Untitled Document
May 8, 2024 [GMT]
சீனா தேர்தலை எதிர்பார்த்து வர்த்தகத்தை இழுத்தடிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புகார்!
[Wednesday 2019-07-31 08:00]

அமெரிக்கத் தேர்தலில் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்து சீனா வர்த்தகப் பேச்சுகளை இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், தாம் மீண்டும் வெற்றி பெற்று விட்டால் இப்போது இருப்பதை விட கடுமையான பேரம் இருக்கும் அல்லது பேரமே இருக்காது என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ரீதியான பனிப்போர் நிலவி வரும் நிலையில், ஷாங்காய் நகரில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப், 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தலில் தாம் மீண்டும் வென்று விட்டால் சீனாவுடன் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.


கட்டாயத் திருமணத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் துபாய் இளவரசி ஹயா!
[Wednesday 2019-07-31 08:00]

கட்டாயத் திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார். இந்நிலையில் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும், பாதுகாப்பு கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா வழக்குத் தொடர்ந்துள்ளார்.


சவுதிஅரேபியாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணிபுரிய திடீர் தடை!
[Tuesday 2019-07-30 17:00]

சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது.


கனடா மற்றும் அமெரிக்காவில் 106 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு!
[Tuesday 2019-07-30 17:00]

அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் தகவல்களை ஹக்கிங் செய்ததாகக் கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது. கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கப்பிற்றல் வன் தெரிவித்துள்ளது. ஆனால் ஹக்கிங் செய்த நபருக்கு கடனட்டைகளின் எண்கள் கிடைக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக அளவில் போரில் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - ஐ.நா அறிக்கை!
[Tuesday 2019-07-30 17:00]

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில், கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


13 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன திருமண மோதிரம்: கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த அதிசயம்.
[Tuesday 2019-07-30 17:00]

கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006 ஆம் ஆண்டளவில் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போனமை பற்றி அறிந்தார். தோட்டத்திற்கு சென்று நீண்ட நேரம் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.


அமெரிக்க உளவுத்துறை தலைவர் டான் கோட்ஸ் திடீர் ராஜினாமா!
[Tuesday 2019-07-30 08:00]

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியாக இருந்து வந்தவர் டான் கோட்ஸ். இவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தில் அவர், “எனது 2½ ஆண்டு பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது. எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


3 கோடி சந்தாதாரர்களுடன் மாதம் ரூ.21 கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!
[Tuesday 2019-07-30 08:00]

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து மதிப்பாய்வு (ரிவ்யூ) செய்து, வெளியிடுவது தான் போரமின் பணி. மழலைக்குரலில் அவள் கூறும் ரிவ்யூவை கேட்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதன் மூலம் 3 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு யூ-டியூப்பில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் போரம்.


மோடியின் படத்தை வைத்து இஸ்ரேல் பிரதமர் தேர்தல் பிரச்சாரம்!
[Tuesday 2019-07-30 08:00]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்த தேர்தலை அடுத்து பெஞ்சமின் நேதன்யாஹு மீண்டும் பிரதமரானார். ஆனால், கூட்டணி குழப்பத்தால் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேதன்யாஹுவின் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியுடன் அவர் நின்றுகொண்டிருப்பது போன்ற புகைப்படம் அடங்கிய பேனர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடனான படங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளன.


பாகிஸ்தானில் உள்ள 1000 வருட பழமையான இந்து கோவில் மீண்டும் திறப்பு!
[Tuesday 2019-07-30 08:00]

பாகிஸ்தானின் சியால்கோட் தாரோவாலில் 1000 வருட பழமையான ஷவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. இது சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது மூடப்பட்டது. 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது. அதை சரிசெய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக 72 ஆண்டுகளுக்குப்பின் கோவில் மீண்டும் திறப்பட்டது.


16 வயதில் கோடிகளில் பரிசுத்தொகை வென்ற சிறுவன்!
[Monday 2019-07-29 17:00]

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியைச் சேர்ந்தவர் கியர்ஸ்ட்ரோ(16). இவர் அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் கலந்துக் கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே கியர்ஸ்ட்ரோ அசத்தலாக விளையாடி வந்துள்ளார். உலக அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கியர்ஸ்ட்ரோ பிடித்தார். இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் நபருக்கு 3 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.28 கோடியே 68 லட்சம்) என அறிவிக்கப்பட்டிருந்தது.


மூன்று பேரை கொலை செய்த 2 இளைஞர்களை வலைவீசித் தேடும் கனடா!
[Monday 2019-07-29 17:00]

மொன்ட்ரியலில் மூவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியில் கனேடிய விமானப் படையும் ஈடுபட்டு வருகின்றது. குறித்த 18 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர்கள் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகியுள்ளனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர்களைத் தேட மோப்பநாய்கள், ஆளில்லா வானூர்திகள், கவச வாகனகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருவரும் மாறுவேடத்தில் தப்பியோடியதாக சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.


நைஜீரியாவில் இஸ்லாமிய இயக்கத்துக்கு தடை விதித்து அதிபர் முகமது புகாரி உத்தரவு!
[Monday 2019-07-29 17:00]

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒருபுறம் தீராப்பகையும் மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே உட்பகையும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது கைது செய்யப்பட்ட ஷியா தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கி என்பவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டி அந்நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


சிகிச்சைக்கு வந்தவர் அச்சுறுத்தி தன்னுடன் உறவில் ஈடுபட்டதாக மருத்துவர் தீபா தன்னிலை விளக்கம்!
[Monday 2019-07-29 17:00]

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவின் ரொறொன்ரோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் தீபா சுந்தரலிங்கம் என்பவர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். “சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார், ஆபாச செல்பிக்களை அனுப்பச்சொன்னார், குறுஞ்செய்திகளை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.


கப்பல் கொடிகள் எவ்வாறு பெறுகிறார்கள்?
[Monday 2019-07-29 08:00]

பிரிட்டன் கொடி பறந்த ஸ்வீடன் நாட்டு சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடித்ததன் மூலம், சரக்குக் கப்பல்களுக்கான கொடிகள் வழங்கப்படும் மர்மமான நடைமுறைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஈரான் கொடி பறந்த சரக்குக் கப்பலை பிரிட்டன் பறிமுதல் செய்தது. இதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டன் கொடி பறந்த சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 23 மாலுமிகள் இருந்தனர். பிரிட்டன் கொடி பறந்த அந்தக் கப்பலானது ஸ்வீடன் நாட்டிற்குச் சொந்தமானது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் கொடி பறந்த ஸ்வீடன் நாட்டு சரக்குக் கப்பலை ஈரான் பறிமுதல் செய்த விவகாரத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், சரக்கு கப்பல்களுக்கான கொடிகள் பெறப்படும் மர்ம நடைமுறை வெளிச்சத்திற்கு வந்தது. கிரெடிட் அட்டையை வைத்து வெறும் 15 நிமிடத்திலேயே, ஒரு நாட்டில் சரக்கு கப்பலை பதிவு அல்லது மறுபதிவு செய்து அந்நாட்டின் கொடியை பெற்று விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பல் வலி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்கும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்!
[Monday 2019-07-29 08:00]

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் தனது பதவி காலத்தின்போது அவரது மறைந்த கணவர் ஜியாவுர் ரஹ்மான் பெயரில் அறக்கட்டளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் 2½ லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


இங்கிலாந்தில் அனல் மின் நிலையத்தில் நொடிப்பொழுதில் தரைமட்டமான குளிர்விக்கும் கோபுரம்!
[Monday 2019-07-29 08:00]

இங்கிலாந்தில் அனல் மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்விக்கும் கோபுரம் நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது. வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 370 அடி உயரத்திற்கு 10க்கும் மேற்பட்ட குளிர்விக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.


அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இனவெறி கருத்தால் மீண்டும் சர்ச்சை!
[Monday 2019-07-29 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்மையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 4 பேரை பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சர்ச்சையில் சிக்கினார். இது பல்வேறு தரப்பிலும் கண்டனத்துக்கு வழிவகுத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் நிறவெறியை தூண்டும் வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரம் குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், “பால்டிமோர், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம்.


ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலீபான் தீவிரவாதிகள் பலி!
[Sunday 2019-07-28 18:00]

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


அமெரிக்காவிற்கு சவால் விட்ட ஈரான்!
[Sunday 2019-07-28 18:00]

அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் விலகியது. இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் அந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறி அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகப்படுத்தியது. இதற்கிடையே அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் ஈரான் நடுத்தர ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இதுகுறித்து ஈரான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக ஏவுகணை சோதனை நடத்தப்படும் என்றும், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.


நீர்மூழ்கி கப்பலில் சென்று கடல் அடிப்பரப்பில் இருந்த கப்பலை பார்வையிட்ட ரஷ்ய அதிபர்!
[Sunday 2019-07-28 18:00]

இரண்டாம் உலக போரில் கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கி கப்பலை, ரஷ்ய அதிபர் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டார். ரஷ்யா கடற்படை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின், நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார்.


கனடா உட்பட பல நாடுகளை அச்சுறுத்தும் அனல் காற்று – தப்பித்துக்கொள்ள மக்கள் கடும் போராட்டம்!
[Sunday 2019-07-28 18:00]

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் அதேபோன்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. அத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.


காந்த உருண்டைகளை விழுங்கிய குழந்தை! - மாலையாக காட்சி அளித்தது.
[Sunday 2019-07-28 08:00]

சீனாவில் குழந்தை விழுங்கிய காந்த உருண்டைகள் ஒன்றுசேர்ந்து மாலைபோல கோர்த்துக் கொண்டதால் குடலில் ஓட்டைகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயது குழந்தைக்கு வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது, குழந்தையின் வயிற்றில் மாலை போன்ற ஒன்று வட்டவடிவில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை அப்புறப்படுத்தினர்.


ஜெர்மனியில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ஏராளமானோர் பேரணி! Top News
[Sunday 2019-07-28 08:00]

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தலைநகர் பெர்லினில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக உள்ள வானவில்லின் நிறக் கொடியுடன் ஆடைகளை அணிந்தும் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று வேடமிட்டும் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.


மீண்டும் சிக்கியது போதைப் பொருள்..! - துரத்தி பிடித்த அமெரிக்க கடலோர காவல்படை.
[Sunday 2019-07-28 08:00]

பசிபிக் பெருங்கடல் வழியாகக் கடத்தப்பட இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 டன் கொகைன் போதைப் பொருளை அமெரிக்க கடலோரக் காவல் படையினர் விரட்டிச் சென்று பறிமுதல் செய்தனர். பசிபிக் கடல் பகுதி வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமான ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P. Morgan Asset Management) நிறுவனத்தின் கப்பல் மூலம் கடந்த 9ம் தேதி 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 டன் போதைப் பொருளை அமெரிக்கக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி பசிபிக் கடல் வழியாக சிறிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடத்தப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 டன் கொகைன் போதைப் பொருளையும் அமெரிக்க கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.


மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
[Sunday 2019-07-28 08:00]

மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ள நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சுமார் 670 கோடி டாலர்கள் அளவிலான இந்த திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.


19 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த தகவல்: பொலிஸார் தீவிர விசாரணை!
[Saturday 2019-07-27 17:00]

முஸ்கோகா பகுதியில் 1990களில் நான்கு முதியவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த விவகாரம், தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது குறித்த நால்வரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், ஜோஹன் லோவ்ரன்ஸ், ஜோன் செம்பல், ஜோன் க்ரோப்ட்ஸ், ரெல்ப் கிரான்ட் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் அவர்களின் சடலங்கள் கூட மீட்கப்படவில்லை.


பேருந்தை அடையும் நோக்கில் புதுமணப்பெண் உயிரிழப்பு!
[Saturday 2019-07-27 17:00]

அமெரிக்காவில், ‘இன்டூ த வைல்டு’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற பேருந்தை, அடைவதற்காக ஆற்றை கடக்க முயன்ற புதுமணப்பெண், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார். தொலைதூர பயண விரும்பியான கிறிஸ்டோபர் மெக்கேண்ட்லஸ் என்ற இளைஞர், அலஸ்காவில் உடைந்த பேருந்தில் வசித்து உணவின்றி கடந்த 1992ம் ஆண்டு அங்கு உயிரிழந்தார். தற்போது அந்த இடம் டெனாலி (denali) தேசிய பூங்காவாக உருமாறியுள்ள நிலையில், அவர் வாழ்க்கையை தழுவி ‘இன்டூ த வைல்டு’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் உருவாக்கப்பட்டது.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா