Untitled Document
April 29, 2024 [GMT]
இஸ்ரயேலின் விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது!
[Friday 2019-04-12 17:00]

நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம் பெரஷீட் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 2 மாதங்களாக பூமியைச் சுற்றிவந்த நிலையில், அதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. நேற்று இரவு நிலவில் தரையில் இறங்கும் நேரத்தில், விண்கலம் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இந்த விண்கலம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.


தன்னுடன் நடனமாட வருமாறு கனடிய நடிகைக்கு தமிழ் இளைஞன் அழைப்பு! Top News
[Friday 2019-04-12 17:00]

தன்னுடன் நடனமாட வருமாறு பிரபல நடிகை ஒருவருக்கு கனேடிய தமிழ் இளைஞர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. டொரண்டோவில் வசித்து வரும் இளைஞரான கிஷோர் தவநீதன், Prom எனப்படும் தனது பாடசாலையின் இறுதி நடன நிகழ்ச்சிக்காக பிரபல கனடா நடிகையான நினா டோப்ரெவ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


சிங்கப்பூரில் விதி மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு சிறைதண்டனை!
[Friday 2019-04-12 17:00]

விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வார கால சிறைதண்டனை அளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் பட்டாசுகளை வெடித்துள்ளார்.


தைவானில் இளம்பெண்ணின் கண்ணில் உயிருடன் 4 தேனீக்கள்!
[Friday 2019-04-12 07:00]

ஹீ அந்த வேலையை முடித்துவிட்டு அவர் வீட்டுக்கு திரும்பியது முதல், அவரது இடதுபுற கண்ணில் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள் அவரது கண்ணை பரிசோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹீயின் இடதுபுற கண்ணுக்குள் 4 தேனீக்கள் உயிருடன் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ந்துபோயினர்.


இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட இரு மடங்கு வேகமாக வளர்ச்சி : ஐ.நா. அறிக்கையில் அம்பலம்!
[Friday 2019-04-12 07:00]

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1969–ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994–ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும். 2010–2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.


"கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது" - தென்கொரியா நீதிமன்றம் தீர்ப்பு!
[Friday 2019-04-12 07:00]

தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதால் கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.


மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க தீவிர நடவடிக்கை!
[Friday 2019-04-12 07:00]

ஜெய் ஷே முகமது தீவிரவாத இயக்கத்தை தடை செய்து அதன் தலைவன் மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் கெடு விதித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடுத்த இருவாரங்களுக்குள் சீனா தொழில்நுட்பத்தை காரணம் காட்டி அசார் மீதான தடைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளன.


விக்கிலீக்ஸ் இணை நிறுவுனர் 'ஜூலியன் அசாங்கே' லண்டனில் கைது!
[Thursday 2019-04-11 17:00]

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாங்கே பிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் இன்று (வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் ஜூலியன் அசாங்கே தஞ்சம் அடைந்தார். அசாங்கே-யின் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை ஈக்குவடோர் அரசால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூதரகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அசாங்கே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சீனாவில் பரவி வரும் விபரீதமான விளையாட்டு!
[Thursday 2019-04-11 17:00]

சீனாவில் தற்போது பரவி வரும் விஷமத்தனமான பொழுதுபோக்கு ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி நாடியில் கொஞ்சம் அகலான துணியை அல்லது கயிறைக் கட்டிக் கொண்டு வேறு எந்த உபகரணத்தின் துணையுமில்லாமல் தொங்க வேண்டும் என்பதுதான் புதிய விளையாட்டின் நியதி.


ரொறன்ரோ போக்குவரத்து மேம்பாட்டுக்கு 11.2 பில்லியன்!
[Thursday 2019-04-11 17:00]

ரொறன்ரோ பெரும்பாகத்தில் 4 புதிய பிரதான போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் 11 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. ரொறன்ரோ பெரும்பாகத்தின் போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் சுமார் 30 பில்லியன் டொலர்களை வழங்கும் என கடந்த செவ்வாய்க்கிழமை பேர்ளிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இது குறித்த தகவலை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வெளியிட்டுள்ள போதிலும், அந்த திட்டங்களுக்கான காலப் பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.


'பிரெக்ஸிட் விவகாரம்' : 6 மாத அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது!
[Thursday 2019-04-11 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் முன்வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட பெரும்பாலோனர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிரெக்சிட் எனக் குறிப்பிடப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஓராண்டு காலம் வரை அவகாசம் வழங்குவதற்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை நீண்ட நாட்களுக்கு தாமதப்படுத்துவதற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பெல்ஜியம், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.


கியூபெக்கின் பல பிரதேசங்களில் மின் விநியோகம் ரத்து – இருட்டில் அவதியுறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
[Thursday 2019-04-11 17:00]

கியூபெக்கின் தென் பிராந்தியங்களைத் தாக்கிய கடுமையான உறைபனி மழை மற்றும் சூறைக் காற்றுக் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மின் வினியோகம் வழமைக்கு திரும்பாத நிலையில் அவதியுறுகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை வீசிய கடுமையான சூறைக் காற்று, குறித்த அந்த பிராந்தியத்தில் மரக்கிளைகளை முறித்து வீழ்ந்ததில், பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து போனதாகவும், இதன் காரணமாக இன்றைய நிலவரப்படி சுமார் இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கியூபெக் ஹைட்ரோ தெரிவித்துள்ளது.


'ஆர்ட்டிக் வட்ட பகுதியில் தோன்றிய வண்ணவிளக்குகள் வேற்றுகிரகவாசிகள் இல்லை' – நாசா உறுதி.
[Thursday 2019-04-11 06:00]

ஆர்ட்டிக் வட்ட பகுதியில் வானில் தெரிந்த நீல நிற விளக்குகள் வேற்றுகிரக வாசிகள் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை இரவு, வடக்கு நார்வே பகுதிகளில் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் வண்ண விளக்குகள் வானில் தோன்றி நடனமாடின. இந்த அழகிய நடனகாட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அது வேற்றுகிரகவாசிகள் என்றும், அவர்கள் பூமியை தாக்க வருகிறார்கள் எனவும் வலைதளவாசிகள் அச்சுறுத்தி வந்தனர்.


புற்றுநோயை கண்டறியும் நாய்கள்!
[Thursday 2019-04-11 06:00]

மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோயைப் பொருத்தவரையில் முன்கூட்டியே கண்டறிவது தான் மிக முக்கியமானது. இதற்கான சோதனைகளுக்கு செலவும் சற்று அதிகம். ஆனால், நாய்கள் மூலம் அந்த வேலை இனி எளிதாகப் போகிறது. பீஃகில்ஸ் (Peagles) என்ற வகை நாய்களை வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது.


உறைபனி காரணமாக உறைந்து போன ஆறு!
[Thursday 2019-04-11 06:00]

சீனாவில் பனியால் உறைந்த ஆற்றை அதிகாரிகள் வெடிவைத்து தகர்த்து வழி ஏற்படுத்தினர். ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ((Heilongjiang County)) ஆமுர் என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய பரப்பளவில் ஓடிய இந்த ஆறு கடந்த சில மாதங்களாக பெய்த கடும் பனியால் முற்றிலும் உறைந்து போனது. இந்நிலையில் ஆற்றின் ஒருபுறத்தில் மழை பெய்ததால் நீர் போக வழியின்றி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது.


நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்.
[Thursday 2019-04-11 06:00]

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.


'கியால்சன்' சிகரத்தை முதலில் எட்டி சாதனை படைத்த 3 வீரர்கள்!
[Wednesday 2019-04-10 17:00]

உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை, கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது. இதேப்போல் நேபாளத்தின் ஜுகால் ஹிமால் பகுதியில் கியால்சன் சிகரம் உள்ளது. இது 6,151 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரத்தின் உச்சியினை இதுவரை யாரும் அடைந்ததில்லை. இந்த மலையின் உச்சியினை எட்ட, கடந்த வெள்ளி அன்று 6 பேர் கொண்ட குழு பயணத்தை துவங்கினர். ஆனால், கால நிலைமாற்றத்தினால் மழை பெய்ததில், ஏறமுடியாமல் திணறிய 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.


"விமான நிலையம் முன் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை": தாய்லாந்து அரசு!
[Wednesday 2019-04-10 17:00]

விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாய் காவோ ((Mai Khao)) என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.


அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி!
[Wednesday 2019-04-10 17:00]

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்களை பெற்றுத் தருவதாகக் கூறப்படும் இத்திட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஈர்க்கப்பட்டனர். பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச இணைய சந்தையின் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். இதில் மோசடிக்காரர்கள் கையாண்ட நூதன உத்தி என்னவென்றால் பணத்திற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான்.


உறைபனியின் தாக்கத்தால் இருளில் மூழ்கியது கியூபெக்!
[Wednesday 2019-04-10 17:00]

கியூபெக்கில் நிலவிவரும் கடும் உறைபனி காரணமாக, அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான உறைபனி மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வீசிய கடுமையான சூறைக்காற்று, குறித்த பிராந்தியத்தில் மரக்கிளைகளை முறித்து வீழ்த்தியதில், பலஇடங்களில் மின் வடங்கள் அறுந்து போனதாகவும் இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குதிரைக் குட்டி உடல் கண்டுபிடிப்பு! Top News
[Wednesday 2019-04-10 17:00]

ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ரஷ்யா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பனியில் உறைந்த நிலையில் குதிரைக் குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை ஆய்வு செய்த போது, அந்தக் குதிரைக் குட்டி 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது தெரியவந்தது.


'உலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா' - ஈரான் அதிபர்!
[Wednesday 2019-04-10 08:00]

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார். அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் விளக்கம்!
[Wednesday 2019-04-10 08:00]

கடந்த பிப்ரவரி 27-ந் தேதி, இந்திய வான் மண்டலத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. சமீபத்தில் இதுதொடர்பாக ஒரு அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட தகவலால் சந்தேகம் எழுந்தது. இருப்பினும், எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது. இந்நிலையில், இந்திய விமானப்படை துணைத்தளபதி ஆர்.ஜி.கே.கபூர் நேற்று இதை மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அவர் கூறியதாவது:-எப்-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது உண்மை.


ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் : அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு.
[Wednesday 2019-04-10 08:00]

அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இதனால் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.


‘பிரெக்ஸிட்’ விவகாரம்: தாமதப்படுத்தும் மசோதாவுக்கு ராணி ஒப்புதல்!
[Wednesday 2019-04-10 08:00]

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை இது சாத்தியமானால் ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மசோதா அங்கு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அதன் பின்னர் அந்த மசோதா இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


'பாலியல் தொழிலாளர்கள் பட்டியலில் பெயர்' – அதிர்ச்சியில் இளம் பெண்கள்!
[Tuesday 2019-04-09 17:00]

பாலியல் தொழிலாளர்களின் பட்டியலில் தங்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினை அறிந்த 26 பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டொறண்டோவில் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தருவதாக, RosedaleIr ஐ சேர்ந்த Leonie Tchatat என்ற பெண்ணும் அவரது கணவரான Guy Taffo இணைந்து அரசிடம் விண்ணப்பித்து 1.5 மில்லியன் டொலர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. La Passerelle என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த இரண்டு பெண்களிடம், பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு கூட்டமும் வேலைக்கான பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நண்பர்கள் பலரை அழைத்து வருமாறும் கூறப்பட்டது. இதற்கமைய 2018ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி டொறண்டோவில் அமைந்துள்ள பெரிய விடுதி ஒன்றில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு 26 பெண்கள் வருகை தந்துள்ளனர்.


உலகிலேயே 24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன்!
[Tuesday 2019-04-09 17:00]

வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும்.


கனடாவின் ஒருசில பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கை!
[Tuesday 2019-04-09 17:00]

கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒட்டாவா, எட்மன்டன் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா