Untitled Document
May 5, 2024 [GMT]
மருந்தின் பக்கவிளைவால் பிரித்தானிய குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!
[Saturday 2021-08-21 18:00]

அமெரிக்காவில் நான்கு மாத குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து செலுத்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட பக்கவிளைவால் உடல் முழுவதும் முடி வளர்ந்து வருகின்றது. அமெரிக்கா நகரில் உள்ள Texas பகுதியை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு கை, கால், இடுப்பு என எல்லா இடங்களிலும் முடி வளர்ந்து வருகின்றது. குழந்தைக்கு பிறக்கும் பொழுதே Congenital Hyperinsulinism என்ற நோய் இருந்துள்ளது.


கோவிட் தொற்று: கனடாவில் ஒரே நாளில் 2,960 பேர் பாதிப்பு - 6 பேர் பலி!
[Saturday 2021-08-21 18:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.


தலிபான்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்!
[Saturday 2021-08-21 18:00]

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு அண்டை நாடான ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.


கனடாவில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்!
[Saturday 2021-08-21 06:00]

கனடாவில் உள்ள பிரபலமான வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax நகரத்தில் குறித்த சமத்துவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் 6429 Quinpool Road-ல் உள்ள CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கியின் உள்ளே, ஒரு அடையாளம் தெரியாத நபர் நுழைந்துள்ளார்.


பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசாங்கம் எடுத்த முடிவு!
[Saturday 2021-08-21 06:00]

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கும் புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக இயற்றப்பட்டது. சீனாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் கடந்த மே 11-ஆம் திகதி வெளியிடப்பட்டது.


கொரோனா சான்றிதழுடன் வரும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி: கனடா அதிரடி!
[Saturday 2021-08-21 06:00]

பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும் இந்தியர்களை மட்டுமே, கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா - கனடா இடையே நேரடி விமான போக்குவரத்துக்கான தடை, செப்டம்பர் 30-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவுடன் தாலிபான்கள் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம்: கசிந்த முக்கிய தகவல்!
[Friday 2021-08-20 18:00]

அமெரிக்க தனது படைகளை திரும்பப் பெறும் வரை தலிபான்கள் அரசு பற்றிய முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.


கோவிட் தொற்று: சுவிஸ் அரசாங்கத்தை எச்சரிக்கும் மருத்துவர்கள்!
[Friday 2021-08-20 18:00]

சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை மிகக் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இப்படியே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றால், இரண்டாம் அலையின்போது இருந்தது போன்ற அதே மோசமான நிலை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள்.


தன் தாயின் நினைவாக ஒரு அற்புத பொருளை வைத்திருக்கும் கனடாவாழ் இலங்கை தமிழ்ப்பெண்ணின் அனுபவம்!
[Friday 2021-08-20 18:00]

பெண் பிள்ளைகள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லும்போது, தான் பெரிதும் விரும்பி வைத்திருந்த நகை ஒன்றை மகளுக்கு அணிவித்து அனுப்பும் வழக்கம் பல நாடுகளில் உள்ள தாய்மார்களிடம் இன்றும் காணப்படுகிறது. அப்படி, தன் தாய் தனக்கு கொடுத்த ஒரு நகையைக் குறித்த தனது அனுபவத்தை விவரிக்கிறார் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர்.


தாலிபான்களுடன் கைகோர்த்த பிரித்தானியர்கள்: ஏதற்காக?
[Friday 2021-08-20 18:00]

பிரிட்டிஷ் ஜிகாதிகள் ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் ரகசியமாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலிபான்கள் கைப்பற்றி பின், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் என பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் கணிசமாக உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை!
[Friday 2021-08-20 18:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,731பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர்.


தாலிபான்களை எதிர்த்த முதல் பெண்மணியின் தற்போதைய நிலை!
[Friday 2021-08-20 06:00]

தாலிபான்களின் கடும் விமர்சகரான ஆப்கானிஸ்தானின் பெண் ஆளுநர்களில் ஒருவரான சலீமா மஜாரி தாலிபான்களால் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கான் ராணுவம் பின்வாங்கியபோதும் எதிர்த்து நின்றவர் இந்த சலீமா. இவர் தற்போது தாலிபான்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான் விவகாரம்: சுவிஸ் அரசாங்கத்தை எச்சரித்த முக்கிய அரசியல் கட்சிகள்!
[Friday 2021-08-20 06:00]

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அகதிகளின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளது. கட்டுப்பாடின்றி அகதிகளுக்கு வாய்ப்பளித்தால், அது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் தாலிபான்களின் தலைவர்!
[Friday 2021-08-20 06:00]

ஆப்கானிஸ்தான் புதிய அதிபராக, தலிபான் தலைவர் முல்லா கனி பரதர் பொறுப்பேற்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.தலிபான் அமைப்பை நிறுவிய, மறைந்த முல்லா உமரின் மகன், முல்லா கனி பரதர். இவர், மேற்காசியாவின் கத்தார் நாட்டில், ஆப்கன் - அமெரிக்க பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சு நடத்தி வந்தார்.


'படைகளை திரும்ப பெற்றதில் எந்த தவறும் இல்லை' - ஜனாதிபதி ஜோ பிடன்!
[Thursday 2021-08-19 18:00]

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.


தேசிய கொடியுடன் பேரணியாக சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள்: சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்!
[Thursday 2021-08-19 18:00]

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசிய கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


ஆப்கானிஸ்தானிற்கு சுவிஸ் அரசு அனுப்பிய இரகசிய சிறப்புப்படை: ஏன் தெரியுமா?
[Thursday 2021-08-19 18:00]

சுவிட்சர்லாந்து, இரகசிய சிறப்புப்படை ஒன்றை காபூலுக்கு அனுப்பியுள்ளது. விடுபட்ட சுவிஸ் குடிமக்கள் யாராவது ஆப்கானிஸ்தானிலிருந்தால், அவர்களையும், சுவிஸ் உதவிக்குழுவுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும் மீட்பதற்காக இரகசிய சுவிஸ் சிறப்புப்படை ஒன்று காபூல் சென்றடைந்துள்ளது.


பர்தா அணியாததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: தாலிபான்கள் வெறிச்செயல்!
[Thursday 2021-08-19 18:00]

ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் பெண் ஒருவர் பர்தா அணியாததால் தாலிபான்கள் ஈவு இரக்கமில்லாமல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் அந்த நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலையும் கைப்பற்றினர்.


கனடாவில் இராணுவ வீராங்கனை செய்த மோசமான செயல்!
[Thursday 2021-08-19 18:00]

கனடாவில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக் தயாரித்து வழங்கியதாக இராணுவ வீராங்கனை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. New Brunswickஐச் சேர்ந்த இராணுவ வீராங்கனையான Chelsea Cogswell, இராணுவ கேன்டீனுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ஒருநாள், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு கேக் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் Chelsea.


தாலிபான்கள் வருகை: தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் அதிபர் கூறிய அதிர்ச்சி தகவல்!
[Thursday 2021-08-19 06:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.


பிரித்தானியாவில் 3 வயது மகனுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த பொலிஸ் அதிகாரி!
[Thursday 2021-08-19 06:00]

பிரித்தானியாவில் வீட்டில் தனது 3 வயது மகனுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பொலிஸார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தில் கிண்டர்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) 39 வயது மிக்க ஒரு ஆணும் அவரது 3 வயது மகனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.


சவுதி அரேபியாவில் தோண்ட தோண்ட கிடைக்கும் எலும்புகள்: பேரதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
[Thursday 2021-08-19 06:00]

சவுதி அரேபியாவில் சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள எரிமலை குகை முழுவதும் பரவிக்கிடந்த எலும்புகளின் மிகப்பெரிய குவியல் தொகுப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எரிமலை வெடிப்பின் போது வெளியேறிய லாவா குழம்பால் உருவான குகை தான் அது. அந்த குகைக்குள் மனிதர்கள் உட்பட நூறாயிரக்கணக்கான விலங்குகளின் எலும்புகள் குவிந்து கிடந்தன.


"இனி ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை இதுதான்" - நோபல் பரிசு வென்ற மலாலா!
[Wednesday 2021-08-18 17:00]

இனி ஒருபோதும் ஆப்கன் பெண்கள் பள்ளிக்குச் செல்லவோ, புத்தகங்களை தொடவோ வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா யூசஃப்சை.


ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக அர்ச்சகர் எடுத்த துணிச்சலான முடிவு!
[Wednesday 2021-08-18 17:00]

ஆப்கானிஸ்தானில் இருந்து பலரும் வெளியேறி வரும் நிலையில் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவர் தாலிபான்கள் என்னை கொன்றாலும் இந்த இடத்தைவிட்டு நான் வெளியேற போவதில்லை என்று துணிச்சலாக கூறியுள்ளார்.


கனடாவில் மாயமான பள்ளி மாணவி: 3 மாதமாக தேடும் குடும்பத்தார்!
[Wednesday 2021-08-18 17:00]

கனடாவில் மாணவி ஒருவர் திடீரென மாயமான நிலையில், அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ள நிலையிலும், அவளது குடும்பத்தார் அவளை தொடர்ந்து தேடிவருகிறார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். அதேபோல் தங்களில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர்களை மீண்டும் காணும்வரை, யார் என்ன சொன்னாலும் அதை நம்பாமல், தங்கள் குடும்ப உறுப்பினர் உயிருடன்தான் இருப்பார் என்று நம்புவதுதானே குடும்பம்!


ஆபத்தான நிலையில் ஆப்கானிஸ்தான்: சுயநலமான அறிக்கையை வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதி!
[Wednesday 2021-08-18 17:00]

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருக்கும் மக்கள் உயிர் பயத்தில் தவித்துக்கொண்டிருக்க, பிரான்ஸ் ஜனாதிபதியோ சுயநலமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய தாலிபான்கள்!
[Wednesday 2021-08-18 17:00]

ஆப்கானிஸ்தானின் தேசிய கொடிக்கு ஆதரவாக சாலையில் போராடி நூற்றுக்காணக்கான இளைஞர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய கொடி அகற்றப்பட்டது.


தாலிபான்களுக்கு எதிராக களமிறங்கிய கனேடிய அரசு!
[Wednesday 2021-08-18 06:00]

கனடாவில் தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். தாலிபான் பயங்கரவாதக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா