Untitled Document
May 19, 2024 [GMT]
அமெரிக்கா மீது பொருளாதாரத் தடை: சீனா எச்சரிக்கை!
[Thursday 2019-08-22 09:00]

தைவானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய துணைபோகும் அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை தனி நாடாக ஏற்றுக் கொள்ளாத சீனா, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. இந்நிலையில், தைவான் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அந்நாட்டுக்கு எப்.16 ரகத்தைச் சேர்ந்த 66 விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


ஹொங்கொங் பிரச்சனையில் கனடாவின் கருத்திற்கு சீனா கண்டனம்!
[Wednesday 2019-08-21 17:00]

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா பிறீலான்ட் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் விடயத்தில் கனடாவின் தலையீடு இதில் அவசியம் இல்லை என்றும் கனடாவுக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சீனாவின் உள்விவகாரத்திலும், ஹொங்கொங் விடயத்திலும் தேவையற்ற தலையீடடினை மேற்கொள்ளும் நடவடிக்கையை கிறிஸ்டியா பிறீலான்ட் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன் கனடா தனது வார்த்தைப் பிரயோகங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கனடா சிறைச்சாலை கைதி உயிரிழப்பில் சந்தேகம்!
[Wednesday 2019-08-21 17:00]

கனடாவில் சிறைச்சாலையொன்றில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மிராமிச்சி (Miramichi) நகருக்கு தென்மேற்கு பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அட்லாண்டிக் நிறுவகம் (Atlantic Institution) என்ற சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஓலிவர் (Oliver -32) என்ற கைதி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.


சுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்ற இருவர் கைது!
[Wednesday 2019-08-21 17:00]

தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பஞ்சமில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். இங்குள்ள கடற்கரைகளில் இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை கழிப்பார்கள். அப்படி 2 சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்போது பாட்டில்களில் கடற்கரை மணலை, வந்து சென்றதன் நினைவாக எடுத்துச் செல்ல நிரப்பியுள்ளனர்.


பிராம்ப்டன் பகுதியில் ஒருவார இடைவௌியில் இரண்டு பெண்களை காணவில்லை!
[Wednesday 2019-08-21 17:00]

தெற்காசிய நாடுகளைச் ​சேர்ந்த இரண்டு பெண்கள் கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வைத்து ஒருவார இடைவௌியில் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பரிந்தர் கவுர் (Barinder Kaur -34) என்ற பெண் பிராமலியா (Bramalea) தெரு பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் திடீரென காணாமல போனதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். 5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒரு தெற்காசியர் என்றும் பழுப்பு நிறக் கண்களும், நீண்ட கருமையான கூந்தலையும் கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


நிறுத்தப்பட்ட கார்களுக்குள் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
[Wednesday 2019-08-21 09:00]

அமெரிக்காவில் ஒரு மணி நேர இடைவெளியில் இரு குழந்தைகள் வெயிலில் நின்ற காருக்குள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தன. கடந்த வெள்ளியன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் லிண்டன்வேல்டு ரயில் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 22 மாத பெண் குழந்தை மில்லியானி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக 92 பாரன்ஹீட் வெப்பத்தில் குழந்தை தனித்து விடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மாலையில் போலீசார் குழந்தையை சடலமாக மீட்டனர்.


டிரம்பின் ஆசையை தவிடுபொடியாக்கிய டென்மார்க் பிரதமர்!
[Wednesday 2019-08-21 09:00]

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு இதுவாகும். பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் கொட்டி கிடப்பதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.


விறகு எடுக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்!
[Wednesday 2019-08-21 09:00]

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் ஒரு துண்டு காகிதம் இருந்தது. இதையடுத்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என அறிந்துகொள்ளும் ஆவலுடன் பாட்டிலை திறந்தார். ஆனால் அதில் ரஷிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ரஷிய மொழி தெரியாது என்பதால் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார்.“ரஷிய மொழி தெரிந்தவர்கள் யாராவது கடிதத்தில் இருப்பதை மொழி பெயர்த்து சொன்னால், நன்றாக இருக்கும்” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். டெய்லர் இவனோப்பின் இந்த பதிவு ‘பேஸ்புக்’கில் அதிகம் பகிரப்பட்டது.


இளைஞரின் கழுத்தை துளைத்தது காற்பந்து கம்பம்!
[Tuesday 2019-08-20 18:00]

கனடாவில் இளைஞர் ஒருவர் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பயிற்சிக் கம்பம் ஒன்று அவரது கழுத்தினை துளைத்து கொண்டு சென்றதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, அவசர சிகிச்சை பிரிவினர் அழைக்கப்பட்டதுடன், உலங்கு வானூர்தி மூலம் இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். இருப்பினும், அவர் உயிர் பிழைப்பதில் சந்தேகம் இருப்பதாக கனடா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கனடா முக்கொலை சந்தேக நபர்களின் இறுதி நேர தற்கொலை வாக்குமூலம் வௌியானது!
[Tuesday 2019-08-20 18:00]

கனடாவில் கடந்த சில வாரங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மூக்கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக பதிவு செய்த 30 நிமிட நேர காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கனேடிய தொடர் கொலைச் சந்தேகநபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளதாக பொலிசார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கனேடிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky (18) ஆகிய இருவரும் நெல்சன் நதிக்கருகே கடந்த வாரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.


இந்திய-பூடான் எல்லையில் அரியவகை ‘கீடா ஜடி’ மூலிகை வேர்களை கடத்திய 3 பேர் கைது!
[Tuesday 2019-08-20 18:00]

கீடா ஜடி என்பது மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை மூலிகை வேர் ஆகும். இது, இந்தியாவில் இமயமலை எல்லையின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இது புற்றுநோய்க்கு மருந்தாகவும், எப்போதும் இளமையான தோற்றப் பொலிவை தரவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சீனாவில் இதன் மதிப்பு தங்கத்தை விட அதிகமாகும். இந்த மூலிகைக்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், அது சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா, பூடான் எல்லையில் உள்ள மேற்கு வங்காள மாநிலம் ஜெய்கான் நகரில் 5 கிலோ கீடா ஜடி மூலிகையை கடத்தியதற்காக பூடான் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எட்மன்டன் பகுதியில் முன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!
[Tuesday 2019-08-20 18:00]

கனடாவில் எட்மன்டன் பகுதியில் தனது முன்னாள் காதலியை 101 முறை குத்திக் கொலை செய்து அவரது இதயத்தை குடியிருப்பில் சுவரில் ஒட்டியதாக குற்றம்சுமத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த காலங்களில் சந்தேகநபரின் வரைபடத்தை கனேடிய பொலிஸார் வௌியிட்டு தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரான சில்வா கொஷ்வால் (Silva Koshwal), தனது காதலியை கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி குடியிருப்பொன்றில் வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது! - ருசிகர சம்பவம்.
[Tuesday 2019-08-20 09:00]

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர். இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு “எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.


சீனாவுக்கு ஏதிராக கொட்டும் மழையில் திரண்ட 17 லட்சம் போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்த ஹாங்காங்!
[Tuesday 2019-08-20 09:00]

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்தது. கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் அறிவித்தார். ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த சில நாட்களாக வார நாட்களிலும் நடைபெற்றுவருகிறது.


அமெரிக்காவில் கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!
[Tuesday 2019-08-20 09:00]

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார். இந்த சூழலில் கடந்த 10-ந்தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.


ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தக்கோரி சர்வதேச அளவில் பேரணி!
[Monday 2019-08-19 16:00]

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது. ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி பெரியளவிலான போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களின்போது வன்முறைகளும் வெடித்தன. இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை நிறுத்தக்கோரி பல நாடுகளில் சீனர்களின் பேரணி நடைபெற்றது. கனடாவில் வசித்து வரும் சீனர்கள், தலைநகர் டொராண்டோவில் பேரணியாக சென்றனர்.


ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறியதாக நெறிமுறைகள் கண்காணிப்பு குழு குற்றச்சாட்டு!
[Monday 2019-08-19 16:00]

கனடாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய எஸ்.என்.சி. லவாலின் என்ற கட்டுமான துறை நிறுவனத்திற்கு சார்பான நிலைப்பாட்டை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.என்.சி லவாலின் நிறுவனம் திகழ்கின்றது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எஸ்.என்.சி. லவாலின் நிறுவனம் லிபியாவில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற அந்த நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்: டிரம்ப்!
[Monday 2019-08-19 16:00]

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


ரொறொன்ரோவில் காணாமல் போன சிறுமியைத் தேட பொலிஸாருடன் கைகோர்த்த பொதுமக்கள்!
[Monday 2019-08-19 16:00]

கனடாவின் ரொறொன்ரோவில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் அறிவித்திருந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ரொறொன்ரோ பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி ருவிற்றரில் வெளியிட்ட பதிவில் ஜிசெல் பன்ஷன் லொய்ஷா (Jiselle Banchon-Loayza) என்ற பத்து வயதுச் சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரின் ஒளிப்படத்துடன் பதிவிட்டனர்.


வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்!
[Monday 2019-08-19 08:00]

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பல வீடுகளில் பிளாஸ்டிக் மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது. தீப்பற்றி எரிவதை அறிந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் கோரப்பிடி வலுவாக இருந்ததால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.


ருமேனியா மனநலை மருத்துவமனையில் போதைக்கு அடிமையான நபர் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொலை!
[Monday 2019-08-19 08:00]

ருமேனியாவின் தென்கிழக்கில் உள்ள புஜாயு கவுன்ட்டியில் நரம்பியல் மனநல மருத்துவமனை உள்ளது. இங்கு பலநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் போதைக்கு அடிமையான 38 வயதைச் சேர்ந்த நபர் ஒருவரும் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை போதைக்கு அடிமையான நபர் திடீரென குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சக நோயாளிகளை சரமாரியாக தாக்கினார்.


பிரான்ஸில் ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்!
[Monday 2019-08-19 08:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர், ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்தார். ஆனால் அதைப்பரிமாற தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் 28 வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்டார்.


ரொன்செஸ்வெலிஸில் பகல் நேரத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
[Sunday 2019-08-18 16:00]

ரொன்செஸ்வெலிஸில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய, குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த குற்றவாளி, 5’11 உயரம் கொண்ட ஒல்லிய தோற்றமுடைய ஆண் என விபரித்துள்ள பொலிஸார், அவர் வெள்ளை நிற எஸ்.யு.வி நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். எனவே, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கனடாவில் அதிகரித்து வரும் கரடிகள் அட்டகாசம்!
[Sunday 2019-08-18 16:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தார்.


ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!
[Sunday 2019-08-18 16:00]

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.


மனிடோபாவில் 40,000 வேலைகள் வழங்குவதாக பாலிஸ்டர் உறுதி!
[Sunday 2019-08-18 16:00]

மனிடோபாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 தனியார் துறை வேலைகள் வழங்குவதே தனது இலக்கு என முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவர் பிரையன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் திகதி மீண்டும் நடைபெறும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியின் ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தானுக்கான நிதி உதவியை குறைத்தது அமெரிக்கா!
[Sunday 2019-08-18 08:00]

பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியில் 44 கோடி டாலர் நிதியை அமெரிக்க அரசு குறைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியில் உள்ள இம்ரான்கான் அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 5 ஆண்டுகளுக்கு 750 கோடி டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 450 கோடி டாலர் நிதி உதவி வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதில் 44 கோடி டாலர் நிதி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சுமார் 400 கோடி டாலர் நிதியை மட்டுமே பாகிஸ்தானால் பெற முடியும்.


லண்டன் பகுதியிலுள்ள மூன்று மருந்தகங்களில் கைவரிசையை காட்டியவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம்!
[Sunday 2019-08-18 07:00]

லண்டன் பகுதியிலுள்ள மூன்று மருந்தகங்களில் திருடிய ஆணொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் 30 அல்லது 40 வயது மதிக்கதக்கவர் எனவும், கனமான சேட் மற்றும் முழு தாடியுடனும், பேஸ் போல் வீரர் அணியும் தொப்பியொன்றையும் அணிந்திருந்தாக பொலிஸார் விபரித்துள்ளனர். இவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா