Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நெரிசல் - ஐவரிகோஸ்ட்டில் 61 பேர் பலி!
[Wednesday 2013-01-02 08:00]

ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 61 பேர் பலியாயினர். மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின், அபித்ஜான் நகரில் உள்ள பெலிக் ஹுப் ஹவுத் ஸ்டேடியத்தில், புத்தாண்டையொட்டி, நேற்று, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. பல ஆயிரம் பேர் இந்த ஸ்டேடியத்தில் கூடியிருந்தனர். திடீரென ஒரு பகுதியில் பட்டாசு விழுந்து வெடித்ததால், அலறி அடித்து மக்கள் ஓடினர்.


விஞ்ஞானிகளிடம் பிரெஞ்சு மன்னன் 16ம் லூயியின் இரத்தக்கறை படிந்த துணி!
[Wednesday 2013-01-02 07:00]

பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார்.


பூமியைப் போன்ற வசதிகளுடன் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்படும்! - நாசா விஞ்ஞானி நம்பிக்கை
[Tuesday 2013-01-01 20:00]

சூரிய குடும்பத்துக்கு வெளியே பல எண்ணற்ற கிரகங்கள் உள்ளன. இதுபோன்ற முதல் கிரகம் 1995-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 24-ந்தேதி வரை 854 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அதில் 2300 கிரகங்கள் இருக்க சாத்தியம் உள்ளது என கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்று பூமியை போன்று அனைத்து அம்சங்களுடன் இருக்கும். அதில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ முடியும். எனவே, பூமி போன்ற மற்றொரு கிரகத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படும் என விஞ்ஞானி அபேல் மெண்டேஷ் தெரிவித்துள்ளார். இவர் பியர்போ நிகோ பல்கலைக்கழகத்தில் கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகெங்கும் கோலாகலம்!
[Tuesday 2013-01-01 20:00]

2012-ம் ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று 2013 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் காத்திருந்த மக்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2013-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக வரவேற்றனர். வழக்கமாக அவுஸ்ரேலியாவில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அதுபோல இந்த ஆண்டும் அங்குதான் முதலாவதாக புத்தாண்டு பிறந்தது. அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி துறைமுக பாலம் மற்றும் சிட்னி ஒபராஹவுஸ் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


அமெரிக்காவில் ஏற்படவிருந்த நிதித்துறை நெருக்கடிக்குத் தீர்வு!
[Tuesday 2013-01-01 19:00]

வே வரி உயர்வுக்கு வழிவகுக்கும் ஃபிஸ்கல் க்ளிஃப் ஐ முடிவுக்கு கொண்டுவரும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் ஜோ பைடன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது நாளைக்குள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நடைமுறைக்கு வரும். டிசம்பர் 31, ம் தேதிக்குள் புதிய மசோதா நிறைவேறாவிட்டால், இயற்கையாகவே வருமான வரி உள்ளிட்ட வரிகள் க்ளிண்டன் ஆட்சிகால அளவிற்கு மாறிவிடும் வகையில் புஷ் ஆட்சியில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன.


கிழக்கு திமோரில் இருந்து முற்றாக வெளியேறியது ஐ.நா அமைதிப்படை!
[Tuesday 2013-01-01 09:00]

கிழக்கு திமோர் நாட்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை திங்கள்கிழமை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது. கிழக்கு திமோரில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐ.நா. அமைதிப்படை படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. இறுதிக்கட்டமாக 2012ஆம் ஆண்டின் இறுதிநாளான திங்கள் கிழமை 1,500 அமைதிப்படை வீரர்கள் திமோரில் இருந்து விடை பெற்றனர்.


ஆபிரகாம் லிங்கனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை! - அமெரிக்க அதிபர் ஒபாமா
[Tuesday 2013-01-01 09:00]

முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். என்பிசி செய்தி தொலைக்காட்சியில் திங்கள்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்றுப் பேசினார். அப்போது, "நீங்கள் லிங்கன் இருந்தது போன்ற சூழலில் இருப்பதாக உணர்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது:


பிக்குகள் பற்றாக்குறையால் தாய்லாந்தில் மூடப்படும் புத்த ஆலயங்கள்!
[Tuesday 2013-01-01 09:00]

தாய்லாந்து நாட்டில், புத்தபிக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. பல மடாலயங்களில், புத்த துறவிகள் இல்லாததால், மூடப்பட்டுள்ளன. புத்த மதம் தழைத்தோங்கி காணப்பட்ட, சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில், புத்த துறவிகள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர். பிரச்னைகளை தீர்ப்பதில் பஞ்சாயத்து தலைவர் போலவும், திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு சடங்கு செய்பவர்களாகவும் இவர்கள் வலம் வந்தனர்.


வெனிசுலா அதிபர் சாவெஸ் உடல்நிலை மோசம்!
[Tuesday 2013-01-01 09:00]

கியூபா நாட்டில், புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும், வெனிசுலா அதிபர், ஹக்கோ சாவெஸ், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான, வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். அக்டோபரில் நடந்த தேர்தலில், இவர் நான்காவது முறையாக, அதிபராக தேர்வு செய்யப்பட்டார். குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாவெசுக்கு, கடந்த ஆண்டு, அறுவை சிகிச்சை நடந்தது.


ஹிலாரியின் மூளையில் இரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிப்பு!
[Tuesday 2013-01-01 08:00]

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு(65), மூளையில் ரத்தம் உறைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன், ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறார். ஹிலாரிக்கு வயிற்றில் வைரஸ் கிருமி தாக்குதல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் தனது பணிகளை வீட்டிலிருந்து கவனித்து வந்தார்.


நோபல்பரிசு பெற்ற ஆராச்சியாளரான 103 வயது இத்தாலியப் பெண் மரணமானார்!
[Monday 2012-12-31 22:00]

இரத்தத்தில் உள்ள செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிய அடிகோலிய 103 வயதான இத்தாலி நாட்டு அறிவியல் அறிஞர் ரீட்டா லெவி மோன்டால்சினி மரணமடைந்தார். இத்தாலி நாட்டில் உள்ள வடக்கு துரின் பகுதியில் 1909-ஆம் ஆண்டு வசதியான யூதக் குடும்பத்தில் பிறந்தவர் ரீட்டா லெவி மோன்டால்சினி. கல்லூரிக் கல்வியை முடித்து மருத்துவப்பட்டம் பெற்ற அவர், மேற்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி கல்வியை தொடரவிடாமல், இத்தாலியின் அன்றைய பாசிச அரசு 1936-ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடையையும் மீறி இரத்தத்தில் உள்ள செல்களைப் பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.


கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை அவசியம்: - சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம்
[Monday 2012-12-31 13:00]

டெல்லியில் இளம் மாணவி மிகவும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், அதனால் அவர் மரணமடைந்திருப்பதும், மரண தண்டனை போன்ற கடுமையான ஒரு தண்டனை அவசியம்தான் என்பதை நினைவூட்டுகிறது என்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்காமல் உள்ள நாடு சிங்கப்பூர்.


எகிப்திய முன்னாள் அதிபரது மகன்களின் வங்கிப்பணத்தை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது!
[Monday 2012-12-31 12:00]

சுவிட்சர்லாந்து வங்கியில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் சேமித்து வைத்திருந்த ரூ.1,643 கோடி மதிப்பிலான பணத்தை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது. எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன்களான ஆலா மற்றும் கமால் முபாரக் ஆகியோர் ஸ்விட்சர்லாந்தின் கிரெடிட் சுயிஸ் வங்கியில் ரூ.1643 கோடியைக் கடந்த 2005இல் டிபாசிட் செய்திருந்தனர்.


ஹிலாரி கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
[Monday 2012-12-31 12:00]

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ரத்தக் கட்டி இருப்பதாகவும், அதனை ஆய்வு செய்வதற்காக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் இங்கிலாந்து தாத்தாவின் மூத்த மகனுக்கு தற்போது வயது 52
[Monday 2012-12-31 10:00]

இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.


பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் பஸ்களில் பயணம் செய்த 20 பேர் கொல்லப்பட்டனர்.
[Monday 2012-12-31 09:00]

நேற்றையதினம் 30-12-12 ஞாயிற்று கிழமை மாலை பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பயணம் செய்த 3 பஸ்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். பக்கத்து நாடான ஈரானுக்கு 3 பஸ்களில் புனிதப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானியர்கள், டஃப்டான் நகரிலிருந்து பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


இந்தியரை ரயில் முன் தள்ளிக் கொன்ற அமெரிக்கப் பெண் கைது!
[Sunday 2012-12-30 17:00]

ரயில் முன் தள்ளி இந்தியர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அமெரிக்கப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத விரோதத்தால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த 46 வயதான சுனந்தோ சென் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கொலம்பியா பல்கலைக்கழகம் அருகே பிரிண்டிங் மற்றும் நகல் எடுக்கும் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு குயின்ஸ் சுரங்க ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்தார்.


மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் விட்டு விட்டு ஒளிர்ந்த சூரியன் - நாசா விஞ்ஞானிகள் தகவல்!
[Sunday 2012-12-30 17:00]

மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர். மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் சூரிய சக்தி கண்காணிப்பு மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர்.


கடத்திச் சென்ற 21 பாகிஸ்தான் படையினரையும் சுட்டுக்கொன்ற தலிபான்கள்!
[Sunday 2012-12-30 17:00]

பாகிஸ்தானின் பெஷாவர் அருகே கடத்திச் சென்ற 21 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களை செக்போஸ்ட்டிலிருந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர். பின்னர் அனைவரையும் மொத்தமாக நிற்க வைத்து சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை ஜபாய் என்ற பகுதியில் போலீஸார் கணடுபிடித்துள்ளனர். அனைவரையும் கிரிக்கெட் மைதானத்திற்குக் கூட்டிச் சென்று தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.


டெல்லி மாணவியின் மரணத்துக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இரங்கல்!
[Sunday 2012-12-30 17:00]

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.


பேநசீர் பூட்டோ கொலை: விசாரணை அறிக்கை வெளியாவதைத் தடுத்தார் அதிபர் ஜர்தாரி!
[Sunday 2012-12-30 07:00]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் படுகொலை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தடை விதித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேநசீரின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் சார்ந்திருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கரிகுடா பக்ஸ் பகுதியில் டிசம்பர் 27-ம் தேதி மாபெரும் பேரணி நடைபெற்றது.


யூ டியூப் இணையதளம் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் முடிவு!
[Sunday 2012-12-30 07:00]

யூ டியூப் இணையதளம் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.பொதுமக்களிடமிருந்து வந்துள்ள வேண்டுகோளை ஏற்று யூ டியூப் மற்றும் டுவிட்டர் இணையதளங்கள் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளோம். அதே சமயம், இஸ்லாம் மதம் குறித்து அவதூறான செய்திகள், படங்கள், பாலியல் தொடர்பான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


ஓடுபாதையிலிருந்து விலகி வீதிக்கு வந்த ரஷிய பயணிகள் விமானம்!
[Sunday 2012-12-30 07:00]

ரஷியாவில் பயணிகள் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி வீதிக்கு வந்து உடைந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் உள்ள வினுகோவோ விமான நிலையத்தில் இவ்விபத்து சனிக்கிழமை நிகழ்ந்தது. விபத்தின்போது விமானத்தில் 8 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.


இணைய தொழில்நுட்பவசதி இளைய தலைமுறையினரின் மூளையை மழுங்கடிக்கிறது! - பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் விசனம்
[Sunday 2012-12-30 07:00]

இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார்.


கிளர்ச்சியாளர்களுடன் பேசுமாறு சிரியாவுக்கு ரஷியா அறிவுறுத்தல்!
[Saturday 2012-12-29 19:00]

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு நடத்துமாறு அந்நாட்டு அரசை ரஷியா அறிவுறுத்தியுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இது தொடர்பாக சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மாக்தாத்திடம் வலியுறுத்தியாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரெவ் தெரிவித்தார்.


அமெரிக்காவை அச்சுறுத்தும் பொருளாதாரத் தேக்கம் - உச்சக்கட்டப் பரபரப்பில் அரசியல் களம்!
[Saturday 2012-12-29 19:00]

அதிபர் தேர்தல் முடிந்தவுடன்,பிஸ்கல் க்ளிஃப் எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கிரேக் மரணம்!
[Saturday 2012-12-29 19:00]

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கிரெய்க் இன்று மரணமடைந்தார்.சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோனி கிரெய்க், இன்று அதிகாலை 1.45 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.நுரையீரல் புற்றநோய் காரணமாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரெய்க்குக்கு கடந்த வாரம் தான் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதில் இருந்து குணம் அடைந்து வந்த டோனி கிரெய்க்குக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.


புகுஷிமாவைச் சுத்தப்படுத்துவது சவாலான பணி! - ஜப்பானியப் பிரதமர்
[Saturday 2012-12-29 19:00]

சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புகுஷிமா பகுதியை சுத்தப்படுத்தும் பணி முன் எப்போதும் இல்லாத சவாலான பணி என ஜப்பானின் புதிய பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு புகுஷிமா பகுதியில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்ட அபே இவ்வாறு தெரிவித்தார்.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா