Untitled Document
May 1, 2024 [GMT]
லண்டனில் பரவி வரும் புதிய வடிவிலான கொரோனா தொற்று!
[Tuesday 2020-12-15 17:00]

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றி!
[Tuesday 2020-12-15 08:00]

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும்.


பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் கடுமையான கொரோனா கட்டுப்பாடு!
[Tuesday 2020-12-15 08:00]

பிரித்தானியாவில் இருக்கும் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் டையர் 3 என்ற கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், தலைநகரான லண்டனில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.


அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட செவிலியர்!
[Tuesday 2020-12-15 08:00]

அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தற்போது அமெரிக்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.


கனடாவை உலுக்கிய கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!
[Monday 2020-12-14 18:00]

கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் மீது வேன் மோதி கொன்ற வழக்கில் குற்றவாளியை விசாரித்த மன நல மருத்துவரையே விசாரணைக்கு இழுத்துள்ளது நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.


இலங்கையில் இருந்து தடுத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்: மன்னிப்பு கோரிய பெடரல் கவுன்சில்!
[Monday 2020-12-14 18:00]

இலங்கையில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்கப்பட்டதில் பெருவாரியாக, அதிகாரிகளின் தவறான நடத்தை அடையாளம் காணப்பட்ட நிலையில் பெடரல் கவுன்சில் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த 1973 தொடக்கம் 1997 வரை இலங்கையில் இருந்து சுமார் 11,000 சிறுவர்கள் கேள்விக்குரிய சூழ்நிலையில் ஐரோப்பிய பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.


கனடாவில் மாயமான இந்தியப்பெண்!
[Monday 2020-12-14 18:00]

கனடாவில் இந்தியப்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். அதன்படி ஞாயிறு உள்ளூர் நேரப்படி இரவு 7.18 மணிக்கு மன்ப்ரீத் கவுர் என்ற 23 வயது இளம்பெண் காணாமல் போயிருக்கிறார்.


பிரித்தானியாவில் அனைத்து துறைகளிலும் ஊடுருவியிருக்கும் சீனர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Monday 2020-12-14 17:00]

பிரித்தானிய தூதரகம் உட்பட அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையான நபர்கள் பெருமளவில் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லீக்கான சில ரகசிய கோப்புகள் இந்த அதிரவைக்கும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையான நபர்கள், AstraZeneca, Rolls Royce, HSBC மற்றும் Jaguar Land Rover முதலான பன்னாட்டு நிறுவனங்கள் என பல இடங்களில் பணி செய்துவருவது இந்த கோப்புகளிலிருந்து தெரியவந்துள்ளது.


கோவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 5,891 பேர் பாதிப்பு - 81 பேர் பலி!
[Monday 2020-12-14 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டதோடு, 81பேர் உயிரிழந்துள்ளனர்.


நைஜீரியாவில் பாடசாலையை முற்றுகையிட்ட பயங்கரவாதிகள்: 400 மாணவர்களின் கதி என்ன?
[Monday 2020-12-14 08:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


அமெரிக்காவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்!
[Monday 2020-12-14 08:00]

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதிகரிக்கும் கொரோனா: பிரித்தானியாவில் வெளியான முக்கிய அறிவிப்பு!
[Monday 2020-12-14 08:00]

லண்டனில் கொரோனா வழக்கு அதிகரித்து வரும் நிலையில், கிரீன்விச்சில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட புள்ளி விவரங்களின் படி 10000-பேரில் 200-பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.


சுவிஸ்ஸில் வனப்பகுதியில் கிடந்த சடலம்: வெளியான அதிர்ச்சி பின்னணி!
[Sunday 2020-12-13 17:00]

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 54 வயது பெண்மணியின் குடியிருப்பை மண்டல பொலிசார் வெள்ளிக்கிழமை தீவிர சோதனைக்கு உட்படுத்திய நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்!
[Sunday 2020-12-13 17:00]

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஜனவரி 10 ஆம் தேதி வரை புதிய தேசிய ஊரங்கு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ஜேர்மனியில் இனி அதிகட்சமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 முதல் 26ம் திகதி வரை இதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை.


சிக்கலில் இருக்கும் 4 மில்லியன் பிரித்தானியர்கள்: எச்சரிக்கும் முதன்மை மருத்துவர்கள்!
[Sunday 2020-12-13 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எவ்வித ஒப்பந்தமும் இன்றி பிரித்தானியா வெளியேறும் எனில், 4 மில்லியன் மக்களின் சிகிச்சை கேள்விக்குறியாகும் என முதன்மை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் 17 பேர்களில் ஒருவர் அரிதான நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்து வருகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், அதுபோன்ற 4 மில்லியன் மக்களின் சிகிச்சை கேள்விக்குறியாக மாறியுள்ளது.


தென் ஆப்ரிக்காவில் கோவிட் தடுப்பூசியை சாத்தானுடன் ஒப்பிட்டு பேசிய நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!
[Sunday 2020-12-13 17:00]

தென் ஆப்ரிக்காவில் கொரோனா தடுப்பூசியை சாத்தானுடன் ஒப்பிட்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தென் ஆப்ரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.45 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 22,852 என உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மட்டுமின்றி தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கனடாவில் மாயமான சிறுமி குறித்து வெளியான தகவல்!
[Sunday 2020-12-13 17:00]

கனடாவில் காணாமல் போன 16 வயதான சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான தகவலை மணிடோபா பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி 4 நாட்களுக்கு முன்னர் ஜாஸ்மின் லோவர் கிளியர்ஸை என்ற 16 வயது சிறுமி மாயமானார்.


கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் நைலான் முக கவசம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Sunday 2020-12-13 08:00]

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான கருவிகள், முக கவசங்கள் பற்றி அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் ஜாமா உள்மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.


ஜோ பைடனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய டிரம்ப் ஆதரவாளர்கள்!
[Sunday 2020-12-13 08:00]

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. அங்கு மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் தொடர்ந்து அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. இதன்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், வெற்றி பெற்றதாக ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டன.


பிரெக்சிட் காலக்கெடு முடியவிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் வரவிருக்கும் மிகப் பெரிய மாற்றங்கள்!
[Sunday 2020-12-13 08:00]

பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும் பெரிய மாற்றங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


கனடா - அமெரிக்கா எல்லைக்கான தடை மேலும் நீட்டிப்பு!
[Saturday 2020-12-12 17:00]

கோவிட் -19 தொற்றுநோயால் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உலகின் மிக நீளமான சர்வதேச எல்லை ஜனவரி 21 வரை மூடப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவலை குறைக்க மார்ச் மாதத்தில் எல்லை ஆரம்பத்தில் மூடப்பட்டது.


கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு வெளிநாடு அனுப்ப திட்டமிட்டுள்ள ஸ்வீடன் நிர்வாகம்!
[Saturday 2020-12-12 17:00]

இதுவரை எவ்வித ஊரடங்கு விதிகளையும் அமுலுக்கு கொண்டுவராத ஸ்வீடன் நிர்வாகம், தற்போது கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு வெளிநாடு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஸ்வீடனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் Stockholm-ல் மொத்த மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில், வெறும் 7 படுக்கைகள் மட்டுமே இனி எஞ்சியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஒன்றாரியோவில் கேட்ட பயங்கர சத்தம்: வெளியில் வந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Saturday 2020-12-12 17:00]

கனடாவின் ஒன்றாரியோவில் கேட்ட பயங்கர சத்தத்தால் வீடுகளிலிருந்து எட்டிப்பார்த்தவர்கள் சிலர், கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒன்றாரியோ பகுதியிலுள்ள லண்டன் நகரில் வசிக்கும் Elizabeth Rutherford, பயங்கர சத்தம் ஒன்று கேட்டு திடுக்கிட்டதாக தெரிவிக்கிறார்.


பாடசாலைகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசாங்கம்!
[Saturday 2020-12-12 17:00]

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன் மூடப்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களிடையே கொரோனா பரவுவதைக் குறைக்கும் முயற்சியில் பல பள்ளிகள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன்னரே மூடப்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில் அரசாங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தடுப்பூசி குறித்து மக்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
[Saturday 2020-12-12 17:00]

அனைவருக்குமான, தவறு இல்லாத தடுப்பூசிப் பக்கவிளைவு ஆதரவுத் திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இந்த திட்டம் உள்ளது. மேலும் இந்த திட்டம் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து செய்யப்படும்.


இங்கிலாந்து அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருக்கும் வெளிநாட்டு பயணிகள்!
[Saturday 2020-12-12 08:00]

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் யாராக இருந்தாலும், குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், மீறினால் கடும் அபராதம் என்று இங்கிலாந்து அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. எனினும் தற்போது வைரஸின் பரவல் குறைய, குறைய இங்கிலாந்து அரசு தன்னுடைய பயணக்கட்டுப்பாட்டில், சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.


அமெரிக்க மக்களை எச்சரித்த சுகாதார நிபுணர்!
[Saturday 2020-12-12 08:00]

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரசின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் அங்கு புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது.


பிரித்தானியாவை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த நாடு!
[Saturday 2020-12-12 08:00]

பொதுமக்களுக்கு அவசரகாலங்களில் பைஸா்-பயான்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்காவின் அரசு மருத்துவ ஆலோசனை குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, இதைத் தொடர்ந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் விரைவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்க் வரவுள்ளது.

 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா