Untitled Document
April 16, 2025 [GMT]
 
"இரு பால் உறுப்புகளுடன் பிறந்த சிறுவன்"!
[Saturday 2019-01-19 21:00]

14 வயது ஜான் பிறந்தபோது அவரது தாய்க்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. குழந்தைக்கு என்ன பிரச்சனை என மருத்துவரிடம் அவர் வினவியுள்ளார். ஆனால், குழந்தை ஆணா அல்லது பெண்ணா எனத் தெரியவில்லை. ஆகவே பரிசோதனைகள் செய்வது அவசியம் என மருத்துவர் தெரிவித்தார். ஆணுறுப்பு மற்றும் யோனி ஆகிய இரு பாலுக்குமான உறுப்புகளுடனும் பிறந்தார் ஜான்.


ஸ்பெயினில் நண்பன் போல் தோற்றமளிக்கும் சாத்தான் சிலையால் சர்ச்சை!
[Wednesday 2019-01-16 17:00]

ஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. நகரத்தின் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் ஏமாற்றி புகுந்துவிட்டதாக கூறும் உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த வெண்கல சிலை உருவாக்கப்பட்டது.


இந்த வேலைக்கு இவ்ளோ சம்பளமா!...
[Tuesday 2019-01-15 18:00]

அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இருவரும் வேறு பணி தேடிச் செல்வதால் புதிய பாதுகாப்பு அதிகாரிகளை நிர்வாகம் தேடி வருகிறது.


சீனாவில் வினோத கடை - "கோபம் வந்தால் உடையுங்கள்"
[Monday 2019-01-14 21:00]

கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த பொருட்களை உடைக்கும் கடை ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு


தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிகளுக்கு ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்!
[Saturday 2019-01-12 22:00]

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.


ஏலியன்களால் கோடீஸ்வரரான மனிதர்!
[Thursday 2019-01-10 09:00]

ஏலியன்கள் குறித்து, அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று கேட்டால் நாம் தெரியலையே என்று தான் சொல்ல வேண்டும். வேற்றுகிரவாசிகளால் ஏதாவது பூமிக்கு தீங்கு ஏற்படலாம் என்று ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் சொல்லி வந்தார். இந்நிலையில், அது ஒரு விஷயத்தில் உண்மையாகவும் இருக்கலாம் என்று தற்போது நிருபணம் ஆகியுள்ளது. உங்களால் நம்ப முடியாமலும் போகலாம். தனது வீட்டை ஏலியன்கள் தொடர்ந்து தாக்கியதாக கூறி அதிர விட்டுள்ளார் அந்த மனிதர். தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விழுந்த விண்கற்களால் அவருக்கு கோடிகளில் பணம் கொட்டியுள்ளது.


டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான் - அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்.
[Monday 2019-01-07 20:00]

இந்திய அறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தின் புவியியல் துறை துணைப் பேராசிரியர் அஷு கோஸ்லா உலகை படைத்த கடவுள் பிரம்மனுக்கு டைனோசர் பற்றி தெரியும் என்றும் மற்றவர்கள் யாரும் சொல்வதற்கு முன்னரே வேதத்திலேயே டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் டைனோசர்கள் இருந்துள்ளன. ராஜசுரஸ் எனும் டைனோசர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். நமது வேதத்தில் இருந்து தான் அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரர்களும் டைனோசர் எனும் விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். 6.5 கோடி வருடத்துக்கு முன்னரே டைனோசர்கள் இருந்திருந்தாலும், கடவுள் பிரம்மனுக்கு உள்ள அளவற்ற ஆன்மீக சக்தி மூலம் டைனோசர்கள் பற்றி அறிந்திருந்தார்.


[Monday 2019-01-07 09:00]

பள்ளிக்கு செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால் அந்த மனிதரால் ஆறு மொழிகளை சரளமாகப் பேச முடியும், வெப் டெவலப் செய்ய முடியும். இயற்கைக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத வீடுகளைக் கட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பத் தயக்கமாக இருந்தால் நீங்கள் கெளதம் சாரங்கை சந்திக்க வேண்டும். கெளதமின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அட்டப்பாடியில் அரசு பள்ளியில் பணியாற்றி கொண்டிருந்தபோது, பாடப் புத்தக்கத்தில் உள்ள கல்விக்கும், நிஜ வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதை உணர்கிறார்கள். மேலும், இந்தக் கல்விமுறையானது நுகர்வை மட்டும் கற்பிப்பதை பார்க்கிறார்கள்.


"தேனீருடன் பாம்பு" - எங்கு தெரியுமா?
[Sunday 2019-01-06 21:00]

ஜப்பானில் சில ஆண்டுகளாக விலங்குகளை மையமாக கொண்டு இயங்கும் சில உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது டோக்கியோவில் snake caf


பல் துலக்கும் போது பிரஷ்சை விழுங்கிய நபர்.
[Friday 2019-01-04 09:00]

டெல்லியின் சீமாபுரியை சேர்ந்தவர் அவிட் (வயது 36). இவர் பல் துலக்கும் போது பிரஷ் மூலம் தொண்டையையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பிரஷ்சை விழுங்கி விட்டார். இதனால் வயிற்று வலியால் துடித்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கிட்னியை விற்று 'ஐ போன்' வாங்கிய நபர் - உயிரை காப்பாற்ற போராட்டம்.
[Thursday 2019-01-03 22:00]

சீனாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதை வாங்க வழியில்லாமல் சோகத்தில் இருந்து வந்தார். ஐபோன் மீது கொண்ட மோகத்தாலும், நண்பர்களின் பேச்சைக்கேட்டும் 2011 ஆம் ஆண்டு தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். தனது ஒரு சிறுநீரகத்தை 3,200 அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கிடைத்த பணத்தில் தனது கனவு பொருளான புதிய ஐபோனையும் வாங்கினார்.


சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 7 வருட கடூழியம்"- யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று தீர்ப்பு
[Monday 2018-01-08 07:00]

சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமி குற்றவாளியின் மகள் ஆவார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி 14 வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையான இரத்தனசிங்கம் சிவகரனைக் கைது செய்தனர்.


உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை!
[Sunday 2018-01-07 18:00]

உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


ஒரே தாயின் வயிற்றில் வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரண்டைக் குழந்தைகள்!
[Saturday 2018-01-06 00:00]

பொதுவாக இரட்டைக்குழந்தைகள் ஒரே மணி நேரத்தில் பிறப்பது வழமை ஆனால் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ளன. இந்த அபூர்வ சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் இடம்பெற்றது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள்பிறந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்மணிக்குமருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.


அமெரிக்காவில் வார்த்தைகளை பயின்ற கொரில்லா குரங்கு!
[Friday 2018-01-05 08:00]

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் கட ந்த 1971ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்கிற்கு பிரசவம் நட ந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உளவியல் படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவிக்கு அந்த ஆண்டு க்கான செயல்திட்ட தலைப்பானது "மனித மிருக உரையாடல்" என அமைய ப்பெற்றிருந்தது.


சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு வரை கார் விற்பனை தடை!
[Wednesday 2018-01-03 18:00]

சாலையில் அதிகமான இயங்கும் கார்களின் எண்ணிக்கையை 0.25 சதவிகித நிலையில் இருந்து, பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிங்கப்பூர் அரசு. அதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி 2018 முதல் 2020 வரை கார் விற்பனையை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. உலகின் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பிரதேசங்களில் ஒன்றான சிங்கப்பூரில் ஏற்கெனவே அதிக அளவில் வாகன நெரிசல் இருப்பதாகவும், மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம், சாலைப்போக்குவரத்திற்கு உபயோகித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, புதிய சாலை வசதிகள் செய்வதற்கான நோக்கம் இல்லாத காரணத்தினாலேயே 2020 வரை புதிய கார் விற்பனையை நிறுத்தப்போவதாக விளக்கமளித்துள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா