Untitled Document
May 9, 2024 [GMT]
ஒபெக் அமைப்பில் இருந்து விலகும் கட்டார் அதிரடி அறிவிப்பு: - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
[Monday 2018-12-03 16:00]

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் (opec)-ல் இருந்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் விலகுவதாக கத்தார் அதிரடியாக அறிவித்துள்ளது. தோகாவில் செய்தியாளர்களை சந்தித்த கத்தாரில் எரிசக்தித்துறை அமைச்சர், இயற்கை எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு 77 மில்லியன் டன்களில் இருந்து 110 டன்களாக அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிவித்தார்.


பிரான்சில் கலவரம்: 'எரிபொருள் விலை உயர்வு' - அவசர பாதுகாப்பு கூட்டம் நடத்திய மக்ரோங். Top News
[Monday 2018-12-03 10:00]

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பிரான்சில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் அவசர பாதுகாப்பு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.


புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக 14 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கிய உலக வங்கி
[Monday 2018-12-03 08:00]

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக 14 லட்சம் கோடி ரூபாயை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.கருத்தரங்கம் கூட்டம் போலாந்தின் KATOWICE என்ற நகரில் நேற்று தொடங்கி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. புவி வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திற்கக் கூடிய நிலையில், அதனை இரண்டு டிகிரி செல்ஷியசுக்கும் கீழ் குறைக்க 2015ம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அமெரிக்காவில் விமானம் கட்டிடத்தில் மோதியதால் இருவர் பலி.
[Sunday 2018-12-02 22:00]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் பலி


இந்தோனேசியாவில் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த ஓய்வு விடுதி: - 7 கல்லூரி மாணவர்கள் பலி
[Sunday 2018-12-02 17:00]

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று அந்த பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.


தற்கொலைப்படை தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி!
[Sunday 2018-12-02 17:00]

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


66 ஆவது வயதில் மொடலாகி அசத்தி வரும் பாட்டி!
[Sunday 2018-12-02 09:00]

யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் Larissa Mikhaltsova என்ற பாட்டி தனது 66ஆவது வயதில் மொடலாகி அசத்தி வருகிறார். இவர் 40 வருடங்களாக இசைக் கருவியை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகின்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர் மொடல் ஆவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.


சீனா - அமெரிக்காவுக்கு இடையிலான நல்லிணகம் உலக அமைதிக்கு வித்திடும்:
[Sunday 2018-12-02 09:00]

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நல்லிணகத்தினால் மட்டுமே உலக அமைதிக்கான நலன்களை வழங்க முடியும் என்று சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் நம்பிக்கை வெளியிட்டார். G-20 மாநாட்டின்போது நேற்று இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான விசேட பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு கூறினார்.


தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்ததாக எகிப்திய நடிகை மீது வழக்கு!
[Sunday 2018-12-02 08:00]

கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ''இச்சையைத் தூண்டும் வகையில்'' ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.


செவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான கற்கள்: - நாசா அறிவிப்பு
[Sunday 2018-12-02 08:00]

செவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான கற்களை கண்டறிந்திருப்பதாக விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள ரோவர்ஸ் ஆய்வு இயந்திரம், தங்க நிறத்திலான கற்களினை கண்டறிந்துள்ளது. இதுபற்றி கூறியுள்ள நாசா ஆராய்ச்சியளர்கள், தங்க நிறத்திலான அந்த மர்ம பொருள் எங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!...
[Saturday 2018-12-01 21:00]

வாஷிங்டன் : கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
[Saturday 2018-12-01 21:00]

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லை இன்று சந்தித்து பேசினார்.


ஆறு உலக சாதனைகளை முறியடித்த ஐந்து வயது சிறுவன்!
[Saturday 2018-12-01 16:00]

ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் 3,202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறான். செசென் குடியரசில் மழலையர் பள்ளியில் பயின்று வரும் ரகிம் குரேயெவ் என்ற 5 வயது சிறுவன், 3202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்துள்ளான்.


பிரான்சில் பிள்ளைகளை பெற்றோர் இனி அடிக்க முடியாது: - வருகிறது புதிய சட்டம்
[Saturday 2018-12-01 16:00]

பிரான்ஸ் அரசியல்வாதிகள், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதையடுத்து, பிரான்சில் இனி பிள்ளைகளை பெற்றோர் அடிக்க முடியாது. பெற்றோர் தங்கள் அதிகாரத்தை மீறிச் செல்ல இயலாததை உறுதி செய்யும் நோக்கில் பிரான்ஸ் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்துள்ளது. பெற்றோர் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும்போது உடல் ரீதியான, வார்த்தை ரீதியான மற்றும் மனோ ரீதியான வன்முறைகளின்றி தங்கள் கடமையை செய்யவேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார்!
[Saturday 2018-12-01 16:00]

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் தனது 94ஆவது வயதில் காலமானார். இதனை அவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பம் சார்பில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவில் 54 வயது நபரை திருமணம் செய்த 24 வயது இளம் பெண்: - இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
[Saturday 2018-12-01 09:00]

அமெரிக்காவில் 54 வயது நபரை திருமணம் செய்த 24 வயது இளம் பெண், தற்போது குழந்தை பெற்று அவருடன் தான் மகிழ்ச்சியாக நெருக்கமாக இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் Arkansas மாகாணத்தின் Little Rock பகுதியில் Vince(54)-Wesleigh(24) ஜோடி வாழ்ந்து வருகின்றனர். தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்த Wesleigh அவரை பணத்திற்காகத் தான் திருமணம் செய்தார் எனவும் இவர்களின் தாம்பத்ய உறவு அந்தளவிற்கு இருக்காது எனவும் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.


இந்திய பாலியல் தொழிலாளியின் கதையை கேட்டு கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்!
[Saturday 2018-12-01 09:00]

இந்திய பாலியல் தொழிலாளியின் கதையை கேட்டு, பில்கேட்ஸ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான பில்கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேஷன், எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


நியூசிலாந்து கடற்கரையில் 51 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது.
[Friday 2018-11-30 22:00]

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் (முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை) உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன.


பிரித்தானியாவில் பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்: - இறுதியில் பகீர் திருப்பம்
[Friday 2018-11-30 18:00]

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. வேல்ஸின் Swansea நகரை சேர்ந்தவர் கீலி பாவெல் (28). சாதாரண உடல் எடையுடம் இருந்த இவரின் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதோடு கீலியின் வயிறும் வீங்க தொடங்கியது. இதையடுத்து மருத்துர்களிடம் சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவி நிறுத்தம்: - அமெரிக்கா அதிரடி
[Friday 2018-11-30 18:00]

பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. ஹக்கானி குழுக்கள், தலீபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தங்கள் புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ராணுவ நிதியுதவியும் அந்த நாடு வழங்கி வருகிறது.


ஹேர்டை ஒவ்வாமை காரணமாக இரண்டு மடங்கு பெரிதாகியிருக்கும் இளம்பெண்ணின் தலை!
[Friday 2018-11-30 09:00]

ஹேர்டை ஒவ்வாமை காரணமாக தலை இரண்டு மடங்கு பெரிதாகியிருக்கும் இளம்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து இணையதளவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை சேர்ந்த 19 வயதான எஸ்டெல் என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சுறுத்தும் வகையில் உள்ள புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


உடல் எடை அதிகமாக இருந்ததால் அவமானம் தாங்காமல் அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் பரிதாபமாக பலி!
[Friday 2018-11-30 09:00]

பெல்ஜியம் நாட்டில் உடல் எடை அதிகமாக இருந்ததால், அவமானம் தாங்காமல் அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஜனா மோரேல்ஸ் என்ற 25 வயது பெண்ணுக்கு அக்டோபர் 12ம் தேதி தன்னுடைய காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.


ரஷ்யாவில் இளம் பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு: - உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞர்
[Friday 2018-11-30 09:00]

ரஷ்யாவில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர் அந்த இளம் பெண்ணை சாத்தானுக்கு பலியிட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Krasnoyarsk நகரில் குடியிருந்து வருபவர் 22 வயதான Artem Dylkov. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது தோழியான 21 வயது Ilona Yakovleva என்பவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.


"மம்மி ரிட்டர்ன்ஸ்" - சுவாரஸ்ய தகவல்....
[Thursday 2018-11-29 23:00]

எகிப்து நாட்டில் வானுயர்ந்த பிரமிடுகளும் அதனுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் உலகையே ஆச்சர்ய மூட்டுபவையாகும்.இதுபற்றி ஹாலிவுட்டில் பல பிரமாண்ட திரைப்படங்கள் வெளிவந்து வசூலில் வாரிக்குவித்தன.


9000 ஆண்டுகால பழமையான கல் முகமூடியை வெளியிட்ட இஸ்ரேல்
[Thursday 2018-11-29 20:00]

9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று.ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.


கனடாவில் கர்ப்பிணி பெண் மற்றும் மகளை கடித்து கொன்ற கரடி!
[Thursday 2018-11-29 18:00]

கனடா நாட்டில் மயோ என்ற இடத்தை சேர்ந்தவர் ரோசட். இவரது மனைவி வலேரியா (வயது 37). இவர்களுக்கு அடேல் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. வலேரியா பள்ளி ஆசிரியை ஆவார். அவர் மீண்டும் கர்ப்பம் ஆகி இருந்தார்.


மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம்: - சீன விஞ்ஞானி அறிவிப்பு
[Thursday 2018-11-29 09:00]

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்காய் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட காய்கறிகளை விளைவித்தால், அதை சாப்பிடுகிற மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறி பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் சீனாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி, கருவில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகளை உருவாக்கி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.அந்த விஞ்ஞானி, சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள சதர்ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹீ ஜியான்குய்.


சிட்னியில் கன மழை: - ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 2 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்தது
[Wednesday 2018-11-28 18:00]

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா