Untitled Document
May 18, 2024 [GMT]
ஆறு மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற கனேடியர்: அதிர்ச்சி பின்னணி!
[Saturday 2021-09-04 16:00]

பெண்ணுடன் ஏற்பட்ட தகராற்றின்போது ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார். Stoney Nakoda First Nation என்ற பகுதியில் வாழும் Tyriq Lyman Kootenay (21) என்பவருக்கும் Brenna Hunter என்ற பெண்ணுக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையின்போது Tyriq, Brennaவின் குழந்தையான Tanayahவைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.


இலங்கையரின் தாக்குதலால் நியூசிலாந்து அரசின் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றம்!
[Saturday 2021-09-04 16:00]

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தார்கள். பொலிசார் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.


ஊனமுற்ற மகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த 86 வயது தந்தை!
[Saturday 2021-09-04 16:00]

பிரித்தானியாவில் தனது ஊனமுற்ற மகளின் உயிரைக் காப்பாற்ற முயன்று 86 வயது தந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Cornwall பகுதியில் கடந்த புதன்கிழமை குறித்த சம்பவம் நடத்துள்ளது.


கோவிட்-19: கனடாவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்தது!
[Saturday 2021-09-04 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 27ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால், மொத்தமாக 27ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.


நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியான தகவல்!
[Saturday 2021-09-04 08:00]

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் குடும்பத்தினர் வேறு நாடுகளில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கு ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டவர் ஆறு வாடிக்கையாளர்களைக் கத்தியால் தாக்கினார்.


கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த கனேடிய மாகாணம்!
[Saturday 2021-09-04 08:00]

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கனேடிய மாகானம் ஒன்று ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, முதல் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அனைவருக்கும் 100 டொலர் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது ஆல்பர்ட்டா மாகாணம்.


தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!
[Saturday 2021-09-04 08:00]

தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமணப்பெண் மலை முகட்டில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை மொத்தம் உலுக்கியுள்ளது. குறித்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 31 வயதான ஃபவ்ஸியா ஜாவேத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொண்டாடிய சில நாட்களிலேயே எடின்பர்க் சென்றதாக கூறப்படுகிறது.


ஜேர்மனி - பிரித்தானியா இடையேயான பயணங்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட புதிய விதி!
[Friday 2021-09-03 16:00]

பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணங்கள் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


"உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" - வெளிவரும் தாலிபான்களின் உண்மை முகம்!
[Friday 2021-09-03 16:00]

காஷ்மீர் உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தாலிபான்கள் ஆட்சியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை நடத்த ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுமோ? என இந்தியா கவலை தெரிவித்துவரும் நிலையில், தாலிபான்களின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு வேடமிட்டு மோசடி வேலைகளில் ஈடுபட்ட கனேடிய பெண்!
[Friday 2021-09-03 16:00]

கனேடிய மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்தார்கள். உண்மையில், Brigitte Cleroux (49) என்னும் அந்த பெண், கடந்த 30 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.


நியூசிலாந்தை அதிரவைத்த இலங்கையர்: சுட்டுக்கொன்ற போலீசார்!
[Friday 2021-09-03 16:00]

சற்று முன் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் மக்களைத் தாக்கத் தொடங்கினார். அவர் தாக்கியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் மூவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பொலிசார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.


கொவிட்-19: கனடாவில் கணிசமாக உயர்ந்த பலி எண்ணிக்கை!
[Friday 2021-09-03 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,034பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.


"கொன்றாலும் பரவாயில்லை" - போராட்டத்தில் குதித்த ஆப்கான் பெண்கள்!
[Thursday 2021-09-02 16:00]

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்காக பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹெராட் மாகாண ஆளுநர் வளாகத்திற்கு வெளியே பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.


பெற்றோர்கள் கண்முன் தீயில் கருகி சாம்பலான அமெரிக்க சிறுவன்: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
[Thursday 2021-09-02 16:00]

அமெரிக்காவில் சார்ஜ் செய்யப்பட எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ பிடித்ததில், 9 வயது சிறுவன் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் புரூக்ளின் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.


"உதவிக்கு கூக்குரல் எழுப்பியும் யாரும் உதவ வரவில்லை" - கனடாவில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
[Thursday 2021-09-02 16:00]

தன் தங்கையின் கடைசி வார்த்தைகளை அந்த கனேடிய பெண்ணால் கடைசி வரை மறக்கமுடியாது என்றே கூறவேண்டும்... அக்கா, நான் சாகப்போகிறேன், பரவாயில்லை, நீங்கள் எப்படியாவது இங்கிருந்து ஓடிவிடுங்கள்... இதுதான் Della Duquetteஇன் தங்கை Charlene Graham (34)இன் கடைசி வார்த்தைகள்!


லண்டனில் நதிக்கரையொன்றில் குவிந்து கிடக்கும் ஆணுறைகள்: அதிர்ச்சி தகவல்!
[Thursday 2021-09-02 16:00]

லண்டனில் கொரோன கட்டுப்பாடுகளுடன் தேம்ஸ் நதிக்கரையில், நடந்த விழாவில் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அப்படியே விட்டுச் சென்றது, விழா ஏற்பாட்டாளர்களை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


கோவிட்-19: கனடாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது!
[Thursday 2021-09-02 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒன்ராறியோ மாகாண குடிமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Thursday 2021-09-02 06:00]

காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சுகாதார அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் குடிமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 2022, பிப்ரவரி 28ம் திகதிக்குள் சுகாதார அட்டை, ஒன்ராறியோ புகைப்பட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை புதுப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பிரித்தானியாவில் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: அதிர்ச்சி சம்பவம்!
[Thursday 2021-09-02 06:00]

பிரித்தானியாவில் பிரபல கார் உற்பத்தி ஆலைக்கு அருகே அடையாளம் காணப்படாத கல்லறையிலிருந்து 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மர்மமாகவே உள்ளது. பிரித்தானியாவின் Solihull பகுதியில் அமைந்துள்ள Jaguar Land Rover உற்பத்தி ஆலைக்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இருந்தே கடந்த நவம்பர் மாதம் 16 சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


தனது கற்பை ஏலத்தில் விட்ட சுவிஸ் இளம்பெண்: ஆச்சர்ய பின்னணி!
[Thursday 2021-09-02 06:00]

சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் தமது கற்பை ஏலத்திற்கு வைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் இணைய பக்கத்தில் தமது கற்பை 500,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் வைத்துள்ளார். ஆனால் இந்த கட்டணம் இறுதியானது எனவும் அவர் குறித்த இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கையர்!
[Wednesday 2021-09-01 16:00]

புலம்பெயர்ந்த இலங்கையர் ஒருவர் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். Dharmasena Yakandawela, NDP கட்சியின் சார்பில், Abbotsford ridingஇன் பிரதிநிதியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.


வைப்பர் வகை பாம்பு விஷத்திலிருந்து கோவிட் தொற்றுக்கு மருந்து: பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
[Wednesday 2021-09-01 16:00]

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலிய வைப்பர் வகை பாம்புகளின் விஷம் ஒரு குறிப்பிடத்தக்க மருந்தாக மாறக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் Jararacussu Pit என்று அழைக்கப்படும் ஒரு வகை கண்ணாடி விரியன் பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறை எடுத்து, அதனை குரங்குகளுக்கு செலுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.


பெற்றோர்களின்றி அடைக்கலம் தேடி அவுஸ்திரேலியா சென்ற ஆப்கான் சிறுவர்கள்!
[Wednesday 2021-09-01 16:00]

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.


பெண் ஒருவரின் கோர செயலால் ஸ்தம்பித்த ரொறன்ரோ!
[Wednesday 2021-09-01 16:00]

கனடாவின் முக்கிய நகரமொன்றில் பெண் ஒருவர் ஹைட்ரோ கம்பத்தில் கார் ஒன்று மோதியதால், ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமில்லாமல் திண்டாடிய சம்பவம் இன்று இடம்பெற்றது. இச்சம்பவம் ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை (31) காலை 9:15 மணியளவில் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளிற்கிடையில் இடம்பெற்றுள்ளது.


தாலிபான்களின் கோரப்பிடியில் இருந்து தப்ப ஆப்கான் மக்கள் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2021-09-01 16:00]

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலைவனம் வழியாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.


தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுக்கும் கனேடிய மக்கள்!
[Wednesday 2021-09-01 06:00]

கனடாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் தடுப்பூசிக்கு மக்கள் மறுப்பு தெரிவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோவின் செயின்ட் மைக்கேல் மருத்துவமனை முன்னெடுத்த குறித்த ஆய்வானது செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 14,500 கனேடிய மக்கள் இந்த ஆய்வில் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.


'ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டேன்' - ஜனாதிபதி ஜோ பைடன் பெருமிதம்!
[Wednesday 2021-09-01 06:00]

ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்து விட்டது என அமெரிக்கா முறைப்படி அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முற்றிலுமாய் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வெளியேறி உள்ளன. இதனால் 20 ஆண்டு காலப்போர் கடந்த 15-ந்தேதி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நீட்டிக்க தான் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
[Wednesday 2021-09-01 06:00]

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகளிடம் தங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டதா என்பதை சோதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அளிக்கப்பட்டிருந்த நீட்டிப்பு விரைவில் முடிவடையும் என்பதாலையே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா