க்கப்பட்டு அதிக நேரம் விளையாடி வந்த அந்த சிறுவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கனடாவில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!
[Monday 2022-01-31 16:00]

கனடாவில் அரசின் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் அவா்கள் தலைநகா் ஒட்டவாவில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்: வெளிச்சத்துக்கு வந்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள்!
[Monday 2022-01-31 16:00]

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.


கனடா எல்லையில் பலியான குடும்பத்தின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பில் வெளியான தகவல்கள்!
[Monday 2022-01-31 16:00]

கனடாவில் பனியில் உறைந்து உயிரிழந்த குடும்பத்தாரின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி , கனடா அமெரிக்க எல்லையில் நான்கு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உயிரிழந்தவர்கள் இந்தியாவிலுள்ள குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.


அடுத்தடுத்து தாக்கிய புயல்கள்: இருளில் மூழ்கிய 16,000 வீடுகள் - ஸ்தம்பித்த பிரித்தானியா!
[Monday 2022-01-31 16:00]

பிரித்தானியாவை அடுத்தடுத்து தாக்கிய மாலிக் மற்றும் கோரி புயல்களால் 16000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. Met Office என்ற வானிலை நிறுவனம் பிரித்தானியாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புயல் தாக்கும் என தெரிவித்திருந்தது. மேலும் அவற்றின் சிலப்பகுதிகளுக்கு அம்பர் புயல் எச்சரிக்கையும் விடுத்திருந்த நிலையில் வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை பகுதிகளை புயல்கள் தாக்கியுள்ளது.


பற்றி எரிந்த குடியிருப்பு: சிறுமியை காப்பாற்ற இளைஞர்கள் செய்த செயல்!
[Monday 2022-01-31 16:00]

ரஷ்யாவின் மாஸ்கோவில் தீப்பிடித்த கட்டிடத்தின் 9வது மாடியில் சிக்கிக்கொண்ட சிறுமியை இரு இளைஞர்கள் இணைந்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. கடந்த 29 திகதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிறுமி ஒருவர் 9வது மாடியில் சிக்கிக்கொண்டதை தொடர்ந்து அவரை மீட்கும் முயற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டு அந்த சிறுமியை வெற்றிகரமாக காப்பாற்றினார்கள்.


பிரதமர் ட்ரூடோவை வறுத்தெடுக்கும் இந்திய இணையவாசிகள்!
[Monday 2022-01-31 08:00]

கனடாவில் தடுப்பூசி ஆணைக்கு எதிராக போராட்டங்கள் வைத்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியுள்ளதை விமர்சித்து இந்திய சமூக ஊடக பயனர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் போன்ற எல்லை தாண்டிய டிரக்கர்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடிய அரசாங்கத்தின் ஆணையை டிரக்கர்கள் எதிர்க்கின்றனர்.


மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் ஜோ பைடன்: டிரம்ப் குற்றச்சாட்டு!
[Monday 2022-01-31 08:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் தலையீடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-


ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ‘பறக்கும் படகு’: துபாயில் அறிமுகம்!
[Monday 2022-01-31 08:00]

துபாயில், சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.


கனடாவில் பரபரப்பு: குடும்பத்துடன் தலைமறைவான ட்ரூடோ!
[Sunday 2022-01-30 18:00]

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா பிரதமரான் ஜஸ்டின் சமீபத்தில் எல்லையை கடக்க லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என அறிவித்திருந்தார்.


கடவுள் அனுப்பியதாக கூறி ஜோ பைடனை கொல்ல புறப்பட்ட நபர்!
[Sunday 2022-01-30 18:00]

அமெரிக்காவில் கடவுள் அனுப்பியதாக கூறி, ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல புறப்பட்டு சென்ற நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபரே ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல தலைநகர் புறப்பட்டு சென்றவர். கட்டுமான ஒப்பந்ததாரரன Scott Merryman கடவுள் தம்மை அனுப்பியதாகவே விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க விடுதியில் பரவிய விஷவாயு: உயிருக்கு போராடும் 7 பேர்!
[Sunday 2022-01-30 18:00]

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள Hampton விடுதியில் Carbon Monoxide விஷவாயு பரவியதன் காரணமாக அங்கிருந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விஷவாயு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடங்குவதாக மீட்புத்துறை அதிகாரி Jay Riley கூறினார்.


7-வது முறையாக ஏவுகணை சோதனை: ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வடகொரியா!
[Sunday 2022-01-30 18:00]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், வட கொரியா - அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியது.


அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்: நண்பர்கள் வெளியிட்ட உருக்கமான பதிவு!
[Sunday 2022-01-30 18:00]

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த நிலையில் அது குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பேசியுள்ளனர். Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திக குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார்.


அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கையை பாதித்த பனிப்புயல்!
[Sunday 2022-01-30 08:00]

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.


சுவிஸில் 600 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பெண்ணுக்கு வழங்கப்பட்ட தேவாலய பொறுப்பு!
[Sunday 2022-01-30 08:00]

சுவிட்சர்லாந்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண் தேவாலயத்தில் இரவு நேர காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாலின சமத்துவத்தில் பின்தங்கியிருக்கும் நாடான சுவிட்சர்லாந்தில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ஜேர்மன் அருங்காட்சியகத்தில் வழுக்கையாக வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய மகாராணியின் சிலை!
[Sunday 2022-01-30 08:00]

ஜேர்மனியில் உள்ள Panoptikum என்ற மெழுகு அருங்காட்சியகம் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை அவரது தொப்பியின் கீழ் வழுக்கையாக வைத்துள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை வழுக்கையாக வடிவமைத்தது குறித்து அருங்காட்சியகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​ஹம்பர்க்கில் உள்ள Panoptikum-ன் நிர்வாகப் பங்குதாரரான Susanne Faerber, பணத்தைச் சேமிப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.


அச்சுறுத்தும் புதிய 'நியோகோவ்' வைரஸ்!
[Saturday 2022-01-29 16:00]

சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நியோகோவ் கொரோனா வைரஸ் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. வுஹான் ஆராய்ச்சியாளர்கள் குழு தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களில் நியோகோவ் என்ற புதிய வகையான கொரோனா வைரஸைக் கண்டறிந்துள்ளது. ஒரு ஆய்வில், இந்த வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். "ஆய்வில் கண்டறியப்பட்ட வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது கூடுதல் ஆய்வு தேவைப்படும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.


அவுஸ்திரேலியாவில் பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்!
[Saturday 2022-01-29 16:00]

அவுஸ்திரேலியாவில், 40வயதான இலங்கையர் ஒருவர் தமது உயிரை போக்கிக்கொள்வதற்கு முன்னதாக தமது நான்கு வயது மகளையும் ஆறு வயது மகனையும் கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஒன்ராறியோவில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!
[Saturday 2022-01-29 16:00]

ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்களால் முன்னரும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத தொடக்கத்தில் மர்ம நபர்களால் வீடு புகுந்து 37 வயதான Elnaz Hajtamiri என்பவர் கடத்தப்பட்டார். பொலிஸ் வேடத்தில் வந்த மூவர் கும்பல் இவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இங்கிலாந்தில் பிறந்து 8 வாரங்களே ஆன பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்!
[Saturday 2022-01-29 16:00]

இங்கிலாந்தில் பிறந்து வெறும் 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பெஞ்சமின் ஓ'ஷியா (26) மற்றும் நவோமி ஜான்சன் (24) தம்பதி கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் மருத்துவர்கள் . இருவரும், 8 வாரமே ஆன தங்கள் மகள் அமினா-ஃபயேவை கொடூரமாக சித்திரவதை செய்து 60-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு தாக்கி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.


கனடா தலைநகர் நோக்கி படையெடுத்த லொறிகள்: பாராளுமன்ற வளாகத்தில் உயர் பாதுகாப்பு!
[Saturday 2022-01-29 16:00]

கனடா தலைநகர் நோக்கி லொறிகள் ஊர்வலம் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என ட்ரூடோ நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான லொறிகள் தலைநகர் நோக்கி ஊர்வலம் சென்றுள்ளது.


மேலும் 12 நாடுகளை 'அதிக ஆபத்துள்ள பகுதிகள்' பட்டியலில் சேர்த்த ஜேர்மனி!
[Saturday 2022-01-29 07:00]

ஜேர்மனி அதன் 'அதிக ஆபத்துள்ள பகுதிகள்' பட்டியலில் மேலும் 12 நாடுகளைச் சேர்த்தது, மேலும் 13 நாடுகளை நீக்குகிறது. கடந்த மூன்று வாரங்களில் 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை 'அதிக ஆபத்துள்ள பகுதிகள்' பட்டியலில் சேர்த்த பிறகு, ஜேர்மனி மேலும் 12 நாடுகளை அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.


தலைக்கேறிய பப்ஜி மோகம்: முழு குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்!
[Saturday 2022-01-29 07:00]

பாக்கிஸ்தானில் ஆன்லைன் கேம் PUBG-ன் தாக்கத்தால் 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் இரண்டு மைனர் சகோதரிகள் உட்பட தனது முழு குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வாரம் பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாஹூரில் நடந்துள்ளது.


அமெரிக்காவில் விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட கனேடியருக்கு சிறை!
[Saturday 2022-01-29 07:00]

அமெரிக்காவில் விமானப் பணிப்பெண்ணைத் தவறாக தீண்டியதற்காக கனேடியர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் திகதி கான்கனில் இருந்து மியாமிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.


யுத்தங்களில் அழகிய இளம்பெண்களை களமிறக்கவிருக்கும் ரஷ்யா!
[Friday 2022-01-28 16:00]

ரஷ்யா உக்ரைன் நாட்டை ஊடுருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், லிப்ஸ்டிக் அணிந்த அழகிய பெண்களை இரகசிய ஆயுதமாக புடின் களமிறக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் 160,000 பெண்கள் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இராணுவச் சீருடையில் பெண்களுக்கென தனியாக உள்ளாடைகள் கூட கிடையாது, ஆண்களுடைய உள்ளாடைகளைத்தான் அவர்கள் அணியவேண்டும்.


கட்டார் நாட்டில் இலங்கையர் சுட்டுக்கொலை!
[Friday 2022-01-28 16:00]

கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தெரியவருகையில், கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தில் குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த காவலாளி, அவரின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார்.


'ஒலிம்பிக் விடயத்தில் தலையிடக்கூடாது' - அமெரிக்காவை எச்சரித்த சீனா!
[Friday 2022-01-28 16:00]

சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலையிடக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா