Untitled Document
April 26, 2024 [GMT]
சேமமடுவில் யானை தாக்கி விவசாயி மரணம்!
[Friday 2018-09-21 09:00]

வவுனியா - சேமமடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியநாதன் ஞானசீலன் (50 வயது) சேமமடு படிவம் 2-இல் தனது சகோதரனின் விவசாயக் காணியில் கச்சான் பயிரிட்டு தோட்டம் செய்து வந்துள்ளார்.


வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசாங்கம்! - ஜனாதிபதி Top News
[Friday 2018-09-21 09:00]

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.


சந்திரிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயர் விருது! Top News
[Friday 2018-09-21 09:00]

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதான


ஐந்து முன்னாள் அமைச்சர்களின் பதவிகளைப் பறித்தது சுதந்திரக் கட்சி!
[Friday 2018-09-21 09:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க.வின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.


மோசடி வழக்கில் சிக்கிய கம்மன்பில வெளிநாடு செல்ல அனுமதி!
[Friday 2018-09-21 09:00]

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இரண்டுவார காலத்துக்கு வெளிநாடு சென்று வர, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.


அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த முனைகிறீர்களா? - ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்
[Thursday 2018-09-20 20:00]

இராணுவத்திலுள்ள போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போது, தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவே அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றீர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.


பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும்! - ஐ.நா பேச்சாளர்
[Thursday 2018-09-20 20:00]

போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.


ஆவா குழுவை அடக்க 2 நாட்கள் போதும்! - யாழ். இராணுவத் தளபதி கூறுகிறார்
[Thursday 2018-09-20 20:00]

ஆவா குழு உள்ளிட்ட யாழ். மாவட்டத்தில் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும், ஆனால் சிவில் நிர்வாகத்தில் தலையிட இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


நிர்வாகசேவை பரீட்சையில் அதிகளவு தமிழர்கள் சித்தியடைந்ததால் பெறுபேறுகளை ரத்துச் செய்ய சதித் திட்டம்!
[Thursday 2018-09-20 20:00]

அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்திபெற்ற காரணத்தினால் குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிமல் ரத்நாயக்க எம்.பியும், சுமந்திரன் எம்.பியும் இன்று பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.


கேணல் ரமேஷை இராணுவம் கொன்றதாக கூறவில்லை! - எஸ்.பி.திஸாநாயக்க குத்துகரணம்
[Thursday 2018-09-20 20:00]

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் கொல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகங்களே தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பன்றிக்கு வைத்த பொறியில் மாடு மேய்க்கச் சென்றவர்கள் சிக்கி படுகாயம்!
[Thursday 2018-09-20 17:00]

மட்டக்களப்பில், காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி, மாடு மேய்க்கச் சென்ற இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


'ஒருநாள் எதிர்க்கட்சித் தலைவர்' பதவியை குறிவைக்கும் சங்கரி! - சம்பந்தன் விட்டுத் தரக் கோருகிறார்
[Thursday 2018-09-20 17:00]

சம்பந்தன் தனது பதவியை துறந்து, ஒருநாள் அவரது பதவியை எனக்கு தந்து பார்க்கட்டும், அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன் என சவால் விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.


அமெரிக்க டொலருக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் இலங்கை ரூபா!
[Thursday 2018-09-20 17:00]

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரிக்குக் குறி வைக்கிறதாம் அரசாங்கம்!
[Thursday 2018-09-20 17:00]

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வடக்கில் மற்றுமொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்படவுள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, தெரிவித்தார். கொழும்பில் இன்று ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


பதவி விலகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்? - மறுக்கிறது பிரதமர் அலுவலகம்
[Thursday 2018-09-20 16:00]

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை என்று, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தரங்கத்தை காண்பித்த கோப்ரலுக்கு விளக்கமறியல் - சிப்பாய்க்குப் பிணை!
[Thursday 2018-09-20 16:00]

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவிகளிடம் அந்தரங்கப் பகுதியைக் காண்பித்து ​அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இரண்டு படையினரில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் மீது தாக்குதல்! Top News
[Thursday 2018-09-20 16:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகத்தின் பெயர்ப்பலகை மீது, நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று, கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அடித்து நொருக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண் தமிழ்க் கைதிகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய பெண் படை அதிகாரிகள்! - ஜெனிவாவில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி அறிக்கை
[Thursday 2018-09-20 07:00]

விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை, சிறிலங்காவின் பெண் படை அதிகாரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, ஜெனீவாவில் நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


மன்னார் புதைகுழியில் இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்பு! - 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
[Thursday 2018-09-20 07:00]

மன்னார் 'சதொச' வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 136 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில், 14 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது எனக் கண்டறியப்பட்டுள்ளன.


நல்லூரில் தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை மாநகர சபையே ஒழுங்கமைக்கும்! - மேயர் அறிவிப்பு
[Thursday 2018-09-20 07:00]

தியாகதீபம் திலீபனின் இறுதி நினைவு நாள் நிகழ்வுகள், யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும் என்று யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.


சாவகச்சேரியில் நேற்றிரவு விபத்து - இளைஞன் பலி! Top News
[Thursday 2018-09-20 07:00]

சாவகச்சேரி பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான நவநீதராசா வரதன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.


பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பு விழாவில் ஆவா குழுவாம்!
[Thursday 2018-09-20 07:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே,


தமிழ் மக்களிடம் டக்ளஸ் மன்னிப்புக் கோர வேண்டும்! - கஜேந்திரன்
[Thursday 2018-09-20 07:00]

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


கூட்டு எதிரணிக்குள் பிளவு!
[Thursday 2018-09-20 07:00]

கூட்டு எதிரணிக்குள் தற்போது மஹிந்த அணி , கோத்தா அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மல்வத்தை பீடாதிபதியை கண்டியில் சந்தித்து ஆசி பெற்ற அநுரகுமார திசாநாயக்க, 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.


அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
[Thursday 2018-09-20 07:00]

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.


பலாலி குறித்து இறுதி முடிவு இல்லை! - ராஜித சேனாரட்ன
[Thursday 2018-09-20 07:00]

பலாலி விமான நிலையத்தை 70/30 அல்லது 60/40 என்ற அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.


பரீட்சை மோசடி செய்த நாமல் தான் கூட்டு எதிரணியின் வேட்பாளரா?
[Thursday 2018-09-20 07:00]

பரீட்சை மோசடி செய்த நாமல் ராஜபக்ஷ நாட்டின் தலைவராக வேண்டுமா? கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதிபெற்ற அனுபவம் வாயந்த ஒருவர் இல்லையா? என சுற்றுச் சூழல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.


போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் யோசனைக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!
[Wednesday 2018-09-19 18:00]

தமிழ் கைதி

Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா