Untitled Document
April 29, 2024 [GMT]
பயங்கரவாத அமைப்புகளுக்கு முகநூலில் ஆதரவு தெரிவித்த கேரள வாலிபர் கைது!
[Tuesday 2019-05-14 14:00]

கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததை மத்திய உளவு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணிகளும் நடந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட ரியாஸ் அபுபக்கர் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரியாஸ் அபுபக்கருக்கு துணைபுரிந்த நபர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. இதற்காக கேரளாவில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டன. இதில் கேரளாவின் மஞ்சேரியை அடுத்த ஆனக்காயம் பகுதியில் இருந்து ஒருவர் ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.


இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
[Tuesday 2019-05-14 14:00]

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


1987-88ல் டிஜிடல் படம் எடுத்து இமெயில் அனுப்பினாரா நரேந்திர மோதி! - கேலி செய்யும் சமூக ஊடகம்.
[Tuesday 2019-05-14 08:00]

"1987-88ல் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தி அத்வானியை புகைப்படம் எடுத்தேன். அப்போது ஒரு சிலரிடம் மட்டுமே இ-மெயில் வசதி இருந்தது. நான் எடுத்த புகைப்படத்தை இ-மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே அப்புகைப்படம் வெளியானதை பார்த்து வியந்துவிட்டார் அத்வானி" என்று இந்தி மொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மோதியின் இந்த கூற்று அடங்கிய 40 வினாடி நீளமுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 80களிலேயே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்ததாக பிரதமர் மோதி அதில் கூறியுள்ளார்.


ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் துணை ஆணையர்கள் ஆலோசனை!
[Tuesday 2019-05-14 08:00]

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவும் 19-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரங்களில் இருக்கும் எண்ணிக்கையையும், வி.வி.பி.ஏ.டி. என்ற ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் உள்ள சீட்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். அனைத்து வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ணிக்கைக்கு உட்படுத்தாமல், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. என்ற விகிதத்தில் ஓட்டு எண்ணிக்கை சரிபார்ப்பு நடைபெறும். முதன்முறையாக தமிழகத்தில் இந்த வகையில் ஓட்டு எண்ணிக்கையில் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.


பிரதமர் மோடி மீது டெல்லி போலீசில் புகார்!
[Tuesday 2019-05-14 08:00]

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அதாவது, ‘ஊழல் நம்பர் ஒன்று’ என்ற நிலையில்தான் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை முடிந்தது என கூறினார். போபர்ஸ் ஊழல் வழக்கை முன்வைத்து பேசிய அவரது இந்த கருத்து காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தற்போது பிரதமர் மோடி மீது அஜய் அகர்வால் என்ற வக்கீல் டெல்லி சாணக்கியபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
[Tuesday 2019-05-14 08:00]

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நபரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு என இரண்டு வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் முதல் தகவலறிக்கையை பதிவு செய்த சிபிஐ கடந்த ஒரு வாரமாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் சதீஷ் ஆகிய 4 நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.


தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற பெற்றோர்!
[Monday 2019-05-13 17:00]

மகாராஷ்டிராவின் கோல்ஹாபூரில் வசித்து வரும் தம்பதி அருண் சக்காராம் வால்வேக்கர் (வயது 55), ரேகா (வயது 40). இவர்களின் மகன் அனிகேத் என்ற அபிஜீத் அருண் வால்வேக்கர் (வயது 24). பெற்றோரிடம் அருண் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கிணறு ஒன்றில் இருந்து கடந்த 7ந்தேதி அவரது பிணம் மீட்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.


கணவர் அதிக பாசம் காட்டியதால் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற முதல் மனைவி!
[Monday 2019-05-13 17:00]

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வங்காள தேசத்தை சேர்ந்த சுராகாத்தூண் (வயது 28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ரேஷ்மி (7) என்ற மகளும், முகமது ஷஜின் (3) என்ற மகனும் உள்ளனர். சுராகாத்தூணின் உறவுப்பெண் ஜெரினா பேகம்(25). வங்காள தேசத்தை சேர்ந்த இவருக்கு, சென்னையில் மாப்பிள்ளை பார்ப்பதற்காக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் அவருக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதற்கிடையில் சுராகாத்தூண், “எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. எனவே எனது கணவரை நீ, 2-வது திருமணம் செய்துகொள்” என ஜெரினாபேகத்திடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.


ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விதவை பெண் - கற்பழித்து கொடுமைப்படுத்திய கும்பல்!
[Monday 2019-05-13 16:00]

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரின் மறைவுக்கு பின் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றனர். விதவை பெண்ணை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கியவர் தனது நண்பர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்தார். வீட்டு வேலைக்கு சென்ற விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. பல முறை அவர் கற்பழிக்கப்பட்டு கடுமையான சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார்.


இந்தியாவிலும் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு!
[Monday 2019-05-13 16:00]

2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.


எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் - மோடி!
[Monday 2019-05-13 07:00]

பாராளுமன்றத்துக்கு 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: செயல்திறன் மிக்க, நேர்மையான அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும். இந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த மொத்த நாட்களை விட நான் அதிக நாட்கள் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளேன். ஆனால், என் மீது ஊழல் கறை படிந்தது கிடையாது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக மாயாவதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?


கடத்தும் முயற்சியில் சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு!
[Monday 2019-05-13 07:00]

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகள் கவியரசி (வயது 20), கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவரும், அவருடைய தோழிகளும் மீண்டும் கோவை செல்வதற்காக கடந்த 6-ந் தேதி இரவு 9.45 மணி அளவில் கேசவன்பாளையத்தில் இருந்து தரங்கம்பாடி பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரில் இருந்தவர்கள், காரை நிறுத்தாமலே அதன் கதவை திடீரென திறந்து கவியரசியை பிடித்து காருக்குள் இழுத்து கடத்தி செல்ல முயன்றனர். அவர்களுடைய பிடியில் இருந்து கவியரசி தப்பிக்க முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் இழுத்து சென்றது.


பானி புயல் தாக்கத்துக்கு ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
[Monday 2019-05-13 07:00]

வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.


டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் - அதிகாரிகள் விளக்கம்!
[Monday 2019-05-13 07:00]

டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டனர். அதன்படி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 9-ந்தேதி அந்த நாட்டை சேர்ந்த நொம்சா லுடாலோ (வயது 31) என்ற பெண் வந்துள்ளார்.


குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கு!
[Sunday 2019-05-12 17:00]

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய, சேலத்தை சேர்ந்த உதவி செவிலியர் சாந்தியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.


மஹாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சாத்தால் அவதிப்படும் கிராமங்கள்!
[Sunday 2019-05-12 16:00]

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள பல கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஷஹாபூர் மற்றும் நகவோன் கிராம மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் மும்பைக்கு அனுப்பப்படுவதாகவும், குடிக்க கூட நீர் இல்லாமல் அசுத்தமான தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஷஹாபூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளானர்.


5 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகளின் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி!
[Sunday 2019-05-12 16:00]

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ஆகியோர் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மந்திரிகளும் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.


மம்தாவை வேடிக்கையாக சித்தரிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பெண் கைது!
[Sunday 2019-05-12 16:00]

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து காவலில் அடைத்து வைத்துள்ளனர்.


தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
[Sunday 2019-05-12 08:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்திய வனச்சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தம் குறித்து பேசினார். அப்போது அவர், ஆதிவாசிகளின் நிலம், காடு, தண்ணீர் பறிக்கப்படும் எனவும், ஆதிவாசிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவும் இந்த சட்டம் வழிவகுக்கும் எனவும் கூறியதாக தெரிகிறது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி ராகுல் காந்திக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் நேற்று முன்தினம் பதிலளித்து உள்ளார். அதில் அவர், வனச்சட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்தம் குறித்து சுருக்கமாக, எளிய மொழியில் மக்களுக்கு உரைத்ததாக கூறி இருந்தார். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பாரபட்சமற்ற, நேர்மையான, சமநிலையான அணுகுமுறையை தேர்தல் கமி‌ஷன் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பதில் மனு பரிசீலனையில் இருந்து வரும் நிலையில், ‘தேர்தல் கமி‌ஷன் நேர்மையாக செயல்படவில்லை’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழிக்காததால் காதலனை கடத்தி தாக்கிய இளம்பெண்!
[Sunday 2019-05-12 08:00]

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் கசிம் முகமது. இவருடைய மகன் நவீத் அகமது (வயது 21). நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். கடந்த 9-ந் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டனர். அங்கு வைத்து அவரை கடுமையாக தாக்கி, அவருடைய விலை உயர்ந்த செல்போன், கைக்கெடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். தாக்குதலில் நவீத் அகமது மயங்கினார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்த அவர், அப்பகுதியில் இருந்த டீக்கடைகாரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் நவீத் அகமதுவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


போலி கடவுசீட்டு தயாரித்து விற்ற 13 பேர் கொண்ட கும்பல் கைது!
[Sunday 2019-05-12 08:00]

போலியான ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விற்ற விவகாரத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின், சில இடங்களில், போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாகவும், சென்னை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரகசியமாக கண்காணித்த சிறப்பு தனிப்படை போலீசார், போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பு கும்பலை மொத்தமாக பிடிக்க முடிவு செய்தனர். இந்த போலி பாஸ்போர்ட் கும்பல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அலுவலகமோ, வீடோ எடுத்து இயக்காமல், எளிதில் பிடிபடாத வகையில், ஆங்காங்கே, கிடைக்கும் இடத்தில், போலி பாஸ்போர்ட் மற்றும் அதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.


ஊழல் குறித்து என்னுடன் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும்: ராகுல்!
[Sunday 2019-05-12 08:00]

ஊழல் குறித்து பிரதமர் மோடி தன்னுடன் விவாதிக்க முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம் சுஜால்பூரில் பேட்டி அளித்த அவர், சீக்கிய கலவரம் குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்து தவறு என்றும், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். வன்முறையை நிகழ்த்துபவர்கள் யாராக இருந்தாலும், 100 சதவீதம் தண்டிக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.


நரேந்திர மோடி தன்னை அழகுப்படுத்த 80 லட்சம் ரூபாய் செலவிட்டது உண்மையா? Top News
[Saturday 2019-05-11 17:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விவரத்தில் , "தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பல லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. இதே செய்தியோடு குருகிராம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காணொலி பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ குறித்த கருத்துகள் தவறானவை. இந்த வீடியோ உண்மையானதாக இருந்தாலும், தவறான சூழலில் இது பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட ஒப்பனை கலைஞரால் அழகுப்படுத்தப்படவில்லை.


ஒடிசாவில் ஒரு வாரமாக குடிநீர், மின்சார வசதி இல்லாமல் மக்கள் அவதி!
[Saturday 2019-05-11 17:00]

ஒடிசாவில் பானி புயல் தாக்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் பல இடங்களில் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஒடிசாவில் கடந்த 3ஆம் தேதியன்று பானி புயல் தாக்கியது. பூரி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள், மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. புயல் தாக்கி 8 நாட்களாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் நிலைமை சீராகவில்லை. தலைநகர் புவனேஸ்வரில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.


சென்னையில் கல்லூரி மாணவரை கடத்திய அமெரிக்க பெண் - பொலிஸார் விசாரணை!
[Saturday 2019-05-11 17:00]

சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத்முகமது (19). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு நவீத்முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினர். உயிருக்கு பயந்த மாணவர் அந்த கும்பல் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். அவரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். இரவு 11 மணி அளவில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் வைத்து நவீத்முகமதை சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்கமுடியாமல் அவர் கதறினார். ஆனாலும், அவர்கள் விடவில்லை. மாணவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஐபேடு போன்வற்றை பறித்துக்கொண்டு புதரில் தள்ளிவிட்டு ஓடிவிட்டனர்.


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, குழந்தையை கொடூரமாக கொன்ற வாலிபர் கைது!
[Saturday 2019-05-11 17:00]

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ். மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நிர்மலாவுடன் ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் விமானம்!
[Saturday 2019-05-11 08:00]

இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இன்று, வெள்ளிக்கிழமை, இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, கட்ச் பாலைவனத்தின் வான்வெளியில் இந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. அந்த விமானத்தில் உள்ள பொருட்களை சோதனை செய்ய அருகில் உள்ள தளங்களில் உள்ள குழுவினைரை இந்திய விமானப்படை ஜெய்ப்பூருக்கு அனுப்பவுள்ளது.


ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்கள்: ஊழியர்கள் மூவர் பணியிடை நீக்கம்!
[Saturday 2019-05-11 08:00]

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.15 மணிக்கு செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதமாக வந்ததால், மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. அதேபோல, கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்துவந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் பழுது காரணமாக சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், விதிமுறைகளை பின்பற்றி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மதுரை புறப்பட்டு சென்றது.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா