Untitled Document
May 2, 2024 [GMT]
ரஷிய அதிபர் புதின் மீண்டும் திருமணம்...
[Friday 2018-12-21 22:00]

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார். இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.


அமெரிக்காவில் உயிருக்கு போராடும் பிள்ளையை நேரில் பார்த்த ஏமன் தாய் - நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்.
[Friday 2018-12-21 09:00]

ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அலி ஹசன், சைமா சுவிலே தம்பதியர். இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் அப்துல்லா. ஏமனில் உள்நாட்டுப்போர் நடந்து வருவதால் உயிருக்குப் பயந்து இந்த குடும்பம், எகிப்து நாட்டுக்கு சென்று கெய்ரோ நகரில் குடியேறியது. இந்த நிலையில், குழந்தைக்கு


ரஷ்ய அதிபர் புதின் செல்போன் பயன்படுத்துவதில்லை - கிரெம்ளின் மாளிகை அதிர்ச்சி தகவல்.
[Friday 2018-12-21 09:00]

உலகமெங்கும் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 468 கோடியை எட்டி விடும், 2020-ம் ஆண்டு 478 கோடி ஆகிவிடும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை.


18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா - தேர்தல் வாக்கெடுப்பின் போது தலையீடு.
[Friday 2018-12-21 08:00]

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அரசியல் கட்சிகள், தலைவர்களின் இ-மெயில், சர்வர்களில் ஊடுருவி (சைபர் ஹேக்கிங்) அத்துமீறலில் ஈடுபட்டதாக ரஷ்ய உளவு அமைப்புகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.


நெதர்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 வயது மாணவி!
[Thursday 2018-12-20 17:00]

நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டம் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 300 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நேற்று வகுப்பு முடிந்து மாணவிகள் அங்குள்ள மோட்டார் வாகன செட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மாணவிகளை நோக்கி சுட்டார். இதில் 11 வயது மாணவி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.


ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை: - டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்!
[Thursday 2018-12-20 17:00]

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.


ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு:
[Thursday 2018-12-20 16:00]

ரொறன்ரோ Entertainment District பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிங் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்பேடினா அவென்யூ பகுதியில், நள்ளிரவு இடம்பெற்ற அந்த இரட்டை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவித்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சந்திர வருட புத்தாண்டு சின்னமாக ரஷ்யர்களால் தத்தெடுக்கப்படும் பன்றி குட்டிகள்!
[Thursday 2018-12-20 16:00]

லூனார் அல்லது சந்திர வருட புத்தாண்டை குறிக்கும் முகமாக சீனாவிலும், ரஷ்யாவிலும் பன்றிகள் அதன் அடையாளமாக கருதப்படுகின்றன. சினாவின் பாரம்பரிய புதுவருடம் எதிர்வரும் 2019 பெப்ரவரி மாதம் ஆரம்பமாகிறது. இது பன்றியின் வருடமாக அங்கு கொள்ளப்படுகிறது. இது அதிர்ஸ்டத்தை வரவழைக்கும் ஆண்டாக சீனர்களால் கருதப்படுகின்றது.


திருடப்பட்ட வீடு மீண்டும் கண்டுபிடிப்பு!
[Thursday 2018-12-20 16:00]

செயின்ட் லூயிஸில் திருடப்பட்ட ஒரு (tiny home) வீட்டைக் மீண்டும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பறிவாளர்களின் உதவியுடன் திருடப்பட்ட இடத்தில இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் குறித்த வீட்டை நேற்று (புதன்கிழமை) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


புத்தாண்டில் அமெரிக்காவுடன் பலசுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள்: - சீனா
[Thursday 2018-12-20 16:00]

புத்தாண்டில் அமெரிக்காவுடன் பலசுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக சீன வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இயற்கைப் பேரழிவுகளால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் நாடுகள்!
[Thursday 2018-12-20 16:00]

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கைப் பேரழிவுகளால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துள்ள 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் தீவுகள் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 172 நாடுகளில் பூகம்பங்கள், சுனாமிகள், சூறாவளிகள், வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்துள்ள 2018 ஆம் ஆண்டுக்கான உலக ஆபத்து சூழ்நிலை அறிக்கை, அவற்றை எதிர்கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு உள்ள திறமை குறித்தும் மதிப்பீடு செய்துள்ளது.


இந்தியருக்கு பேஸ்புக் நிறுவனத்தில் உயர் பதவி...
[Thursday 2018-12-20 09:00]


ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு...
[Thursday 2018-12-20 09:00]

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜெர்மனியில் உள்ள டிரையர் நகரில் உள்ள ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது.


சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம்- டொனால்டு டிரம்ப்.
[Thursday 2018-12-20 08:00]

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது. இந்நிலையில் சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.


96 கிலோ உடல் எடையை குறைத்த இந்தோனேசியா சிறுவன்!
[Wednesday 2018-12-19 17:00]

உலகின் குண்டுச்சிறுவனாக கருதப்பட்ட இந்தோனேசியாவின் ஆர்யா பெர்மனா ஒரேயடியாக 96 கிலோ அளவுக்கு உடல் இடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பின்னர் குண்டாக இருந்தபோது பயன்படுத்திய உடையை அணிந்து தமது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர்த் தொட்டியில் தனது குண்டான உடலை குளிரவைக்கும் குண்டுச்சிறுவனின் விசித்திர புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.


டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டிய நபருக்கு 37 மாதம் சிறை!
[Wednesday 2018-12-19 17:00]

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெர்ராட், நெப்ரஸ்கா நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக தொடர்ந்து மிரட்டினார்.


சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் பலி!
[Wednesday 2018-12-19 17:00]

சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.


ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை: - துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு
[Wednesday 2018-12-19 17:00]

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.


சர்வாதிகாரி ஹிட்லரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தம்பதியருக்கு பிரிட்டனில் சிறைத்தண்டனை!
[Wednesday 2018-12-19 17:00]

பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த ஆடம் தாமஸ்-கிளவுடியா தம்பதியர், தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அத்துடன், நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.


ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை பாகிஸ்தான் நாளிதழில் வெளியாகி சர்ச்சை.
[Wednesday 2018-12-19 09:00]

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்கா அறிவித்துள்ளது.


சொந்தமாக தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலி.
[Wednesday 2018-12-19 09:00]

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான். இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.


விஜய் மல்லையா மீது லண்டன் ஐகோர்ட்டில் திவால் வழக்கு.
[Wednesday 2018-12-19 08:00]

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது.


எதிர்க்கட்சி இங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
[Tuesday 2018-12-18 23:00]

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தின் தனித்தன்மையை காப்பாற்றும் வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது. ஏற்கனவே இது சம்பந்தமாக மக்களிடம் எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இது சம்பந்தமாக ஐரோப்பிய யூனியனுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மீது அதிருப்தி நிலவி வருகிறது. சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களே அவர் மீது அதிருப்தி தெரிவித்தனர்.


சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆவேசம்: எங்களுக்கு யாரும் உத்தரவு போட முடியாது.
[Tuesday 2018-12-18 23:00]

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனாவும் அதிகரித்தது. இவ்வாறாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதற்கு மத்தியில், அண்மையில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்து பேசினர்.


உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்.
[Tuesday 2018-12-18 22:00]

ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.


நேபாளத்தின் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மறைந்தார்.
[Tuesday 2018-12-18 21:00]

இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார்.


30 ஆவிகள் என்மேல் புகுந்ததால் 300 பெண்களை கற்பழித்தேன் - மதபோதகர் துணிகரம்.
[Tuesday 2018-12-18 09:00]

பிரேசிலில் கடவுளின் தூதர் என்று அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் மதபோகராகவும், மனநல டாக்டராகவும் பனியாற்றி வருகிறார். இவர் ஆன்மீக முறையில் மனநல நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்து வந்தது.


அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை.
[Tuesday 2018-12-18 08:00]

எதிர் எதிர் துருவங்களாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என்ற உறுதிமொழியை டிரம்புக்கு கிம் ஜாங் அன் கொடுத்தார். அதன்படி வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா