Untitled Document
April 16, 2025 [GMT]
 
ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்காக நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ரூ.5 கோடி சேகரித்த அழகி!
[Tuesday 2020-01-07 18:00]

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர் அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது. ரூ.5 கோடி ஆகும். இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.


அமெரிக்காவில் ருசிகரம்: 1 வருட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்!
[Monday 2020-01-06 17:00]

பொதுவாக இரட்டை குழந்தைகள் சில நிமிட இடைவெளியில் பிறப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வருட இடைவெளியில், Dawn Gilliam என்ற பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததுள்ளார். என்ன ஒரு வருடமா என திகைப்பு வேண்டாம்.. ஆம்.. சமீபத்தில் பிறந்த புத்தாண்டு காரணமாக இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. st.vincent carmel என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் Dawn Gilliam. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறி இருந்ததால், உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


276 கிலோ எடையுள்ள மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த உணவக அதிபர்!
[Monday 2020-01-06 17:00]

ஜப்பானை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் 276 கிலோ எடை கொண்ட புளூபின் ட்யூனா மீனை சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். சுஷி சன்மாய் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வரும் கியோஷி கிமுரா என்பவர் தான், இவ்வளவு விலை கொடுத்து மீனை ஏலம் எடுத்தவர். அட்லாண்டிக் புளூபின் வகையை சேர்ந்த இந்த மீன் அதிகபட்சமாக 680 கிலோ எடை மற்றும் 10 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டதாகும்.


ஒரு குலை ஒரே காய் - அதிசய வாழை!
[Sunday 2020-01-05 17:00]

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மஜ்மாநகர் வீட்டுத்தோட்டமொன்றில் வாழை மரம் ஒரே ஒரு காயுடன் குலை ஒன்றை ஈன்றுள்ளது, இரு வாரங்களுக்கு முன்னர் வாழையில் இருந்து சிறிய வாழைப்பூ ஒன்று வெளிப்பட்டிருந்தது.தற்போது அதில் பெரிய வடிவிலான ஒரே ஒரே வாழைக்காய் மாத்திரம் காய்த்துளளது. கோழிக்கோடு வாழை இனத்தைச் சேர்ந்த இந்த அதிசய வாழைமரத்தைப் பார்வையிட பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.


இந்தோனேசியாவில் மலர்ந்த உலகின் மிகப் பெரிய மலர் - விஞ்ஞானிகள் ஆய்வு!
[Sunday 2020-01-05 08:00]

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் ரப்லேசியா அர்னால்டி என்ற தாவரவியல் பெயர் கொண்ட அந்த காட்டுப்பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு ராட்சத தோற்றத்தில் உள்ள அந்த பூவே, இதுவரை பூத்த மலர்களில் மிகப்பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வகை மலர்கள் ஒட்டுண்ணி தாவர வகையைச் சேர்ந்தவை.


முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்!
[Friday 2019-03-29 08:00]

வங்காளதேசத்தில் வசித்து வருபவர்கள் சுமன் பிஸ்வாஸ், ஆரிபா சுல்தானா (வயது 20) தம்பதியர். கர்ப்பிணியாக இருந்த ஆரிபா சுல்தானாவுக்கு குல் னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாத இறுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பிறந்தது. இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி ஆரிபா சுல்தானாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை ஜெசோர் ஆத்-தீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஷீலா பொத்தார் பரிசோதித்தார். ஸ்கேன் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் ஆரிபா சுல்தானாவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளபோதும், அவருக்கு மற்றொரு கர்ப்பப்பை இருப்பதுவும், அந்த கர்ப்பப்பையில் இரட்டைக்குழந்தை இருப்பதுவும் தெரியவந்தது. இதைக் கண்டு டாக்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் ஷீலா பொத்தார் முடிவு செய்தார். அதன்படி ஆரிபா சுல்தானாவுக்கு அவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தார். அதில் அந்தப் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை ஆண், மற்றொரு குழந்தை பெண். முதல் குழந்தையை பெற்றெடுத்த 26 நாளில் ஆரிபா சுல்தானா இந்த இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.


ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம்போன எலுமிச்சம் பழம்!
[Monday 2019-03-25 16:00]

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்னவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின்போது பூஜை செய்த எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வந்தது. விழாவின் முதல் 9 நாட்கள், முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது தினசரி ஒன்று வீதம் மொத்தம் 9 எலுமிச்சம் பழங்களை குத்தி வைப்பார்கள். பின்னர் அந்த பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து பூஜை செய்வார்கள். இந்த பழச்சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதன்படி 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. விழாவின் 11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12.45 மணி வரை இடும்பன் பூஜை நடைபெற்றது. அப்போது இடும்பன் சாமிக்கு கருவாடுசோறு படையல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது.


வானில் உருவான பிரம்மாண்ட துளை!
[Wednesday 2019-03-20 17:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அல் ஐன் ((Al ain)) நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர்.


பந்தய புறாவை 9.7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சீனர்கள்!
[Tuesday 2019-03-19 17:00]

புறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு புறா வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் ஈரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி) விற்கப்பட்டிருக்கிறது. புறாவை ஏலத்தில் விடும் தளமான பிபா 'அர்மாண்டோ' எனும் புறாவை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறா எனக்கூறப்படும் அர்மாண்டோவை ''புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்'' என அழைக்கிறார்கள். லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தைய வீரர். ஐந்து முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இந்த புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது. அர்மாண்டோவுக்கு வயது ஐந்துதான். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த புறா ஏற்கனவே சில குஞ்சுகளுக்கு 'அப்பா' ஆகிவிட்டது.


அமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளைப்பெற்ற பெண்!
[Monday 2019-03-18 18:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த பெண் தெல்மா சயாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன. இந்த குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர்.


லெஸ்பியனாக பேசி சென்னை பெண் டாக்டரை மடக்கிய திருநாவுக்கரசு:
[Wednesday 2019-03-13 18:00]

திருநாவுக்கரசு என்ற காமவெறியன், சென்னையை சேர்ந்த ஒரு டாக்டரையும் இப்படியே பேசியே ஏமாற்றி இருக்கும் பகீர் விஷயம் தெரியவந்துள்ளது! நாளுக்கு நாள் புது புது தகவல்கள் கைதான திருநாவுக்கரசு குழு பற்றி வந்து கொண்டே இருக்கிறது. இப்போதுகூட பெண் டாக்டர் ஒருவர் அவனது வலையில் விழுந்து சீரழிந்ததாக செய்திகள் வருகின்றன.


தன்னை வளர்த்த வாலிபரை கடித்துக்கொன்ற சிங்கம்!
[Thursday 2019-03-07 05:00]

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில், ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் பிராசெக் (வயது 33). இவர், தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார். இனப்பெருக்கம் செய்ய வைக்கும் நோக்கில், சிங்கங்களை வளர்த்து வந்த அவர் அதற்கான முறையான உரிமங்கள் எதையும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதற்காக அந்த கிராம நிர்வாகம் அவருக்கு ஏற்கனவே அபராதம் விதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கேல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற நபரை சிங்கம் தாக்கியது. இது அங்கு பெரும் பிரச்சினையானது.


மலைக் குகையில் 32 மாணவிகள் பலாத்காரம்: 20 வயது கும்பல் அட்டூழியம்!
[Tuesday 2019-03-05 18:00]

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாதளமான பவுத்தராமம் குகைக்கோவிலுக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவிகள் 32 பேர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதுள்ள 4 இளைஞர்கள் சேர்ந்து செய்த கொடூர சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ஆள் அரவம் இன்றி.... வவ்வால்களின் இருப்பிடமாக காட்சி அளிக்கும் குகைகள், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பவுத்தராமம் என்ற குகைக்கோவிலின் ஒரு பகுதியாகும்..!


சீனாவில் உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!
[Monday 2019-03-04 17:00]

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி சேனல், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த ரோபோ மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது. இதற்கு


மூன்று முறை தூக்கு மேடை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை!
[Sunday 2019-03-03 18:00]

மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் முன்னரே, தன் பட்டியலில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் தூக்கில் போடுவதற்குள், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் களைப்படைந்து விட்டார். அதனால் அவர் உயிர் பிழைத்தார். ஒட்டுமொத்தமாக மக்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அந்த நாடு நிறுத்திக் கொள்ளும் வரை அவர் தப்பினார். அருகில் வசிக்கும் பொறாமை எண்ணம் கொண்டவர்களால் கொலைக் குற்றச்சாட்டில் தாம் கைது செய்யப்பட்டதாக பைசன் காவ்லா கூறுகிறார். அது 1992ஆம் ஆண்டு. அப்போதெல்லாம் கொலைக் குற்றத்துக்கு நிச்சயமாக மரண தண்டனைதான் விதிக்கப்படும். தெற்கு மலாவியில், ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த பைசன், தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் காஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து, கைநிறைய சம்பாதித்தார். ஊர் திரும்பி ஒரு நிலத்தை வாங்கினார். ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, பழங்கள், கோதுமை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்தார். ''அப்போதுதான் எனக்கு கெட்ட காலம் தொடங்கியது,'' என்றார் காவ்லா. அவருடைய வேலையாள்களில் ஒருவரை, அருகில் வசித்தவர்கள் தாக்கியுள்ளனர். அதில் தொழிலாளி மிக மோசமாகக் காயம் அடைந்தார் என்று பைசன் தெரிவித்தார். உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரை கழிவறைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த பைசன், கன மழையால் வழுக்கலாக இருந்த படிகளில் சென்றபோது, கீழே விழுந்து வேலையாளை விட்டுவிட்டார். பிறகு மருத்துவமனையில் அந்தத் தொழிலாளி இறந்துவிட்டார். அப்போது 40 வயதுகளில் இருந்த பைசன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவானது.


விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த 'விமானி'.
[Saturday 2019-03-02 17:00]

தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த 'விமானி' பதவி விலகியுள்ளார். வில்லியம் சாண்ட்லர் எனும் அந்த நபர் செய்த முறைகேட்டை அவரது ஆவணங்கள் சரிபார்ப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.


6 மாதத்தில் வெறும் '268 கிராம்' எடையில் பிறந்த குழந்தை!
[Friday 2019-03-01 09:00]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவ பரிசோதனைக்காக வந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் உள்ள கருக்குழந்தை போதிய வளர்ச்சியடையாமல் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் மட்டுமே இருந்தது. அதாவது இருஉள்ளங்கைகளுக்குள் அடங்கும் வகையில் பெரிய வெங்காயத்தின் அளவில் அந்த குழந்தை இருந்தது.


2 சதவீத மூளையுடன் பிறந்து நலமுடன் வாழும் சிறுவன். Top News
[Tuesday 2019-02-26 08:00]

இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள்


இந்தோனேசியாவில் உலகின் மிகப்பெரிய தேனீ கண்டுபிடிப்பு!
[Saturday 2019-02-23 08:00]

உலகின் மிகப் பெரிய தேனீ, 38 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறது. வட அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடக்கு மொலுக்காஸ் தீவில் இதனை கண்டறிந்துள்ளனர். வாலஸ் ஜெயண்ட் ((Wallace


பிரிட்டனுக்கு திரும்புவாரா ஐஎஸ் பெண்?
[Friday 2019-02-22 18:00]

பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம் பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர்,


அரிய வகை ராட்சத ஆமை கண்டுபிடிப்பு!
[Friday 2019-02-22 17:00]

ஈக்வேடர் நாட்டின் காலபோகோஸ் தீவுப் பகுதியில் ஒரு அரிய வகை ராட்சத ஆமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆமைக்கு வயது 100க்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தப் பெண் ஆமையை இனப்பெருக்கத்திற்காக அழைத்துச் சென்றனர். சுமார் 225 கிலோ எடை கொண்ட இந்த வகை ஆமைகள் நூறு ஆண்டுகளை தாண்டியும் உயிர்வாழக்கூடியவை.


ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்ற பெண்!
[Wednesday 2019-02-20 08:00]

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கணவனின் குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பிரித்தானிய பெண்!
[Tuesday 2019-02-19 07:00]

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு. பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot தனது கணவரான Derek Loudfootஇன் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். Derek Loudfoot ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.


அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம்!
[Friday 2019-02-15 17:00]

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:- இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.


"என் அனுமதியின்றி என்னை எப்படி பெற்றெடுக்கலாம்" - பெற்றோர் மீது வழக்கு போட்ட மகன்!
[Saturday 2019-02-09 08:00]

தன் அனுமதி இல்லாமல் தன்னை பெற்றதினால், பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார் மும்பையை சேர்ந்த 27 வயதான ரஃபேல் சாமுவேல். பெற்றோர் பிள்ளைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதால், வாழ்க்கை முழுவதும் தாங்கள்தான் கஷ்டப்பட வேண்டியுள்ளதாக பிபிசியிடம் பேசிய ரஃபேல் தெரிவித்தார். இதற்கெல்லாம் அனுமதி பெற முடியாது என்று அவருக்கு புரிந்திருந்தாலும், "பிறக்க வேண்டும் என்பது நம் முடிவல்ல" என்று கூறுகிறார். இந்த உலகில் நாம் பிறக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படவில்லை என்பதால், நாம் வாழ நமக்கு வாழ்க்கை முழுவதும் பணம் அளிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். இது போல கூறுவது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கலாம். ஆனால் தன் பெற்றோர் (இருவருமே வழக்கறிஞர்கள்) இதனை கேலியாக எடுத்துக் கொள்வதாக அவர் கூறுகிறார். இதற்கு ரஃபேலின் தாயும் கருத்து தெரிவித்துள்ளார். "நாங்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிந்தும், எங்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று நினைக்கும் என் மகனின் துணிச்சலை ரசிக்க வேண்டும். அவன் பிறப்பதற்கு முன்னால் எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பதற்கான முறையையும் பகுத்தறிவுடன் அவனே சொன்னால், இது என் தவறு என்று ஒப்புக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். பிறப்பு கோட்பாடுகளுக்கு எதிராக மனநிலை கொண்டிருக்கும் சாமுவேல், வாழ்க்கை முழுவதும் துன்பம் நிறைந்திருப்பதாக கூறுகிறார்.


உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை!
[Friday 2019-02-08 17:00]

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி ஃபிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு வனெலோப் ஹோப் வில்கின்ஸ் என பெயரிட்டனர். இக்குழந்தை பிறக்கும்போதே நெஞ்செலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் காணப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


"32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோஸ்" - அமெரிக்க சிறுமி சாதனை!
[Sunday 2019-02-03 17:00]

அமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து சாதனைப்படைத்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேசிய அளவில் நடைபெற்ற முட்டைகோஸ் வளர்க்கும் போட்டியொன்றில், கலந்துக் கொண்ட லில்லி ரைஸ் என்ற குறித்த சிறுமியே, இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார். குறித்தப் போட்டியில் மொத்தம் 32,000 சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் முதலிடம் பிடித்த லில்லி ரைஸிற்கு, 1000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசும் கிடைத்தது.


முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே ! Top News
[Tuesday 2019-01-29 01:00]

முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.


தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை வென்ற கடத்தப்பட்டு தப்பித்த சிறுமி!
[Friday 2019-01-25 09:00]

தனது பெற்றோரை கொன்று, தன்னையும் கடத்தி சென்ற நபரிடம் இருந்து தப்பித்த 13 வயது சிறுமியான ஜெய்ம் கிளாஸ் , அவரை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியான 25,000 அமெரிக்க டாலர்களை பெறுகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் பணியாற்றிய ஹார்மல் ஃபுட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் கடத்தி செல்லப்பட்ட சிறுமி கிளாஸை மீட்க உதவிகரமாக யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு மேற்கூறிய பரிசுத்தொகை அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.


தேசிய பூங்காவில் விசித்திரம் - பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி!
[Monday 2019-01-21 17:00]

மிருகங்கள் தனது இனத்தை அடித்து கொன்று சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் புலிகள் இனத்தில் அத்தகைய நடைமுறை இல்லை. ஆனால் அபூர்வமாக புலி தனது இனத்தை சேர்ந்த மற்றொரு புலியை அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் முந்திதாதர் என்ற இடத்தில் காங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி யானைகள் உள்ளிட்ட பல வகையான மிருகங்கள் உள்ளன. இந்த நிலையில் அங்கு இன உற்பத்திக்காக ஒரு பெண் புலியை ஆண் புலியுடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் புலியை அந்த ஆண் புலி அடித்துக் கொன்றது. மேலும் அதன் இறைச்சியை சாப்பிட்டது. பூங்கா ஊழியர்கள் பார்த்தபோது பெண் புலியின் மண்டை ஓடும், அதன் கால்களின் பாதங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது. இந்த தகவலை தேசிய பூங்காவின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா