Untitled Document
May 18, 2024 [GMT]
பிரிட்டிஷ் கொலம்பிய ஆர்ப்பாட்டதால் பிரதமரின் உரை ரத்து!
[Wednesday 2019-01-09 22:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இதனால் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமரின் உரையும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு தபாலில் மர்ம பொதிகள்!
[Wednesday 2019-01-09 22:00]

அவுஸ்ரேலிய தலைநகர் கன்பரா மற்றும் மெல்பேர்னிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளிட்ட சுமார் 20 இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இன்று(புதன்கிழமை) சந்தேகத்துக்கிடமான பொதிகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த கட்டடங்கள் உடனடியாக மூடப்பட்டதுடன், அங்கிருந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மெல்பேர்னிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்கள் உள்ளிட்ட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு குறித்த மர்மப் பொதிகள் அனுப்பட்டமை ஆரம்பத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தற்போது ஏனைய சில தூதரகங்களும் குறித்த மர்மப்பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கனேடியர்கள் கைது விவகாரம் குறித்து ட்ரம்புடன் கனேடியப் பிரதமர் பேச்சு!
[Wednesday 2019-01-09 22:00]

கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசி ஊடாக இந்த உரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதை அமெரிக்க வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் மேலும் தகவல் வெளியிடுகையில், சட்டவிரோதமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாக கூறியுள்ளார்.


உலகளாவிய ரீதியில் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா கவலை!
[Wednesday 2019-01-09 22:00]

உலகளாவிய ரீதியில் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,


அமெரிக்காவில் நினைவிழந்த நிலையிலுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம்!
[Wednesday 2019-01-09 22:00]

அமெரிக்காவில் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தன்னுணர்வற்று மருத்துவமனையில் படுக்கையிலே இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமெரிக்காவில் ஹஸீண்டா மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி நினைவிழந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். மருத்துவமனையில் உரிய கவனிப்பில் அவர் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இந்நிகழ்வு தொடர்பாக பாலியல் தாக்குதல் குறித்த விசாரணையை துவங்கியுள்ளது காவல்துறை. பெயர், முகம் வெளியிடப்படாத அப்பெண் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.


காங்கிரஸிடம் நிதி கோரும் ஜனாதிபதி ட்ரம்ப்!
[Wednesday 2019-01-09 09:00]

தனது நீண்டகால வாக்குறுதியான அமெரிக்க- மெக்ஸிகோ எல்லைச் சுவரை அமைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸிடமிருந்து நிதி கோரியுள்ளார். அதன்படி, இந்த ஆண்டுக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். எல்லைச் சுவர் அமைக்கும் விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்ற நிலையில், பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் எல்லைச் சுவர் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.


சீனாவுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணம்.
[Wednesday 2019-01-09 09:00]

வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். ரெயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் ஜாங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.


சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்!
[Wednesday 2019-01-09 09:00]

189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும். இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.


ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காலநிலை மழையுடன் காணப்படுகிறது!
[Tuesday 2019-01-08 23:00]

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பிற்பகல் வேளையில் 60 சதவிகிதம் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் பிற்பகல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.


குற்றவாளிகளின் விசாக்களை இரத்து செய்த அவுஸ்ரேலியா!
[Tuesday 2019-01-08 23:00]

நீதிமன்றங்களினால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் அவுஸ்ரேலிய விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களினால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் விசாக்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வயது வெறும் எண்ணிக்கை என்பதை நிரூபிக்கிறார் கனேடிய மூதாட்டி!.
[Tuesday 2019-01-08 23:00]

வயது என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரமே என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நூறு வயதான கனேடிய மூதாட்டி ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கிழக்கு ஒன்ராறியோவின் கின்ங்ஸ்டன் நகரை சேர்ந்த இவர் தனக்கு நூறு வயதான போதிலும், ஒரு வகுப்புக்கேனும் தவறாது உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உடற்பயிற்சியின் மூலம் தான் மிகவும் பலமடைந்து வருவதாக தெரிவித்த குறித்த மூதாட்டி, வயது என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரமே என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீது புதிய தடைகளை அறிமுகப்படுத்தியது ஐரோப்பா !
[Tuesday 2019-01-08 23:00]

ஐரோப்பாவில் படுகொலைகளை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் ஈரானின் உளவுத்துறை மற்றும் அதன் பணியாளர்கள் இருவர் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் தீவிரவாதிகள் பட்டியலிலும் இணைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையினூடாக ஈரானிய உளவுத்துறையினதும் அதன் ஊழியர்களினதும் நிதி மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகளிலும் தாக்குதல்களை நடத்தியதாகவும் நடத்துவதற்கு திட்டமிட்டதாகவும் ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.


ரொறன்ரோவில் வாகன தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது! Top News
[Tuesday 2019-01-08 22:00]

ரொறன்ரோவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாதாந்த மற்றும் மணி நேரங்களுக்கான வாகன தரிப்பிட கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.இந்த அதிகரிப்பானது 160 வாகன தரிப்பிடங்களில் இடத்துக்கு இடம் வேறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாந்தம் 5 டொலர் மற்றும் 30 டொலர் வரையிலான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் அரைமணி நேரத்திற்கு 25 முதல் 50 சென்ற்ஸ் வரை அதிகரிக்கும் அன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6.4 ரிக்டர் அளவில் ஜப்பானில் நிலநடுக்கம்.
[Tuesday 2019-01-08 22:00]

ஜப்பானின் தெற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 6.4 ரிக்டர் அளவில் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலின் 39 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


ஈரான் நிலநடுக்கத்தில் 75 பேர் காயம்.
[Tuesday 2019-01-08 22:00]

ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரோடுகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.


2019 ஆம் ஆண்டில் உலகின் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்!
[Tuesday 2019-01-08 09:00]

சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்.
[Tuesday 2019-01-08 09:00]

ரொறன்ரோ க்ளென் பார்க் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஞாயிறுக்கிழமை மாலை 5 மணியளவில், மற்றும் டஃப்பரின் வீதிப் பகுதியில் மூன்றிலிருந்து ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து 27 வயதான குறித்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம் - சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை.
[Tuesday 2019-01-08 09:00]

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கனடாவிற்கான சொந்த விண்வெளிப் படைப்பிரிவை அமைக்க ராணுவ நிபுணர்கள் பரிந்துரை.
[Monday 2019-01-07 22:00]

அமெரிக்கா போன்று கனடாவும் தனக்கென்று சொந்தமான விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கான விண்வெளிப் படையணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் மேற்கொண்டுள்ள நிலையில் கனடாவின் ராணுவ நிபுணர்கள் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.


ரொறன்ரோ - இரு வேறு காலநிலை : வானிலை எச்சரிக்கை!
[Monday 2019-01-07 21:00]

ரொறன்ரோ பெரும்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் இருவேறு காலநிலை தொடர்ந்தும் நிலவும் என கனடிய சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குறைந்தளவு பனி, உறைபனி மற்றும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என ஒரு சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கபோன் ஆட்சிக்கவிழ்ப்பு முறியடிப்பு!
[Monday 2019-01-07 21:00]

கபோனில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டது. இதன்போது பாதுகாப்புத் தரப்பினரால் இருவர் கொல்லப்பட்டதோடு, 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், சகல விடயங்களும் மீளவும் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். கபோன் ஜனாதிபதி அலி பொங்கோ சுகயீனமுற்றுள்ள நிலையில், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அரச வானொலி சேவையை கைப்பற்றிய இராணுவத்தினர் தாம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்திருந்தனர்.


மக்களுக்கு எச்சரிக்கை! - பனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம்.
[Monday 2019-01-07 21:00]

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலநிலை நிலவி வருகின்றது. இந்த காலநிலை பனி மீன்பிடி பருவத்தின் தொடக்கமாகும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் பனி மீன்பிடி பாதுகாப்பானது அல்ல என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிரான்ட் ரிவர் பகுதிக்கான வெப்பநிலை -0C க்கு கீழே வீழ்ச்சியடைந்து, சிலநாட்களுக்குப் பின்னர் மீண்டும் உறைபனி நிலைக்கு உயரும் என்பதால் வானிலையைக் கணிக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்தும் பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி என்பன சுழற்சியில் தொடர்ந்தும் பதிவாகும் என்றும் இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கிறிஸ்மஸ் பண்டிகையை இன்று கொண்டாடிய "காப்டிக்" கிறிஸ்தவர்கள்.
[Monday 2019-01-07 21:00]

உலகளவில் பரந்து வாழும் "காப்டிக்" கிறிஸ்தவர்கள் இன்று ஜனவரி ஏழாம் திகதி தமது கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடியுள்ளனர். கிஸ்தவ மத கிளையினராக தங்களது சமய நிகழ்வுகளை கடைப்பிடித்து வரும் இவர்கள் தங்களது கிறிஸ்மஸ் தினத்தை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம். 43 நாட்கள் விரதமிருந்து ஜனவரி ஏழாம் திகதியிரவு தேவாலயத்துக்கு சென்று தங்களது விரதத்தை முறித்துக்கொள்வதுடன், கிறிஸ்மஸ் தினத்தையும் கொண்டாடி வருகின்றனர்.


இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்.
[Monday 2019-01-07 21:00]

பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.


அமெரிக்கா - 10 வருடமாக
[Monday 2019-01-07 21:00]

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக


200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா.
[Monday 2019-01-07 09:00]

200 ஆண்டுகளாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக கூறும் விகாஸ்லேவ் என்னும் அந்த வரலாற்றிசிரியர், பெலாரஸ் எல்லையோரத்திற்கு அருகே உள்ள தனது சொந்த நகரமான ருட்னியனுக்கு தங்கள் கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டுமென்று உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் பல பகுதிகளை தனது "கிரேட் ஆர்மி" என்ற பெயர் கொண்ட படையினால் வென்ற நெப்போலியன், ரஷ்யாவின் மாஸ்கோ நகரின் மீது நடத்திய படையெடுப்பில் படுதோல்வியுற்றவுடன் அங்கிருந்து திரும்பும்போது 80 டன் தங்கத்தையும், ஏனைய மதிப்புமிக்க பொருட்களையும் திருடியதாகவும், பிரான்சுக்கு அவற்றை கொண்டுசெல்வது மிகவும் கடினமானதாக இருந்ததால் அவற்றை செல்லும் வழியில் புதைத்துவிட்டதாகவும் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக கூறப்பட்டு வருகிறது.


பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
[Monday 2019-01-07 09:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேற்று கடுமையான காற்று வீசியுள்ளதோடு, விக்ரோரியா நகர்ப்பகுதியில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இது, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிறேட்டர் விக்ரோரியா பகுதியிலேயே காற்றின் வேகம் அதிகரிக்குமென சுற்றுச்சூழல் கனடா எதிர்வுகூறியுள்ளது.


எல்லைச்சுவர் இரும்பில் அமைக்கப்படும்
[Monday 2019-01-07 09:00]

அமெரிக்க அரசாங்கத்தின் ஸ்தம்பித நிலை சமரசமடைவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில சமிஞ்ஞைகளை வௌிப்படுத்தியுள்ளார். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடி நிலை மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனிடையே, எல்லைச் சுவரை அமைப்பதற்கான மூலப் பொருட்கள் தொடர்பாக அவர் மாற்று யோசனையொன்றை தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா