Untitled Document
April 26, 2024 [GMT]
ஐஸ்லாந்தில் சாலை விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 3 பேர் பலி.
[Saturday 2018-12-29 10:00]

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு ஒரு சொகுசு காரில் அனைவரும் பயணம் மேற்கொண்டனர். பரந்த மணல் சமவெளிப் பகுதியான ஸ்கெய்தரசந்தூரில் உள்ள குறுகிய பாலத்தில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலத்தை உடைத்துக்கொண்டு தரையில் விழுந்து நொறுங்கியது.


தைவானிலும் மஞ்சள் அங்கி போராட்டம்.
[Saturday 2018-12-29 10:00]

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர்.அதன்பிறகு மஞ்சள் அங்கி அணிந்த மக்கள் அவர்களுடன் கைகோர்த்ததும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் நடந்த இந்த போராட்டத்துக்கு அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.


அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கிறது - டிரம்ப் பிடிவாதம்!
[Saturday 2018-12-29 10:00]

அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க


சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
[Friday 2018-12-28 22:00]

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19-ம்தேதி முதல் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.


சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் பொருத்தப்பட்ட சீருடைகள்.
[Friday 2018-12-28 22:00]

சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டில் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளியில் நுழைந்தவுடன் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவி புரியும்.


அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக 800 விமானங்கள் ரத்து.
[Friday 2018-12-28 22:00]

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. அதிக அளவில் பனி படர்ந்துள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர அவ்வப்போது பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் காரணமாக 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தலைவர் பலி.
[Friday 2018-12-28 11:00]

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் சீன துணை தூதரகம் உள்ளது. இந்த துணை தூதரகத்தை தகர்ப்பதற்கு 3 பயங்கரவாதிகள் கடந்த மாதம் முயற்சி செய்தனர். அவர்கள், அங்கு தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 2 போலீசார் பலியாகினர். பயங்கரவாதிகளை எதிர்த்து, துணை ராணுவத்தினர் தீரமுடன் சண்டையிட்டனர். அதன் முடிவில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், கராச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


அமெரிக்க
[Friday 2018-12-28 10:00]

புகழ் பெற்ற அமெரிக்க


இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கை.
[Thursday 2018-12-27 21:00]

இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை இரவு எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. அங்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தி உள்ளது. அந்த ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டோவா எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன. இந்த பேரலைகள் அந்த நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.


தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய செய்த ரஷ்ய அதிபர்.
[Thursday 2018-12-27 21:00]

ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது. இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது. அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது. இந்த ஆசை நிறைவேறியுள்ளது. சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.


அண்டார்டிகாவின் கடுங்குளிரில் 1,482 கி.மீ தூரத்தை தனியாக கடந்த தடகள வீரர்.
[Thursday 2018-12-27 21:00]

தனக்கும் பிரிட்டனின் ராணுவ கேப்டனான 49 வயதாகும் லூயிஸ் ரூட்டுக்கும் இடையில் நடந்த கடுமையான போட்டியில் கொலின் ஓ'ப்ராடி வெற்றி பெற்றுள்ளார். தனது இலக்கை 53 நாட்களில் கொலின் அடைந்தார். இவருவருக்கிடையேயான போட்டி கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. இதே பகுதியில் இதே மாதிரியான போட்டியில் ஈடுபட்ட பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக ஆபத்துகளும் நிறைந்த அண்டார்டிகாவின் 1,482 கிலோமீட்டர் தூரத்தை இவர் 53 நாட்களில் கடந்துள்ளார்.


ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்தார் டிரம்ப்.
[Thursday 2018-12-27 21:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.


ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது - உக்ரைன் நாட்டு அதிபர் அறிவிப்பு.
[Thursday 2018-12-27 21:00]

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது.


அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை.
[Thursday 2018-12-27 21:00]

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.


உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது!
[Thursday 2018-12-27 10:00]

குவைத்: உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்பட உள்ளது. தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் குவைத் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.


பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டார்.
[Thursday 2018-12-27 09:00]

பாகிஸ்தான் நாட்டில் முத்தஹிடா குவாமி இயக்கத்தினை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ரசா அபிதி (வயது 46). தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியான இவர் தனது வீட்டின் அருகே காரில் வந்தபொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடந்தன.


சிறுவயதில் நடிக்கும்போது 'பாலியல் தொல்லைக்கு ஆளானேன்' - ஹாலிவுட் நடிகை நாடாலி.
[Thursday 2018-12-27 09:00]

ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையெல்லாம் பின்னாளில் வென்றார். தற்போது அவர் மனம் திறந்து பேசி உள்ளார். அதில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்திலேயே பாலியல் ரீதியாக தொல்லைக்கு ஆளானேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனக்கு வந்த முதல் ரசிகர் கடிதமே கற்பழிப்பு தொடர்பான கற்பனை கதையுடன் வந்தது என கூறி உள்ளார்.


தாய்லாந்தில் குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் - அதன் பின் குகையின் நிலை என்ன?
[Thursday 2018-12-27 09:00]

தாம் லுவாங் மலை குகைதான் இந்த ஆண்டு உலகிலேயே அதிகளவில் செய்திகளில் இடம் பிடித்த ஓர் இடமாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் ஜூலை மாதங்களில் 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் அவர்களின் விதி மாறியது. ஐந்து மாதங்களுக்கு பிறகு தாம் லுவாங் குகைதான் வடக்கு தாய்லாந்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது. குகையினுள் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற ஒரு பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. அங்கிருக்கும் நீர் இயந்திரம் மூலம் உறிஞ்சப்பட்டு மலைக்கு வெளியே கொட்டப்பட்டது. மலையைச் சுற்றியிருந்த காய்கறி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலம் அருவிபோல கொட்டிய நீரால் முழுவதுமாக நிரம்பி வெள்ளக்காடானது.


சிறுவயதில் காணாமல் போன பெண் 32 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டார்.
[Wednesday 2018-12-26 22:00]

பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


வியாபாரத்திற்காக திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்.
[Wednesday 2018-12-26 22:00]

ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இறைச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகின்றன. அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடியது. பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், அடுத்த ஆண்டில் இருந்து வேட்டையை மீண்டும் தொடங்கியது.


அமெரிக்காவில் தீ விபத்தில் சிக்கிய 3 இந்திய மாணவர்கள் இறந்தனர்.
[Wednesday 2018-12-26 22:00]

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு, கிறிஸ்தவ பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது குழந்தைகள் சுவாதிகா நாயக், சுஷான் நாயக், ஜெயா சுஜித் ஆகியோர் அமெரிக்காவின் டென்னெசீ மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரென்ச் கேம்ப் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தனர். குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் என்ற பெண்ணுக்கு சொந்தமாக கோலியர்வில்லி பகுதியில் உள்ள வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக இவர்கள் மூவரும் சென்றிருந்தனர்.


பெற்றோருடன் அமெரிக்க எல்லையை கடக்க முற்பட்ட 8 வயது சிறுவன் மரணம்!
[Wednesday 2018-12-26 11:00]

அமெரிக்காவில் குடியேறும் நோக்கில் பெற்றோருடன் அமெரிக்க எல்லையை கடக்க முற்பட்ட 8 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார் குவாத்தமாலாவைச் சேர்ந்த பெஃலிப்பே அலொன்சோ கோம்ஸ் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்குள் குடியேற முயற்சித்தபோது எல்லைப் பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.


அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத சரிவு.
[Wednesday 2018-12-26 09:00]

குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சந்திக்கின்றன. 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய டொவ் ஜோன்ஸ் பங்குச் சந்தைக் குறியீட்டென் திங்கள்கிழமை 650 புள்ளிகள் வீழ்ந்தது. 1930-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்கு இது மிக மோசமான டிசம்பராக உருவெடுக்க உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல நிதிச் சந்தைகள் கிறிஸ்துமஸை ஒட்டி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டுள்ளன.


போப் ஆண்டவர் வேண்டுகோள் - "இல்லாதவர்களுக்கு இருப்பதை பகிர்ந்து கொடுங்கள்".
[Wednesday 2018-12-26 09:00]

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய நாளில் மக்கள் பலரும் அளவுக்கு அதிகமான பொருட்களை சேர்ப்பதே வாழ்க்கை என கொண்டு இருக்கிறார்கள். தணிக்க முடியாத பேராசையை கொண்டிருக்கிறார்கள்.


இஸ்ரேல் மீது இரவு நேரத்தில் வான்வெளி தாக்குதல் நடத்தியது சிரியா.
[Wednesday 2018-12-26 09:00]

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே, இரவு நேரத்தில் பெருத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சிரியா கூறியுள்ளது. "ராணுவக் கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மூன்று ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளன," என்று சிரியா ராணுவத்தின் தரப்பில் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ, சேதம் உண்டானதாகவோ தெரிவிக்கப்படவில்லை.


பெத்லகேம் நகரில் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...
[Tuesday 2018-12-25 22:00]

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது.


லிபியா வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலி.
[Tuesday 2018-12-25 22:00]

அராபிய வசந்தம் புரட்சியின் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் புரட்சியாளர்களால் லிபியா நாட்டின் அதிபர் தாக்கி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அங்கு


மர்மநபரால் கடத்தப்பட்ட பேருந்து விபத்து:
[Tuesday 2018-12-25 18:00]

சீனாவின் தென்கிழக்கே உள்ள Fujian மாகாணத்தில் கடத்தப்பட்ட பேருந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியூடாக சென்ற பேருந்து ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) 3.20 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தி முனையில் கடத்தியுள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா