Untitled Document
April 29, 2024 [GMT]
கிண்டலடித்ததால் பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!
[Sunday 2018-06-03 08:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 4-ஆவது குழந்தை பிறந்ததால் கிண்டலுக்கு ஆளான தம்பதி, பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில், பச்சிளம் குழந்தையை ஒரு தம்பதி அனாதையாக விட்டுச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகின.


காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும்: - ரஜினிகாந்த்
[Sunday 2018-06-03 08:00]

கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் வரும் 7-ஆம் திகதி காலா திரைப்படம் வெளியாகிறது. காவிரி விவகாரத்தில் ரஜினி கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில் படம் வெளியானால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி அப்படத்தை கர்நாடகாவில் திரையிட விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.


இரு பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை: - தகாத உறவால் வந்த வினை
[Saturday 2018-06-02 15:00]

தமிழகத்தில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொண்டு இரு பிள்ளைகளை கொன்ற தாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டின் சென்னிமலை எம்பிஎம் காலனியை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரி- சுந்தர்ராஜூ தம்பதி. இவர்களுக்கு 14 வயதில் யுவராஜா என்ற மகனும், 12 வயதில் பூஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.


பாலியல் தொழிலில் ஈடுபட்ட மகள்: - ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்
[Saturday 2018-06-02 15:00]

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இருக்கும் ஏழ்மையான கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறியுள்ள அப்பெண் அது சம்மந்தமான சில புகைப்படங்கள் அடங்கிய சிடிக்களையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.


காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!
[Saturday 2018-06-02 07:00]

தமிழ்நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பானுபிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சதீஷ் என்ற இளைஞரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.


பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கிய காதலன்!
[Saturday 2018-06-02 07:00]

தமிழகத்தின் திருப்பூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக கூறி 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூரில் குடியிருக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மாயமானதாக கூறப்படுகிறது. குறித்த மாணவி தொடர்பில் தீவிரமாக தேடியும் பலனில்லாதது கண்டு, அவரது பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.


முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்!
[Saturday 2018-06-02 07:00]

சென்னையில் முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்று விட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆவடி அருகே பட்டாபிராமம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி மதுமிதா. இவர்கள் கடந்தாண்டு யூன் மாதம் 1ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.


மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!
[Friday 2018-06-01 18:00]

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தரையில் அடித்துக்கொன்ற தந்தைக்கு, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது, பெரம்பலூர் நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2013-ம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகள் வெண்ணிலாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.


அந்தக் சமூக விரோதிகள் யார்? - ரஜினிக்குத் திருமாவளவன் ஆலோசனை
[Friday 2018-06-01 08:00]

திருப்பூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருப்பூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பு சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்களுக்கு மறுக்கப்படுவதால், அந்தக் கட்சியினர் மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துகிறார்கள்.


பாதிக்கப்பட்டவர்கள் ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மையைத் தெரிவிக்க வேண்டும்: - சரத்குமார்
[Friday 2018-06-01 08:00]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மைகளைத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து சரத்குமார் ஆறுதல் கூறிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


பத்திரிகை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்: - ரஜினிகாந்த்
[Friday 2018-06-01 08:00]

பத்திரிகை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை, தூத்துக்குடிக்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்தார். அதன்பிறகு சென்னைத் திரும்பிய அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.


திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அனுமதித்த நீதிமன்றம்!
[Friday 2018-06-01 06:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் இணைந்துவாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், பெண்ணின் தந்தையின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. 18 வயது இளைஞரும், 19 வயது இளம்பெண்ணும் இணைந்து வாழ அனுமதி வழங்கிய கேரள நீதிமன்றம், திருமணம் ஆகாமல் இணைந்து வாழும் உறவு முறையில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் கூறிஉள்ளது.


கள்ளக்காதலை கண்டித்த மனைவி:- தூக்கில் தொங்க விட்டு கொன்ற கணவர்
[Thursday 2018-05-31 18:00]

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மாவேலிக்கரை நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (38). இவரது மனைவி அம்புலி (36). அனில் குமாருக்கும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அம்புலிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு உருவானது. சம்பவத்தன்று வீட்டு வாசலில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அம்புலி தனது கணவரிடம் இளம் பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அனில் குமார் மனைவியை அடித்து உதைத்தார். இதில் அம்புலி மயக்கம் அடைந்தார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டு வழக்கமாக நடக்கும் சண்டை தான் என அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலையில் அனில் குமார் மயங்கி கிடந்த மனைவியை வீட்டிற்குள் தரதரவென்று இழுத்து சென்றார்.


சென்னை வந்தார் மாமன்னர் ராஜராஜன் சோழன்: - மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு
[Thursday 2018-05-31 18:00]

குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் சென்னை வந்தடைந்தன. 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் கண்டறியப்பட்டன.


கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!
[Thursday 2018-05-31 08:00]


இரண்டு லட்சம் ரூபாயைத் திருடிய குரங்கு: - நடு ரோட்டில் அதிர்ந்துபோன வாலிபர்
[Thursday 2018-05-31 08:00]

வங்கிக்குச் செல்லும் நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை, ஒரு குரங்கு திருடிச் சென்று கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா ஒரு சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாகும். அங்கு தாஜ்மஹால் மற்றும் நிறையக் கோட்டைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வது வழக்கம். பொதுவாகவே ஆக்ரா பகுதியில் குரங்குகள் அதிகமாகக் காணப்படும்.


சமூக விரோதியை இவர் பார்த்தாரா? - யார் நீங்க என ரஜினியை கேட்ட இளைஞர் தகவல்
[Thursday 2018-05-31 08:00]

தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற ரஜினியை பார்த்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர் யார் நீங்க? என கேட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த இளைஞருக்கு ஆதரவாக மீம்ஸ்களும் பறக்க ஆரம்பித்தன.


யே வேற யாராவது கேள்வி இருக்கா? - அவமானப்பட்ட கோபத்தில் கத்திய ரஜினி
[Thursday 2018-05-31 07:00]

தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் சற்று ஆவேசத்துடன் பேட்டியளித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்த பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றார் ரஜினி.


ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க: - பிரபல நடிகை கிண்டல்
[Wednesday 2018-05-30 07:00]

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க என்று பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 13 பேர் பலியாகினர்.


மூன்று இளைஞர்களின் உயிரை காவு வாங்கிய இயர்போன்!
[Wednesday 2018-05-30 07:00]

சமீப காலமாக இயர்போனை பயன்படுத்தி பாட்டு கேட்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இயர்போன் பயன்படுத்துவது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்லும் போது இயர்போன் பயன்படுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்படிப்பட்ட விபத்துகளில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.


கையில் தந்தையின் டெரர் கண்கள்: - விஜயகாந்த்தை உற்றுநோக்க வைத்த மகன்
[Tuesday 2018-05-29 18:00]

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று வந்த நடிகர் சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை' டாட்டூவாகக் கையில் வரைந்திருக்கிறார். இதைக் காண்பித்து விஜயகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மகன்.


துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை விவர அறிக்கையில் இடம் பெறவில்லை: - மு.க.ஸ்டாலின்
[Tuesday 2018-05-29 16:00]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விவர அறிக்கையை, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தாக்கல் செய்துள்ள நிலையில்,


இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி: - காதலன் கைது!
[Tuesday 2018-05-29 09:00]

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த அசோகனின் மகள் அசோனா (20). இவர், விருத்தாசலம் சரோஜினிநாயுடு நகர் முதல் தெருவில் உள்ள பல்முனை வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். நேற்று காலை, வேலைக்குச் செல்ல உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.


காதலித்து திருமணம் செய்ததற்காக இளைஞன் ஆணவக் கொலை: - அதிர்ச்சி சம்பவம்
[Tuesday 2018-05-29 08:00]

கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.


பச்சிளம் குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை!
[Tuesday 2018-05-29 08:00]

தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.< திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேண்டாவுக்கு சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மீண்டும் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.


காந்தத்தை விழுங்கிய 9 வயது சிறுமிக்கு காந்தம் மூலம் சிகிச்சை!
[Tuesday 2018-05-29 08:00]

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிய போது பொம்மையில் இருந்த காந்தத்தை விழுங்கி விட்டாள். இதனால் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை மங்களூரில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல டாக்டர் ஜெயதீர்த்தா ஜோஷி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது: - தமிழக அரசு அரசாணை வெளியீடு
[Monday 2018-05-28 18:00]

பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


மகளுடன் சந்தோஷமாக வாழாத புதுமாப்பிள்ளையை கொலை செய்த மாமனார்!
[Monday 2018-05-28 15:00]

கேரள மாநிலம் கோட்டயத்தில் புதிதாக திருமணம் செய்துகொண்ட நபர்,மனைவியின் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டுள்ளார், கெவின் மற்றும் நினுவுக்கு மே 19 ஆம் திகதி தான் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. மகளுடன் சந்தோஷமாக வாழாத மாப்பிள்ளை தேவையில்லை என நினுவின் தந்தை மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா