Untitled Document
April 28, 2024 [GMT]
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய மிகவும் ஆபத்தான 'லாம்ப்டா' வைரஸ்!
[Wednesday 2021-07-07 16:00]

டெல்டா வகை வைரஸை விட 'லாம்ப்டா' என்ற புதிய கோவிட்-19 வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று பிரித்தானிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலகிலேயே அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட தென் அமெரிக்க நாடான பெருவில் இருந்து 'லாம்ப்டா' (Lambda) என்ற புதிய கோவிட்-19 வைரஸ்தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது கடந்த நான்கு வாரங்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.53 கோடியாக உயர்வு!
[Wednesday 2021-07-07 06:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


பைசர் தடுப்பூசி குறித்து இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை!
[Wednesday 2021-07-07 06:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.


லண்டனை உலுக்கிய இரட்டைக்கொலை: வெளியான குற்றவாளியின் புகைப்படம்!
[Wednesday 2021-07-07 06:00]

லண்டனின் பூங்காவில் இரண்டு சகோதரியால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞன் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6-ஆம் திகதி லண்டனில் இருக்கும் Wembley பூங்காவில் Bibaa Henry(46) மற்றும் Nicole Smallman(27) என்ற இரண்டு சகோதரிகள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.


லண்டனில் பயங்கரம்: இரு சிறுவர்கள் கொடூரமாக குத்திக்கொலை!
[Tuesday 2021-07-06 16:00]

லண்டனில் நேற்று வெவ்வேறு இடங்களில், 7 மணி நேர இடைவெளியில் 2 சிறுவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லண்டனின் தென்-கிழக்கு பகுதியில் உள்ள Woolwich New-ல், திங்கட்கிழமை மாலை 5.20 மணியளவில், 15 வயது சிறுவன் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.


நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்: பயணிகள் நிலை என்ன?
[Tuesday 2021-07-06 16:00]

ரஷ்யாவின் பார் ஈஸ்ட் பிராந்தியத்தில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பலனா நகருக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேருடன் 29 பேர் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சீனாவில் அரசு அதிகாரிகளை 10 வருடங்களாக அலறவிட்ட பெண்!
[Tuesday 2021-07-06 16:00]

சீனாவில், நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும்போது அந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். அந்த இடத்துக்கு பதிலாக இழப்பீடு வழங்குவதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தெரிவித்தும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.


கனடாவில் மேலும் சில பூர்வக்குடியின குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு!
[Tuesday 2021-07-06 16:00]

கனடாவில் மீண்டும் ஒரு பள்ளியின் அருகே பூர்வகுடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. இந்நிலையில், Saskatchewanஇலுள்ள ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் அருகே ஐந்து இடங்களில் உடல்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.


புலம்பெயர்வோர் வரும் படகுகளை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு வழங்கவிருக்கும் பிரித்தானிய உள்துறை செயலர்!
[Tuesday 2021-07-06 16:00]

பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு வந்த ஒரு திடுக்கிட வைக்கும் தொலைபேசி அழைப்பு, புலம்பெயர்தல் தொடர்பில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க அவரைத் தூண்டியுள்ளது. பிரபல ஊடகமான Daily Mailக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்த பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல், ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்கு எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.


அமீரகத்தில் உயிருக்கு போராடிய இலங்கை பெண்: சற்றும் யோசிக்காமல் பாகிஸ்தானியர் செய்த வீர செயல்!
[Tuesday 2021-07-06 06:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பாகிஸ்தானியர் கவுரவிக்கப்பட்டார். ஐக்கியர அரபு அமீரகத்தின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும், Ajman Marina கடற்கரையில், Mohammad Nagman என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.


"சமூக இடைவெளி வரும் 19-ஆம் திகதிக்கு பின் கட்டாயமாக இருக்காது" - பிரித்தானிய பிரதமர்!
[Tuesday 2021-07-06 06:00]

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைத்து சட்டபூர்வமான கொரோனா விதிகள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் குறைந்து வந்தாலும், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் இன்னும் பரவி வருகிறது. ஆனால், இறப்பு அந்தளவிற்கு இல்லை.


பிரான்சில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: சுகாதார செயலாளர் எச்சரிக்கை!
[Tuesday 2021-07-06 06:00]

பிரான்சில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக நாட்டின் சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இருந்த பிரான்ஸ், இப்போது தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பின், அதில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறது.


சுவிஸில் மலையேற்றத்துக்கு சென்ற இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த கதி!
[Monday 2021-07-05 15:00]

சுவிட்சர்லாந்தில் ஆண் ஒருவரும், இளம்பெண்கள் இருவரும் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றிருந்தனர். இத்தாலியைச் சேர்ந்த Martina Svilpo (29), Paola Viscard (28) மற்றும் Valerio Zolla (27) என்னும் அந்த மூவரும் Vincent Pyramid என்ற பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், வானிலை மோசமடைந்துள்ளது.


பயண கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவிருக்கும் கனேடிய அரசு!
[Monday 2021-07-05 15:00]

கனடா, இன்று முதல் சிலருக்கு மட்டும் சில பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ளது. இன்று முதல் கனடாவுக்குள் நுழைவோருக்கு நெகிழ்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டுமே!


"மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும்" - பிரதமர் போரிஸ் வலியுறுத்தல்!
[Monday 2021-07-05 15:00]

பிரித்தானியாவில் ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருக்கும் நிலையில், பிரித்தானியர்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். இன்று கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் தொடர்பில் போரிஸ் ஜான்சன் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ள நிலையில், சுகாதாரத் துறை அமைச்சரான சாஜித் ஜாவித் இதே விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.


கனடாவில் கொரோனா தொற்றுக்கு கடந்த ஒரே நாளில் 308 பேர் பாதிப்பு - 12 பேர் பலி!
[Monday 2021-07-05 15:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.


அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை தூக்கி எறிந்த ஜெஃப் பெசோஸ்!
[Monday 2021-07-05 15:00]

அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், அந்தப் பொறுப்பில் இருந்து இன்று விலகுகிறார். உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் இருந்து வருகிறார். 27 வருடங்களுக்கு முன் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக, அமேசான் நிறுவனத்தைத் தொடங்கிய ஜெஃப், இப்போது உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்.


முககவசம் அணிவது அவரவர் விருப்பம்: இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு!
[Monday 2021-07-05 06:00]

கொரோனா வைரஸ் பரவி இருக்கும் வேலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை, மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆஸ்திரியாவில் அழகை மேம்படுத்த இளம்பெண் செய்த செயல்: விமர்சிக்கும் இணையவாசிகள்!
[Monday 2021-07-05 06:00]

இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பக மற்றும் அழகு சிகிச்சைக்காக, ஒரு பிராட்ஸ் பொம்பை போல் தோற்றமளிக்க சுமார் முப்பதாயிரம் பவுண்ட் வரை செலவிட்டு வருகிறார். ஆஸ்திரியாவின் Vienna-வை சேர்ந்த Jessica Bunnington என்ற 20 வயது இளம் பெண், தன்னுடைய 18 வயதில், தான் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் வைத்து முதன் முதலில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சைக்காக செலவு செய்தார்.


கொரோனா நெருக்கடியால் அதிகரிக்கும் தற்கொலைகள்: தள்ளாடும் சர்வதேச நாடு!
[Monday 2021-07-05 06:00]

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை அதிகரித்துள்ளது. உலகையே கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக,பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.


கல்லாக மாறும் பச்சிளம் குழந்தை: வேதனையில் உருகும் பிரித்தானிய பெற்றோர்!
[Sunday 2021-07-04 17:00]

பிரித்தானியாவில் 5 மாத பெண் குழந்தை கல்லாக மாறும் மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மனதை உருக்கியுள்ளது. பிரித்தானியாவின் Hertfordshire-ஐ சேர்ந்த அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31-ம் திகதி லெக்ஸி ராபின்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.


பொதுமக்களை எச்சரித்த சுவிஸ் மாநிலம்: வெளியான முக்கிய காரணம்!
[Sunday 2021-07-04 17:00]

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் சமையலுக்கோ, குடிக்கவோ அந்த தண்ணீரை பயன்படுத்த மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது. பெர்ன் மாநிலத்தின் Emmental மாவட்டத்தில் Hindelbank மற்றும் Krauchthal பகுதிகளில் தண்ணீர் மாசடைந்துள்ளது.


பிரித்தானியாவில் கால்பதிக்கும் 'லாம்ப்டா கொரோனா': ஆபத்து அதிகம் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
[Sunday 2021-07-04 17:00]

பிரித்தானியாவில் மெதுவாக பரவத் தொடங்கியிருக்கும் லாம்ப்டா கொரோனா மாறுபாடானது ஆபத்து மிகுந்தது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரு நாட்டில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த லாம்ப்டா மாறுபாடானது, அங்கு தற்போதுள்ள புதிய நோயாளிகளில் 80% பேர்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.


சொந்த நாட்டு மக்களை கொடூரமாக கொன்று குவித்த மியான்மர் ராணுவம்!
[Sunday 2021-07-04 17:00]

மியான்மரில் இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களுடனான மோதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையின் 25 கொன்று குவித்ததாக பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். Sagaing பிராந்தியத்தில் உள்ள Depayin கிராமத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


கம்போடியாவில் அடுத்தடுத்து பலியான 11 பேர்: வெளியான அதிர்ச்சி உண்மை!
[Sunday 2021-07-04 17:00]

கம்போடியாவில் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை முதல், கடலோர கம்போட் மாகாணத்தில் நடந்த இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 11 பேர் அடுத்தடுத்து இறந்தனர், மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் அரிய வகை ரத்தம் உறைதலுக்கு சிகிச்சை: கனேடிய விஞ்ஞானிகள் அசத்தல்!
[Sunday 2021-07-04 07:00]

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள், உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியால் அரிதான ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டன.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.42 கோடியை தாண்டியது!
[Sunday 2021-07-04 07:00]

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,986,895 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 184,215,583 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168,598,885 பேர் குணமடைந்துள்ளனர்.


ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக வலைத்தளத்தை வெளியிடவிருக்கும் டிரம்ப்!
[Sunday 2021-07-04 07:00]

டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா