Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இன்றைய தினம் யாழிற்கு விஜயம் செய்கின்றது அமெரிக்க உயர்மட்டக் குழு!
[Sunday 2013-01-27 08:00]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அக்குழுவினர் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் பணியகத்தின் கீழ் பணியாற்றும், பிரதி உதவி இராஜாங்கச் செயலாளர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்மன் ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.


வீதி விபத்தில் சிக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே பலி - மட்டக்களப்பில் சம்பவம்!
[Sunday 2013-01-27 08:00]

மட்டக்களப்பு - கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காங்கேயனோடை பதுறியா வீதியைச் சேர்ந்த இப்றாலெவ்வை முஹம்மது முஸ்தபா (வயது 69) என்பவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்று (26) மாலை இடம் பெற்ற வீதி விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காங்கேயனோடையிலிருந்து ஆரையம்பதி பிரதான வீதி ஊடாக காத்தான்குடிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் ஆரையம்பதி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சென்ற மேற்படி வயோதிபர் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஜயவர்த்தன தெரிவித்தார்.


கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 560 மில்லியன் ரூபாய்களை மீளப்பெற்றுக்கொண்டது அரசு!
[Sunday 2013-01-27 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள உள்ளூர் சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 560 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பாதை அமைப்பு, புதிய கட்டிடங்கள், போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.


இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா முதல் தடவையாக உத்தியோகபூர்வ அறிக்கை!
[Sunday 2013-01-27 08:00]

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ஐநா பொதுச்செயலாளர் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையென்ற ரீதியில் அறிக்கையொன்று வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட யாழ்.பல்கலை மாணவி சற்று முன் உயிர்நீத்தார்!
[Saturday 2013-01-26 21:00]

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உடல் முழுவதும் தீக் காயங்களுடன் குறித்த மாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விபயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


டெல்லிக்கான சந்திரிக்காவின் விஜயம் இலங்கை அரசுக்கு எதிரானதா? பரபரப்பான கேள்வியை முன்வைத்தன இந்திய ஊடகங்கள்!
[Saturday 2013-01-26 19:00]

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டெல்லி விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சில கேள்வி எழுப்பியுள்ளன. இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மார்ச் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் எம் மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக சந்திரிகாவை டெல்லிக்கு வரவழைத்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டெல்லியில் அவர், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


நிலக்கண்ணியில் சிக்கி இளைஞர் பலி - வடமராட்சியில் சம்பவம்!
[Saturday 2013-01-26 19:00]

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ளமையினால் குறித்த இளைஞனின் சடலத்தை மீட்க முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை, மூன்று இளைஞர்கள் குறித்தி பகுதிக்கு இரும்பு பொறுக்குவதற்காக சென்றுள்ளனர். இதன்போதே நிலக்கண்ணி வெடியொன்று வெடித்துள்ளது. இதனால் மேற்படி மூன்று இளைஞர்களில் ஒருவரான செல்வம் தவசீலன் (வயது 24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் அவரின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.


தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையீடு!
[Saturday 2013-01-26 19:00]

அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் எடுத்துரைக்கவுள்ளோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஜேர்மனிக்குப் பயணமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவை வருமாறு: "இலங்கையில் தற்போது காட்டாட்சி நடக்கின்றது. நீதித்துறை செத்துவிட்டது. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இதனால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது.


தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான இராணுவக் கெடுபிடிகளுக்கு BTU கண்டனம்.
[Saturday 2013-01-26 19:00]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் வடக்கு - கிழக்கு பகுதி சிறீலங்கா அரசின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும், அங்கு சனநாயகம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதாகவும், பெருமெடுப்பிலான சர்வதேசப்பரப்புரையினை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு - கிழக்கில் வாழும் பூர்வீகத் தமிழினமோ சனநாயகத்தின் பலாபலன்களை முற்றுமுழுதாக அனுபவிக்கக்கூடிய நிலையில் இல்லை. ஏனெனில் இப்பகுதியில் இராணுவத்தின் தலைமையிலான சர்வாதிகார சிவில் நிர்வாகமே நடைபெறுகின்றது.


இளம் வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் மாயம்!
[Saturday 2013-01-26 19:00]

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியிலுள்ள கடையொன்றின் உரிமையாளர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகலுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார். யாழ்ப்பாணம், கொக்குவிலில் மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற சகோதரனின் திருமணத்திற்குச் சென்று விட்டு வியாழக்கிழமை நண்பகல் கரடிபோக்குச் சந்தியிலுள்ள தனது கடைக்கு வந்த இவர் நண்பகலுக்கு பின்னர் காணாமல்போயுள்ளார். இவருடன் உறவினர்களால் தொடர்புகொள்ள முடியாது போன அதேநேரம், இவரும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவிகப்படுகிறது.


இலங்கை அமைச்சரவையில் திங்களன்று மாற்றம் - புதியவர்களுக்கு வாய்ப்பு?
[Saturday 2013-01-26 19:00]

பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் அமைச்சரவை மாற்றம், நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறுமெனவும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் போது 8 துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்துறை, விளையாட்டு, தொழிற்சங்கம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சுக்கள் இதன்போது விசேட கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைகளுக்கு உட்பட்ட அமைச்சுக்களையும் மாற்றத்துக்கு உட்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.


வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த..
[Saturday 2013-01-26 18:00]

வழிபாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார். எதிர்வரும் எட்டாம் திகதி இவரது இந்திய விஜயம் அமையுமென்று, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. புத்தகாயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில், இலங்கையின் அமைதி மற்றும், அபிவிருத்திக்காக வழிபாடு நடத்தவே மஹிந்த ராஜபக்ச புத்தகாயா வரவுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது - பாதுகாப்பு செயலாளர் சீற்றம்!
[Saturday 2013-01-26 13:00]

போருக்குப் பிந்திய இலங்கையுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது. இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இலங்கை இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் அமெரிக்க இராஜதந்திரிகளும், அதிகாரிகளும் என்னைச் சந்திக்கும் போதும், எமது இராணுவத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நான்காவது கட்ட ஈழப்போரின் போது, இலங்கையின் வசதிகளை அமெரிக்க ஆயுதப்படையினர் பயன்படுத்திக் கொள்வதற்கான உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது.


எரியுண்ட நிலையில் அநாதரவாக கிடந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி வைத்தியசாலையில் அனுமதிப்பு!
[Saturday 2013-01-26 13:00]

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் பிரதித் தலைவர் இலங்கை விஜயம்!
[Saturday 2013-01-26 13:00]

அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் ஜூலி பிஷப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வரும் இவர் இலங்கையில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவருடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பேச்சாளர் மைக்கல் கீனனும் இலங்கை வரவுள்ளார்.அவுஸ்திரேலிய லிபிரர் கட்சியின் பேச்சாளர் பிஷப் இலங்கையில் தமிழ் பிரதேசங்களிற்கான விஜயத்தை மேற்கொண்டு அவர்களுடன் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சுறுத்தியோ, கொலை செய்தோ தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடியாது! - அரியநேத்திரன்
[Saturday 2013-01-26 10:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியோ அல்லது பழிவாங்கியோ அல்லது கொலை செய்தோ தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடியாது. இது கடந்த கால வரலாறு. இதனை சிங்களப் பேரினவாதமும், ஒட்டுக்குழுக்களும் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் சி.ஐ.டியினால் இரு தடவைகள் சோதனையிடப்பட்டமை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


யாரும் காணாமல் போகவில்லை என்றால் உறவுகளைத் தேடி வீதிகளில் அலையும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது? - சம்பந்தன்
[Saturday 2013-01-26 10:00]

இலங்கையில் காணாமல் போனவர்களென்று எவரும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தமது உறவுகளைக் காணாது தெருவழியில் அலைந்து திரியும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது?. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியொருவர் இவ்வாறு கருத்துக் கூறுவதை என்னவென்று சொல்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இஸ்லாமியர்கள் பற்றிய அரசின் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் மறுப்பு!
[Saturday 2013-01-26 08:00]

இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.


ஈழத்தமிழர்களுக்காக நீதிகேட்டு லண்டனிலிருந்து இந்தியா நோக்கிய நடைப்பயணம்!Top News
[Saturday 2013-01-26 08:00]

ஈழத் தமிழர்களது விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா நோக்கி ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 29 மாலை 6:00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த நடைபயணம் ஆரம்பிக்கவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நீதி கோரும் நடை பயணங்கள் பல ஏற்கனவே நடந்திருந்தாலும் அவை அத்தனைக்கும் ஏதோ ஒரு அமைப்பின் பின் புலத்திலேயே நடைபெற்றது.ஆனால் இந்த நடை பயணமானது தனி ஒரு மனிதனாக தனது சுய விருப்பில் நடாத்திமுடிக்க தீர்மானித்துள்ளார் சி.லோகேஸ்வரன் என்பவர். ஏனெனில் தற்போது நிலவும் பிளவுகளுக்கு நடுவே தனது இந்த போராட்டம் சிக்கி திசைமாறாமல் இருக்கவும், தனது நோக்கம் சரியான முறையில் நிறைவேற வேண்டும் என்ற நோக்கோடே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சி.லோகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.


அரசியல் செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் - கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் உத்தரவு!
[Saturday 2013-01-26 07:00]

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கவேண்டும். அதற்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியிலான வேலைகளை செய்யமுடியாது என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க அறிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு விசேட கட்டளையொன்றை நேற்று விடுத்துள்ளார். கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சித்தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஸ்ஸும் ஊக்கமளித்தார் - ஜனாதிபதி!
[Saturday 2013-01-26 07:00]

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் தம்மிடம் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமளித்ததாக இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இலங்கையில் பதவியேற்ற பின்னர் 2009ம் ஆண்டு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா தமக்கு ஊக்கமளித்தது.


இலங்கையின் குற்றச்செயல்களை கண்டித்து தூதரகத்தின் முன்பாக போராட்டம்!
[Saturday 2013-01-26 07:00]

இலங்கையில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தியும் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலையை கண்டித்தும் எதிர்வரும் 30 ஆம் திகதி முற்றுகை போராட்டம் ஒன்றை நடத்தப்படவிருப்பதாக ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பிலேயே சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்த முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


யுத்த காலத்தில் தமிழர்கள் காணாமற்போனது உண்மையே - வாசுதேவ நாணயக்கார!
[Saturday 2013-01-26 07:00]

இலங்கையின் வன்னியில் இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே. இதனை யாரும் மறுக்க இயலாது. எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்க இராஜதந்திரிகள் குழு நாளை இலங்கை விஜயம்!
[Friday 2013-01-25 21:00]
அமெரிக்க ராஜதந்திரிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விஜயத்தை தொடர்ந்து குறித்த அமெரிக்க ராஜதந்திரிகள் மாலைதீவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகுhப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ முகாம் அமைப்பதற்காக முள்ளிக்குளம் மக்களை காட்டுக்குள் துரத்திய படையினர்! Top News
[Friday 2013-01-25 19:00]

முள்ளிக்குளத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கும் பொருட்டு , அப்பகுதி தமிழர்களை வேறு இடத்தில் குடியமருமாறு இலங்கை கடற்படை அதிகாரிகள் எச்சரித்து அத் தமிழர்களை முறையற்ற விதத்தில் காடுகளுக்குள் துரத்தியுள்ளனர் இது தமிழர்கள் மீதான உளவியல் போரின் உச்சகட்டமாகும் , தமிழர்களின் நிலங்களில் இன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


35 பவுண் நகைகள் ,15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற்போன மனைவியைத் தேடுகிறார் கனடாவில் இருந்த வந்த கணவர்!
[Friday 2013-01-25 19:00]

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார்.


போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் - மன்மோகனிடம் பீரிஸ் தெரிவிப்பு!
[Friday 2013-01-25 19:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்காவிடில் உங்கள் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள மன்மோகனிடம் பதிலளித்த பீரிஸ் நீங்கள் எங்களுக்கு போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தினை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் எனக் கூறியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது:


இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திரிக்கா பேச்சு!
[Friday 2013-01-25 18:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்தரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பு கடந்த புதன்கிழமை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளன. சந்திரிகாவுடனான சந்திப்பின் போது, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா