Untitled Document
May 20, 2024 [GMT]
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இந்தியருக்கு 9 சிறை.
[Friday 2018-12-14 21:00]

இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். பிரபு ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது தனதருகில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் குழந்தை பெற்ற பெண்!..
[Friday 2018-12-14 21:00]

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் கேபோன் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகரம் லிபர்வில்லேவில் இருந்து துருக்கி விமானம் ஒன்று துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இடையில் காங்கோ நாட்டில் உள்ள கின்சசா நகரில் தரை இறங்கி பயணிகளை ஏற்றியது. அப்போது அந்த நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் முசும்பா (வயது 21). தனது கணவருடன் இஸ்தான்புல் வருவதற்காக விமானத்தில் ஏறினார்.


செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் அவசியமானவை: - சுந்தர் பிச்சை யோசனை!
[Friday 2018-12-14 16:00]

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையிடம், அமெரிக்க பிரபல பத்திரிகையொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது தொழிநுட்ப நிறுவனங்களின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


விண்வெளிக்கு அருகில் சென்று திரும்பிய அமெரிக்க விமானம்!
[Friday 2018-12-14 16:00]

அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது. ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும்.


இங்கிலாந்தில் பச்சிளங்குழந்தையை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!
[Friday 2018-12-14 16:00]

இங்கிலாந்தில் பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம்குழந்தையை வீட்டின் வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஸ்ஷையரில் பகுதியை சேர்ந்தவர்கள் Dan McNulty (31) - எமி லிட்ச்பீல்ட் (28) தம்பதியினர். இவர்களுடைய வீட்டில் ஃபைஸ் மற்றும் டோட்டி என்ற இரு வளர்ப்பு நாய்கள் உள்ளனர். அவற்றை தங்களுடைய குழந்தைகளாக நினைத்தே இருவரும் வளர்த்து வந்துள்ளனர்.


அமெரிக்காவில் பெண்ணின் உயிரை பறித்த சோயா சாஸ்!
[Friday 2018-12-14 16:00]

அமெரிக்காவில் ஆன்லைனில் பிரபலமாகிய டயட் முறைகளை கடைப்பிடித்தால் மூளைச்சாவு அடைந்து அப்பெண் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பிரபலமாகிய டயட் முறைகளை எல்லாம் கடைபிடித்து வந்துள்ளார்.


27,000 வில்லைகளாக வெட்டுவதற்காக தனது உடலை தானமாக கொடுத்த ஜேர்மனியப் பெண்!
[Friday 2018-12-14 16:00]

ஜேர்மானியப் பெண் ஒருவர் மருத்துவ மாணவர்களுக்காக தனது உடலை 27,000 வில்லைகளாக வெட்டுவதற்காக தானமாக கொடுத்துள்ளார். ஜேர்மனியில் பிறந்த Susan Potter என்கிற Sue இரண்டாம் உலகப்போருக்குப்பின் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தார், Harry Potter என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.


துருக்கியில் மற்றுமொரு ரயில் விபத்து; 9 பேர் பலி.
[Friday 2018-12-14 09:00]

அதிவேக ரெயில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு மார்சண்டீஸ் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது அங்கே தண்டவாளத்தை சோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரெயில் என்ஜினுடன், அந்த அதிவேக ரெயில் கடுமையாக மோதி, பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பாய்ந்தது.


இறந்த தாயின் உடலுடன் ஒரு ஆண்டு வசித்து வந்த நபர் கைது.
[Friday 2018-12-14 09:00]

ஸ்பெயின் நாட்டில், தாயாரின் பென்சன் பணத்தை பெறுவதற்காக, தாய் இறந்ததை மறைத்துவிட்டு, அவரது உடலை, யாருக்கும் தெரியாமல் ஒரு ஆண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே மறைத்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


வெனிசூலா அதிபர் அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!..
[Friday 2018-12-14 09:00]

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.


நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற்றார்.
[Thursday 2018-12-13 21:00]

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட இங்கிலாந்து தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.


துருக்கி: ரெயில் விபத்தில் 9 பேர் பலி- 47 பேர் காயம்.
[Thursday 2018-12-13 21:00]

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.


அமெரிக்காவில் இரண்டு நாட்களாக புகைப்போக்கிக்குள் சிக்கிக் கொண்ட திருடன்!
[Thursday 2018-12-13 18:00]

திருடுவதற்காக புகைப்போக்கிக்குள் இறங்கிய திருடன் ஒருவன் இரண்டு நாட்கள் வெளியே வர இயலாதபடி அதற்குள் வசமாக சிக்கிக் கொண்ட நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் கடும் பிரயத்தனத்துக்கு பிறகு அவனை மீட்டனர். அமெரிக்காவின் Alameda பகுதியில் திருடுவதற்காக தனியாக இருந்த ஒரு சீன ஹோட்டலுக்குள் புகைப்போக்கி வழியாக இறங்கியிருக்கிறான் ஒரு திருடன்.


துருக்கியில் தடம்புரண்ட அதிவேக ரெயில்:-9 பேர் பலி - 47 பேர் காயம்
[Thursday 2018-12-13 18:00]

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.


கானா நாட்டில் போராட்டம் காரணமாக அகற்றப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை
[Thursday 2018-12-13 17:00]

ஆப்ரிக்கா நாடான கானாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.


வாட்ஸ் அப்பில் வருங்கால மனைவியை திட்டிய இளைஞருக்கு நேர்ந்த கதி!
[Thursday 2018-12-13 17:00]

அபுதாபியில் வருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞருக்கும் நீதிமன்றம் இரண்டு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அபுதாபியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடனே இந்த திருமணம் நடைபெறவுள்ளதால், மணமகன் மற்றும் மணமகள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக போனில் பேசி வந்துள்ளனர்.


கடலில் 'பிளாஸ்டிக்' : நீச்சல் வீரர் எச்சரிக்கை!..
[Thursday 2018-12-13 08:00]

டோக்கியோ: கடலில் மூன்று நிமிடத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்ததாக பிரான்ஸ் நீச்சல் வீரர் பென் லொகோமிட் தெரிவித்துள்ளார்.பிரான்சின் நீச்சல் வீரர் பென் லொகோமிட் 51. இவர் கடந்த ஜூன் 5ல் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜப்பானில் இருந்து பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஜான் பிரான்சிஸ்கோ நகருக்கு நீச்சல் பயணத்தை தொடங்கினார்.


சாலையில் சாக்லேட் ஆறாக ஓடியதால் பரபரப்பு!..
[Thursday 2018-12-13 08:00]

பெர்லின்: நம்மூரில் தார் சாலையே தரமில்லாமல் இருக்கும். ஜெர்மனியில் சாலை எங்கும் 'சாக்லேட்' ஆறாக ஓடியதால், மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் ஐரோப்பிய நாடுகளில் 'கேக்', 'சாக்லேட்' உள்ளிட்ட இனிப்பு வகைகளின் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது.


பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி.
[Thursday 2018-12-13 08:00]

பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.


பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு: - தப்புவாரா தெரசா மே?
[Wednesday 2018-12-12 18:00]

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.


ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை ஜாமினில் விடுதலை செய்த வான்கோவர் நீதிமன்றம்!
[Wednesday 2018-12-12 18:00]

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


மனச்சிதைவை குணப்படுத்த மருந்தை கண்டுபிடித்த ரஷியா ஆராய்ச்சியாளர்கள்
[Wednesday 2018-12-12 18:00]

மனதளவில் நினைத்ததை செயல்பட இயலாத மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.


வயிற்றுக்குள் பாம்பு: - கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!
[Wednesday 2018-12-12 14:00]

துருக்கியில் தன்னுடையை வயிற்றுக்குள் பாம்பு இருப்பதாக கூறி வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kocaeli மாகாணத்தை சேர்ந்தவர் சுக்ரு (22).< இவருக்கு சில நாட்களாக மனநல பிரச்சனை இருந்த நிலையில் தனது வயிற்றில் பாம்பு இருப்பதாக குடும்பத்தாரிடம் கூறினார்.


ஒரு டாலர் லஞ்சம் பெற்ற சீனர்கள் மீது வழக்கு.
[Wednesday 2018-12-12 09:00]

சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் டிரக்குகளின் ஓட்டுனர்கள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டாலர், அதாவது இந்திய மதிப்பில் 70 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானமா? - பரபரப்பு தகவல்கள்.
[Wednesday 2018-12-12 09:00]

அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர். ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக கூறப்பட்டது. ஒருவேளை, இந்த விவகாரம் வெளியே கசிந்து விட்டால், அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அவர்களுக்கு டிரம்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.


பிரான்ஸில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: - நால்வர் உயிரிழப்பு
[Wednesday 2018-12-12 08:00]

பிரான்ஸின் ஸ்ட்ரஸ்போர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ட்ரஸ்போர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய ஆறு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


நைஜீரியாவில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 70 வயதான முதியவர்!
[Wednesday 2018-12-12 08:00]

நைஜீரியாவில் 70 வயதான முதியவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. யகுபு சஞ்சி (70) என்பவர் நைஜீரியாவின் Lapai பகுதியில் வசித்து வருகிறார். அந்த ஊரின் பெரிய மனிதராக கருதப்படும் சஞ்சி அதிகளவு திருமணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனாவை வலியுறுத்திய அமெரிக்கா!
[Wednesday 2018-12-12 08:00]

தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி கனடாவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கனேடிய பிரஜையொருவர் சீனாவில் கைது செய்யப்பட்டார்.

Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா