Untitled Document
May 14, 2024 [GMT]
அமெரிக்காவில் அரிய வகை வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்!
[Sunday 2021-07-18 08:00]

அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக ஒருவர் மங்கிபாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சமீபத்தில் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், உடனடியாக இது கொரோனாவாக இருக்கலாம் என்று அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.


வரும் 1-ஆம் திகதிக்குள் டெல்டா வகை வைரஸ் 5 மடங்காக உயரும்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை!
[Sunday 2021-07-18 08:00]

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகளில் வரும் 1-ஆம் திகதிக்குள் ஐந்து மடங்காக உயரும் என்று ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வருகிறது.


பாசத்தை பறித்த கோவிட்: கனடா வாழ் இலங்கை பெண்ணின் கண்ணீர் நினைவுகள்!
[Saturday 2021-07-17 16:00]

’மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று’ என்றொரு திரைப்படப் பாடல் வரி உண்டு. இன்று, மேற்கத்திய நாடுகள், கேபிள் தொலைக்காட்சி வழியாக கற்றுத்தந்த தவறான பாடங்களில் ஒன்று, கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் காதலர்களுக்குத்தான் என்பது.


இடி மின்னலுடன் கூடிய புயல்: ஆபத்தான நிலையில் சுவிட்சர்லாந்து!
[Saturday 2021-07-17 16:00]

சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ள நிலையில், சில பகுதிகளில் நிலைமை அபாயகரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஐரோப்பாவை துவம்சம் செய்துவரும் இடி மின்னலுடன் கூடிய புயல், சுவிட்சர்லாந்தை கடுமையாக பாதித்துள்ளது.


பிரித்தானியாவில் புறாவின் மேல் பரிதாபப்பட்ட இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Saturday 2021-07-17 16:00]

மான்செஸ்டர் பகுதியில் பரிதாபப்பட்டு புறாவுக்கு தீனி வைத்த மாணவருக்கு குப்பை கொட்டியதாக கூறி அமலாக்க அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சால்ஃபோர்ட் பல்கலைக்கழ மாணவரான ரிஷி பிரேம் என்பவரே புறாவுக்கு தீனி வைத்ததன் பேரில் அபராதம் விதிக்கப்பட்டவர்.


வியட்நாமில் கொரோனாவை பரப்பிய நபர்: என்ன தண்டனை தெரியுமா?
[Saturday 2021-07-17 16:00]

கோவிட் விதிகளை மீறி மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக வியட்நாமில் ஒரு நபர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகில் கொரோனா வைரஸை கட்டுக்குக்குள் கொண்டு வந்து வெற்றி கண்ட நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும்.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 395 பேர் பாதிப்பு - 17 பேர் பலி!
[Saturday 2021-07-17 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவில் மீண்டும் ஒரு உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண்!
[Saturday 2021-07-17 06:00]

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கான அதிகாரிகளை அவர் பரிந்துரை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்க அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்க்கப்பட்டு வருகின்றனர்.


பிரித்தானியாவில் கோர விபத்து: நேருக்கு நேர் மோதிக்கொண்ட 2 லொரி 4 கார் - 3 பேர் பலி!
[Saturday 2021-07-17 06:00]

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


பிரான்சில் இனி இது கட்டாயம்: வெளியான முக்கிய தகவல்!
[Saturday 2021-07-17 06:00]

பிரான்சில் குறிப்பிட்ட மாவட்டம் ஒன்றில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முகக்கவசம் வரும் 2-ஆம் திகதி முதல் அங்கு கட்டாயமாக்கப்படுகிறது. பிரான்சின் Pyrénées-Orientales மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த படி உள்ளது. இதனால் இங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100000 பேரிலும் 210 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது.


உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய கியூபா மக்கள்!
[Friday 2021-07-16 17:00]

கியூபாவில் உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு தேசிய அளவில் நிலவியதைத் தொடர்ந்து தற்போது அங்கு சுங்கவரி நீக்கப்பட்டது. பொருளாதாரச் சரிவு, உணவுப் பற்றாக்குறை, கரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கொரோனா, கனமழை, நிலநடுக்கம்: கொத்துக்கொத்தாக மடியும் மக்கள் - தள்ளாடும் ஜெர்மெனி!
[Friday 2021-07-16 17:00]

ஜேர்மனியில் மழை வெள்ளம் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மறுபக்கம் என கைகோர்த்துக்கொண்டு உயிர்களை பலிவாங்கி வருகின்றன. ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 1,300 பேரைக் காணவில்லை.


பிரித்தானியாவை எச்சரித்த தலைமை மருத்துவ அலுவலர்!
[Friday 2021-07-16 17:00]

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்து மீண்டும் பொதுமுடக்கத்துக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்படலாம் என பிரித்தானிய தலைமை மருத்துவ அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி: ஆய்வில் தகவல்!
[Friday 2021-07-16 17:00]

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கிறது மற்றும் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, வைரஸை உடைக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதோடு, அது உடலில் "பயிற்சி முகாம்களை" உருவாக்குகிறது மற்றும் புதிய வகைவைரஸ்களை கூட கொல்லக்கூடிய டி-செல்களை உருவாக்குகிறது.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 415 பேர் பாதிப்பு - 14 பேர் பலி!
[Friday 2021-07-16 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 22ஆயிரத்து 246பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.96 கோடியாக உயர்வு!
[Friday 2021-07-16 07:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


பிரித்தானியாவில் கறுப்பினத்தவரை கொடூரமாக தாக்கிய பொலிஸார்: வெளியான காரணம்!
[Friday 2021-07-16 07:00]

பிரித்தானியாவில் வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, கருப்பினத்தவர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், இருக்கும் குடியிருப்பின் பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9-ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் பொலிசார் ஒருவர், 41 வயது மதிக்கத்தக்க கருப்பினத்தவர் ஒருவரை தாக்குகிறார்.


அதீத நம்பிக்கையால் பாம்பு மனிதனுக்கு நேர்ந்த கதி: கடும் கோபத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள் செய்த செயல்!
[Friday 2021-07-16 07:00]

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பாம்பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பாம்புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை கடித்த போதும் எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.


பிரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு!
[Thursday 2021-07-15 17:00]

இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பொதுமக்கள் NHS கொரோனா செயலியை பான்படுத்தி வருகின்றனர்.


ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து வெளியான மற்றுமொரு அதிர்ச்சி செய்தி!
[Thursday 2021-07-15 17:00]

ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பு மருந்து இரத்தக்கட்டிகளை உருவாக்குவதாக வெளியான செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு ஏமாற்றமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயது முதிர்ந்த பிரித்தானியர்கள் உடலில், பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் உடலில் உருவாகுவதைவிட குறைந்த அளவிலேயே ஆன்டிபாடிகள் உருவாகுவதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.


கனடாவை குறிவைக்கும் திறமை வாய்ந்த இந்தியர்கள்: பெரும் இழப்பில் அமெரிக்கா!
[Thursday 2021-07-15 17:00]

அமெரிக்க விசா கொள்கையால் திறமை வாய்ந்த இந்தியர்கள் கனடாவை நோக்கி திரும்பியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாட்டும் கனமழை: சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Thursday 2021-07-15 17:00]

சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதி முழுமைக்கும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கவனமாக இருக்குமாறு சுவிஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நதிகளும் ஏரிகளும் அபாய அளவை எட்டியுள்ளன. Lucerne ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாலங்கள் நீர் மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து மூடப்பட இருக்கின்றன.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 384 பேர் பாதிப்பு - 8 பேர் பலி!
[Thursday 2021-07-15 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 21ஆயிரத்து 831பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 458பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.91 கோடியாக உயர்வு!
[Thursday 2021-07-15 06:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


"இனி இவ்வாறு செய்தால் இதுதான் கதி" - பிரதமர் போரிஸ் எச்சரிக்கை!
[Thursday 2021-07-15 06:00]

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் மூன்று கருப்பின வீரர்கள் சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிக்கப்பட்டது பூதாகரமாக வெடித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருக்கும் விம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது.


111 நாடுகளில் கால்பதித்த டெல்டா வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
[Thursday 2021-07-15 06:00]

111 நாடுகளில் காணப்படும் 'டெல்டா' வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள 'டெல்டா' வைரஸ் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா, ஆல்பா, காமா, பீட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.


இனரீதியாக விமர்சிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர்கள்: ஆதரவு தெரிவித்த 600,000 பேர்!
[Wednesday 2021-07-14 16:00]

யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பின விளையாட்டு வீரர்களை சமூக ஊடகங்களில் மக்கள் இனரீதியாக கடுமையாக விமர்சித்து அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக கருப்பின வீரர்களான Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Sako ஆகியோர், பெனால்டி முறையில் போடும் கோல்களைத் தவறவிட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவர்கள் மூவரும் மோசமான விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.


தென்னாப்பிரிக்காவில் தீவிரமடையும் வன்முறை: பொருட்களை சூறையாடும் பொலிசார்!
[Wednesday 2021-07-14 16:00]

தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் கைதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். பல இடங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன், 72 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா