Untitled Document
May 14, 2024 [GMT]
ஒரு இலட்சம் பேரைக் குவிக்கிறது ஐதேக!
[Saturday 2018-12-08 18:00]

கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'நீதிக்கான போராட்டம்' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.


உடுப்பிட்டியில் கத்திமுனையில் கொள்ளை!
[Saturday 2018-12-08 18:00]

யாழ். உடுப்பிட்டி மொட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று அதிகாலை புகைக்கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள், தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.


அரசியலில் குழப்ப நிலையாம்!
[Saturday 2018-12-08 18:00]

தற்போதைய அரசியலில் ஒரு வகை குழப்ப நிலை உள்ளதாகவும், அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு மக்கள் எதிர்பார்ப்பது பொதுத்தேர்தலையே எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பன்னிபிட்டிய, ருக்மல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இரணைமடு வான்கதவுகள் திறப்பு!
[Saturday 2018-12-08 18:00]

கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்திற்கான நீர் வரவு அதிகரித்துள்ளமையால், நீர்மட்டம் 3.65 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் 14 வான்கதவுகளில் ஐந்து கதவுகள் 150 மில்லிமீற்றர் உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கபெறும் என எதிர்பார்க்கின்றமையால் முன்னெச்சரிக்கையாக ஐந்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.


தீர்வைத் தராது தீர்ப்பு!
[Saturday 2018-12-08 18:00]

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்பநிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம்! Top News
[Saturday 2018-12-08 18:00]

அச்சுவேலி


அதிக பாதிப்பு - இலங்கைக்கு இரண்டாமிடம்!
[Saturday 2018-12-08 08:00]

உலகில் காலநிலை மாற்றங்களால், அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற காலநிலை அனர்த்தங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.


யாழ்.மேயர் திணறல்!
[Saturday 2018-12-08 08:00]

யாழ். மாநகரசபையின் அமர்வு இன்று நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவு செலவுத்திட்டமாக காணப்படுவதால் குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.


அரசியல் கைதிக்கு 'பரோல்'! Top News
[Saturday 2018-12-08 08:00]

கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான ரஞ்சித்(35) ஒரு வாரகால நீதிமன்ற பரோலில் (நிபந்தனையின் அடிப்படையில் தற்காலிக விடுவிப்பு) தனது இல்லத்திற்கு வந்திருந்து மீண்டும் நேற்று சிறைக்குத் திரும்பினார்.


இப்போது தேர்தலை நடத்தமாட்டேன்!
[Saturday 2018-12-08 08:00]

ஜனாதிபதி தேர்தலை தற்போது நடத்தமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, தான் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


பொற்குடத்துடன் இரகசிய 'டீல்'!
[Saturday 2018-12-08 08:00]

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுண ஆகிய கட்சிகள் இணைந்து பாரிய கூட்டணி ஒன்றை அமைத்து பொது சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடவுள்ளன.இதற்கான இணக்கப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கேரள நம்பூதிரிகளிடம் சரண்!
[Saturday 2018-12-08 08:00]

இலங்கையில் மந்திர கோலுடன் வலம் வரும் மகிந்த ராஜபக்சவினால் அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ராஜபக்சவும் மாந்த்ரீகம், ஜாதகம், யாகம் உள்ளிட்டவைகளில்அதிக நம்பிக்கைக் கொண்டவர்.இவர் தனது அரசியல் சிக்கல் களுக்கு முடிவெடுக்க கேரள நம்பூதிரிகளின் ஆலோசனை கேட்பது வழக்கம். மேலும் பிரசன்னத்திலும் நம்பிக்கை அதிகம்.


சாதகமான தீர்ப்பே வரும்!
[Saturday 2018-12-08 08:00]

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் என நம்புவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


நிதி அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!
[Saturday 2018-12-08 08:00]

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே நிதி பயன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மூன்றாவது வாரமாகவும் விகாரமாதேவி பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தேர்தலை பிற்போடும் உத்தி!
[Saturday 2018-12-08 08:00]

நீதிமன்ற பலத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடவும் தற்போது


தொண்டா - ரவி இரகசிய சந்திப்பு!
[Saturday 2018-12-08 08:00]

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் சுமார் 1 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தீர்ப்பு வரும் வரை தடைநீடிப்பு!
[Friday 2018-12-07 19:00]

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


மஹிந்தவுக்கு பிளேக் கூறும் ஆலோசனை!
[Friday 2018-12-07 19:00]

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், முன்னாள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்ற கால்பந்து வீரரை நாடுகடத்த தயாராகும் தாய்லாந்து.
[Friday 2018-12-07 19:00]

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து, அரசியல் அகதி அந்தஸ்து பெற்ற பஹ்ரைன் கால்பந்தாட்ட வீரரை கைது செய்துள்ள தாய்லாந்து அரசு அவரை மீண்டும் பஹ்ரைனுக்கு நாடுகடத்த திட்டமிட்டிருக்கின்றது. ஹக்கீம் அலி அல்அரைபி என்ற அந்த வீரர், தான் பஹ்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அரசு குடும்பத்தை விமர்சித்ததற்காக சிதர்வதை செய்யப்பட்டு கொல்லப்படுவேன் என அஞ்சுகின்றார்.


குழப்பத்தை விரைவில் தீர்க்க வேண்டும்!
[Friday 2018-12-07 19:00]

அரசியல் குழப்பநிலையை விரைவாக நிறைவுக்கு கொண்டு வருவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.


வான்கதவை திறந்து விட்டார் மைத்திரி! Top News
[Friday 2018-12-07 19:00]

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான் கதவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் பாரிய நீர்பாசனக் குளங்களில் ஒன்றான இரணைமடு குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முழுமையாக நீர் சேமிக்கப்பட்டது.


முன்னேறி்யது இலங்கை கடவுச்சீட்டு!
[Friday 2018-12-07 19:00]

உலக நாடுகளில் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கையின் கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தை பெற்றுள்ளது. ஆண்டு தோறும் Passportindex இணையதளம் வெளியிட்டு வருகின்ற தரவின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.


வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார்!
[Friday 2018-12-07 19:00]

புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


113 இல்லாதவர்கள் 150 பற்றி பேசுகின்றனர்!
[Friday 2018-12-07 19:00]

பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150 பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக குறிப்பிடுவது வேடிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.


சந்திரிகாவை ஓரம்கட்டவில்லை!
[Friday 2018-12-07 19:00]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஓரம்கட்டவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். அத்தோடு சந்திரிகா அம்மையாரே கட்சியிலிருந்து விலகி செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.


விஜயகலா வழக்கு - ஒத்திவைப்பு!
[Friday 2018-12-07 19:00]

விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கை​ கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


'19'இல் கைவைக்க விடமாட்டோம்!
[Friday 2018-12-07 19:00]

19ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் திருத்தத்துக்கு உள்ளாக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரஜைகளின் உரிமைகளுக்காகத் தாம் எப்போதும் போராடத் தயாராக இருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


பால்நிலை வன்முறைக்கு எதிரான பேரணி! Top News
[Friday 2018-12-07 19:00]

பால்நிலை வன்முறைக்கு எதிரான அமைதி ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது. யாழ். சமூக செயற்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி ஊர்வலம், வேலைத்தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்டது.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா