Untitled Document
April 29, 2024 [GMT]
கோவிட்-19: மீட்பு பணியின் முதல் கட்டம் குறித்து ஒன்றாரியோ மாகாண முதல்வர் கருத்து!
[Friday 2020-05-15 17:00]

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நாம் நமது காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நாம் நிறைய வணிகங்களைத் திறந்து, அதிகமானவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்ல முடியும்’ என கூறினார்.


ஐக்கிய அமீரகத்திற்கு கடிதம் எழுதிய பிரித்தானிய சிறுவன்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
[Friday 2020-05-15 08:00]

ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் பிரித்தானிய சிறுவன், அங்குள்ள தலைவருக்கு கைப்பட எழுதிய கடிதத்தால் நீண்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் தாயாருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல் கைமா மாகாணத்தில் 7 வயது மகன் ஆர்ச்சி மற்றும் கணவர் ரிச்சார்டுடன் குடியிருந்து வந்துள்ளார் பிரித்தானிய தாயார் ஜெசிகா ஃபிட்ஸ்ஜான். கொரோனாவால் தந்தை இறந்ததை அடுத்து, இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெசிகா கடந்த மார்ச் மாதம் பிரித்தானியா திரும்பியுள்ளார்.


ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின் திடீர் மாரடைப்பால் மரணம்!
[Friday 2020-05-15 08:00]

ஆஸ்திரியா பேரரசர் கார்ல் வம்சாவளி இளவரசி மரியா கலிட்சின் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 31 வயதான இளவரசி மரியா கலிட்சின், சமையற்கலைஞரும் இந்தியா வம்சாவளி கணவருமான ரிஷி ரூப் மற்றும் 2 வயது குழந்தையுடன் ஹூஸ்டன் நகரில் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மே 4 ஆம் திகதி, அவரது 32-வது பிறந்தநாளுக்கு 6 நாட்கள் முன்னர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இளவரசியின் மரணம் தொடர்பில் ஹூஸ்டன் நாளேடுகளில் அஞ்சலி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்ட கனடிய பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு!
[Friday 2020-05-15 08:00]

கனடிய பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு, 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


கொரோனா மக்களைவிட்டு வெளியேற போவது இல்லை: உலக சுகாதார அமைப்பு!
[Thursday 2020-05-14 17:00]

பல்வேறு நாடுகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்கவும், முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக உள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் மக்களிடையே தங்கி விடும் என்று கூறியுள்ளது. ஜெனீவாவில் நடந்த காணொலி செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது:-


கொரோனா தாக்கம்: உலகம் முழுவதும் அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் பலியாகும் அபாயம்!
[Thursday 2020-05-14 17:00]

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கொரோனா எதிரொலி: கனடா - அமெரிக்காவிற்கிடையிலான தேவையற்ற பயணங்களுக்கான தடை நீடிப்பு!
[Thursday 2020-05-14 17:00]

கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் தகவல்களும் தெரிவிக்கின்றன.


பிரித்தானியாவில் 25% மக்களின் உடலில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளது: அதிர்ச்சி தகவல்!
[Thursday 2020-05-14 17:00]

சமீபத்திய ஆய்வு ஒன்று, 25 சதவிகிதத்திற்கு அதிகமான பிரித்தானியர்கள் உடலில் ஏற்கனவே கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வாளர்களில் ஒருவரான Dr Adrian Heald கூறும்போது, கொரோனா மிகவும் பயங்கரமாக தொற்றக்கூடியது, அத்துடன், ஒரு சிறு கூட்டம் மக்களுக்கு அது மிகவும் ஆபத்தானது.


கோவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 133 பேர் பலி - 1,121 பேர் பாதிப்பு1
[Thursday 2020-05-14 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 133பேர் உயிரிழந்ததோடு, 1,121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,302ஆ உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,278ஆக அதிகரித்துள்ளது.


கோவிட்-19: ரஷ்யாவில் 10 நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
[Thursday 2020-05-14 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 43.90 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,95,696 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அங்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.


பிரான்சில் சிறார் பாடசாலையிலிருந்து வெளியான நெஞ்சை உறையவைக்கும் புகைப்படம்! Top News
[Thursday 2020-05-14 08:00]

பிரான்சில் சிறார் பாடசாலை ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டுள்ள கட்டத்திற்குள் குழந்தைகளை தனியாக விளையாட வைக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள டூர்கோயிங் பகுதி பாடசாலை ஒன்றில் இருந்தே நெஞ்சை உலுக்கும் இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் புதிதாக போடப்பட்டுள்ள கட்டத்தில் சிறார்களை தனியாக விளையாட வைக்கப்பட்டுள்ளனர்.


பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றிய கேரள பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி!
[Thursday 2020-05-14 08:00]

பிரித்தானியாவில் உள்ள மருத்துமனையில் பணிபுரிந்த கேரள பெண் மருத்துவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் பூர்ணிமா நாயர். இவர் பிரித்தானியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.


இவ்வருட இறுதிவரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் - ட்விட்டர்!
[Wednesday 2020-05-13 17:00]

ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.


'கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்' - அமெரிக்கா!
[Wednesday 2020-05-13 17:00]

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது: கொரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததற்குச் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்.சீனாவின் உகானில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது.


கொரோனா தொற்றை குறைக்க இதுதான் சிறந்த வழி: கியூபெக் முதல்வர்!
[Wednesday 2020-05-13 17:00]

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கியூபெக்கர்கள் பொது வெளியில் இருக்கும்போது முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம். கொவிட்-19 தொற்றை தவிர்ப்பதற்கு அடிக்கடி கை கழுவுதல் மற்றும் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிப்பது மிகவும் பயனுள்ள வழியாகும்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்கும் தருவாயில் நான்கு பேரை வாழவைத்த நபர்: நெகிழ்ச்சி சம்பவம்!
[Wednesday 2020-05-13 17:00]

எமிரேட்ஸை சேர்ந்த நபர் ஒருவர் இறந்த பின்னரும் நான்கு பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எமிரேட்ஸை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விபத்தில் சிக்கியதால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையும் பலனளிக்காமல் போன நிலையில் கடைசி நிமிடத்தில் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பப்படுவதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.


கோவிட்-19: கனடாவில் பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது!
[Wednesday 2020-05-13 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,169ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,176பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 176பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: பயங்கரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி மக்கள் 40 பேர் உடல் சிதறி பலி!
[Wednesday 2020-05-13 08:00]

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தலீபான்களுடன் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதே போல் ஆப்கானிஸ்தான் அரசும் தலீபான்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தொடர்ந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.


உக்ரைனில் மனித உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டு வந்த தந்தை, மகன் - அதிர்ச்சி பின்னணி!
[Wednesday 2020-05-13 08:00]

உக்ரைன் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்து, அவரின் உடல் பாகங்களை சமைத்த தந்தை மற்றும் மகனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் உக்ரைனில் யெவ்ஜெனி பெட்ரோ(45) என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தந்தை மற்றும் மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய இலங்கை தமிழர் கொலை வழக்கு: விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்!
[Wednesday 2020-05-13 08:00]

பிரித்தானியாவில் மனைவி குளிக்க சென்ற நேரத்தை வாய்ப்பாக பயன்படுத்திய இலங்கை தமிழர் தமது பிள்ளைகளை கூரான ஆயுதத்தால் தாக்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள இல்போர்டில், அவர்களது குடியிருப்பில் வைத்து நடராஜா நித்தியகுமார் தமது 19 மாத மகளான பாவின்யா மற்றும் 3 வயது மகன் நிகாஷ் ஆகியோரின் கழுத்தில் திட்டமிட்டே காயப்படுத்தியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ரஷ்யாவில் கொடூரம்: மருத்துவமனை தீப்பிடித்து எரிந்ததில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
[Tuesday 2020-05-12 17:00]

ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 5 கொரேனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மருத்துவமனையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வென்டிலேட்டரில் ஏற்பட்ட மின் கசிவு மூலம் தீப்பிடித்தது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


மொன்றியலில் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் ஏற்படலாம் - கியூபெக் மாகாண முதல்வர்!
[Tuesday 2020-05-12 17:00]

மொன்றியல் பகுதியில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட், தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைளையும் கடைகளையும் விரைவில் மீண்டும் திறப்பது கொவிட்-19 பாதிப்புகள் அதிக அளவில் பரவ வழிவகுக்கும். மொன்றியலில் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. பொதுச் சுகாதார அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


லண்டனில் தனது வீட்டை £2-க்கு விற்கும் இளைஞன்! - காரணம் இதுதான்.
[Tuesday 2020-05-12 17:00]

லண்டனில் கோடிக்கணக்கில் மதிப்பிலான தனது வீட்டை ஒரு டிக்கெட் விலை தலா £2 என்ற raffling மூலம் நபர் விற்க முயன்ற நிலையில் கொரோனா அதற்கு தடையாக வந்துள்ளது. லண்டனின் Purleyவில் தனது மனைவியுடன் வசித்து வருபவர் Daniel Twenefour (29). இவருக்கு Mitcham-ல் மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய வீடு உள்ளது. இதன் மதிப்பு £410k ஆகும். இந்த வீட்டை raffling முறையில் விற்க அவர் முடிவு செய்தார்.


கோவிட்-19: கனடாவில் ஏழுபதாயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!
[Tuesday 2020-05-12 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,133பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 123பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,981ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,993ஆகும்.


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா!
[Tuesday 2020-05-12 09:00]

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-ம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இருந்தன. இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது. கடந்த சில நாட்களாக, ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிக்கும் சீனா - அமெரிக்க குற்றச்சாட்டு!
[Tuesday 2020-05-12 08:00]

கொரோனா வைரஸுக்கு எதிராக வெற்றிகரமான தடுப்பூசியை சீனா முதலில் தயாரித்தால் அமெரிக்காவுக்கு அது கவுரவ பிரச்சினையாக அமையும். இதனால் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், என அழைக்கப்படும் ஒரு ஆராய்ச்சி முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இது மருந்து நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தை ஒன்றாக இணைத்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளும் ஏற்கனவே வர்த்தகம் முதல் 5 ஜி தகவல்தொடர்பு நெட்வொர்க்குகள் வரை அனைத்திலும் ஆதிக்கத்திற்கான போட்டி ஏற்பட்டு உள்ளன.


பிரித்தானியா பல்பொருள் அங்காடியில் முதியவரை குத்திக்கொன்ற இளம்பெண்!
[Tuesday 2020-05-12 08:00]

பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 5 ஆம் திகதி நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலியான 88 வயது தேவாலய வார்டனின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஜான் ரீஸ் என்ற அந்த தேவாலய வார்டன் தமது மனைவியை காருக்குள் காத்திருக்க செய்துவிட்டு, Pen-y-Graig பகுதியில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றுள்ளார். திடீரென்று யுவதி ஒருவர் கத்தியால் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியதில், முதியவர் ரீஸ், கழுத்தில் ஆழமான காயம்பட்டு சம்பவயிடத்தில் சரிந்துள்ளார்.


ஒன்ராறியோவில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள்!
[Monday 2020-05-11 18:00]

கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. 24 மணி நேரத்தில் ஒன்ராறியோவில் பதிவான கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60. நேற்றைய (ஞாயிறு) நிலவரப்படி, ஒன்ராறியோ உள்ளூர் சுகாதார அமைப்புகள் அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி இதுவரை 21,303 கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,709.

Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா