Untitled Document
April 28, 2024 [GMT]
இளவரசர் ஹரி கனடாவுக்கு விஜயம்!
[Tuesday 2020-01-21 17:00]

பிரித்தானிய அரச குடும்பத்தின் கடமைகளிலிருந்து விலகி ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயாராகின்ற நிலையில் இளவரசர் ஹரி கனடாவுக்குச் சென்றுள்ளார். இளவரசர் ஹரி இன்று செவ்வாய்க்கிழமை காலை வன்கூவர் தீவில் தனது மனைவி மேகன் மற்றும் அவர்களது எட்டு மாத மகன் ஆர்ச்சியுடன் மீண்டும் இணைந்தார். அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் நிலையில் இருந்து பின்வாங்குவதைத் தவிர உண்மையில் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்த ஹரி, எதிர்வரும் வசந்த காலத்தில் இருந்து அரச குடும்பத்தின் முழுநேர வேலை செய்யும் பொறுப்பில் இருந்து நீங்குகிறார்.


வன்கூவர் கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு!
[Tuesday 2020-01-21 17:00]

வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க, மாகாண அரசு கண்காணிப்பு கிணறுகளை அமைத்து வருகிறது. கோவிச்சன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கோக்ஸிலா நதி அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக வறட்சி போன்ற நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டில் கடவுச்சொல்லே இல்லாமல் பெண்ணிடமிருந்து ரூ.1,50,000 கொள்ளை!
[Tuesday 2020-01-21 08:00]

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய பெண் பறிகொடுத்த டெபிட் மற்றும் கிரெடி கார்டிலிருந்து, கடவுச் சொல்லே இல்லாமல் 1,50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த நேகா சந்திரா என்ற பெண், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது அவரது பை திருடப்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே 3 தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


ஈராக்கில் அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டு வீச்சு!
[Tuesday 2020-01-21 08:00]

ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ஏற்கனவே இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் விழுந்ததாக ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.


சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் காய்ச்சல்: மக்கள் பீதி!
[Tuesday 2020-01-21 08:00]

‘கொரனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அங்கு ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகிறார்கள். இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வுகான் நகரில், 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுடன் சேர்த்து, சீனா முழுவதும் 201 பேருக்கு வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வ எண்ணிக்கையாக இருந்தபோதிலும், வுகான் நகரில் மட்டும் 1,700 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் உலக தொற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வுகான் நகரில் உறவினர் களை பார்த்து விட்டு திரும்பிய பிற நகரங்களை சேர்ந்தவர்களுக்கும் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளது.


மேகன் அரச குடும்பத்தை இழிவுபடுத்தியதாக அவரது தந்தை குற்றச்சாட்டு!
[Monday 2020-01-20 17:00]

இங்கிலாந்து அரசக் குடும்பத்தை மேகன் இழிவுப்படுத்திவிட்டதாக அவர் தந்தை தாமஸ் மார்க்ல் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இளவரசியாக வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும் ஆனால் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பணத்திற்காக மேகன் தூக்கி எறிந்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


5 லட்சம் பயனர்களின் கடவுச்சொல்லை கசியவிட்ட மர்ம நபர் - அதிர்ச்சி தகவல்!
[Monday 2020-01-20 17:00]

இணைய பயன்பாட்டுடன் தொடர்புடைய சர்வர்கள், ரவுட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின், 5 லட்சம் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை, ஹேக்கர் ஒருவன் கசியவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஹேக்கரின் தாக்குதலுக்கு ரிமோட் ஆக்சஸ் நுட்பத்தில் இயங்கும் அமேசான் ரிங் பெல் கேமிரா, ரிங் செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட கண்காணிப்பு கேமிராக்களும் தப்பவில்லை.


ஒன்றாரியோ மாகாணத்தில் கறுப்பு கரடி வசந்த வேட்டையை கொண்டுவர திட்டம்!
[Monday 2020-01-20 17:00]

வழக்கமான கறுப்பு கரடி வசந்த வேட்டையை, நடப்பு ஆண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. வருடாந்த மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இதற்கான தீர்மானம் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜோன் யாகபுஸ்கி இந்த முன்மொழிவினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கரடி வேட்டை 1999ஆம் ஆண்டில் மாகாணத்தால் இரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் 2014ஆம் ஆண்டில், மீண்டும் வசந்த கறுப்பு கரடி வேட்டை பருவம் அறிமுகமானது.


ரஷ்ய விடுதியில் புகுந்த வெந்நீர் - 5 பேர் உயிரிழப்பு!
[Monday 2020-01-20 17:00]

ரஷ்ய நாட்டில் ஹோட்டல் ஒன்றில் வெந்நீர் வெள்ளம் போல புகுந்த விபத்தில், 5 பேர் தீக்காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்ய நாட்டின் Perm நகரில் அமைந்துள்ளது Hotel Caramel. இது ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள சிறிய ஹோட்டல் ஆகும். இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த சுடு நீர் குழாய் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதனால் Caramel ஹோட்டல் அறைகளுக்குள் குபுகுபுவென கொதிக்கும் தண்ணீர் உள்நுழைந்தது.


பிராண்ட்ஃபோர்ட்டில் அதிகரித்து வரும் ஒபியாய்ட் பாவனை!
[Monday 2020-01-20 17:00]

பிராண்ட்ஃபோர்ட்டில், 2020ஆம் ஆண்டின் முதல் 12 நாட்களில் 17 அளவுக்கு அதிகமான ஒபியாய்ட்டை எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிராண்ட்ஃபோர்ட் பொது சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏமனில் மசூதி மீது ஏவுகணை தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்டிருந்த 80 படை வீரர்கள் உயிரிழப்பு!
[Monday 2020-01-20 08:00]

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது. அதிபர் ஆதரவு படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த உள் நாட்டுப்போரில், ஏமன் தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது. அதே நேரத்தில் இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் அப்பாவி பொது மக்கள் ஆவர். போரினால் 31 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர். அங்கு தலைநகர் சனாவில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாரிப் என்ற இடத்தில் ராணுவ முகாமில் ஒரு மசூதி இருந்து வந்தது.


ஆஸ்திரேலியாவில் சேதத்தை ஏற்படுத்தும் ஆலங்கட்டி மழை!
[Monday 2020-01-20 08:00]

காட்டுத் தீயால் பற்றி எரிந்த ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீ தற்போது பெய்த மழையால் ஓரளவிற்கு தணிந்துள்ளது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நகரின் புறநகர் பகுதியான ஈஸ்ட் கிப்ஸ்லான்ட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஆலங்கட்டி மழை பெய்தது. கோழி முட்டை அளவில் விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகள், உணவகங்களின் கூரைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.


அரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர்!
[Monday 2020-01-20 08:00]

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தனர். இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத், சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அரச குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார். இந்த நிலையில் இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி!
[Monday 2020-01-20 08:00]

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கொழும்புக்கு சென்றார். அங்கு பல்வேறு வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்தார். பரஸ்பரம் நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்து பேசினார். இருவரும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், இருநாட்டு ஆயுதப்படையினர், கடலோர காவல் படையினர் ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தினர். தேச பாதுகாப்பு, உளவு தகவல் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர்.


அமெரிக்க பொது தேர்தல் 2020: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!...
[Sunday 2020-01-19 18:00]

வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போதைய நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான போட்டியில் இருப்பவர்களுடைய பிரச்சாரம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவது யார் என்பதை, வரக் கூடிய மாதங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகள் தீர்மானிக்கும். அரசியல் கட்சிக் கூட்டங்கள் முதல், மரபு நெறிகள் வரை, அதிபர் பதவிக்கான தேர்தல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். 2020 அதிபர் பதவிக்கான தேர்தல் எப்போது நடக்கப் போகிறது? அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.


மறைந்த ஈரான் தளபதி சுலைமானியின் இறுதி நொடிகளை விவரித்த டிரம்ப்!
[Sunday 2020-01-19 17:00]

அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின், இறுதி நொடிகளை அமெரிக்க அதிபர் விவரிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சிக்கு நிதிதிரட்டும் வகையில் நன்கொடையாளர்களுக்காக, வெள்ளிக்கிழமை இரவு தனது புளோரிடா இல்லத்தில் விருந்தளித்த அதிபர் டிரம்ப், அவர்களிடம் சுலைமானியின் இறுதி நிமிடங்களை விவரித்துள்ளார்.


சீனாவின் அரண்மனை வளாகத்துக்குள் தடையை மீறி கார் ஓட்டிச் சென்ற பெண்கள்!
[Sunday 2020-01-19 17:00]

சீனாவில் வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனை வளாகத்துக்குள் தடையை மீறி கார் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட 2 பெண்கள் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கின் மையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான அரண்மையை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுவட்டாரத்தில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் சம்மதம்!
[Sunday 2020-01-19 17:00]

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை உக்ரைனிடம் ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெக்ரானில் உக்ரைன் விமானம், ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டதில் 176 பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டியை அந்நாட்டிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.


250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ் பயங்கரவாதியை கைது செய்தது ஈராக் அரசு!
[Sunday 2020-01-19 17:00]

ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தும் உள்ளனர். ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். ஏறக்குறைய 250 கிலோ (560 பவுண்டுகள்) உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.


அமெரிக்காவில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்!
[Sunday 2020-01-19 08:00]

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் 4 பேர் குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


பாகிஸ்தானில் கிறிஸ்துவ பெண்ணை விடுவித்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய 86 இஸ்லாமியர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறை!
[Sunday 2020-01-19 08:00]

தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்ததற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்ற பெண் மீது வழக்குத் தொடரப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


அமெரிக்கா செய்தது கோழைத்தனமான செயல் - ஈரான் குற்றச்சாட்டு!
[Sunday 2020-01-19 08:00]

காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல் எனவும், அவரை போர்க்களத்தில் எதிர்க்க துணிவில்லாததால் அவசரப்பட்டு அமெரிக்கா கொன்று விட்டதாகவும் ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி குற்றம் சாட்டினார். அமெரிக்கா-ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கடந்த 3-ந் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி அமெரிக்கா கொன்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் மோதலால் வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் மூத்த மத தலைவரான அயத்துல்லா அலி காமெனி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினார். இதில் உரையாற்றும்போது அமெரிக்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.


உக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை பகுப்பாய்விற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தல்!
[Saturday 2020-01-18 17:00]

ஈரானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பிரான்சிற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. ஒட்டாவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த கனேடியர்களின் சடலங்களை கனடாவுக்கு அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார். மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ள கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஒருசில நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன், சேதமடைந்த கறுப்புப் பெட்டிகளை ஆய்வு செய்யும் தொழிநுட்பமோ அல்லது நிபுணத்துவம் கொண்டவர்களோ ஈரானில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!
[Saturday 2020-01-18 17:00]

சீனா கடந்த 1949-ம் ஆண்டு முதல் கம்யூனிச நாடாக உள்ளது. இந்த அரசு தொடங்கியது முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சட்டமாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. அதனால் குழந்தைகள் பாதிப்பு விகிதம் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.


விக்டோரியா- ஓக்டன் பாயிண்டிற்கு கொண்டுவரப்படவிருக்கும் முதல் ஹைபிரிட் மின்சார படகுகள்!
[Saturday 2020-01-18 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் ஹைபிரிட் மின்சார படகுகள், விக்டோரியா- ஓக்டன் பாயிண்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை குறித்த படகுகள் கொண்டுவரப்படவுள்ளன. குறித்த படகுகள் ஒவ்வொன்றும் 47 வாகனங்கள் மற்றும் 450 பயணிகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை ஆகும். குறித்த படகு இயங்குவதற்கு, மின்கலங்களில் சேமிக்கப்படும் மின்சாரத்தை உருவாக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. குறித்த ஹைபிரிட் மின்சார படகுகளின் விலை 86.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி!
[Saturday 2020-01-18 17:00]

வருகிற 2050ஆம் ஆண்டுக்குள், 10 லட்சம் பேரை, செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயத்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் ((SpaceX)) நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் ((Elon Musk)) தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "SN1" என்று பெயரிடப்பட்ட, விண்வெளி ஓடத்தை கட்டமைக்கும் பணிகள், டெக்ஸ்சாசில் உள்ள மையத்தில், நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.


உக்ரேன் விமான விபத்தில் பலியான குடும்பங்களுக்கு 25,000 டொலர்கள் நிதியுதவி : ட்ரூடோ!
[Saturday 2020-01-18 17:00]

உக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த தனிநபர்களின் குடும்பங்களுக்கு, உடனடி தேவைகளுக்காக 25,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தனிநபர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் உடனடி தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்படும். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன், ஈரான் இந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


பேசும் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
[Saturday 2020-01-18 08:00]

ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், அந்நாட்டின் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதால், தலைவர்கள் பேசும் சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா