Untitled Document
April 28, 2024 [GMT]
அமெரிக்க மீனவரிடம் சிக்கிய மிகவும் வயதான மீன்!
[Tuesday 2020-01-14 17:00]

அமெரிக்காவில் மிக வயதான வார்சா இன மீன் ஒன்று மீனவரிடம் சிக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவின் மேற்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது ஜேசன் பாயல் (Jason Boyll) என்ற மீனவரின் தூண்டிலில் அரிய வகை மீன் சிக்கியது.


ரொறன்ரோ வீடொன்றில் தீவிபத்து: பெண்ணொருவர் பலி!
[Tuesday 2020-01-14 17:00]

ரொறன்ரோ - பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார். ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய காட்டுத்தீ: சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!
[Tuesday 2020-01-14 17:00]

காட்டுத் தீயில் சிக்கி தத்தளித்து வரும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயால் ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 2000 வீடுகள் மற்றும் ஏராளமான விலங்குகள் தீக்கிரையாகியுள்ளன.


வின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக கடத்தப்பட்ட 200 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் பறிமுதல்!
[Tuesday 2020-01-14 17:00]

வின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக சென்ற வணிக டிரக் ஒன்றை சோதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம், சுமார் 200 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய மெத்தாம்பேட்டமைன்னை கைப்பற்றியுள்ளது. மேலும், அம்பஸ்டர் பாலத்தின் வழியாக பயணித்த இந்த டிரக்கிலிருந்து, 96 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய கோகோயினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர பல கைத்துப்பாக்கிகள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் என்பவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி வெளியேற இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல்!
[Tuesday 2020-01-14 08:00]

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரிக்கும், நடிகையுமான மேகன் மெர்கலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறப்போவதாக அண்மையில் அறிவித்தார். இந்தத் தம்பதியினர் ராஜ வாழ்க்கையை விட, சாதாரண மக்களுடன் பழகி அவர்களுள் ஒருவராக வாழ விரும்புவதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தனர். ஆனால், மனைவி மேகனுக்கு தனது குடும்பத்தில் சரியான மரியாதை கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை ஹாரி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத், தந்தை சார்லஸ் உள்ளிட்டவர்களை கலந்தாலோசிக்காமலேயே ஹாரி இந்த முடிவை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருமணமானவர்கள் பாதிரியாராக பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் போப் பெனடிக்ட்!
[Tuesday 2020-01-14 08:00]

திருமணம் செய்து கொண்டவர்கள் பாதிரியார்களாக வேலை செய்வதற்கு முன்னாள் போப் பெனடிக்ட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில் , பாதிரியார்களாக வேலைக்கு வருபவர்கள் பிரம்மச்சரியத்தை விடவும் திருமணத்தினால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கிறிஸ்துவிடம் தம்மை அர்ப்பணிப்பதே பாதிரியார்களுக்கு அடிப்படையாகும்.


ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் பரவாயில்லை - டிரம்ப்!
[Tuesday 2020-01-14 08:00]

கடந்த 3-ந் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க விமானத்தின் குண்டு வீச்சில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பலியானார். இதற்கு பதிலடியாக, கடந்த 8-ந் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்தது. இந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் ஈரான் நாட்டில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 176 பேரும் பலியானார்கள். ஈரான் ஏவுகணை வீசி, விமானத்தை வீழ்த்தியதாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. முதலில் அதை மறுத்த ஈரான், தங்கள் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஈரான் அரசுக்கு எதிராக ஈரானிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்த காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஈரான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடுமையான பனிபொழிவு: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
[Monday 2020-01-13 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல இடங்களிலும் கடுமையான பனி பொழிவு நிலவுவதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான குளிர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு!..
[Monday 2020-01-13 17:00]

சூரிய குடும்பத்திற்கு வெளியே, பூமியில் இருந்து ஆயிரத்து 300 ஒளிஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டு பிடித்துள்ளது. பிக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கோள், சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது. இந்த கோள் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும், அதில் ஒன்று சூரியனை விட 15 சதவிகிதம் பெரியது என்றும் நாசா தெரிவித்துள்ளது.


ஈரான் விமான விபத்தில் பலியானவர்களுக்கு நீதி பெறுவது உறுதி - ஜஸ்டின் ட்ரூடோ!
[Monday 2020-01-13 17:00]

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி பெறுவது உறுதி என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கனடா நாட்டைச் சேர்ந்த 57 பேர் உள்பட 176 பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு ஈரான் ராணுவம் பொறுப்பேற்றுள்ள நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


820 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் ஆஸ்திரிய வீரர் - மீட்பு பணி தீவிரம்!
[Monday 2020-01-13 17:00]

தாய்லாந்தில் செங்குத்தான பாறை ஒன்றில் 820 அடி உயரத்தில் பாராசூட்டுடன் சிக்கிக் கொண்ட வீரரை மீட்கும் சவாலான முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பட்டாலுங் மாகாணத்தில் தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கை டைவிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 9 ஆஸ்திரிய வீரர்களில் ஒருவரான ஜோகன்னஸ் கிராசரின்((Johannes Grasser)) பாராசூட், செங்குத்தான பாறை ஒன்றின் விளிம்பில் மாட்டிக் கொண்டது.


ஒன்றாரியோ அணு மின் நிலையத்தில் தவறான அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை: விசாரணை ஆரம்பம்!
[Monday 2020-01-13 17:00]

கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில், தவறான அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை அலாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றான, பிக்கரிங் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொறாண்டோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், நேற்று காலை 7:30 மணிக்கு திடீரென எச்சரிக்கை ஒன்று வெளியிட்டது. இந்த எச்சரிக்கை மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியது. இந்த அபாய எச்சரிக்கை பிக்கரிங் அணு உற்பத்தி நிலையத்தின் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ மாகாண வாசிகளுக்கும் சென்றது.


ஆஸ்திரேலிய காட்டுத்தீ: தன்னார்வ வீரர் உயிரிழப்பு!
[Monday 2020-01-13 08:00]

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பரவி வருகிற காட்டுத்தீ அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகி உள்ளன. அமெரிக்காவின் இண்டியானா மாகாண பரப்பளவுக்கு சமமான பகுதி தீயில் பாதித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்கள் நடத்தினர். அவற்றில் பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலக வலியுறுத்தினர்.


ஈரானில் அரசு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது!
[Monday 2020-01-13 08:00]

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமையன்று பயணிகள் விமானம் ஒன்று உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்டு சென்றது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் பயணம் செய்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் ஈரான் குடிமக்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இதில் சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாக வில்லை, அந்த விமானத்தை தாங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ராணுவம் ஒப்புக்கொண்டது. இது குறித்து அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, ‘‘உக்ரைன் விமானத்துக்கு நேர்ந்த துயரம் குறித்து, ராணுவ விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், மனித தவறு காரணமாக உக்ரைன் விமானம் ஏவுகணைகள் வீச்சில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது. இது மன்னிக்க முடியாத தவறு’’ என்று கூறினார்.


துபாயில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்! Top News
[Monday 2020-01-13 08:00]

அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. சில வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி செல்கிறது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். சில பகுதிகளில் கடுங்குளிரும் சேர்த்து மக்களை வாட்டி வருகிறது.


உக்ரைன் விமான விபத்து: ஈரான் அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்!
[Sunday 2020-01-12 18:00]

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்றபோது அவரை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது சிறிது நேரத்தில், ஈரானின் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென்ற விமானம் திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில் 176 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள் மற்றும் கனடாவை சேர்ந்தவர்கள். முதலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் விமானத்தை ஈரானே ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி உள்ளது என்று அமெரிக்கா, கனடா குற்றம் சாட்டியது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் கூறுகையில், விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியதற்கான ஆதாரங்கள் பல்வேறு உளவுத்துறைகள் மூலம் எங்களுக்கு கிடைத்து உள்ளது. தவறுதலாக விமானத்தை தாக்கி உள்ளனர் என்றார். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்தது.


புற்றுநோயை வென்ற அமெரிக்க சிறுவன்!
[Sunday 2020-01-12 18:00]

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு பள்ளியில் சக மாணவர்கள் அளித்த உற்சாக வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூபரி நகரைச் சேர்ந்த ஜான் ஆலிவர், 3 வயதாக இருக்கும் போது லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (lymphoblastic leukemia) என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவனது பெற்றோர் கண்டறிந்தனர்.


புதிய சாதனை படைத்த துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்!
[Sunday 2020-01-12 18:00]

துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 1000 நாட்களில் 1000 பாடல்களை தனி ஆளாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இசைக்கலைஞரான ஸ்வப்ணா ஆப்ரகாம் என்பவர், துபாயில் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த நிலையில், இசை மீது தனக்கிருந்த ஆர்வத்தைக் கொண்டு ஏதேனும் சாதனை படைக்கவேண்டும் என முடிவெடுத்துள்ளார்.


ஈராக்கில் மேலும் ஒரு தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
[Sunday 2020-01-12 18:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3 ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இந்நிலையில் காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.


ஈரானை எச்சரித்த கனடா!
[Sunday 2020-01-12 18:00]

உக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் வெளிப்படைத் தன்மையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததுடன் அவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


பிரிட்டனில் ருசிகரம்: வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய இணைய தோழி!
[Sunday 2020-01-12 09:00]

பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியபோது, 5 ஆயிரம் மைல் தொலைவுக்கு அப்பால் அமெரிக்காவிலிருந்து அவருடன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளம்பெண் காப்பாற்றியுள்ளார். 17 வயதான ஏய்டன் ஜாக்சன், செசைரிலுள்ள விட்னஸ் பகுதியிலிருக்கும் தனது வீட்டு மாடியில் இருந்தபடி, டெக்சாஸை சேர்ந்த தியா லதோரா என்பவருடன் கடந்த 2ம் தேதி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.


மெக்சிகோவில் பயங்கரம்: ஆசிரியையை சுட்டு கொன்றுவிட்டு 11 வயதான மாணவன் தற்கொலை!
[Sunday 2020-01-12 09:00]

மெக்சிகோவின் கோவ்ஹூய்லா மாகாணத்தில் உள்ள டோரியான் நகரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. அப்போது, 11 வயதான மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் தனது வகுப்பறைக்குள் நுழைந்தான். அங்கு பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்து, துடிதுடித்து இறந்தார்.


காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன்? - டிரம்ப் விளக்கம்!
[Sunday 2020-01-12 08:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. காசிம் சுலைமானி ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வந்தார். இதனால் அவரது கொலை ஈரானை பயங்கரமாக உலுக்கியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது. அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.


பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டி விபத்து: 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்!
[Saturday 2020-01-11 17:00]

பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ கான்செகன் அருகே உள்ள கவுண்டி வீதி 1 மற்றும் அலெக்சாண்டர் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, இந்த விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ள என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.


ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் திடீர் மரணம்!
[Saturday 2020-01-11 17:00]

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79. 1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.


லண்டனில் வீடற்றவர்களுக்கு தீர்வு பெற்றுத்தரக்கோரி போராட்டம்!
[Saturday 2020-01-11 17:00]

லண்டன் பகுதியில் வீடற்றவர்களுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி, சுமார் இரண்டு டஸன் கணக்கானோர் போராட்டம் நடத்தினர். வெலிங்டன் மற்றும் ஹார்டன் வீதிகளுக்கு அருகிலுள்ள சால்வேஷன் ஆர்மி வளாகத்திற்கு அருகாமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தின் போது, குளிர்ந்த தூறலையும் பொருட்படுத்தாது அணிவகுத்த போராட்டக் காரர்கள், தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பதாதைகளை ஏந்திய வாறு, டஃபெரின் அவென்யூவில் உள்ள நகர மண்டபத்தை நோக்கி நகரத்தின் வழியே நகர்ந்தனர்.


உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் - ரவுகானி வருத்தம்!
[Saturday 2020-01-11 17:00]

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறும்போது, ”176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.


ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2020-01-11 17:00]

ரொறன்ரோவில் இந்த வார இறுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு. சில பகுதிகளில் உறைபனி மழையும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா