Untitled Document
April 28, 2024 [GMT]
வயலுக்குள் மர்மமாகத் தோன்றிய பள்ளம்!
[Thursday 2021-06-03 16:00]

மெக்சிகோவில் வயல் நிலத்தில் திடீரென உருவாகியுள்ள மிகப்பெரிய பள்ளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மெக்சிகோவில் உள்ள சாண்டாமரியா என்ற இடத்தில் இந்த பெரும் பள்ளம் உருவாகியுள்ளது.


சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி!
[Wednesday 2021-06-02 20:00]

அவசர கால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோவாக் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.


உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்கள்!
[Wednesday 2021-06-02 20:00]

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டி உள்ளது.


எல்லை தாண்டிய சீன கப்பல்கள்!
[Wednesday 2021-06-02 20:00]

சீன கப்பல்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.


ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா!
[Tuesday 2021-06-01 16:00]

ஐரோப்பிய நாட்டு தலைவர்களை உளவு பார்த்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அமெரிக்காவை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் கேட்டு கொண்டுள்ளன.


சீனாவில் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி!
[Tuesday 2021-06-01 16:00]

சீனாவில் இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா 140 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு, ‘ஒரு குழந்தை’ என்ற கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.


கொலம்பியாவில் ஹெலி விழுந்து 5 பொலிசார் பலி!
[Tuesday 2021-06-01 16:00]

கொலம்பியாவில் போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 5 போலீசார் காண்டாகல்லோ நகரில் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


டார்சன் ஹீரோ ஜோ லாரா விமான விபத்தில் பலி!
[Monday 2021-05-31 18:00]

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது.


அதிர்ந்தது அமெரிக்கா!
[Monday 2021-05-31 18:00]

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகருக்கு வடக்கே 74 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 12.29 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் 41.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


வூஹான் ஆய்வகத்திலிருந்தே கசிந்தது கோவிட்19!
[Monday 2021-05-31 18:00]

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கோவிட்19 என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது' என, பிரிட்டன் உளவு அமைப்புகள் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தடுப்பூசி எடுத்துக்கொண்ட இங்கிலாந்து இளவரசி!
[Sunday 2021-05-30 17:00]

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து நாட்டில் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக 30 வயதிற்கு அதிகமானவர்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இங்கிலாந்து அரசு.


கனடாவில் சாலை விபத்தில் பலியான இளம்பெண்!
[Sunday 2021-05-30 17:00]

கனடாவில் அதிகாலையில் வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஹாலிபக்ஸில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அன்றைய தினம் அதிகாலை 3.35 மணிக்கு 24 வயதான இளம்பெண் மீது வாகனம் மோதியதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.


லண்டனில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற பூ வியாபாரிக்கு நேர்ந்த கதி!
[Sunday 2021-05-30 17:00]

லண்டனில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற பூ வியாபாரி பட்டப்பகலில் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இஸ்லிங்டனில் உள்ள எசெக்ஸ் சாலையில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.


ரொறொன்ரோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம கும்பல்: ஒருவர் பலி, நால்வர் காயம்!
[Sunday 2021-05-30 17:00]

ரொறொன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் ரொறொன்ரோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


தன்னை விட இளம்வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்த போரிஸ் ஜான்சன்!
[Sunday 2021-05-30 17:00]

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) அவரது காதலியான கேரி சைமண்ட்ஸ் எனும் 33 வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(56), தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (32) என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.


நேரலையில் நிர்வாண நிலையில் சிறுநீர் கழித்த கனேடிய எம்.பி!
[Saturday 2021-05-29 17:00]

கனடாவில் ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரலையில் சிறுநீர் கழித்து முகம் சுழிக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் பல நாடுகளில் நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் நேரலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


11 நாடுகள் மீதான பயணத்தடையை நீக்கிய சவுதி!
[Saturday 2021-05-29 17:00]

கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவுதி அரேபியா, தற்போது 11 நாடுகளுக்கு மட்டும் குறித்த தடையை நீக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, பிரித்தானியா, பிரேசில், தென் ஆப்பரிக்கா என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொரோனா மாறுபாடு உருவானதால் உலக நாடுகள் சர்வதேச பயணிங்களுக்கு தடை விதிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.


மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய கனேடிய தாய்!
[Saturday 2021-05-29 17:00]

கனடாவில் தன் வீட்டிற்குள் திருடர்கள் இருவர் நுழைந்துள்ளதாகவும், தன் மகள் பேச்சு மூச்சின்றி கிடப்பதாகவும் பொலிசாரை அழைத்தார் ஒரு பெண். Scarboroughவில் வாழும் சிண்டி அலி என்னும் அந்த பெண்ணின் வீட்டுக்குள் பொலிசார் நுழைந்தபோது, அவரது மகள் Cynara (16) பேச்சு மூச்சின்றி கிடக்க, அவளுக்கு முதலுதவி அளிக்கும்போதே மயங்கிச் சரிந்தார் சிண்டி. பொலிசார் திருடர்களைத் தேட, திருடியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காமல் போனதுடன், திருடர்களும் கிடைக்கவில்லை.


கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலித்து வரும் ஒன்றாரியோ மாகாணம்!
[Saturday 2021-05-29 17:00]

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலித்து வருவதாக ஒன்றாரியோ மாகாணம் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் தளர்த்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஜூன் நடுப்பகுதிக்கு முன்னதாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடியுமா என மாகாண அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவால் அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கள்!
[Saturday 2021-05-29 17:00]

வடகொரியா அரசு மற்ற நாடுகளை விட வித்தியசமான சட்டங்களை நிறைவேற்றும் நாடாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வாழ்வியல் முறை என எதுவும் வெளி உலகுக்கு தெரியவே தெரியாது. அந்தளவிற்கு சர்வாதிகாரத்தனத்துடன் நாட்டை வழிநடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில், கடந்த நாளில் புதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17 கோடியை கடந்தது!
[Saturday 2021-05-29 08:00]

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளது.


சீன அரசுக்கு எதிராக செயல்பட்டதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை!
[Saturday 2021-05-29 08:00]

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இதன் உரிமையாளர் ஜிம்மி லாய். இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.


கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஈரான்!
[Saturday 2021-05-29 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 10,253 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.86 லட்சத்தைக் கடந்துள்ளது.


கனடாவில் மாயமான 4,100 சிறுவர், சிறுமியர்: அதிர்ச்சி சம்பவம்!
[Friday 2021-05-28 16:00]

பள்ளிக்குச் சென்றுவிட்டு பிள்ளைகள் வீடு திரும்பாமல் மாயமாகும் ஒரு நிலைமையை எந்த பெற்றோராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா? அப்படி ஒரு கொடூரம் கனடாவில் நிகழ்ந்துள்ளது... ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுவார்கள். ஒருவேளை, அவர்கள் கொல்லப்படலாம், அல்லது புதிதாக வந்தவர்களுக்கு அடிமைகளாக்கப்படலாம்.


தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு 116 மில்லியன் டொலர் பரிசுத்தொகை அறிவித்த அமெரிக்க மாகாணம்!
[Friday 2021-05-28 16:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், கொரோனா தடுப்பூசி பரிசு தொகையாக 116 மில்லியன் டொலர் அறிவித்துள்ளது. மாகாணத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டே, நாட்டிலேயே மிக அதிக தொகையை பரிசாக அறிவித்துள்ளனர். கலிபோர்னியா மாகாணம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்தும் அடுத்த மாதம் முதல் வெளியேற முடிவு செய்துள்ளது.


பன்னாட்டு அளவில் பயணிக்க தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்த கனேடியர்கள் விருப்பம்!
[Friday 2021-05-28 16:00]

கனடாவில் தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 79 சதவீத கனேடியர்கள் பன்னாட்டு அளவில் பயணிக்க தடுப்பூசி கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளதனை அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


'நாங்கள் செய்தது இனப்படுகொலை தான்' - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜேர்மனி!
[Friday 2021-05-28 16:00]

20 ஆம் நூற்றாண்டில் தென் ஆப்பரிக்க நாடான நமீபியாவில் இனப்படுகொலை செய்ததாக ஜேர்மனி அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நமீபியாவில் அதன் காலனித்துவ கால ஆக்கிரமிப்பின் போது ஜேர்மனி காலனித்துவவாதிகள் பல்லாயிரக்கணக்கான Herero மற்றும் Nama மக்களை கொன்று குவித்தனர்.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 2,967 பேர் பாதிப்பு - 50 பேர் பலி!
[Friday 2021-05-28 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டதோடு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா