Untitled Document
May 16, 2024 [GMT]
ஜி7 மாநாட்டில் மீண்டும் இணைய ரஷ்யாவிற்கு உதவமாட்டோம்: ட்ரூடோ திட்டவட்டம்!
[Tuesday 2020-06-02 17:00]

ஜி7 மாநாட்டில் உறுப்பினராக மீண்டும் ரஷ்யாவை இணைப்பதற்கு கனடா ஆதரவு தராது என்று அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதம் வரை தள்ளி வைப்பதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.


போராட்டக்காரர்களிடம் மண்டியிட முடியாது: டிரம்ப் மிரட்டல்!
[Tuesday 2020-06-02 17:00]

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்த வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தும் வீடியோ வெளியானது. சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை. ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் மோதல்கள் வெடித்துள்ளன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்: 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக அதிகரிப்பு!
[Tuesday 2020-06-02 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.


கலவர பூமியான அமெரிக்கா: வெளியான ஜோர்ஜ் ஃபிலாய்டின் உடற்கூராய்வு முடிவு!
[Tuesday 2020-06-02 08:00]

அமெரிக்கா முழுவதும் கலவர பூமியாக மாற காரணமான கருப்பினத்தவரின் மரணம் தொடர்பில் அதிமுக்கிய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலால், இந்த போராட்டம் மேலும் இறுக்கமடையும் என அரசியல், சமூக நோக்கர்களால் கணிக்கப்படுகிறது. மேலும் உறுதியான ஒரு முவெடுக்க முடியாமல் ஜனாதிபதி டிரம்ப் பதுங்கு குழிக்குள் மறைந்திருப்பதும் கலவரம் மேலும் நீடிக்க வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.


உயிரிழந்த கருப்பின நபருக்கு ஆதரவாக சுவிஸில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்!
[Tuesday 2020-06-02 08:00]

அமெரிக்காவில் பொலிஸ் காவலில் கருப்பினத்தவர் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். வட அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் அவ்வப்போது வன்முறை எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது போன்று, பெரிய பொது பேரணிகளுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் தடை விதித்திருந்தபோதும், சூரிச் நகரில் திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பேரழிவுக்கு தயாராக இருக்குமாறு நாட்டு மக்களை எச்சரித்த ஈரான்!
[Tuesday 2020-06-02 08:00]

ஈரானில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னால் ஒரே நாளில் 3,000 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நிலையில், நிர்வாகம் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஈரான். மரண எண்ணிக்கை பெருமளவு குறைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் 2,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி 81 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.


அமெரிக்காவில் ஆதரவு பேரணிக்குள் அதிவேகத்துடன் நுழைந்த ட்ரக்: பின்னர் நடந்த சம்பவம்!
[Monday 2020-06-01 17:00]

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பொலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிகள் நடந்துவருகின்றன. இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நேற்றிரவு, அப்படி Minneapolis நெடுஞ்சாலை ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் திடீரென அச்சுறுத்தும் வகையில் ட்ரக் ஒன்று நுழைந்தது. புயல் வேகத்தில் வந்த ட்ரக்கைக் கண்டு மக்கள் அச்சத்தில் அலறியடித்து சிதறியோடினர்.


கோவிட்-19: கனடாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 222 பேர் பலி!
[Monday 2020-06-01 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர்.


உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்த அமெரிக்கா: எச்சரித்த சீனா!
[Monday 2020-06-01 17:00]

உலக சுகாதார அமைப்பு உடனான உறவுகளைத் துண்டித்ததற்காக அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சகம், சர்வதேச சமூகம் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா அதிகார அரசியல் மற்றும் ஒருதலைப்பட்சத்தை பின்பற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது என்று சீனா வெளியுறவு அமைச்சகம்.


ஜோர்ஜ் ஃபிலாய்டு கொலை சம்பவம்: கனடாவில் நீதி கோரும் போராட்டம் மோதலில் முடிந்தது!
[Monday 2020-06-01 17:00]

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது.


வெள்ளைமாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்: பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட டிரம்ப்!
[Monday 2020-06-01 09:00]

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


நீ பேசுவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல டிரம்ப் நடந்து கொண்டார்: கருப்பின இளைஞரின் சகோதரர் கண்ணீர்!
[Monday 2020-06-01 08:00]

அமெரிக்காவில் பொலிஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கருப்பின இளைஞரின் சகோதரர் ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் George Floyd என்ற 46 வயது கருப்பின இளைஞர் கடந்த 27-ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது பொலிசார் இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதால், இது அங்கு பெரிய உள்நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


லண்டனில் கருப்பின ஓட்டுனரிடம் ஈவிரக்கம் இன்றி நடந்துகொண்ட வெள்ளை இன பொலிஸார்!
[Monday 2020-06-01 08:00]

லண்டனில் கருப்பின ஓட்டுனர் ஒருவரை வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, விசாரித்து கொண்டிருக்கும் போது கை விலங்கு போடுவது போன்று வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் பற்றி பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பொலிஸ் அதிகாரி அவர் அருகில் சென்று இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் நான் சும்மா இருப்பதாகவும், நண்பருக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார். இங்கு தான் நீ வசிக்கிறாயா என்று கேட்க, அதற்கு அந்த நபரின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தினால், அடையாள அட்டை இருக்கிறதா? இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளீர்களா என்று கேட்கிறார்.


கோவிட்-19: ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது!
[Sunday 2020-05-31 17:00]

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா அச்சம்: உலக நாடுகளிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த போப் பிரான்சிஸ்!
[Sunday 2020-05-31 17:00]

வாடிகன்சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோனார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ்,


ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய கேரள தம்பதி: முக்கிய கட்டத்தில் உதவிய இலங்கை தமிழர்!
[Sunday 2020-05-31 17:00]

விடுமுறை நாட்களை மனைவியுடன் இலங்கையில் கழிக்க சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கடந்த 70 நாட்களாக கொழும்பில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் வைப்பின் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். கப்பல் ஊழியரான இவர் விடுமுறை நாட்களை இலங்கையில் செலவிடலாம் என முடிவெடுத்து மனைவியுடன் கடந்த மார்ச் 11 அன்று கொழும்பு சென்றுள்ளார். இதனிடையே கொரோனா பரவல், ஊரடங்கு என கடும் நெருக்கடியை எதிர்கொண்ட இந்த தம்பதி மார்ச் 19 முதல் கேரளாவுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். ஊரடங்கால் உள்ளூர் விமான சேவைகள் மொத்தம் முடக்கப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்துள்ளனர்.


அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு ஆதரவாக லண்டனில் குவிந்த மக்கள்!
[Sunday 2020-05-31 17:00]

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது மரணமடைந்த கருப்பின நபருக்கு ஆதரவாக தெற்கு லண்டன் தெருக்களில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஜோர்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் தமக்கும் அந்த குற்றத்திற்கும் தொடர்பில்லை என ஜோர்ஜ் ஃப்ளாயிட் விளக்கமளித்தும், கைது செய்வதிலையே குறியாக இருந்துள்ளனர் பொலிசார்.


கோவிட்-19: ஒரே நாளில் 94 பேர் பலி - மொத்த பலி எண்ணிக்கை 7000 ஐ கடந்தது!
[Sunday 2020-05-31 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமட்டும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 7,073 ஆக உயர்ந்துள்ளது. கியூபெக்கிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்குமட்டும் 4439 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஒன்ராறியோவில் 2247 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


எகிப்தில் சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
[Sunday 2020-05-31 08:00]

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.


கோடிக்கணக்கில் உலகளாவிய மோசடியில் ஈடுபட்ட லண்டனை சேர்ந்த 2 தமிழர்கள்!
[Sunday 2020-05-31 08:00]

பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய பணமோசடியில் ஈடுபட்டதற்காக இரண்டு தமிழர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Purley-வை சேர்ந்த Vijaya Kumar Krishnasamy (32) மற்றும் Chandrasekar Nallayan (44) ஆகிய இரண்டு இந்திய தமிழர்களே குற்றவாளிகள் ஆவார்கள். இருவரும் சேர்ந்து 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட money laundering எனப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதோடு, £1.6 மில்லியன் பணமோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது.


பொலிஸார் கறுப்பினத்தவரை கொன்ற விவகாரம்: போராட்டக்களமான அமெரிக்கா! Top News
[Sunday 2020-05-31 08:00]

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, பொலிஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் திகதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.


கோவிட்-19: உலக அளவில் 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!
[Saturday 2020-05-30 17:00]

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


இங்கிலாந்து அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் கோபமடைந்த சீனா!
[Saturday 2020-05-30 17:00]

ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இங்கிலாந்தின் இந்த முடிவு சீனாவை கொந்தளிக்கச் செய்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது.அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.


கொரோனா அச்சுறுத்தல்: கனடாவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றம் பாதியாக குறையும் - வெளியான முக்கிய தகவல்!
[Saturday 2020-05-30 17:00]

கனடாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தொடர்பிலான ஆய்வின் முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகளவில் வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் குடியுரிமை வழங்கும் நாடுகளில் ஒன்றாக கனடா இருந்து வருகிறது. இதனால் இலங்கை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேரு நாடுகளை சேர்ந்தவர்கள், கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதிக அளவில் கனடா செல்கின்றனர்.


பிரித்தானியாவில் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தானது: மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை!
[Saturday 2020-05-30 17:00]

பிரித்தானியா அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் மற்றொரு உறுப்பினர், பிரித்தானியா ஊரடங்கை தளர்த்துவது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த சரியான நேரம் இது அல்ல என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் நோய்த்தொற்று மருத்துவத்தின் பேராசிரியர் கலாம் செம்பிள் கூறியுள்ளார். முக்கியமாக நாம் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் திறக்க போகிறோம், அது பொங்க போகிறது. நாம் மூடியைத் திறப்பதற்கு முன்பு அதை கட்டுப்படுத்த வேண்டும், தற்போது திறப்பது மிக விரைவாக இருக்கிறது என்று அவர் கூறினார்.


கொரோனா தாக்கம்: கியூபெக்கில் திறந்தவெளி திரையரங்குகள் திறப்பு!
[Saturday 2020-05-30 17:00]

கியூபெக் மாகாணத்திலுள்ள நான்கு திறந்தவெளி டிரைவ்-இன் (drive in theaters) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த திரையரங்குகளுக்கு வருகை தருகின்றவர்கள் கியூபெக் மாகாண அரசினுடைய சுகாதார அறிவித்தல்களை கடைபிடிக்க வேண்டும்.


உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை - டிரம்ப் அதிரடி!
[Saturday 2020-05-30 09:00]

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார்.


கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கும் ஈரான்: வெளியான புகைப்படங்கள்! Top News
[Saturday 2020-05-30 08:00]

ஈரானில் கொரோனா வைரஸ் முதல் நோயாளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சி முன்பே அங்கு கொரோனா பாதிப்பு துவங்கவிட்டதாக கூறி, தெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில், 146,668பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7,677 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஈரான் உண்மையான இறப்பு எண்ணிக்கையை மூடி மறைப்பதாகவும், அது இதை விட ஐந்து மடங்கு அதிகம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா