Untitled Document
April 29, 2024 [GMT]
எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 140 பேர் படுகொலை- மனித உரிமை கண்காணிப்பகம்
[Saturday 2016-01-09 08:00]

ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும். தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா பிராந்தியத்தில் விவசாய நிலங்களை எடுப்பதற்கு எதிராக ஒரோமா இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி விட்டால், தாங்கள் இடம் பெயர வேண்டிய நிலை வந்து விடும் என விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளிய அரசு! - முறையான அனுமதி பெறவில்லையாம்
[Saturday 2016-01-09 08:00]

முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங். பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் 20-ம் நூற்றாண்டில் சீனாவில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டு போரையும் முன்னின்று நடத்தியவர் இவர்.


தென்கொரியாவின் தொலைக்காட்சிகளில் அதிக ஆர்வம் காட்டும் ஆண் சமையல்காரர்கள்!
[Saturday 2016-01-09 08:00]

தென்கொரிய தொலைக்காட்சிகளில் பிரபலமானவை சமையல் நிகழ்ச்சிகள்தான். அதுவும் ஆண் சமையல்காரர்களை கொண்ட நிகழ்ச்சிகள். அங்கு பாரம்பரியமாக பெண்களுடைய வேலை என்று கருதப்பட்ட சமையலில், இப்போது ஆண்களூம் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.


தள்ளாட்டத்துக்குப் பின்னர் மெதுவாக தலைதூக்கியுள்ள சீனப் பங்குச் சந்தை!
[Saturday 2016-01-09 08:00]

சீனாவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் இரண்டு முறை இடைநிறுத்தப்படக் காரணமான தானியங்கிப் பொறிமுறை அகற்றப்பட்ட பின்னர் நடந்த முதல் நாள் வர்த்தகத்தில், தள்ளாட்டம் இருந்தாலும் இரண்டு சதவீத அதிகரிப்புடன் பங்குச் சந்தை மூடியுள்ளது.


அமெரிக்காவில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் கைது!
[Friday 2016-01-08 18:00]

அமெரிக்காவில் சியாட்டல் நகரில் தென்கொரியாவில் இருந்து போலி விசாக்கள் மூலம் அழைத்து வந்த இளம் தென்கொரிய அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தீ லிக் என்ற வலைத்தளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பல் தென்கொரியாவை சேர்ந்த இளம் பெண்களை போலி விசா மூலம் அழைத்து வந்து அமெரிக்காவின் பல மாகணங்களில் பாலியல் தொழிலில் பயன்படுத்தினர். உளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வலை தளத்தை சைபர் கிரைம் பிரிவு ரகசியமாக கவனித்து அதன் தலைமையகமான சியாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அந்த கும்பலை சேர்ந்த 13 பேரை கைது செய்து அவர்களுடன் இருந்த 12 தென்கொரிய இளம்பெண்களையும் மீட்டனர்.


பழங்கால மர்ம நகரம் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 'குரங்குக் கடவுளின்' நகரத்தை தோண்டியெடுக்க முடிவு!
[Friday 2016-01-08 07:00]

ஹோண்டுராஸில் பழங்கால மர்ம நகரம் இருந்ததாக சந்தேகிக்கப்படும் காட்டுப்பகுதியில் ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டேஸ் தெரிவித்துள்ளார். ஸ்பானிய காலனியாதிக்க காலத்தில் குரங்குக் கடவுளின் நகரம் அல்லது வெள்ளை நகரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஏகப்பட்ட செல்வம் குவிந்திருப்பதாக நம்பப்பட்டு, பல முறை தேடுதல் வேட்டைகளும் நடந்துள்ளன. இந்த நகரத்தின் இடிபாட்டு எச்சங்கள் அவதானிக்கப்பட்டதாக பல நூற்றாண்டுகளாகவே கூறப்பட்டுவந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நகரின் தெளிவான இடிபாடுகளும் செதுக்கப்பட்ட கற்களும் கிடைத்தன.


சிரியாவிவில் பசியின் கோர தாண்டவம்! - செல்லப்பிராணிகளை அடித்து உண்ணும் நிலை!
[Friday 2016-01-08 07:00]

சிரியாவின் டெஸ்போரேட் கிராமத்தில் பசியின் கோரப்பிடியில் இருக்கும் மக்கள் பட்டியால் மரணிப்பதை தவிற்க தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் மற்றும் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் கட்டாயத்தில் உள்ளனர். இட்லிப் மாகானம் போரால் மிகவும் பாதிக்கப்பட்டு 1000 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு உணவின்றி தவித்து வருகின்றனர். மடயா கிராமத்தை சேர்ந்த ஜனாதிபதியின் ஆதரவாளார்கள் அங்குள்ள உணவாகங்களில் இலை, தழைகளை சமைத்து உண்பதற்கே முற்றுகையிட்டுள்ளனர். எந்தவித மருத்துவ வசதிகள் இல்லாமலும் மக்கள் வாடுகின்றனர். அறுவை சிகிச்சை செய்பவர்கள் மருத்துவ பொருட்களின் தட்டுப்பாட்டால் வலியை தாங்கிக் கொள்ளும் மயக்க மருந்துகள் கூட இல்லாமல் தாங்கிக்கொள்ள முடியாத வலியுடன் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.


பிரான்ஸ் பாரிசில் கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தவர் சுட்டுக் கொலை!
[Thursday 2016-01-07 22:00]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தியுடன் காவல்நிலையம் ஒன்றிற்குள் அடையாளம் தெரியாத மனிதர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார். அவர் உள்ளே நுழையும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று கோஷமிட்டபடி சென்றுள்ளார். உள்ளே நுழைந்த அந்த மனிதர் உடலில் தற்கொலை வெடிகுண்டு பெல்ட் கட்டியிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் நுழைந்த மனிதரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பாரிசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லிபியா போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி!
[Thursday 2016-01-07 19:00]

மேற்கு லிபியாவில் போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்தரப்பு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற போலீஸ் பயிற்சி மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர். இந்த தாக்குதலை அடுத்து லிபியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


பூங்காவொன்றில் பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் யுவதி!
[Thursday 2016-01-07 12:00]

சூரிய குளியலில் (சன் பாத்) ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பூங்காவொன்றில் சன் பாத்தில் ஈடுபடும் அந்த யுவதி பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு தலையை முன்புறமாக திருப்பும்போது அவரை நோக்கி பாம்பொன்று விரைந்து வருவதாகவும், அதையடுத்து, அந்த யுவதி திடுக்கிட்ட போதிலும் அவர் தனது கையால் பாம்பின் கழுத்தை பிடித்து அதனை தூக்கி எறிவதாகவும் அவ்வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.


பயணிகள் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிவைத்து வீழ்த்த முடியும்: - பரபரப்பு தகவல்
[Thursday 2016-01-07 08:00]

ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அந்த நாடுகளில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இவர்கள் தங்களது ஆயுத பலத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள். பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையை அவர்கள் பெற்று இருப்பதை காட்டும் ஒரு காட்சி வெளியாகி சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


வடகொரியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்!
[Thursday 2016-01-07 08:00]
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது. இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகம் மூடப்பட்டது!
[Thursday 2016-01-07 08:00]

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமாக வந்த சந்தேகத்துக்கிடமான பொருள்கள் காரணமாக பாதுகாப்பு கருதி அந்த அலுவலகம் மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது


பிரதமர் மோடியின் பண்பால் நான் பெரிதும் நெகிழ்ந்து போனேன்: - நவாஸ் ஷெரீப் உருக்கம்
[Thursday 2016-01-07 08:00]

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான்-இலங்கை நல்லுறவு குறித்து கொழும்பு நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி, திடீரென லாகூருக்கு வந்து தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதை பற்றி பேசினார்.


குற்றவாளிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களை பறிக்க நடவடிகை எடுக்க வேண்டும்: - ஜெப் புஷ்
[Thursday 2016-01-07 07:00]

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றினார். இந்த உரையில் அவர்


ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் !
[Wednesday 2016-01-06 19:00]

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது,


ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: - விநோத சம்பவம்
[Wednesday 2016-01-06 17:00]

தம்மாத்தூண்டு எறும்பு யானை காதுல பூந்து அம்மாம்பெரிய யானைக்கே ஆட்டம் காட்டும் தெரியுமா? என்று தமிழ் சினிமாவில் வரும் ஒரு பஞ்ச்(!!) டயலாக்கைப் போல், ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், நேற்று காலை 156 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது.


சவுதியில் உள்ள சிறைகளை தகர்க்கப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!
[Wednesday 2016-01-06 17:00]

சவுதி அரேபியாவில் 45 அல் கொய்தா தீவிரவாதிகள் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அல் கொய்தா தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அந்நாட்டில் உள்ள முக்கிய சிறைகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட இணையவழி அறிக்கையில், சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹய்ர் மற்றும் தரிஃபியா சிறைகளை அதிரடி மீது தாக்குதலால் தகர்த்தெறிவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி: - பாகிஸ்தான் ராணுவ மந்திரி
[Wednesday 2016-01-06 17:00]

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின்மீது தாக்குதல் நடத்திய ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ மந்திரி தற்போது மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக, பாகிஸ்தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு ராணுவ மந்திரி காஜா முஹம்மது ஆசிப், 'தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட இருநாடுகளின் கூட்டுமுயற்சி இன்றியமையாதது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது தொலைபேசி உரைகளின்போது வலியுறுத்தி வந்துள்ளனர்.


ரஷியா உருவாக்கும் புதுமையான ராணுவ திட்டம்: - ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்க எலிகளுக்கு நூதனமான பயிற்சி
[Wednesday 2016-01-06 13:00]

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஓழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த


வங்காளதேசத்தில் இஸ்லாமியவாத தலைவருக்கு மரண தண்டனை: - நீதிமன்றம் உறுதி
[Wednesday 2016-01-06 12:00]

வங்காளதேசத்திலுள்ள அடிப்படைவாத ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவரின் மரண தண்டனையை வங்காளதேச உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உறுதி செய்துள்ளது. பிரதம நீதியரசர் எஸ்.கே.சின்ஹா தலைமையிலான நான்கு பேர் கொண்ட அமர்வினால், ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத் தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஸாமி மீதான இந்த மரண தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் பத்திரிகை!
[Wednesday 2016-01-06 08:00]

சர்வதேச அளவில், 30 வயதுக்குள் சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் நுகர்வோர், கல்வி, ஊடகம், உற்பத்தி, தொழில், சட்டம் மற்றும் கொள்கை, சமூக நிறுவனர்கள், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.


ஆப்கானிஸ்தான் மோதலில் சிறப்பு படையை சேர்ந்த அமெரிக்க வீரர் பலி!
[Wednesday 2016-01-06 08:00]

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்டு மாகாணத்தில், ஆப்கான் சிறப்பு படையுடன் இணைந்து போரிட்டு வந்த அமெரிக்க படைவீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இரு அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக பென்டகன் பேச்சாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார். ஆப்கானில் எதிரிகளுக்கு எதிராக ஆப்கான் சிறப்பு படையுடன் இணைந்து அமெரிக்க துருப்புக்களும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. இவ்வாறாக தொடர்ந்து வரும் மோதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்ததுடன், அமெரிக்க மற்றும் ஆப்கான் படையினரும் காயமடைந்துள்ளனர்.


சவூதி மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தணிக்க போராடும் அமெரிக்கா!
[Wednesday 2016-01-06 07:00]

சவூதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தணிக்கும் வகையில் இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கலந்துரையாடியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் சவூதி துணை இளவரசர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டார்.


ஈராக்கின் ஹடிதா நகரில் ஐ.எஸ். தாக்குதல்: 25 ஈராக் போராளிகள் பலி!
[Wednesday 2016-01-06 07:00]

ஈராக்கின் மூலோபாய ஹடிதா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுத்துவரும் தாக்குதல்களில் சுமார் 25 ஈராக் போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 72 மணித்தியாலங்களில் தாம் 25 உயிர்களை தியாகம் செய்திருப்பதாக பழங்குடி தளபதியான ஷேக் அப்தல்லா அதல்லா குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த வட கொரியா!
[Wednesday 2016-01-06 07:00]

வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.


துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கடலில் மூழ்கி 21 பேர் பலி!
[Tuesday 2016-01-05 17:00]

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.


பிராந்திய பதற்றம்: - இரானுக்கான தனது தூதுவரை மீள அழைத்த குவைத்
[Tuesday 2016-01-05 17:00]

சவுதி அரேபியாவில் ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்த பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், இரானுக்கான தனது தூதுவரை குவைத் மீள அழைத்துள்ளது. சவுதி அரேபியா ஷியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கும் மேலும் 46 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து, கடந்த சனிக்கிழமை இரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு, அதற்கு தீயும் வைக்கப்பட்டது. பதிலடியாக இரானுடனான இராஜ்ஜிய உறவுகளை சவுதி அரேபியா துண்டித்துக்கொள்ள, பஹ்ரைன் மற்றும் சுடானும் அதனை பின்பற்றின. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு அமெரிக்கா, ஐநா, மற்றும் துருக்கி ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா