Untitled Document
May 13, 2024 [GMT]
ரிஐடிக்கு பணிப்பாளராக ஜயசுந்தர!
[Sunday 2018-12-09 19:00]

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாமலின் அலைபேசி ஹொங்கொங் பறந்தது!
[Sunday 2018-12-09 19:00]

நாமல் குமாரவின் அலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவரும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் சென்றுள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவின் அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனவரியில் வெடிக்கப் போகும் எரிமலை!
[Sunday 2018-12-09 08:00]

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள், எல்லை மீறிச் செல்வதாக புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். ஜனாதிபதி பொறுப்பற்ற வகையில் எரிமலை மீது நடந்து செல்வதாகவும், விரைவில் அது வெடித்து முழு நாடும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


போதைப்பொருள் கடத்தல் - சிறைத்தண்டனை!
[Sunday 2018-12-09 08:00]

கனடா - ரொரன்ரோவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்களான ஆணையும் பெண்ணையும், குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.எனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார்.


அரசியலை விட்டு வெளியேறத் தயார்!
[Sunday 2018-12-09 08:00]

மக்கள் ஆதரவு இருக்கும் வரை மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும் என்றும், அவர்கள் நிராகரித்தால் விடைபெறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின், மகா நாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் 42 அடி கிறிஸ்மஸ் மரம்! Top News
[Sunday 2018-12-09 08:00]

மட்டக்களப்பு - புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் நேற்று மாலை ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


குதிரை பேரத்தில் மஹிந்த தோல்வி!
[Sunday 2018-12-09 08:00]

500 மில்லியன் ரூபா வரை குதிரை பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மகனுக்கு ஹெரோய்ன் - சிக்கினார் தந்தை!
[Sunday 2018-12-09 08:00]

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் இருந்த மகனுக்கு, ஹொரோயின் போதைப்பொருளை கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக அவரின் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார். அவர் கொண்டு சென்ற பொருட்களில் இருந்த சவற்காரத்தினுள், ஹொரோயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.


வாகனங்களை மோதித் தள்ளி 3 பேர் பலி! Top News
[Sunday 2018-12-09 08:00]

கொழும்பு - கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கும் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அருகில் மதுபோதையில் இருந்த வாகன சாரதி ஒருவர் கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தி ஏற்படுத்திய விபத்துகளில், 3 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். இன்று காலை இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. விபத்தில் காயமடைந்த 8 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காலை இழந்தார் குடும்பத் தலைவர்!
[Sunday 2018-12-09 08:00]

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்றுக்காலை 9 மணியளவில், முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் படுகாயமடைந்த- மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத்தலைவரின் வலது கால் சிதைவுண்டதால் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டது. விபத்தையடுத்து முச்சக்கர வண்டிச் சாரதி நிறுத்தாமல் தப்பித்து விட்டார்.


ஐதேகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு!
[Sunday 2018-12-09 08:00]

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து தற்போது எம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னண், தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதன் பின்னர் ஐ.தே.க ஆட்சி அமைக்குமானால் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.


சுமந்திரனே காரணம் - கடுப்பில் சுசில்!
[Sunday 2018-12-09 08:00]

ஐக்கிய தேசிய கட்சிக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய தொடர்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செயற்படுகின்றார் என்று சுசில் பிரேமஜயந்த குற்றம் சாட்டியுள்ளார்.கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


பதில் நடவடிக்கைக்குத் தயார்!
[Saturday 2018-12-08 18:00]

இலங்கையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில் சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என பிரித்தானியாவின் மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் தரீக் அகமட் தெரிவித்துள்ளார்.


ரணிலுக்கு ஆதரவா? - 12இல் முடிவு!
[Saturday 2018-12-08 18:00]

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். எதிர்வரும் 11ஆம் திகதி இரவு அல்லது 12ஆம் திகதி காலையிலேயே இதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் தற்காலிக விநியோகத்தளம்!
[Saturday 2018-12-08 18:00]

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் ஜோன்ஸ்டெனிஸ் இலங்கையில் தற்காலிக விநியோக தளமொன்றை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.


சிறுபான்மையினர் ஆதரவின்றி ஆட்சி அமையாது!
[Saturday 2018-12-08 18:00]

சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எந்ததொரு பெரும்பான்மை கட்சிகளினாலும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


பெற்றோல் குண்டுக்கு இரையான வாகனங்கள்! Top News
[Saturday 2018-12-08 18:00]

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு 11 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து நாசமாகின.


தீர்ப்பை ஏற்க தயாராகுங்கள்!
[Saturday 2018-12-08 18:00]

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹாண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூடத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஒரு இலட்சம் பேரைக் குவிக்கிறது ஐதேக!
[Saturday 2018-12-08 18:00]

கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'நீதிக்கான போராட்டம்' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.


உடுப்பிட்டியில் கத்திமுனையில் கொள்ளை!
[Saturday 2018-12-08 18:00]

யாழ். உடுப்பிட்டி மொட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று அதிகாலை புகைக்கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள், தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.


அரசியலில் குழப்ப நிலையாம்!
[Saturday 2018-12-08 18:00]

தற்போதைய அரசியலில் ஒரு வகை குழப்ப நிலை உள்ளதாகவும், அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு மக்கள் எதிர்பார்ப்பது பொதுத்தேர்தலையே எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பன்னிபிட்டிய, ருக்மல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இரணைமடு வான்கதவுகள் திறப்பு!
[Saturday 2018-12-08 18:00]

கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்திற்கான நீர் வரவு அதிகரித்துள்ளமையால், நீர்மட்டம் 3.65 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் 14 வான்கதவுகளில் ஐந்து கதவுகள் 150 மில்லிமீற்றர் உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கபெறும் என எதிர்பார்க்கின்றமையால் முன்னெச்சரிக்கையாக ஐந்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.


தீர்வைத் தராது தீர்ப்பு!
[Saturday 2018-12-08 18:00]

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்பநிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம்! Top News
[Saturday 2018-12-08 18:00]

அச்சுவேலி


அதிக பாதிப்பு - இலங்கைக்கு இரண்டாமிடம்!
[Saturday 2018-12-08 08:00]

உலகில் காலநிலை மாற்றங்களால், அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற காலநிலை அனர்த்தங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.


யாழ்.மேயர் திணறல்!
[Saturday 2018-12-08 08:00]

யாழ். மாநகரசபையின் அமர்வு இன்று நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவு செலவுத்திட்டமாக காணப்படுவதால் குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.


அரசியல் கைதிக்கு 'பரோல்'! Top News
[Saturday 2018-12-08 08:00]

கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான ரஞ்சித்(35) ஒரு வாரகால நீதிமன்ற பரோலில் (நிபந்தனையின் அடிப்படையில் தற்காலிக விடுவிப்பு) தனது இல்லத்திற்கு வந்திருந்து மீண்டும் நேற்று சிறைக்குத் திரும்பினார்.


இப்போது தேர்தலை நடத்தமாட்டேன்!
[Saturday 2018-12-08 08:00]

ஜனாதிபதி தேர்தலை தற்போது நடத்தமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, தான் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா