Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் - பாஜகவும் காலை வாருகிறது!
[Tuesday 2012-11-20 18:00]

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டுவர திட்டமிட்டிருக்கும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை ஆதரவளிக்கப் போவதில்லை என பாஜக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.


திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இலங்கைப் பெண் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!
[Tuesday 2012-11-20 18:00]

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் விபத்தில் பலியாகியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த ரோகினி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரினம் செய்த பின்னர் கிரிவலம் சென்றுள்ளார்.


மரத்தில் இருந்து குதித்து மாண்டார் இலங்கை அகதி!
[Tuesday 2012-11-20 18:00]

கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கை வவுனியாவை அடுத்த சிதம்பரபுரத்தைச் சேர்ந்த அகதி கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 4 மகன், 2 மகள் உள்ளனர். கண்ணன் குடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வருவார்.


இலங்கைப் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் திமுக! - கருணாநிதி அறிவிப்பு Top News
[Tuesday 2012-11-20 07:00]

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார். டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியது:


"அத்வானி ஒழிக" - கோஷம் எழுப்பிய எடியூரப்பா மன்னிப்புக் கோரினார்!
[Tuesday 2012-11-20 07:00]

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராக ஒழிக கோஷமிட்டதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மன்னிப்பு கோரினார். தாவணகெரே ஹொன்னாலி வட்டாரத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


கங்கைக் கரையில் சனநெரிசலில் சிக்கிய 20 பேர் பலி!
[Tuesday 2012-11-20 07:00]

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சாத்பூஜா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாயினர். தீபாவளி பண்டிகை கொண்டாடிய ஆறு நாட்களுக்கு பின், சூரிய கடவுளை வணக்கும் சாத்பூஜா விழா வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள அதாலத் கன்ச் என்ற இடத்தில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் நேற்று ஏராளமான மக்கள் கூடி சாத்பூஜா வழிபாடு நடத்தினர்.


மம்தாவின் காலை வாரியது மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - மத்திய அரசைக் காப்பாற்ற முயற்சி!
[Monday 2012-11-19 18:00]

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இதற்கு இடதுசாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.


கற்பழிக்க முயன்ற இளைஞனின் நாக்கை கடித்துத் துப்பினார் இளம்பெண்!
[Monday 2012-11-19 13:00]

உத்தர பிரதேசத்தில் வீடு புகுந்து தன்னை கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை இளம்பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இதாவா மாவட்டத்தில் உள்ளது பர்ரா சலீம்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.


நடிகை சோனா வீட்டை 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் முற்றுகை!
[Monday 2012-11-19 13:00]

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை சோனா வீட்டை 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்களை, துடைத்துப்போடும் பேப்பருக்கு சமம் என வர்ணித்திருந்தார்.இதனால் ஆண்களின் கோபத்தை சம்பாதித்தார் சோனா. உடனே தான் அப்படி சொல்லவில்லை என பல்டியடித்தார்.


புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் தற்கொலை - தமிழக செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு!
[Monday 2012-11-19 13:00]

சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமுறையில் வணிகச் செய்திகள் வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் நெடுஞ்செழியன். இவர் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.


ராஜீவ் பாணியில் ஒற்றர்களை அனுப்புகிறார் ராகுல்!
[Monday 2012-11-19 07:00]

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ராகுல் காந்தி ரகசியமாக ஈடுபட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ராகுல் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் இப்போது தனது தந்தை ராஜீவ் மற்றும் சித்தப்பா சஞ்சய் காந்தி கடைப்பிடித்த முறையில் வேட்பாளர் தேர்வில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.


ஒபாமாவுக்குப் போட்டியாக உலகம் சுற்றிய மன்மோகன்சிங்!
[Monday 2012-11-19 07:00]

ஆட்சியில் இருக்கும் பொழுது உலகம் சுற்றும் தலைவர்களில் ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் அரைசதத்தினை தொட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பதவி காலத்தில் 50 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் ஒபாமா 50-வது பயணமாக கம்போடியாவிற்கும், அதே போன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தற்போது பயணமாக கம்போடியவிற்கும் சென்றுள்ளதன் மூலம் 47 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


மத்திய அமைச்சர் நாராயணசாமி குத்துக்கரணம் - கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு இல்லையாம்!
[Monday 2012-11-19 07:00]

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 4 மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். இது குறித்து அவர் புதுவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


பால்தாக்கரே இறுதி ஊர்வலத்தில் 20 இலட்சம் பேர் திரண்டனர் - மும்பையே முடங்கியது!
[Monday 2012-11-19 06:00]

தாதர் சிவாஜி பார்க்கில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பொது மேடையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. தாக்கரேயின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் பிற்பகல் 3.33 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கு நடைபெற்ற சிவாஜி பார்க் மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.


கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217அடி உயர மாலை அணிவித்து வளிபாடு!
[Sunday 2012-11-18 15:00]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விழாவையொட்டி அண்ணா மலையார் கோவில் முன் பக்க ராஜகோபுரத்திற்கு 217 அடி உயர பூ மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாமந்தி மற்றும் பல்வேறு பூக்கள் உள்ளன. கோபுரத்தின் இரு பக்கமும் இரண்டு மாலைகள் மேலே இருந்து கீழே வரை தொங்கவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் ஒருவர் இதை காணிக்கையாக வழங்கியுள்ளார்.


ஐ.நா சென்ற ஸ்டாலினுக்கு கருணாநிதி நடத்திய பாராட்டு விழா - கொதிக்கும் கட்சித் தலைவர்கள்!
[Sunday 2012-11-18 14:00]

டெசொ தீர்மானத்தை ஐ.நாவிடம் கையளித்து திரும்பிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தலைவர் கருணாநிதி நடத்திய பாராட்டு விழா குறித்து பல்வேறு கட்சிகளினதும் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


கூடங்குளம் அணுமின் நிலையத்தை டிசம்பர் 15இல் திறந்து வைக்கிறார் ரஸ்ய அதிபர் புதின்!
[Sunday 2012-11-18 13:00]

கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டு உள்ளதால் ரஷிய அதிபர் புதினை வைத்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதின் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மன்மோகன்சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்து வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.


பால் தாக்கரே உடலுக்கு யாருக்கும் கிடைக்காத அனுமதி - சிவாஜி பூங்காவில் இன்று தகனம்!
[Sunday 2012-11-18 13:00]

பால்தாக்கரேயின் உடல் மும்பையின் சிவாஜி பூங்காவில் இன்று மாலை 6 மணிக்கு தகனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இது நாள் வரை யாருக்கும் இந்த மாதிரியான வசதி தரப்பட்டதில்லை என்றும் சுதந்திர இந்தியாவில் மும்பை நகரிலேயே தகனம் செய்யப்படும் முதல் உடல் பால் தாக்கரே தான் என்றும் மும்பை நகர முன்னாள் காவல் துறை ஆணையர் ஜூலியோ ரெபேரோ தெரிவித்தார்.


நாஞ்சில் சம்பத்துடன் ஸ்டாலின் பேச்சு - விரைவில் திமுகவில் இணைவு!
[Sunday 2012-11-18 07:00]

ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விவகாரம், தி.மு.க.,வினர் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நிர்வாகிகள் சம்பத்துடன் பேசியும் வருகின்றனர். "ஸ்டாலினை முதல்வராக்க வைகோ விரும்பவில்லை' என்ற விவகாரத்தை போட்டு உடைத்ததன் மூலம், ஸ்டாலினுக்கு பிடித்தமானவராக சம்பத் மாறிவிட்டார். தி.மு.க.,வுக்கு அவரை கொண்டுவர, ஸ்டாலின் அவருடன் பேசிவிட்டார்.


கடையநல்லூர் அகதிமுகாமில் இருந்த 12 இலங்கைத் தமிழர்களை காணவில்லை!
[Sunday 2012-11-18 07:00]

திருநெல்வேலி, கடையநல்லூர் இலங்கை அகதிகள் முகாமில் 12 பேரைக் காணவில்லை. இவர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்களா என்பது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடையநல்லூர் அருகேயுள்ள போகநல்லூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 139 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 15 நாள்களுக்கு ஒருமுறை முகாமில் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு (ரோல் கால்) நடத்தப்படுவது வழக்கம்.


என்னைப் போன்ற பலருக்கு தந்தை போன்றவர் பால் தாக்கரே - ரஜனிகாந்த் இரங்கல்!
[Sunday 2012-11-18 07:00]

பால் தாக்கரே சிறந்த தலைவர். என்னை போன்ற பலருக்கு தந்தை போன்றவர் என்று பால்தாக்கரே மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.அவரது மறைவு எல்லாருக்கும் பேரிழப்பு. தாக்கரேவின் மறைவால் வாடும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் உலகம் முழுவதும் இருக்கிற தாக்கரேவின் ஆதரவாளர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


நிலம் கையகப்படுத்திய முறைகேடு வழக்கில் சிக்குகின்றனர் எஸ்.எம் கிருஷ்ணா, தேவகவுடா, எடியூரப்பா !
[Sunday 2012-11-18 07:00]

பெங்களூர்,மைசூர் நெடுஞ்சாலை (நைஸ் நெடுஞ்சாலை) அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையப்படுத்தியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நைஸ் நிறுவன தலைவர் அசோக்கெனி உள்பட 30 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிபதி என்.கே. சுதீந்திரராவ் உத்தரவிட்டார்.


நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மம்தா உறுதி - எதிர்கொள்ளத் தயார் என்கிறது காங்கிரஸ்!
[Saturday 2012-11-17 20:00]

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியது. கூட்டணியையும் முறித்துக்கொண்டது. அத்துடன் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.


அசைவம் சாப்பிடுவோரை கெட்டவர்களாக சித்தரிக்கும் பாடப்புத்தகத்தால் புதிய சர்ச்சை!
[Saturday 2012-11-17 20:00]

மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அசைவ உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஐ.நா. அதிகாரிகள் வெளியேறியது மன்னிக்க முடியாத குற்றம்! - வைகோ
[Saturday 2012-11-17 20:00]

இலங்கை அரசின் மிரட்டலுக்குப் பயந்து ஐ.நா. அதிகாரிகள் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையை செய்யாமல் வெளியேறியது மன்னிக்க முடியாத குற்றம். இதை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு - மும்பையில் பதற்றம்!
[Saturday 2012-11-17 20:00]

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே இன்று காலமானார். அவருக்கு வயது 86. மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்ட சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே.


தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது! - கர்நாடக அமைச்சர்
[Saturday 2012-11-17 07:00]

"தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.


சென்னையில் திங்களன்று டெசோ கலந்துரையாடல்!
[Saturday 2012-11-17 07:00]

டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் ஐ.நா. சபை, ஐ.நா. மனித உரிமை கமிஷனிடம் ஆகியவற்றிடம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்க, இம்மாதம், 19ம்தேதி டெசோ கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நடைபெறவுள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா