Untitled Document
May 19, 2024 [GMT]
கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை காவல் அதிகாரியாக தமிழர் நியமனம்!
[Monday 2019-08-05 17:00]

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.


பறக்கும் பலகை மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை!
[Monday 2019-08-05 08:00]

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கி ஜபதாவின் கனவு, சாகச கனவு. அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பலரும் நீந்தி சாதனை படைக்க விரும்புவர். இன்னும் சிலரோ தங்களுக்கே உரித்தான புதுமையான முறையில் ஹோவர் போர்டு, ஹாட் பலூன், பாராசூட், கிளைடர் என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆங்கில கால்வாயை கடந்து சாதிக்க விரும்புகிறார்கள். நமது தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994-ம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்து இருக்கிறார். அவரது சாதனைக்கு இது வெள்ளி விழா ஆண்டு.


சீனாவில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை கண்டெடுப்பு!
[Monday 2019-08-05 08:00]

சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோசர் முட்டை ஒன்றை 10 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான். குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ (Zhang Yangzhe) என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான். அண்மையில், அங்குள்ள நதிக்கரையோரம் யாங்ஷீ விளையாடிக்கொண்டிருந்தபோது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை கண்டுபிடித்துள்ளான்.


காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!
[Monday 2019-08-05 08:00]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாவது:- எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச அச்சுறுத்தல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.


சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் சர்ச்சை கருத்து: ருமேனியாவில் பெண் மந்திரி நீக்கம்!
[Sunday 2019-08-04 17:00]

ருமேனியாவில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்தை டி.வி. சேனலில் வெளியிட்ட பெண் மந்திரியை அதிரடியாக நீக்கி பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஐரோப்பிய நாடான ருமேனியாவில், கராக்கல் நகரைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா மாசேசானு என்ற 15 வயது சிறுமி ‘ஹிட்சைக்கிங்’ பயணம் (கட்டை விரலை உயர்த்திக்காட்டி அடையாளம் தெரியாத அன்னியர்களின் வாகனங்களை நிறுத்தி, அதில் இலவச சவாரி செய்வது) மேற்கொண்டார். அப்போது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, தலைநகர் புகாரெஸ்ட் அருகே நடந்திருப்பது அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.


சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: அமெரிக்க இசை நட்சத்திரம் கெல்லிக்கு ஜாமீன் மறுப்பு!
[Sunday 2019-08-04 17:00]

அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி ஆவார். இவர் ‘ஆர் அண்ட் பி’ என்று அழைக்கப்படுகிற ‘ரிதம் அண்ட் புளூஸ்’ இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார். ஆனாலும் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


வெளிநாட்டுக் கப்பலை சிறைபிடித்த ஈரான்!
[Sunday 2019-08-04 17:00]

எரிபொருள் கடத்திச் சென்றதாகக் கூறி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றை ஈரான் பறிமுதல் செய்துள்ளது. இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு கொடியுடன் வந்த ஸ்டெனா இம்பெரோ கப்பலை, கடந்த மாதத்தில் ஈரான் சிறைபிடித்தது. அந்தக் கப்பலையும், அதில் இருந்த 23 மாலுமிகளையும் ஈரான் இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிலையில், 7 லட்சம் லிட்டர் எரிபொருளை கடத்திச் சென்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை ஃபார்சி தீவு அருகே சிறைபிடித்ததாக ஈரான் கடற்படை கூறியுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த 7 மாலுமிகளும் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் மீண்டும் துணிகரம்: கேளிக்கை விடுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!
[Sunday 2019-08-04 17:00]

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ஜெர்மனியில் சோயபீன்ஸ் எனக் கூறி கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.7,733 கோடி போதைப்பொருள்!
[Sunday 2019-08-04 08:00]

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 7733 கோடி ரூபாய் மதிப்பு கொகைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருகுவே நாட்டிலிருந்து ஜெர்மனி வழியாக பெல்ஜியம் நோக்கி செல்லும் கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஜெர்மன் நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்நாட்டின் துறைமுக நகரமான ஹாம்பர்க் வந்த கப்பலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் சோயபீன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி!
[Sunday 2019-08-04 08:00]

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.


எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன் மார்பகங்களை காட்டிய பெண் ஆராய்ச்சியாளர்!
[Sunday 2019-08-04 08:00]

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி (வயது 74) அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது. அங்கு நியான்சி (44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதிபர் முசேவேனியின் சர்வாதிகாரப்போக்கையும் விமர்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அதிபர் முசேவேனி அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா வசமுள்ள ஆயுதங்கள் - ஆய்வாளர்கள் அறிக்கை!
[Saturday 2019-08-03 17:00]

வர்த்தகப் போரில், புதிய வரிவிதிப்புகள் வடிவில் அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடம் உருப்படியாக ஒருசில பொருளாதார ஆயுதங்களே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.. இருபெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரில் மாறி மாறி பொருளாதார தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவில், தன்னுடைய நிபந்தனைகளுக்கு சீனாவை பணியவைக்க, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அந்த வரிசையில், 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.


லாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 மாத குழந்தை: விசாரணைகள் தீவிரம்!
[Saturday 2019-08-03 17:00]

லாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தை விவகாரம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். லாரன்டியன்ஸில் ஆற்றில் 6 மாத குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் குறித்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டள்ளது.


இங்கிலாந்தில் அழகி பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் மருத்துவர்!
[Saturday 2019-08-03 17:00]

‘மிஸ் இங்கிலாந்து’ அழகிப்போட்டி கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள டெர்பி நகரில் நடைபெற்றது. அதில் பாஷாமுகர்ஜி (23) உள்ளிட்ட பல பெண்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் பல சுற்றுகளாக நடைபெற்றன. இறுதி சுற்று போட்டியில் பாஷா முகர்ஜி ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி பட்டம் வென்றார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டாக்டரான இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.


பிரம்டனில் வெஸ்ட் நைல் வைரஸ்களை பரப்பும் நுளம்புகள்: மக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2019-08-03 17:00]

பிரம்டனில் வெஸ்ட் நைல் வைரஸ்களை பரப்பும் நுளம்பு வகைகள் உலாவுவதாக, பீல் பிராந்திய சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், இவ்வாறன நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிக் கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள், பிராந்திய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.


பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி!
[Saturday 2019-08-03 08:00]

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார்.


ரஷ்யா-சீனாவுக்கு எதிராக ஏவுகணை சோதனை நடத்தும் அமெரிக்கா!
[Saturday 2019-08-03 08:00]

அமெரிக்கா-அப்போதைய சோவியத் யூனியன் இடையே 1987ம் ஆண்டு கையெழுத்தான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் நேற்றுடன் காலாவதியானது. இதையடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. இதனால் அமெரிக்கா-ரஷ்யா இடையே ஆயுதக் குவிப்புக்கு இந்த சூழல் வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. டோமாஹாக் ஏவுகணை சோதனையை நடத்த பென்டகன் தயாராகி வருகிறது. இந்த சோதனை சீனாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் பெய்துவரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
[Saturday 2019-08-03 08:00]

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


அதிகபடியான மருந்து எடுத்துக்கொண்டதால் ராபர்ட் கென்னடியின் பேத்தி உயிரிழப்பு!
[Friday 2019-08-02 17:00]

அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடியின், பேத்தி சயோரிஸ்(Saoirse), தேவைக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மசாசுசெட்ஸ்(massachusetts) மாகாணத்துக்கு உட்பட்ட ஹையானிஸ்(Hyannis) பகுதியில் சயோரிஸ் கென்னடி ஹில், குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அவருக்கு உடல் நலம் பாதித்ததாக கூறி, கென்னடி குடும்பத்தினர் அங்குள்ள கேப் கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல ஆண்களின் அனுமதி தேவையில்லை: அந்நாட்டு அரசு புதிய சட்டம்!
[Friday 2019-08-02 17:00]

சவுதி நாட்டில் வாழும் பெண்களுக்கென பல்வேறு விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்நாட்டு அரசு சவுதியினை நவீன மயமாக்கும் வகையில் சில முக்கிய விதிகளை சமீப காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கென முக்கிய விதிகளை மாற்றியது. பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை அரங்குகள் திறப்பு மற்றும் பெண்கள் செய்தியாளர்களாக நியமனம் என அனைவரும் வரவேற்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.


கல்கரி விமான விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது!
[Friday 2019-08-02 17:00]

கல்கரியில் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கல்கரியின் தென்மேற்கே இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி இரண்டு கனேடியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தநிலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சீனப் பொருட்களுக்கு புதிதாக 10சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி!
[Friday 2019-08-02 09:00]

சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மேலும் 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்துள்ளது.கடந்த ஜுன் மாதம் ஜப்பானில் அமெரிக்க - சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, வர்த்தகப் போரை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருதரப்பு அதிகாரிகளும் அதற்காக பேச்சுவார்த்ததை நடத்தி வந்தனர்.


ஜப்பானில் பாதி மனிதன் - பாதி மிருகம் கலந்து செய்யும் புதிய ஆய்வு..!
[Friday 2019-08-02 09:00]

ஸ்டெம் செல் ஆய்விற்காக, மனித-விலங்கு கலப்பின கருவை உருவாக்க ஜப்பான் ஆய்வாளர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மனிதர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகளை வளர்த்தெடுக்கும் ஆய்வின் ஒரு பகுதியாக, மனித ஸ்டெம் செல்கள் எலிகளின் கருக்களில் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளது. விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில், மனித-சிம்பன்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் ஒன்றியத்தில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. சீனாவிலும்கூட இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுவது உண்டு. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில், மனித-விலங்கு கலப்பினக் கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே உள்ளது. இத்தகையை ஆய்வுகளுக்கு தடை, நிதியுதவி தடுக்கப்படுவது என உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.


அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்!
[Friday 2019-08-02 08:00]

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடனை 2017ல் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.


சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு!
[Thursday 2019-08-01 17:00]

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOI 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.


விமானத்தில் தண்ணீர் தர மறுத்த பணியாளர்கள் – பயணியின் அதிரடி செயற்பாடு!
[Thursday 2019-08-01 17:00]

விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு விமான ஊழியர்கள் தண்ணீர் தர மறுத்தாக வெளியான செய்தி குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹமில்ட்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார் Wayne. ஆனால் தாகத்தை தணிக்க வேண்டுமே என்ன செய்வது என யோசித்த அவர், விமான பணிப்பெண்ணிடம் தனக்கு ஒரு கப் ஐஸ் கட்டிகள் தருமாறு கேட்டுள்ளார் (அதற்கு கட்டணம் கிடையாது).


அமெரிக்க யூடியூப் பிரபலம் கிராண்ட் தாம்சன் உயிரிழந்தார்!
[Thursday 2019-08-01 17:00]

அமெரிக்காவை சேர்ந்த யூடியூப் பிரபலம் கிராண்ட் தாம்சன் பாராகிளைடிங் செய்த போது நடந்த விபத்தில் உயிரிழந்தார். 110 லட்சம் பேர் பின் தொடரும் கிங் ஆஃப் ரான்டம் என்ற யூடியூப் சேனலை வைத்திருந்தவர் அமெரிக்காவை சேர்ந்த கிராண்ட் தாம்சன். இவரது வித்தியாசமான வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாஹ் பகுதிக்கு சென்று பாராகிளைடிங் செய்ய இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு தாம்சன் சென்றுள்ளார்.


கனடாவில் புகலிடம் கோரும் அரேபிய சகோதரிகள்!
[Thursday 2019-08-01 17:00]

தந்தையின் துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பி துருக்கியில் தலைமறைவாகவுள்ள சவுதி அரேபிய சகோதரிகள் இருவர் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயதான துவா மற்றும் 20 வயதான தலால் அல் ஷோவாக்கி ஆகிய இரு சகோதரிகளுமே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். தங்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் தந்தையிடமிருந்து தப்பி வந்ததாக கூறும் இருவரும், தங்களின் விருப்பத்திற்கு எதிராக முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தங்களது தந்தை முயற்சி மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா