Untitled Document
April 26, 2024 [GMT]
நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலி!
[Monday 2018-10-22 17:00]

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.


சவுதி கூட்டுப்படைகள் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிப்பு!
[Monday 2018-10-22 08:00]

ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.


அதிபரின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள்!
[Monday 2018-10-22 08:00]

ஹோண்டராஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவை நோக்கி படையெடுத்துள்ளனர். மெக்சிகோ, ஹோண்டராஸ், கவுண்டமாலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கும் நுழையும் நோக்கில் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக மெக்சிகோ வந்த இவர்களை பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றனர். எனினும் அங்கிருந்து தப்பித்து படகுகள் உள்ளிட்டவை மூலமாக எல்லையை கடந்து அவர்கள் அமெரிக்காவை நோக்கிச்செல்லும் நடைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.


அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறிவரும் ரஷியாவுடன் இனியும் இணைந்திருப்பதில் அர்த்தமில்லை: - டொனால்ட் டிரம்ப்
[Sunday 2018-10-21 15:00]

அணு ஆயுத பரவலை குறைக்கும் வகையில் அதிபயங்கர பேரழிவை ஏற்படுத்தும் போர் ஆயுதங்களை இனி தயாரிப்பதில்லை என ரஷியாவும் - அமெரிக்காவும் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷியாவும் அந்நாள் அதிபர் மிக்கயில் கார்பச்சேவ் - அமெரிக்க அந்நாள் அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் ஏற்றிகொண்டு கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தம் அதன் பின்னர் பதவிக்கு வந்த இருநாட்டு அதிபர்களால் அடுத்தடுத்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது.


பாரிஸில் துப்பாக்கி முனையில் ஆசிரியரை மிரட்டிய மாணவன்: - பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்
[Sunday 2018-10-21 15:00]

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் துப்பாக்கி முனையில் ஆசிரியை-ஐ மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிசின் Creteil பகுதியில் உள்ள பள்ளியில், மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஆசிரியை-ஐ மிரட்டிய வீடியோ ஒன்று வெளியானது.


அமெரிக்காவில் முடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம்: - நெகிழ்ச்சி சம்பவம்
[Sunday 2018-10-21 08:00]

அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பேடன் சம்மன்ஸ். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


கொடிய பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ள யேமன் நாடு: - அதிர்ச்சி தகவல்கள்
[Sunday 2018-10-21 08:00]

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள் உலக நாடுகளை கண்டிப்பாக தலைகுனிய வைக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.


நேருக்கு நேர் வந்த விமானங்கள்: - நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம்
[Sunday 2018-10-21 08:00]

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து டார்ஜலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் கடந்த திங்கட்கிழமை பறந்து கொண்டிருந்தது. விமானமானது 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது.


அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதித்தால் நியூசிலாந்தில் குடியேற்றம்: ஆஸ்திரேலிய பிரதமரின் புதிய திட்டம்
[Saturday 2018-10-20 19:00]

நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் வர வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.


ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: - பலர் உயிரிழப்பு
[Saturday 2018-10-20 17:00]

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


முக்காடு அணிந்து செல்ல வேண்டும்: - பாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு கட்டுப்பாடு
[Saturday 2018-10-20 17:00]

பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி போட்டியிட்டது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றால்


ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை!
[Saturday 2018-10-20 17:00]

மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு சொந்தமான அந்த வீடு யங்கூனில் இன்யா ஏரிக்கரையில் உள்ளது. 2 அடுக்கு மாடியை கொண்ட இந்த வீடு தற்போது பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.


சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்!
[Saturday 2018-10-20 08:00]

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.


மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கும்: - டிரம்ப் எச்சரிக்கை
[Friday 2018-10-19 09:00]

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.


தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த 19 வயது இளைஞர்!
[Friday 2018-10-19 09:00]

நைஜீரியாவை சேர்ந்த 19 வயது இளைஞர் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அகுலோ சாம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என பதிவிட்டுள்ளார்.


நாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை!
[Friday 2018-10-19 09:00]
அமெரிக்காவில் நாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Akita mix Bubba என்ற வகை நாயை Manzanares என்ற 51 வயது நபர் வளர்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் நாயை அடைத்து வைத்து தனது மனைவியுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை!
[Friday 2018-10-19 09:00]

அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் எச்-1பி விசாவில் பணிபுரிவோரின் துணைவர்கள் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.


பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஸுக்கர்பெர்க்கை நீக்க முன்மொழிவு!
[Thursday 2018-10-18 17:00]

அனைவராலும் அதிவேகமாகவும் விருப்பத்திற்கு உள்ளாகின்ற சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக், கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மார்க் ஸுக்கர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் ஆரம்பிக்கப்பட பேஸ்புக் நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகின்றது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கின்றது.


ஜப்பானில் பொம்மை மனிதர்கள் வாழும் தீவு!
[Thursday 2018-10-18 16:00]

ஜப்பான் நாட்டில் தீவுகள் அதிகம். அதில் ஒரு தீவுதான்


பிரெக்சிட் விவகாரம்: - அதிரடி நடவடிக்கைகளில் இறங்கும் பிரான்ஸ்
[Thursday 2018-10-18 16:00]

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற இருக்கிறது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு உலக நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கல்லூரியில் சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவன்: - 20 மாணவர்கள் பலி
[Thursday 2018-10-18 15:00]

கிரிமியா நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் மாணவன் ஒருவன் சக மாணவர்களை மூர்க்கத்தனமாக சுட்டுப் படுகொலை செய்தமை உலகையே அதிர வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த இந்த கோரச் சம்பவத்தில் 19 மாணவர்கள் குருதி சிந்திப் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை: - துருக்கியின் அரசு நாளிதழ்
[Thursday 2018-10-18 09:00]

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு ஓடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கியின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, சவுதி அரசு குறித்து விமர்சனம் செய்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.


எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்!
[Thursday 2018-10-18 09:00]

பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana da Silva என்ற 23 வயது இளம் கர்ப்பிணி பெண் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Angelina Rodrigues என்ற பெண்ணை கைது செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கிய கனடா!
[Wednesday 2018-10-17 18:00]

கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகி கனடாவில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து விற்பனை தொடங்கியுள்ளது. கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர். உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது.


இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியீடு!
[Wednesday 2018-10-17 18:00]

பிரிட்டன் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆய்வாளரும், இயற்பியல் துறை ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஹாவ்கிங் கடந்த மார்ச் மாதம் தனது 76-வது வயதில் காலமானார். பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஹாவ்கிங் அண்டைவியல் துறையில் செய்த ஆய்வுகள் பிரபஞ்சம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்தன.


கத்தை கத்தையாக பணத்தை வீசிச்சென்ற வாலிபர்!
[Wednesday 2018-10-17 16:00]

ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பரபரப்பாக இருக்கும் சாலை ஒன்றில், திடீரென விலையுயர்ந்த கார் ஒன்றில் வந்த இளைஞர் கட்டு கட்டாக பணத்தை எடுத்து நடுரோட்டில் வீசினார். அதை பார்த்த பொதுமக்கள் பணத்தை எடுக்க போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த வாலிபர் சாலையில் கிடந்த பணத்தை எடுக்க வந்தவர்களை பார்த்து, இந்த காகிதத்திற்காக மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் உழைக்கின்றான் என்று ஏழனமாக அந்த வீடியோவில் கூறியுள்ளது பதிவாகியுள்ளது.


முடங்கியது யூ-டியூப் இணையதளம்!
[Wednesday 2018-10-17 08:00]

கூகுளின் அங்கமான யூடியூப் இணையதளம் இன்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அதிகமாகிவிட்ட யுகத்தில் இப்போது இளைஞர்களை அதிகமாக ஈர்த்திருப்பது சமூகவலைதளங்கள்தான். அந்தவகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர். குறிப்பாக யூடியூபில் இப்போது எந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது, எந்த வீடியோவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடையே அதிகமாக உள்ளது.


டிரம்ப் மீது ஆபாச நடிகை தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!
[Wednesday 2018-10-17 08:00]

அமெரிக்காவை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஸ்டீபனி கிளிப்போர்டு என்ற உண்மையான பெயரைக் கொண்ட இவர்,

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா