Untitled Document
May 1, 2024 [GMT]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி!
[Saturday 2016-01-09 08:00]

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டனர்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
[Friday 2016-01-08 19:00]

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இந்திய உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டில் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். இதனை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையும், ஏனைய தடைகளும் நீக்கப்பட்டன. இதற்கு எதிராக கர்நாடகா அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் 2ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:
[Friday 2016-01-08 07:00]

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருந்தவர்கள் மட்டுமின்றி மாடு பிடி வீரர்கள் மற்றும் பலவேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தடையை நீக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தபோது இன்று அனுமதி அளிக்கப்பட்ட செய்தி வெளியானதும் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். புதுக்கோட்டையில் காளைகளுக்கு இனிப்ப வழங்கி பட்டாவு வெடித்து கொண்டாடினார்கள்.


காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடி: - போலீசார் விசாரணை
[Friday 2016-01-08 07:00]

தமிழ் நபடு - புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் மகன் பிரகாஷ். பொறியியல் பட்டதாரியான இவர் நாகப்பட்டிணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் ஆலங்குடி அருகில் உள்ள பாச்சிக்கோட்டை முருகேசன் மகள் கனகாவும் (19) காதலித்து வந்த நிலையில், கனகாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலனுடன் நாகபட்டிணம் மாவட்டம், திருக்கவளை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4ந் தேதி நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கனகாவை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை என்ற நிலையில் குளமங்கலம் வடக்கு பிரகாஷ் கடத்திச் சென்றுவிட்டதாக ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை!
[Thursday 2016-01-07 22:00]

இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில்,


காஷ்மீர மாநிலத்தின் முதலாவது பெண் முதல்வராக பதவியேற்கிறார் மெகபூபா முஃப்தி!
[Thursday 2016-01-07 14:00]

ஜம்மு காஷ்மீர முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மெகபூபா பதவியேற்றால் ஜம்மு காஷ்மீரத்தின் முதலாவது பெண் முதல்வராவார். ஜம்மு காஷ்மீரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று முப்தி முகமது சயீத் காலமானார்.


காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்!
[Thursday 2016-01-07 14:00]

காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 24 ஆம் தேதி முஃப்தி முகமது சயீத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை!
[Thursday 2016-01-07 13:00]

போராட்டத்தில் ஈடுபட்ட புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள அரசு திரைப்பட கல்லூரியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நடிகர் கஜேந்திர சவுகான் மற்றும் சில உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல் திரைப்பட கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 139 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.


சரக்கு மற்றும் சேவை வரி மசோதா: சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆலோசனை!
[Thursday 2016-01-07 12:00]

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் மசோதாக்கள் நிறைவேற முடியாமல் போனது. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் கூட இருக்கிறது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பிகார் சிறைகளின் மோசமான நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
[Thursday 2016-01-07 08:00]

பிகார் சிறைச்சாலைகளின் மோசமான நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியும், பிகார் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைமை நிர்வாகியுமான வி.என்.சின்ஹா, மாநிலத்தில் உள்ள 58 சிறைச்சாலைகளையும் பார்வையிட்டு அங்குள்ள வாழ்வாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சமூக ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான ஸ்மிதா சக்ரவர்த்தியை கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சிறைச்சாலைகளில் உள்ள 30,070 கைதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து "பிகார் சிறைச்சாலைகளின் நிலை- 2015' என்ற தலைப்பிலான அறிக்கையை ஸ்மிதா தயார் செய்து கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார்.


கருப்பு பணம் பற்றிய விவரங்களை தானாகவே முன்வந்து அளித்தவர்களிடம் இருந்து ரூ.2,428 கோடி வரி வசூல்!
[Thursday 2016-01-07 07:00]

வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணம் பற்றிய விவரங்களை தானாகவே முன்வந்து அளித்தவர்களிடம் இருந்து வருமான வரித்துறை, ரூ.2,428 கோடி வரி வசூலித்து உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறையிடம் தானாக முன்வந்து தகவல் தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் நிர்ணயித்து வருமான வரித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் வெளிநாட்டு வங்கிகளில் சேமித்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை வருமான வரித்துறையிடம் பகிரத்தொடங்கின.


விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி வழக்கு!
[Thursday 2016-01-07 07:00]

சென்னை ஐகோர்ட்டில், ஜி.தேவராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


லைபீரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. விருதுகள்!
[Wednesday 2016-01-06 22:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை வீரர்களின் தைரியம் மற்றும் சேவையைப் பாராட்டி ஐ.நா. விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளரின் லைபீரியாவுக்கான சிறப்பு பிரதிநிதி பரித் ஜரிப் பேசுகையில், லைபீரியா தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொண்ட சமயத்தில் சேவை செய்த இந்திய அமைதிப்படை வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டினார்.


வீரமரணமடைந்த அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய வாலிபர்: - தேசத்துரோக வழக்கில் கைது
[Wednesday 2016-01-06 19:00]

பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார்.


பொங்கலுக்கு முன்னர் பேரறிவாளனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அற்புதம் அம்மாள் முதல்வரிடம் மனு
[Wednesday 2016-01-06 18:00]

பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் இன்று மனு அளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. கருணை மனு மீது குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க தாமதமானதையடுத்து, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலத்தில் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட மாப்பிள்ளை: - இளம்பெண்ணுடன் பெற்றோர் தற்கொலை
[Wednesday 2016-01-06 18:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீரென திருமணத்தை ரத்து செய்து விட்டதால் அவமானம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம், ஆதித்யா அவாஸ் பகுதியைச் சேர்ந்த திக்‌ஷா(21) என்ற பெண்ணுக்கும், ஜெய்ப்பூரில் உள்ள மாளவிகா நகரை சேர்ந்த கமல் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த ஆண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி திக்‌ஷாவின் தந்தைக்கு திடீரென போன் செய்த மாப்பிள்ளை கமல், உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ள முடியாது என தடாலடியாக கூறிவிட்டார்.


ஜல்லிக்கட்டை பற்றி பேச காங்கிரசுக்கு தார்மீக உரிமை கிடையாது: - தமிழசை சவுந்தரராஜன்
[Wednesday 2016-01-06 17:00]

வாணியம்பாடியில் பாரதிய ஜனதா பிரமுகர் சிவப்பிரகாசம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். அவர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- வேலூர், ஆம்பூர் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. ஆம்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை.


பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இந்தியா வருகை:- இன்று மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார்!
[Wednesday 2016-01-06 13:00]

நான்கு நாள் சுற்றுப்பயணமாக பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இந்தியா வருகை இன்று மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூட்டான் சென்ற மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று மேற்கு வங்காளத்திற்கு வருகை தர உள்ளார்.


வெள்ள நிவாரணம்,மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை: - முதல்வர் ஜெயலலிதா
[Wednesday 2016-01-06 08:00]

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், "வெள்ள நிவாரண-சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.25,912 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.


பாகிஸ்தானின் உண்மையான முகத்தை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்: - சிவசேனா
[Wednesday 2016-01-06 07:00]

பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என பலமுறை, பிரதமரிடம் கூறி விட்டோம். பதன்கோட் தாக்குதலுக்கு பிறகாவது, பாகிஸ்தானின் உண்மையான முகத்தை, பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்' என, சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா, மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், அந்த கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்: பாகிஸ்தான், நம்ப தகுந்த நாடல்ல என்பதை, பிரதமருக்கு பலமுறை நினைவூட்டி விட்டோம்; அவர் அதை ஏற்க மறுத்து வருகிறார். சமீபத்தில் கூட, பாகிஸ்தானுக்கு சென்று, அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.


பாகிஸ்தான் தொடர்பாக தவறான வெளியுறவுக் கொள்கையை பிரதமர் கடைப்பிடித்து வருகிறார்: - ஆனந்த் சர்மா
[Wednesday 2016-01-06 07:00]

பாகிஸ்தான் தொடர்பாக தவறான வெளியுறவுக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி கடைப்பிடித்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பல சமயங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.


த.மா.கா. மக்கள் நம்பிக்கை பெற்ற வெற்றி கூட்டணியில் அங்கம் வகிக்கும்: - ஜி.கே.வாசன்
[Wednesday 2016-01-06 07:00]

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களின் கரைகளை பலப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைதொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டை அரசியல் ஆக்குவதில் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், பொதுமக்கள், காளை வளர்ப்பவர்கள் விரும்பவில்லை. ஆகவே ஜல்லிக்கட்டு நடத்த பாதுகாப்பு நெறிமுறைகள் வகுத்து கொடுத்து, மத்திய அரசு அனுமதி பெற்றுத்தரவேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெறாத சூழலுக்கு கடந்த ஆட்சியாளர்களும் பொறுப்பு.


அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு: நஷ்ட ஈடாக 10 கோடி கோரிய அருண்ஜெட்லி
[Tuesday 2016-01-05 18:00]

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றவே, டெல்லி தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக கூறிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். ஆம் ஆத்மியின் இந்த புகார்களை மறுத்து வந்த அருண் ஜெட்லி, உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இலங்கை சிறையில் வாடும் 104 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!
[Tuesday 2016-01-05 17:00]
இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினால் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை!
[Tuesday 2016-01-05 17:00]

அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ராம் சிங் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.


சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு புரளி!
[Tuesday 2016-01-05 17:00]

சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று புரளி கிளம்பியதால் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்று சென்னை காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக திடீரென ஒரு புரளி கிளம்பியது. இதனால் பெற்றோர்கள் பலரும் பள்ளிகளுக்கு போன் செய்து விசாரித்தார்கள்.


பிரதமர் மோடியை கிண்டல் அடிக்கும் சிவசேனா: - ஒருகோப்பை தேனீருக்கு ஏழு வீரர்கள் பலியா!
[Tuesday 2016-01-05 12:00]

பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அந்நாட்டின் பிரதமரை சந்தித்ததுடன் அவருடன் சேர்ந்து விருந்துண்டதை பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகின்றது. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இதுதொடர்பாக குத்திக்காட்டி வரும் சிவசேனா, பாகிஸ்தானில் மோடி குடித்த ஒருகோப்பை தேனீருக்கு பதான்கோட்டில் ஏழு வீரர்கள் பலிகொடுப்பதா? என தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-


தீவிரவாத தாக்குதல்களை கண்டறிந்து முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்: - சோனியா
[Tuesday 2016-01-05 08:00]

உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலை தரும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய சோனியா காந்தி

Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா