Untitled Document
May 18, 2024 [GMT]
கனடாவை அச்சுறுத்தும் வெள்ளப்பெருக்கு!
[Tuesday 2019-04-30 17:00]

கனடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூபெக் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பதவி துறப்புக்கான பாரம்பரிய சடங்குகளை துவங்கினார் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ!
[Tuesday 2019-04-30 17:00]

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.


பேருந்து சாரதிகள் போராட்டம் – மாணவர்கள் பாதிக்கப்படும் அச்சம்!
[Tuesday 2019-04-30 17:00]

ரொறன்றோவில் எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை நகர் தழுவிய போராட்டத்தில் ஈடுபட பாடசாலை பேருந்து சாரதிகள் தீர்மானித்துள்ளனர். இதன்காரணமாக குறித்த தினத்தில் பாடசாலைக்கு செல்லவிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரொறன்றோ மாணவர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான்!
[Tuesday 2019-04-30 17:00]

பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் 12, 13 வயதான சிறுமிகளை பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பழக்கவழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை தடுப்பதற்காக பாகிஸ்தான் குழந்தை திருமணச் சட்டத்தில் மாற்றம்செய்யும் புதிய மசோதாவை பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. ஷெர்ரி ரஹ்மான் என்பவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பெண்களின் பொதுவான பூப்பெய்தும் வயது மற்றும் திருமணத்துக்கான உடல்ரீதியான தகுதிக்குரிய வயதை 18 ஆக நிர்ணயிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடந்தது. பெண்களின் பூப்பெய்தும் வயது அவரவர் உடல்கூறுகளுக்கேற்ப மாறுபடலாம். இதை நாம் ஒரு பொது வயதாக நிர்ணயம் செய்ய முடியாது என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கபூர் ஹைதரி என்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.


என் கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை - பதவி விலகும் ஜப்பான் அரசர்!
[Tuesday 2019-04-30 08:00]

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார். அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.


ரஷ்ய நாட்டுக்கு உளவு பார்த்த திமிங்கிலம்!
[Tuesday 2019-04-30 08:00]

நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நார்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


வங்கி கடனை முழுவதுமாக திருப்பி செலுத்திவிடுகிறேன்- விஜய் மல்லையா மீண்டும் உறுதி!
[Tuesday 2019-04-30 08:00]

இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது.


5 ஆண்டுகளுக்கு பிறகு வீடியோவில் பேசிய ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி.
[Tuesday 2019-04-30 08:00]

ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பு தொடக்கத்தில் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் அந்த அமைப்பில் பலர் இணைந்தனர். எனினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தங்கள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் இழந்தனர். எனினும், இப்போது தலைமறைவாக இருந்தபடி அவ்வப்போது வெடிகுண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களை அந்த அமைப்பினர் நிகழ்த்தி வருகின்றனர்.அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.


வங்காளதேசத்தில் சோதனையின் போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை!
[Monday 2019-04-29 17:00]

டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவதிகள் சுதாரித்துக்கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருதரப்பு இடையே சண்டை நடைபெற்றபோது பயங்கரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர் என சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது கூறியுள்ளார்.


எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் வேறு வேலைக்கு மாறுவதில் சிக்கல்!
[Monday 2019-04-29 17:00]

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர்களுக்கு எச்-1 பி என்ற விசா வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் அந்த நாட்டில் வேலை பார்க்க அனுமதி கிடைக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் இந்த விசாவில் தங்கி இருந்து வேலை பார்க்கலாம். பின்னர் நிரந்தரமாக வேலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கிரீன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். நீண்ட காலம் இங்கு குடியிருந்தால் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும். ஆனால், அதிபராக டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிவதற்கு பல கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளார். இதன்படி எச்-1 பி விசா முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவில் இனி வேலை பெறுவது கடினமான ஒன்றாக மாறி இருக்கிறது. இதற்கு முன்பு எச்-1 பி விசா மூலம் வேலையில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போதுள்ள விதிமுறைப்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மாயமான இளம் பெண் மற்றும் அவரது மகளையும் தேடும் பொலிஸார்!
[Monday 2019-04-29 17:00]

கனடாவில் இளம் பெண் ஒருவரும் அவரது மகளும் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 25 வயதான Jasmine Lovett மற்றும் அவரது மகள் Aliyah Sanderson ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர். அதற்கு முந்தைய தினம் அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரான Robert Leeming உடன் வெளியே சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


காபி சுவையுடன் புதிய கொக்கொ கோலா - இந்த ஆண்டில் அறிமுகம்.
[Monday 2019-04-29 17:00]

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ' கொக்கொ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கொக்கொ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. கொக்கொ கோலா நிறுவனம் தற்போது காபி சுவைக் கொண்ட கோக்கினை விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய காபி சுவைக் கொண்ட கோலா இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.


கனடாவுக்கு பிலிப்பைன்ஸ் மீண்டும் எச்சரிக்கை!
[Monday 2019-04-29 09:00]

பிலிப்பைன்ஸில் தேங்கியுள்ள – கனடாவில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் குப்பைக் கொள்கலன்கள் விவகாரத்தினால் கனடாவுக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் ஆபத்தான கட்டத்தினை எட்டியுள்ளது என பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா தனது குப்பைகளை பிலிப்பைன்ஸில் இருந்து அகற்றத் தவறியுள்ளதாகவும், இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவு மோசமான கட்டத்தினை எட்டியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மனிலாவுக்கு துறைமுகத்தில் தேங்கியுள்ள அந்த கனேடிய குப்பைகள் அடங்கிய கப்பல் கொள்கலன்களை அகற்றும் விடயத்தில் கனடா உடனடியாக செயற்படாவிட்டால், அதன் விளைவுகள் பாதகமாக அமையும் என்றும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேச்சாளர் வல்வடோர் பனீலோ தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தினுள் கனடா குறித்த அந்த கொள்கலன்களை அகற்றாவிட்டால் கனடாவுடன் ‘போர்ப் பிரகடனம்’ செய்யப்போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார்.


இந்து தந்தை, இஸ்லாமிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கியது ஐக்கிய அரபு நாடு!
[Monday 2019-04-29 08:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக இந்து மத தந்தைக்கும், இஸ்லாம் மத தாய்க்கும் பிறந்த பெண் குழந்தைக்கு அந்நாட்டு அரசு பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. அரபு நாடுகளில் நடைமுறையில் உள்ள திருமணச் சட்டத்தின் படி இஸ்லாமிய ஆண்கள் பிற மதங்களை சேர்ந்த பெண்களை மணந்து கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய பெண்கள் பிற மத ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இந்துவான கிரன் பாபு என்பவர், கடந்த 2016ம் ஆண்டு சனம் சபூ சித்திக் என்ற இஸ்லாமிய பெண்ணை மணந்த பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார்.


இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நிதி சேகரிக்கும் கனேடிய தமிழ் சிறுமி!
[Monday 2019-04-29 08:00]

இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி நிதி சேகரித்து வருகின்றார். கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி நிதி சேகரித்து வருகின்றமையை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனப் பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு!
[Monday 2019-04-29 08:00]

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது. தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் பாகிஸ்தானுக்கு குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சீனா வந்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிதியுதவி கோரியுள்ளார்!
[Sunday 2019-04-28 13:00]

சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நிதியுதவி கோரியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் நோக்கிலும் அதனால் ஏற்பட்டுள்ள அச்சங்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் 8 பில்லியன் டொலர் நிதியுதவி கோரியுள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாயண நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.


அமெரிக்காவில் 15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு கண்டெடுப்பு!
[Sunday 2019-04-28 13:00]

15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலியின் தென்பகுதியில் இந்த பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்கக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பாதச்சுவடு இதுவென ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 2010ஆம் ஆண்டில் இதனை முதன்முதலில் Universidad Austral of Chile ஆய்வுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடித்தார்.


விமான உற்பத்தி துறையில் களமிறங்கிய சீனா!
[Sunday 2019-04-28 13:00]

விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின் கோமாக் (கம்மர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா) நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. விமான உற்பத்தி துறையில் உலகளவில் முன்னணியிலுள்ள போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு சீனாவின் அரசுத்துறை நிறுவனமான கோமாக்கின் விமானங்கள் கடும் போட்டியளிக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். "சீன திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் மையமாக கொண்ட விமான உற்பத்தித்துறை மெதுவாக இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது. எதிர்காலத்தில் அந்த இடம் சீனவாக கூட இருக்க வாய்ப்புண்டு" என்று கூறுகிறார் விமானப் போக்குவரத்துத்துறை வல்லுநர் ஷுகோர் யூசப்.


பிரேசில் மாடல் 'டேல்ஸ் சோர்ஸ்' உயிரிழந்தார்!
[Sunday 2019-04-28 13:00]

பிரேசிலில் சவ் பவ்லோ நகரில் நடைபெற்ற பேஷன் வாரத்தில், பூனை நடையின் போது மயங்கி விழுந்த பிரேசில் நாட்டு மாடல் டேல்ஸ் சோர்ஸ்((tales soares)) உயிரிழந்தார். நேற்று ‘ஒக்சா’ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பேஷன் நிகழ்ச்சியில், மேடையில் பூனை நடை நடந்து திரும்பியபோது டேல்ஸ் திடீரென மயங்கி கீழே சரிந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததோடு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


"ரோஹிங்கியா அகதிகளை மறந்துவிடக் கூடாது" – ஐ.நா. வலியுறுத்தல்!
[Sunday 2019-04-28 08:00]

ரோஹிங்கியா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்க் லோவ் கோஹ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், மியன்மாரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து, சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.


அமெரிக்க யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!
[Sunday 2019-04-28 08:00]

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த தாக்குதல் ஈடுப்பட்ட 19 வயது நபர் ஒருவர் பலியாகி உள்ளார்.


இலங்கையில் உள்ள அமரிக்கா நாட்டு குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!
[Sunday 2019-04-28 08:00]

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான தீவிரவாத சம்பவங்களை அடுத்து, தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இலங்கையில் மேலும் தாக்குதல்களை நிகழ்த்த தீவிரவாத கும்பல் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனவே இலங்கையில் பணிபுரியும் தங்கள் நாட்டுக் குடிமக்கள், 12ஆம் வகுப்பு வரை படிக்கும் தங்கள் பிள்ளைகளை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் விலை உயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு!
[Saturday 2019-04-27 17:00]

விலை உயர்ந்த வைரம் ஒன்று ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஒகவாங்கோ வைர நிறுவனத்தால், 20.46 கேரட் மதிப்புள்ள அப்பெரிய நீல நிற வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற வைரங்களிலேயே இதுதான் மிகவும் விலை மதிப்பு உடையதாக இருக்கும் என குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரகாசமான நீல வண்ணம் கொண்ட இந்த வைரக்கல், சுமார் ஒரு கோடி முதல் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணியை பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண் காவலர்!
[Saturday 2019-04-27 17:00]

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார். உடனே, இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் 6 மாதம் 5 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்து பதறிப்போன இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அத்துடன், அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. கர்ப்பப் பையில் இருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது.


பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா அரசு தடை!
[Saturday 2019-04-27 17:00]

அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு கட்டாயமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோக், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும், கானாவும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் ‘விசா’ காலத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் தங்களது குடிமக்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கான ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது.


"தாக்குதலுக்காக சாலையில் புதைத்தபோது வெடித்து சிதறிய கண்ணிவெடி" - 4 தலிபான்கள் உயிரிழப்பு!
[Saturday 2019-04-27 17:00]

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.


ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது!
[Saturday 2019-04-27 09:00]

ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட global arms treaty எனப்படும் சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் மற்றும் இலகு ரக ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது.ஆயுத வர்த்தகத்தால் பல்வேறு வன்முறைகள் பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் ரஷ்யா, சிரியா, வடகொரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக நிராகரித்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார்.

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா