Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
ஐவரிகோஸ்ட் முன்னாள் அதிபரின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!
[Friday 2012-11-23 07:00]

ஐவரிகோஸ்ட் நாட்டின் முன்னாள் அதிபர் லௌரெண்ட் பாக்போவின் மனைவியார் ஸிமொன் பாக்போவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அவரது கணவர் லௌரெண்ட் பாக்போ ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஹோக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.


2 இலட்சம் டொலர் வியாபாரக் கடன் மோசடி - 4 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது கனடிய காவல்துறை வழக்கு!
[Friday 2012-11-23 07:00]

டொராண்டோவில் வியாபார கடன் மோசடியில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது கனடிய சிறப்பு காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் 2006 - 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இரண்டு நாட்களில் 14 பேரைத் தூக்கில் போட்டுக் கொன்றது ஆப்கானிஸ்தான்!
[Thursday 2012-11-22 20:00]

ஆப்கானிஸ்தானில் 2001 தலிபான் ஆட்சிக்கு பிறகு தூக்கு தண்டனை அங்கு அதிகம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் 14 பேர் வரை அங்கு தூக்கிலிடப்பட்டுள்ளனர். அவர்கள் தலிபான் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் அல்ல.கற்பழிப்பு போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான கொடிய குற்றத்திற்காக அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டதாக அரசு கூறியுள்ளது.


நூறாண்டு தூக்கத்தைக் கலைத்து புகைகக்குகிறது நியுசிலாந்து எரிமலை!
[Thursday 2012-11-22 20:00]

நியூசிலாந்தில் வடக்கு தீவுப்பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளாக அமைதியாக இருந்த 1978 மீட்டர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ எரிமலை திரும்பவும் உறுமத் தொடங்கியுள்ளது. இது கக்கி வரும் புகையானது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோல் நோக்கி எழும்பியுள்ளது.


விமானிக்குத் தலைவலி - விமானத்தை ஓட்டினார் பயணி!
[Thursday 2012-11-22 18:00]

லண்டனில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தை பைலட், மற்றும் துணை பைலட் ஆகியோர் ஓட்டி சென்றனர். நடுவானில் சென்ற போது துணை பைலட்டுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார்.


கசாப் உடலை ஒப்படைக்காவிட்டால் இந்தியர்களைக் கொல்வோம்! - தலிபான் எச்சரிக்கை
[Thursday 2012-11-22 18:00]

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் உடலை தங்கள் வசம் ஒப்படைக்காவிட்டால், இந்தியர்களை அதுபோல் பிடித்துக் கொன்று, அவர்களின் உடல்களை நாங்கள் தரமாட்டோம் என்று கூறியுள்ளது தலிபான் இயக்கம்.


பின்லேடனின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது? - ஏபி.க்கு கிடைத்த புதிய தகவல்!
[Thursday 2012-11-22 18:00]

கடந்த ஆண்டு மே 1 அன்று அமெரிக்காவின் நேவி சீல் குழுவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் அல் காயிதா தலைவர் ஒசாமா பின் லேடன் எவ்வாறு புதைக்கப்பட்டார் என்ற தகவல்களை அஸோசியேட் பிரஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் இத்தகவலை பெற்றுள்ள அந்நிறுவனம் இஸ்லாமிய அடிப்படையில் ஒசாமாவின் உடல் கழுவப்பட்டு பின் வெள்ளை துணியில் வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.


இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் போரைநிறுத்த இணக்கம்!
[Thursday 2012-11-22 13:00]

இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும், காசாவில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இணங்கியுள்ளன. இது குறித்த அறிவிப்பு ஒன்றை, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில், கெய்ரோவில், எகிப்திய வெளியுறவு அமைச்சர், மொஹமத் கமெல் அம்ர் வெளியிட்டார்.


ஏமன் இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியது - 10பேர் பலி!
[Thursday 2012-11-22 13:00]

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில், ராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், விமானி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம், தொழில் நுட்பப் பழுது காரணமாக சனா விமான நிலையம் அருகே உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது இயந்திரமும் பழுதானதால், அருகே உள்ள அல்-ஹசாபா பகுதியில் தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.


போலித் திருமண மோசடிக்கு முடிவுகட்ட புதிய சட்டம் - இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால் தான் கனடிய குடியுரிமை!
[Wednesday 2012-11-21 20:00]

போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரந்துவிடும் மோடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கனடாவிற்கு திருமணம் செய்து புதிதாய் செல்பவர்களுக்கான தேனிலவுக்காலம் இரண்டு வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.


உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை!
[Wednesday 2012-11-21 18:00]

அமெரிக்காவில் உடலுக்கு வெளியே இதயம் தெரியுமாறு பிறந்த பெண் குழந்தை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி. அவர் 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் உள்ள கருவுக்கு இதயம் வெளியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை ஆஷ்லியிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ந்தார்.


வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
[Wednesday 2012-11-21 18:00]

ஹவாய் தீவுகளில் உள்ள உலகின் மிக சக்தி வாய்ந்த விண்ணியல் தொலைநோக்கி மூலம் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சைஸ் வியாழன் கிரகத்தைப் போல 13 மடங்காகும். இந்த புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி (Kappa Adromedae b) என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. . பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு "super-Jupiter" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.


மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பான் கீ மூன் -பாலஸ்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்கவும் யோசனை!
[Wednesday 2012-11-21 18:00]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக ராஜீய முயற்சிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும், ஜெருசலேத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


அகதிகளுக்காக மற்றொரு கடல்கடந்த தடுப்புமுகாமைத் திறந்துள்ளது அவுஸ்திரேலியா!
[Wednesday 2012-11-21 18:00]

அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகள் மூலம் வரும் ஆயிரக்கணக்கானவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் வரை அவர்களை அவுஸ்திரேலிய கரைக்கு அப்பால் தடுத்து வைக்கும் நோக்கில் மேலும் ஒரு தடுப்பு முகாமை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.


மலாலாவுக்கு உலக வீரதீர விருது!
[Wednesday 2012-11-21 07:00]

தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுஃப்சாய்க்கு வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அமைதி மற்றும் நலவாழ்வுக்கான அறக்கட்டளைத் தலைவர் பிரின்ஸ் அலி கான் இவ்விருதை வழங்கினார். மலாலாவின் தைரியம் மற்றும் பெண் கல்வியை வலியுறுத்தி அவர் மேற்கொண்ட பிரசாரம் ஆகியவற்றைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


மரணதண்டனையை தடை செய்யக் கோரும் ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு !
[Wednesday 2012-11-21 07:00]

மரண தண்டனையை தடை செய்யக் கோரும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 3வது கமிட்டி கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. சமூக மற்றும் மனிதநேய விஷயங்களை கவனிக்கும் இந்த கமிட்டியின் கூட்டத்தில், மரண தண்டனையை தடை செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


கோடிக்கணக்கில் தேர்தலுக்குச் செலவிட்ட சர்கோசி மீது நாளை நீதிமன்றத்தில் விசாரணை!
[Wednesday 2012-11-21 07:00]

பிரான்ஸ் தேர்தலில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் செலவிட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார். பிரான்ஸ் அதிபராக நிக்கோலஸ் சர்கோசி பதவி வகித்த போது, ஆடம்பரமாக செலவு செய்ததாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர்.


64 நாட்கள் தொடர்ந்து தூங்கும் இளம்பெண் - இப்படியும் ஒரு வியாதி!
[Tuesday 2012-11-20 20:00]

அமெரிக்காவில் உடல் கோளாறு காரணமாக 17 வயது இளம்பெண் தொடர்ந்து 64 நாட்கள் தூங்குகிறார். இதனால் பல விழாக்களை பார்க்கவே முடிவதில்லை என்று பரிதாபமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் நிக்கோல் டெலீன் (17). இவரது தாய் விக்கி டெலீன். தனது மகளுக்கு வந்துள்ள விபரீதமான உடல் கோளாறு பற்றி விக்கி கூறியதாவது:


பாலஸ்தீன போர்ப் பதற்றத்தை தணிக்க ஹிலாரியை அனுப்புகிறார் ஒபாமா!
[Tuesday 2012-11-20 20:00]

பாலஸ்தீன எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். பாலஸ்தீன நாட்டின் காஸா பகுதிக்குள் மறைத்துக்கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்த ஹமாஸ் போராளிகளை அடக்க இஸ்ரேல் முடிவு செய்தது.


சன்சீ கப்பல் சமையற்காரருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு!
[Tuesday 2012-11-20 20:00]

சன்சீ கப்பலில் சமையல் வேலைகளைச் செய்தார், கடற்கண்காணிப்பு வேலைகளைச் செய்தார் என்ற காரணத்திற்காக அவரை கடத்தல்காரர்களுடன் கட்டாயம் இணைத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை என அந்தக் கப்பலின் சமையற்காரர் விவகாரத்தில் மத்திய நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


ஒபாமா பற்றிய கருத்தால் சொந்தக் கட்சிக்குள் ரொம்னிக்கு சிக்கல்!
[Tuesday 2012-11-20 20:00]

ஒபாமாவிற்கு எதிராகப் போட்டியிட்ட ரொம்னி சிறுபான்மையின மக்களின் வாக்குகளே ஒபாமை வெல்ல வைத்தன என்று வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.இதனால், அவர் சார்ந்த கட்சியின் செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.


62,500 டொலருக்கு ஏலம் போன சார்லி சாப்ளினின் தொப்பி,கைத்தடி!
[Tuesday 2012-11-20 12:00]

மறைந்த பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் தொப்பி மற்றும் கைத்தடி 62,500 டொலருக்கு ஏலம் போனது.முன்னணி ஏல நிறுவனமான பான்ஹாம்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை இந்த ஏலத்தை நடத்தியது. 81 சென்டி மீட்டர் நீளமுள்ள மூங்கில் கைத்தடி மற்றும் தொப்பி, புகழ்பெற்ற லிட்டில் டிராம்ப் கதாபாத்திரத்தில் சார்லி சாப்ளின் பயன்படுத்தியவை. இவை, எதிர்பார்ப்புக்கும் மேலாக 62,500 டொலர்களுக்கு ஏலம் போனதாக அந்நிறுவனம் தெரிவித்தது.


காஸா மீதான இஸ்ரேலின் ஆறு நாள் தாக்குதல்களில் 109 பாலஸ்தீனர்கள் பலி!
[Tuesday 2012-11-20 12:00]

காஸா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் நேற்று 6ஆவது நாளாகத் தொடர்ந்தது. இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 109 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அமைதியை ஏற்படுத்த எகிப்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இதுவரை பலன் ஏதும் கிடைக்கவில்லை.


ஒபாமா நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள்!
[Tuesday 2012-11-20 07:00]

இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஒபாமாவின் நிர்வாகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


கனடாவில் குட்டிவிமானம் விபத்தில் சிக்கியது - 9 பேர் பலி!
[Tuesday 2012-11-20 07:00]

கனடாவில் வடக்கு மனிற்றோபா பகுதியில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர்லைன் தொழில்புரியும் குடும்பத்தை சேர்ந்த விமானி ஒருவர் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். வடக்கு மனிற்றோபா என்ற இடத்தில் இந்த செஸ்னா விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.


ஆங் சான் சூகியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார் ஒபாமா! Top News
[Monday 2012-11-19 18:00]

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்கு செல்லும் வழியில் மியான்மர் சென்றார். மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள ஒரே அதிபரான ஒபாமாவை வரவேற்க சாலையில் இருபக்கங்களிலும் மக்கள் வரிசையாக காத்திருந்தனர். அவர்கள் அமெரிக்காவின் தேசியக் கொடியை அசைத்து ஒபாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.


14 முறை சந்தித்த சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் கம்போடியாவில் கடைசியாகச் சந்திப்பு!
[Monday 2012-11-19 13:00]

கம்போடியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், சீனத் தலைவர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசினார். இந்திய சீன இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர். இருதரப்பு உறவும் நல்ல முறையிலும் சுமுகமான சூழலிலும் இருப்பதாக பின்னர் இருவரும் தெரிவித்தனர்.


மகாத்மா காந்தியின் இருகடிதங்கள் லண்டனில் ஏலத்துக்கு வருகின்றன!
[Monday 2012-11-19 13:00]

'தேச பிதா' மகாத்மா காந்தி எழுதிய 2 கடிதங்கள் லண்டனில் உள்ள 'சோத்பை' ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலம் வரும் டிசம்பர் 12-ந்தேதி நடக்கிறது. காந்தி கடந்த 1922-ம் ஆண்டு சபர்மதி சிறையில் இருந்தார். அப்போது அவர் தேசிய கீதம் எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் துவி ஜேந்திர நாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.

Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா