Untitled Document
May 2, 2024 [GMT]
கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கை!
[Tuesday 2021-02-09 17:00]

கொரோனா நோய் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், இதுவரை அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிட்டு உள்ளனர். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.


வடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை!
[Tuesday 2021-02-09 17:00]

வடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது. உடலை மூடிமறைக்கவும். வெளிப்படும் தோலில், குறிப்பாக காற்றின் குளிர்ச்சியுடன், உறைபனி கடித்தல் சில நிமிடங்களில் உருவாகலாம் என்று தீவிரக் குளிர் எச்சரிக்கை கூறுகிறது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 10.69 கோடியாக உயர்வு!
[Tuesday 2021-02-09 08:00]

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


தடுப்பூசி குறித்து பிரித்தானியா சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
[Tuesday 2021-02-09 08:00]

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி இதுவரை பெறவில்லை என்றால், அதற்காக NHS-ல் பதிவு செய்து கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள், மருத்துவ ஊழியர்கள், அதிக வயதுடையோர் போன்றோருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும்: ஜோ பைடன் திட்டவட்டம்!
[Tuesday 2021-02-09 08:00]

ஈரான் அரசு அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும் வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.


பிரான்ஸ் நாட்டையே கலங்கடித்த சம்பவம்!
[Monday 2021-02-08 18:00]

தன் மனைவி இறந்ததற்காக வெளிப்படையாக கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவரைக் கண்டு நாடே கலங்கியது. ஆனால், பின்னர் தெரியவந்த ஒரு உண்மை, மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது. தகவல் தொடர்பு துறையில் பணியாற்றிவந்த Jonathann Daval (36), ஒரு நாள் ஜாகிங் சென்ற தன் மனைவி Alexia (29)ஐக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார். மோப்ப நாய்கள், ஹெலிகொப்டர்கள் உதவியுடன் களமிறங்கிய பொலிசார், இரண்டு நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் எரிந்த நிலையில் Alexiaவின் உடலைக் கண்டுபிடித்தார்கள்.


கனடாவில் ஒரே மாதத்தில் 213,000 பேர் வேலையிழப்பு!
[Monday 2021-02-08 18:00]

கனடாவில் 2021ஆம் ஜனவரி மாதத்தில் மட்டும் 213,000பேர் வேலை இழந்துள்ளதாக கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கை இழப்புகள் மற்றும் ஆதாயங்கள் இரண்டிற்கும் காரணமாகிறது. சில மாகாணங்களில் அதிகரிப்புடன் கூட வேலைவாய்ப்பு எண்ணிக்கையின் வீழ்ச்சியைக் காணலாம்.


புதிய விதிகளை அமுலுக்கு கொண்டுவந்த சுவிஸ் அரசாங்கம்!
[Monday 2021-02-08 18:00]

வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்து திரும்புபவர்களுக்கு மத்திய அரசாங்கம் புதிய நுழைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சுவிஸ் பயணிக்கும் அனைவரும் புறப்பட விமானத்திற்குள் ஏறுவதற்கு முன் கொரோனா இல்லை என சோதனை முடிவை காட்ட வேண்டும். இந்த சோதனை புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.


ஜனநாயகக் குறியீட்டின் 13ஆவது பதிப்பில் முன்னேற்றம் கண்ட கனடா!
[Monday 2021-02-08 17:00]

ஜனநாயகக் குறியீட்டின் 13ஆவது பதிப்பில், கனடா 165 சுதந்திர நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், 2019ஆம் ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கனடா, தற்போது சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அமெரிக்கா 25ஆவது தரவரிசைக்கு உரிமை கோரியது மற்றும் ஒரு குறைபாடுள்ள ஜனநாயகம் என வகைப்படுத்தப்பட்டது.


ருமேனியா நாட்டில் ஞானஸ்தானத்தின் போது 2 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!
[Monday 2021-02-08 17:00]

ருமேனியா நாட்டில் குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட போது இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ சமயத்தில் பிறந்த குழந்தைக்கு சில மாதங்களில் ஆலயங்களில் பாதிரியார் ஞான்ஸ்தானம் கொடுக்கும் முறை உள்ளது. இதற்காக பாதிரியார் குழந்தையின் மேல் புனித தண்ணீரை ஊற்றுவது வழக்கம்.


இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்றும் பாரிய போராட்டம்!
[Monday 2021-02-08 07:00]

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ள அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது.


கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு - ஐரோப்பிய யூனியன் அங்கீகாரம்!
[Monday 2021-02-08 07:00]

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், உலகஅளவில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக, ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.


பங்களாதேசில் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணி ஆரம்பம்!
[Monday 2021-02-08 07:00]

பங்களாதேசில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


பேஸ்புக்கை அடுத்து டிவிட்டர், இன்ஸ்டாகிராமுக்கும் தடை!
[Sunday 2021-02-07 07:00]

மியான்மரில் திடீர் ஆட்சி மாற்றத்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் மியான்மர் மக்கள், தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். இவை ராணுவ ஆட்சிக்கு எதிரானதாக இருப்பதால் கடந்த 4ம் தேதி பேஸ்புக் சேவையை ராணுவ நிர்வாகம் முடக்க உத்தரவிட்டது.


ட்ரம்ப்புக்கு கிடைக்காது புலனாய்வு இரகசியங்கள்!
[Sunday 2021-02-07 07:00]

வழக்கமாக புதிய அதிபர் பதவி ஏற்றதும் பதவியை விட்டு விலகும் பழைய அதிபருக்கு அரசு புலனாய்வு ரகசியங்கள் குறித்த விரிவான தகவல் வழங்கப்படும். ஆனால் இதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்புக்கு வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்று ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.


நேபாளத்துக்கு தடுப்பூசி- சீனா வழங்குகிறது!
[Sunday 2021-02-07 07:00]

நேபாளத்துக்கு ஐந்து லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க சீன அரசு, இணங்கியுள்ளது. நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கியாவலி, சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து நேபாள வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கை:


நவல்னிக்கு ஆதரவு தெரிவித்த 3 நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா!
[Saturday 2021-02-06 19:00]

எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம்சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதுவர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


மியான்மார் வீதிகளில் வெடித்தது போராட்டம்!
[Saturday 2021-02-06 19:00]

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று இடம்பெற்ற போராட்டத்தில் ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அவசியமின்றி பிரான்சுக்கு பயணம் செய்ய தடை!
[Saturday 2021-02-06 19:00]

அவசிய காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


ஏமன் அரசுக்கான ஆதரவை விலக்கியது அமெரிக்கா!
[Saturday 2021-02-06 06:00]

ஏமன் நாட்டில் அரசுக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹூதி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் அரசு படைக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இந்த போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த போரில் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது.


வீட்டுக்காவலில் ஆங் சான் சூகி!
[Saturday 2021-02-06 06:00]

ஆங் சான் சூகி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது. ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.


உலகிலேயே மிகச் சிறிய பச்சோந்தி!
[Saturday 2021-02-06 06:00]

உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது.


பாகிஸ்தானில் பிணைக் கைதிகளை மீட்க ஈரான் “சர்ஜிக்கல்” தாக்குதல்!
[Friday 2021-02-05 18:00]

பாகிஸ்தானில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தமது நாட்டு வீரர்களை, ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது.


லாவா குழம்பைக் கக்குகிறது இத்தாலி எரிமலை!
[Friday 2021-02-05 18:00]

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது எட்னா எரிமலை. இது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த கால வரலாற்றில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. அது தவிர இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது.


ஆப்கான் இராணுவ முகாம் மீது தாக்குதல்!- 16 வீரர்கள் பலி.
[Friday 2021-02-05 18:00]

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாம் மீது நேற்றிரவு திடீரென தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும்! - பாதுகாப்புச் சபை வலியுறுத்தல்.
[Friday 2021-02-05 07:00]

மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.


110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் வாங்குகிறது யுனிசெப்!
[Friday 2021-02-05 07:00]

குறைந்த வருவாய் கொண்ட 100 நாடுகளுக்கு வேண்டிய 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் இருந்து யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்கிறது.


ஈரான் தூதருக்கு 20 ஆண்டு சிறை!
[Friday 2021-02-05 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய தூதருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா