Untitled Document
May 17, 2024 [GMT]
கனடாவில் மாணவ, மாணவிகளிடம் அத்துமீறிய 34 வயது ஆசிரியர்!
[Sunday 2022-01-16 17:00]

கனடாவில் தன்னிடம் படித்த மாணவ, மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 34 வயதான நபர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.


தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு காத்திருக்கும் ஆபத்துகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Sunday 2022-01-16 17:00]

கொரோனா தடுப்பூசி போடாத கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆயவில் தெரியவந்துள்ளது. ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கொரோனா தடுப்பூசி போடாத கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயமும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.


கனடாவில் சொந்த மகளை கடத்திய தந்தை: சொன்ன காரணம்!
[Sunday 2022-01-16 08:00]

கனடாவில் தடுப்பூசி மறுப்பாளரான தந்தை ஒருவர் தமது 7 வயது மகளை, தாயாரிடம் இருந்து கடத்தி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது முன்னாள் கணவரால் 7 வயதேயான மகள் கடத்தப்பட்டதாக கூறும் Mariecar Jackson, இதுவரை தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு அமெரிக்காவின் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
[Sunday 2022-01-16 08:00]

பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹங்கா டோங்கா - ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்தது.


அமெரிக்காவில் யூத கோயிலுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பக்தர்களை பிணைக்கைதியாக்கிய நபர்!
[Sunday 2022-01-16 08:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் யூத கோவிலுக்குள் புகுந்து பக்தர்களை பிணைக்கைதியாக்கிய நபர், தமது சகோதரியை விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் Colleyville பகுதியில் அமைந்துள்ள பெத் இஸ்ரேல் என்ற யூத கோவிலுக்குள் புகுந்தே அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.


இலங்கைக்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கை!
[Saturday 2022-01-15 16:00]

இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவுகள் எரிபொருட்கள் ,போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.


முன்னணி நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தும் வடகொரியா!
[Saturday 2022-01-15 16:00]

அடிக்கடி அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.


நடுவானில் பிரசவ வலியால் துடித்த பெண்: ஓடிச்சென்று உதவிய கனேடிய மருத்துவர்!
[Saturday 2022-01-15 16:00]

விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கனேடிய மருத்துவர் ஒருவர் அவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார். ரொரன்றோ பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் Dr. ஆயிஷா காதிப் (Dr Aisha Khatib), உகாண்டாவிலுள்ள Entebbe என்ற இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.


ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து: ஒருவர் மரணம்!
[Saturday 2022-01-15 16:00]

பிரித்தானியாவுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கும் கனவுடன் புறப்பட்ட புலம்பெயர்வோர் ஒருவர் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் நேற்று நிகழ்ந்தது. வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறிய படகு ஒன்றில் சிலர், ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களது படகு பழுதடைந்துள்ளது.


'அதிக-ஆபத்தான பகுதிகள்' பட்டியலில் மேலும் 35 நாடுகளை சேர்த்த ஜேர்மனி!
[Saturday 2022-01-15 16:00]

ஜேர்மனியின் 'அதிக-ஆபத்தான பகுதிகள்' பட்டியலில் மேலும் 35 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. Omicron வைரஸ் உலகளவில் மீண்டும் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில், மேலும் 35 உலக நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜேர்மனிக்கு பயணம் செய்யும் போது கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை முதல், இந்த நாடுகள் ஜேர்மனியின் அதிக ஆபத்துள்ள பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.


கனடாவில் வீடு புகுந்து பெண்ணை கடத்திய மர்ம கும்பல்!
[Saturday 2022-01-15 08:00]

கனடாவில் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அதிரடியாக புகுந்த கும்பல் ஒன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பதவிகள், பட்டங்கள் பறிப்பு: கேள்விக்குறியான இளவரசர் ஆண்ட்ரூவின் எதிர்காலம்!
[Saturday 2022-01-15 08:00]

துஸ்பிரயோக வழக்கில் சிக்கி அமெரிக்க நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் இளவரசர் ஆண்ட்ரூ தமது 30 அறைகள் மற்றும் 7 படுக்கையறை கொண்ட சொகுசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் துஸ்பிரயோக வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் இளவரசர் ஆண்ட்ரூ, அவரது தாயார் பிரித்தானிய ராணியாரின் நடவடிக்கையால் தற்போது வெறும் குடிமகனாக மாறியுள்ளார்.


தனிமைப்படுத்தல் நாட்களை குறைத்த பெடரல் கவுன்சில்: எச்சரிக்கும் சுவிஸ் நிபுணர்கள்!
[Saturday 2022-01-15 08:00]

கொரோனா தொடர்பில் தனிமைப்படுத்தல் நாட்களை ஐந்தாக குறைத்துள்ளது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சுவிஸ் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்துக்கு வரும் பயணிகள் இனி ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தால் போதும். குறித்த அறிவிப்பை பெடரல் கவுன்சில் புதன்கிழமை அறிவித்துள்ளது.


கனேடிய நகரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்: 18 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்த தீப்பிழம்பு!
[Friday 2022-01-14 18:00]

கனடாவின் Ottawa நகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ள நிலையில், கட்டிடம் ஒன்றில் பற்றிய தீ, 15 முதல் 18 மீற்றர் உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Ottawa நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Merivaleசாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.


ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: பாதிக்கப்படவிருக்கும் மற்றொரு நாடு!
[Friday 2022-01-14 18:00]

இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று அமெரிக்க கூறியுள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கனடாவின் இரு பெரும் மாகாணங்களில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கானோர்: அதிர்ச்சி தகவல்!
[Friday 2022-01-14 18:00]

கடந்த ஆண்டில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று வெளியான அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து, கனடாவின் ரொரன்றோ மற்றும் மொன்றியலிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறி சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது.


தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுமா? - உலக சுகாதார மையம் விளக்கம்!
[Friday 2022-01-14 18:00]

தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து உலக சுகாதார மையம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கொரோனா என்னும் கோவிட்-19 பெருந்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார பட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகின்றது. இதில் நிறைமாத கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.


உச்சமடையவிருக்கும் ஒமிக்ரான்: கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை!
[Friday 2022-01-14 18:00]

கனடாவின் சில பகுதிகளில் Omicron வைரஸ் திரிபு உச்சத்தை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.


ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்!
[Friday 2022-01-14 08:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர். குறைந்தது நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் ஒன்று அருகிலுள்ள பள்ளியைத் தாக்கியதாகவும் ராணுவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.


துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ: பிரித்தானிய ராணியார் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2022-01-14 08:00]

அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் பதவிகளை ராணியார் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்து பணிகளில் இனிமேல் ஈடுபட வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு எந்த புது பொறுப்புகளும் அளிக்கப்படமாட்டாது என்றே தெரிய வந்துள்ளது.


இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கிய கியூபெக் மாகாணம்!
[Friday 2022-01-14 08:00]

கியூபெக் மாகாணத்தில் இரவு 10 மணி முதல் அமுலுக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவானது திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், எதிர்வரும் நாட்களில் இரவு நேரங்களிலும் உணவகங்கள் திறந்து செயல்பட வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார் மாகாண முதல்வர்.


கோடிக்கணக்கான மக்களை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்துள்ள சீனா: அம்பலமான அதிர்ச்சி தகவல்!
[Thursday 2022-01-13 16:00]

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி, 31 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசின் புதிய ஆபத்தான மாறுபாடு ஓமைக்ரான் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த மாறுபாட்டை தவிர்க்க சீனா தனது நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.


4,000 பேரை கொடூரமாக சித்திரவதை செய்த நபர்: ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை!
[Thursday 2022-01-13 16:00]

சிரியாவில் 4,000 பேரை அணு அணுவாக சித்திரவதை செய்த ஒருவருக்கு, ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று ஆயுள்தண்டனை விதித்துள்ளது... அப்படி எளிதாக இந்த செய்தியை முடித்துவிடமுடியாது! காரணம், இந்த செய்தி அசாதாரணமான ஒரு செய்தி. 2011ஆம் ஆண்டு, சிரிய அதிபரான பஷார் அல் அசாதுக்கு (Bashar al-Assad) எதிராக சிரியாவில் போராட்டங்கள் வெடித்தன. தன்னை எதிர்ப்போரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயன்றார் அசாத்.


இந்நிறுவனத்தின் தடுப்பூசியால் மேலும் ஒரு பிரச்சனை: எச்சரிக்கை செய்தி!
[Thursday 2022-01-13 16:00]

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் கொரோனாவுக்கெதிராக போராடும் வகையில் நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கி வருவது மக்களுக்குத் தொண்டாற்றுவதாக இருந்தாலும், மறுபக்கம் ஒவ்வொரு நிறுவனமுமே தங்கள் லாபத்தையும் கருத்தில் கொண்டுதான் செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.


கொவிட் விதிமுறைகளை மீறிய பிரதமர் போரிஸ்: பதவி விலக வலியுறுத்தல்!
[Thursday 2022-01-13 16:00]

பிரிட்டனில் முடக்கல் நிலை அமுலிலிருந்த காலக்கட்டத்தில் கொவிட்-19 விதிமுறைகளை மீறி ஒரு மதுபான விருந்தில் கலந்து கொண்டதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) ஒப்புக் கொண்டுள்ளார். இந் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை (டோரிக்கள்) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.


தடுப்பூசியை எதிர்த்த கனேடிய தந்தைக்கு ஏற்பட்டுள்ள விபரீதம்!
[Thursday 2022-01-13 16:00]

கனடாவில் 12 வயது சிறுமியை சந்திக்க அவளது தந்தைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது! கியூபெக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியைப் பிரிந்த நிலையில், அவரது 12 வயது மகள், அவரது மனைவியுடன் வாழ்ந்து வருகிறாள். அதாவது, அந்தப் பெண் கணவரைப் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு நான்கு வயது மற்றும் ஏழு மாதங்களே ஆன வேறு இரண்டு பிள்ளைகளும் இருகிறார்கள்.


"ஒரு வாரத்தில் ஓமிக்ரான் பரவல் உச்சத்தை தொடும்" - கனடாவை எச்சரித்த தொற்றுநோயியல் நிபுணர்!
[Thursday 2022-01-13 08:00]

கனடாவில் ஓமிக்ரான் பரவல் லேசாக குறைந்து காணப்பட்டாலும், இன்னும் ஒரு வாரத்தில் அதன் உச்சத்தை தொடும் என்றே தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். மனிடோபாவில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் விகிதம் தற்போது 48 சதவீதமாக உள்ளது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: எச்சரிக்கும் அரசியல் கட்சிகள்!
[Thursday 2022-01-13 08:00]

சுவிட்சர்லாந்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி.கட்சியின் தேசிய கவுன்சிலர் முன்வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் அடுத்த இரண்டு வாரங்களில் உச்சம் தொட வாய்ப்பிருப்பதாக தேசிய கொரோனா அறிவியல் பணிக்குழுவின் தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளார்.

 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா