Untitled Document
April 29, 2024 [GMT]
கொரோனா எதிரொலி: கனடாவில் வீடு தேடி வரும் பல்பொருள் அங்காடிகள்!
[Thursday 2020-05-07 17:00]

கொரோனா கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களை தங்கள் வசதிக்கு பொருட்களை வாங்க முடியாமல் கட்டிப்போட்டுவிட்டன. ஆகவே, விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்படியாவது சந்தித்துவிட தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல், வியாபாரம் என்பது, விற்பவர் வாங்குபவர் என இரு தரப்பினருக்கும் லாபத்தைத் தரும் விடயம்தானே!


ரஷ்யாவை குறிவைக்கும் கொரோனா: 177,160 பேருக்கு தொற்று உறுதி!
[Thursday 2020-05-07 17:00]

ரஷ்யாவில், தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 92,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ரஷ்யாவில் 177,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாகாண மேயர், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா தொற்று: கனடாவில் ஒரே நாளில் 1450 பேர் பாதிப்பு - 189 பேர் பலி!
[Thursday 2020-05-07 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியது!
[Thursday 2020-05-07 08:00]

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


அமெரிக்காவில் மனைவியை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக புகாரளித்த கணவன்!
[Thursday 2020-05-07 08:00]

அமெரிக்காவில் மனைவி காணமல் போய்விட்டதாக கூறி புகார் அளித்திருந்த கணவன், அவரே இறுதியில் மனைவியை கொலை செய்து மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota-வை சேர்ந்தவர் Joshua David Fury 28 வயதான இவர், Maria Pew Fury(28) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ஆம் திகதி Joshua David Fury, தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார், ஹெலிகாப்டர்கள் மூலம் பெரிய தேடுதல்களை துவங்கினர். ஆனால் அவரைப் பற்றி எந்த ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை.


அமெரிக்காவில் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!
[Thursday 2020-05-07 08:00]

அமெரிக்காவில் ஜுன் முதல் திகதி முதல் கொரோனவால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால், அங்கிருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். உலகின் வல்லரசு நாடு என்ற தன்னை பெருமையாக கூறிக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நாடு, மற்ற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது. கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


சீனாவிடம் கொரோனா வைரஸ் குறித்த சுயாதீன விசாரணை: பிரித்தானியாவிடம் உதவி கோரும் அவுஸ்திரேலியா!
[Thursday 2020-05-07 08:00]

சீனாவில் முதலில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணையை ஆதாரிக்க பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம், அந்நாடு மட்டும் முன்பே கூறியிருந்தால் இந்தளவிற்கு மிகப் பெரிய பிரச்சனையாக மாறியிருக்காது. குறிப்பாக அங்கிருக்கும் வுஹான் ஆய்வகத்தின் சோதனை மையத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.


ரஷ்யாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்!
[Wednesday 2020-05-06 17:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது சுமார் 37 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொரோனா அச்சம்: ஒன்ராறியோவில் தனிமைப்படுத்தப்பட்ட 330 வெளிநாட்டுப் பயணிகள்!
[Wednesday 2020-05-06 17:00]

ஒன்ராறியோவில் 14 கண்காணிப்பு மையங்களில் 330 வெளிநாட்டுப் பயணிகள், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பயணிகளுக்கு தற்போது தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும், கூட்டாச்சி அரசால் நடத்தப்படும் ஒன்ராறியோவில் உள்ள ட்ரெண்டோன், கோர்ன்வெல் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் சுட்டுக்கொலை!
[Wednesday 2020-05-06 17:00]

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியரா பணியாற்றி வரும் டாக்டர் பிங் லியு, கொரோனா தொடர்பான மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.


கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தை உறுதிப்படுத்த ஏன் இவ்வளவு தாமதம்? - பிரதமரிடம் கேள்வி! Top News
[Wednesday 2020-05-06 17:00]

கிரேக்கத்தில் கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தக், கனேடிய ஆயுதப்படைகளுக்கு தாமதமானது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார். கிரேக்கத்தில் இடம்பெற்ற கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தை உறுதிப்படுத்த கனேடிய ஆயுதப்படைகளுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ஜஸ்டினிடம் கேட்கப்பட்டது.


கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான புதிய தகவல்களை வெளியிட்ட சீனா!
[Wednesday 2020-05-06 07:00]

சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக கருதப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றேதான் இந்த வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரே தீர்வாக அமையும். எனவேதான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து முழுமையாக மீண்டவர்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.


பிரித்தானியாவில் குழந்தை பெற்ற சிலமணி நேரத்தில் மனைவியை துஷ்பிரயோகம் செய்த கொடூர கணவன்!
[Wednesday 2020-05-06 07:00]

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் கணவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், தற்போது அவர் இந்த ஊரடங்கு காரணமாக வீட்டியில் துஷ்பிரயோக நபர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். Natasha Saunders என்ற பெண், தன்னுடைய கணவரை சந்தித்த போது அவருக்கு வெறும் வயது 17 தான், இப்போது Natasha Saunders-விற்கு 31 வயது, கணவரை பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்து இவர், கணவனால் 8 ஆண்டுகளாக தான் அனுபவித்த சித்ரவதை குறித்து கூறியுள்ளார்.


அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!
[Wednesday 2020-05-06 07:00]

அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சரிதா கோமட்ரெட்டியை என்ற பெண்ணை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தும் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள பிரெட் காவனாவின் சட்ட உதவியாளராக இருந்துள்ளார்.


கொரோனாவை அழிக்கக்கூடிய மூலிகை மருந்து தங்களிடம் உள்ளதாக கூறிய மடகாஸ்கர் அதிபர்!
[Tuesday 2020-05-05 18:00]

மடகாஸ்கர் தீவுகளில் கொரோனா நோய்த் தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதுமில்லை. அங்கு காணப்படும் ஆர்டிமீஸியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து கொரோனா நோயையும் அழிக்க வல்லது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார்.


கொரோனாவுக்கு எதிரான போரில் கனடா வென்றது எப்படி?
[Tuesday 2020-05-05 18:00]

கனடா, அமெரிக்கா, இரண்டு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள்! இரண்டும் வட அமெரிக்க நாடுகள், இரண்டிலும் ஒரே வயதுடைய மக்கள், கொரோனா அதிகம் காணப்பட்ட ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலிருந்து இரண்டுமே ஒரே தொலைவிலும் அமைந்துள்ளன! ஆனால், கனடாவை விட அமெரிக்காவில் கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மடங்கு அதிகம் மற்றும், கனடாவை விட 30 சதவிகித அதிக உயிரிழப்பு அமெரிக்காவில். இது குறித்து இரு நாட்டு நிபுணர்களையும் கலந்தாலோசித்தபோது, அவர்கள் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறார்கள்.


'கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறக்கப்படும்' - கியூபெக் முதல்வர்!
[Tuesday 2020-05-05 18:00]

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள், மாணவர்களின் நலனுக்காக திட்டமிடப்பட்டபடித் திறக்கப்படும் என கியூபெக் மாகாண முதல்வர் லெகால்ட் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸால் உயிர் தப்பிய பிரித்தானிய பெண்மணி!
[Tuesday 2020-05-05 18:00]

கொரோனா வைரஸ் தான் தனது உயிரைக் காப்பாற்றியது என பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அறிகுறிகளின் 11 நாட்களுக்குப் பிறகு ஏஞ்சலா ஸ்க்லெகல் என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரின் இதயம் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். லண்டனின் ராயல் ப்ராம்ப்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது அவரது இதய ஆபத்தான நிலையில் இருக்கிறது என மருத்துவர்கள் கூறியதை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.


கோவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 172 பேர் உயிரிழப்பு - 1298 பேர் பாதிப்பு!
[Tuesday 2020-05-05 18:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலங்களில் 172பேர் உயிரிழந்துள்ளதோடு, 1298பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி, கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,772ஆகும். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,854ஆகும்.


அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம்: எச்சரிக்கும் சீன அதிகாரிகள்!
[Tuesday 2020-05-05 08:00]

கொரோனா தொடர்பில் சீனா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த எச்சரிக்கை அறிக்கையை சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் கடும்போக்கு கடந்த 1989 ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவத்திற்கு பின்னர் இருந்ததைவிட தற்போது கடுமையாக உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் விளைவாக உலகின் இரு முக்கிய சக்திகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் எதையும் வெளியிட அதிகாரிகள் தரப்பு மறுத்து வருகின்றனர்.


கொரோனா எதிரொலி: போவன் தீவின் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தியது டிரான்ஸ்லிங்!
[Tuesday 2020-05-05 08:00]

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், வருவாய் குறைந்து வருவதால், போவன் தீவின் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும், பொது போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்லிங் இடைநிறுத்தியுள்ளது. போவன் தீவின் பேருந்து வழித்தடங்கள், 280 ஸ்னக் கோவ்-புளூவாட்டர், 281 ஸ்னக் கோவ்-ஈகிள் கிளிஃப், மற்றும் 282 மெட் கார்ட்னர்-ஸ்னக் கோவ் ஆகியவை மே 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக டிரான்ஸ்லிங் அறிவித்துள்ளது.


வடகிழக்கு சிரியாவில் உள்ள பள்ளத்தாக்கில் சடலங்களை குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!
[Tuesday 2020-05-05 08:00]

வடகிழக்கு சிரியாவில் ஒரு பள்ளத்தாக்கைப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் சடலங்களைக் குவித்தது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2014-ல் வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு தற்போது ஆய்வாளர்கள் விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆட்சி நடத்திய காலகட்டத்தில் முழுவதும் 50 மீற்றர் ஆழம் கொண்ட அல்-ஹோதா பள்ளத்தாக்கில் சடலங்களை வீசுவது தொடர்ந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, உள்ளூர் அதிகாரிகள் அந்த பள்ளத்தாக்கை பாதுகாக்க வேண்டும், மனித எச்சங்களை அகற்ற வேண்டும், மற்றும் வழக்குகளுக்கான ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது.


கொரோனா குறித்த தகவல்களை சீனா மறைத்ததற்கான காரணத்தை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை!
[Monday 2020-05-04 17:00]

கொரோனாவின் தீவரத்தை சீனா மூடிமறைத்ததாக நம்பும் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள், அவர்கள் அப்படி செய்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய நிலையில் சீனா வேண்டுமென்றே நோயை பரப்பியதாகவும், நோய் குறித்த தகவல்களை மூடி மறைத்ததாக அமெரிக்கா தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.


மருத்துவ சேவைக்காக 240 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது கனடிய அரசாங்கம்!
[Monday 2020-05-04 17:00]

மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க 483 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கிய பிரித்தானியா!
[Monday 2020-05-04 17:00]

கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது ‘நமது வாழ்நாளின் மிக அவசரமான பகிரப்பட்ட பெரும் முயற்சி’ என்று திங்களன்று நடைபெறும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் பிரித்தானியா தற்போது மிகப்பெரிய உலகளாவிய நன்கொடையாளராக உள்ளது, இது 388 மில்லியன் பவுண்ட் (483 மில்லியன் டொலர்) ஆராய்ச்சிக்காக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டம்!
[Monday 2020-05-04 17:00]

எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்குவதன் மூலம் தாக்குதல் ரக துப்பாக்கித் தடையை மேலும் வலுப்படுத்தலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய நடவடிக்கைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு எதனையும் அவர் வெளியிடவில்லை.


கொரோனாவிலிருந்து தன்னை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய போரிஸ் ஜான்சன்!
[Monday 2020-05-04 08:00]

கொரோனா வைரசால் உலக தலைவர்களில் முதன்முதலில் பாதிக்கப்பட்டது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (வயது 55). ஆரம்பத்தில் வீட்டில் தன்னைதானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்ற போரிஸ் ஜான்சன், உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களுக்குப்பின் இயல்புநிலைக்கு திரும்பினார். 10 நாட்களுக்கும் மேலாக கொரோனாவுடன் போராடி தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார்.


அமெரிக்காவில் திடீரென மாயமான விலையுயர்ந்த கார்கள்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
[Monday 2020-05-04 08:00]

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து விலையுயர்ந்த கார்கள் காணமல் போய் கொண்டிருந்த நிலையில், அதை எல்லாம் திருடியது யார் என்பதை தெரிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா உள்ள போர்சித் கவுன்ட்டியில் அடிக்கடி பல விலை உயர்ந்த கார்கள் திருடு போயுள்ளது. இதனால் இதுதொடர்பாக பொலிசாருக்கு பல புகார்கள் வந்துள்ளது, இருப்பினும் திருடன் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால், கார் திருடர்களை பிடிப்பதற்காக உளவுத்துறையினரை பொலிசார்முடுக்கிவிட்டனர். இதில்தான் திருட்டு கார் ஒன்றை மெகீல் பின்ஸ் என்ற 19 வயது பருவ சிறுவன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா