Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
50 மில்லியன் டொலர் பரிசைத் தேடி வந்து பெற்றுக் கொண்டார் ஒன்ராறியோ பெண்!
[Wednesday 2012-12-26 07:00]

50 மில்லியன் டொலர் Lotto Max பரிசு பெற்றவர் ரொறாண்ரோவைச் சேர்ந்த ஒரு பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுசன் பிளாம் என்ற ஒன்ராறியோவின் Thornhill பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் தனது கணவருடன் சென்று 50 மில்லியன் டொலர் பரிசுக்காக Lotto Max காசோலையை வாங்கிச் சென்றுள்ளார். குறித்த பெண்ணுக்கு இரண்டு வயது வந்த பிள்ளைகளும், ஐந்து பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.


விளம்பரம் செய்வதற்கு வழுக்கைத் தலையை வாடகைக்கு விடுகிறார் அமெரிக்க இளைஞர்!
[Wednesday 2012-12-26 07:00]

அமெரிக்காவை சேர்ந்த, ஒரு இளைஞர், தன் வழுக்கை தலையில், காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின், நியூயார்க்கை சேர்ந்தவர், பிரான்டன் சிக்கோட்ஸ்கி, 27. "இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டதால், முடி இல்லாத என் தலை பகுதியில், விளம்பரம் செய்து கொள்ளலாம்' என, இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.


தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது - பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் அழுத்தம்!
[Wednesday 2012-12-26 07:00]

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் அரசை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மரண தண்டனையை ரத்து செய்வது என்பது ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன. மரண தண்டனையைக் கைவிடுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு முன்பு இஸ்லாமிய அமைப்புகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று இஸ்லாமிய கொள்கை கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.


கஜகஸ்தானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி!
[Wednesday 2012-12-26 07:00]

கஜகஸ்தானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். கஜகஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஷிம்கென்ட் நகரம் அருகே உஸ்பெகிஸ்தான் எல்லை அருகே, நேற்று பகல் 12.55 மணிக்கு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் எல்லைப் பாதுகாப்பு படை தற்காலிக தலைவர் உள்பட 20 வீரர்கள் விமான ஊழியர்கள் 7 பேர் என, மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர் என்று கஜகஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்று அறிவதற்கான விசாரணை தொடங்கியுள்ளது.


அல்-காய்தாவை ஒடுக்க 35 ஆபிரிக்க நாடுகளுக்கு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா!
[Tuesday 2012-12-25 19:00]

ஆபிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன. பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்து போரிட்டு வரும் அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது.


மண்டேலாவுக்கு இன்னும் இருவாரகால சிகிச்சை தேவை - மருத்துவமனையிலேயே கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்!
[Tuesday 2012-12-25 19:00]

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மேலும் 2வார சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக ‌மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.‌94 வயதான மண்டேலாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் பித்தகற்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர் கிறிஸ்துமஸ் விழாவை மருத்துவமனையில் இருந்து கொண்டாடுகிறார்.


தீப்பிடித்த பர்மிய விமானம் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது தரையிறங்கியது!
[Tuesday 2012-12-25 18:00]

பர்மா தலைநகர் ரங்கூனில் இருந்து ஹெஹோ நகர் நோக்கி சென்ற தனியார் விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் அவசர தரை இறங்கியது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ரங்கூனில் இருந்து ஹெஹோ நகர் நோக்கி 63 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்து. அப்போது விமான நிலையத்தை அடைய சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது.


யூதப் பழங்குடியினர் 50 பேர் இஸ்ரேல் திரும்பினர்!
[Tuesday 2012-12-25 18:00]

இஸ்ரேலில் இருந்து அழிந்து போனதாகக் கூறப்படுகின்ற ஒரு பழங்குடியினத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்திய சமூகம் ஒன்றைச் சேர்ந்த 50 பேர் இன்று தமது பாரம்பரிய தாயகமான இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்றடைந்திருக்கிறார்கள். விவிலியத்தில் கூறப்படுகின்ற ஒரு புராதன காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்ததாகக் கூறப்படும் பினாய் மெனெசா என்னும் இந்த சமூகத்தினர் குகி- சின் மிஷோ என்னும் யூத பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாம் என்று நம்புகிறார்கள்.


இந்தியாவுக்கு ஆதரவாக சீனா மீது அணுகுண்டு வீசத் திட்டமிட்டார் கென்னடி- புதிய தகவலால் பரபரப்பு!
[Tuesday 2012-12-25 08:00]

இந்தியாவின் மீது சீனா படையெடுத்தபோது, அந்நாட்டின் மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்பது குறித்து அதிபர் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு பரிசீலித்த தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்க அதிபராக 1961 முதல் 1963ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜான் எஃப்.கென்னடி.


5 லட்சம் கிலோ எடையுள்ள பாரிய விண்கல்லை நகர்த்தும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள்!
[Tuesday 2012-12-25 08:00]

விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விண்வெளி மையமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும்.


இந்தியா - ரஷியா இடையே 22 ஆயிரம் கோடி ரூபா பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
[Tuesday 2012-12-25 08:00]

இந்தியா - ரஷியா இடையே ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் உள்பட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் கையெழுத்திட்ட பின் ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


வீட்டை எரித்துவிட்டு அணைக்க வந்த தீயணைப்பு படையினரை சுட்டுக்கொன்ற உரிமையாளர்!
[Tuesday 2012-12-25 08:00]

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


வடகொரிய ஏவுகணை 10 ஆயிரம் கி.மீ தூரம் பாயும் - தென்கொரியா தகவல்!
[Monday 2012-12-24 15:00]

வடகொரியா சமீபத்தில் பூமியை ஆராய 3-கட்ட ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஒன்றை ஏவியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து அதை கண்காணித்தன. அந்த ராக்கெட் வெடித்து சிதறியதிலிருந்து கிடைத்த மிச்சங்களை ஆராய்ந்ததில் இருந்து அதன் தாக்கும் திறன் கணக்கிடப்பட்டுள்ளது.


விண்வெளிச் சுற்றுலாவுக்கான கலம் வெற்றிகரமாக சோதனை!
[Monday 2012-12-24 15:00]

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் விசேஷ விண்கலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அமெரிக்காவின் ரிச்சர்ட் பிரான்சன் விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. அதற்கான கட்டணம் தலா ரூ.1 கோடியே 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர்.


பேக்கரியில் கேக் வாங்க நின்ற மக்கள் மீது சிரியப்படைகள் குண்டுவீச்சு - 90 பேர் பலி!
[Monday 2012-12-24 15:00]

சிரியாவில் கடந்த 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், ஒரு பேக்கரி மற்றும் அதை சுற்றியிருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அதில் 90 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அங்கு கேக் வாங்க காத்திருந்தனர். பலியானவர்களின் உடல்கள் ரோடுகளில் சிதறி கிடக்கிறது. அங்கு ரத்த வெள்ளமாக காட்சியளிக்கிறது.


மன்மோகன்சிங் - புடின்: டெல்லி போராட்டத்தினால் இடம்மாறியது சந்திப்பு!
[Monday 2012-12-24 15:00]

டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மன்மோகன் சந்தித்துப் பேச வகுக்கப்பட்டிருந்த திட்டம் மாற்றப்பட்டது. முதலில் ஹைதராபாத் அலுவலகத்தில் இருவரும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.


இராணுவ அதிகாரிகளின் ஆடம்பரங்களுக்கு ஆப்பு - புதிய சீன அதிபர் கெடுபிடி!
[Monday 2012-12-24 07:00]

சீனாவில், ராணுவ அதிகாரிகளின் ஆடம்பர விருந்துகளுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.சீனாவில், சமீபத்தில் நடந்த, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், புதிய அதிபர் மற்றும் துணை அதிபர்கள் அறிவிக்கப்பட்டனர்."ஊழலை ஒழிப்பது தான் என்னுடைய முதல் வேலை' என, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


தலிபான் தளபதியை ஏவுகணை வீசிக் கொன்றார் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி!
[Monday 2012-12-24 07:00]

ஆப்கானிஸ்தானில், நேட்டோ கூட்டுப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, றோயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார்.


நர்ஸ் ஜெசிந்தா தற்கொலைக்கு காரணமான அவுஸ்ரேலிய ரேடியோ ஜாக்கிகள் மீது கிரிமினல் வழக்கு?
[Monday 2012-12-24 07:00]

நர்ஸ் ஜெசிந்தா தற்கொலைக்கு காரணமான அவுஸ்ரேலிய ரேடியோ ஜாக்கிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து லண்டன் போலீசார் பரிசீலித்து வருகின்றனர். இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், லண்டனில் உள்ள கிங்எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அந்த மருத்துவமனையில், ஜெசிந்தா சல்தானா(46), நர்சாக பணியாற்றி வந்தார். இளவரசிக்கு சிகிச்சை அளிக்கும்போது, இவரும் டாக்டர்களுடன் இருந்துள்ளார்.


50 மில்லியன் டொலர் பரிசு பெற்ற அதிஷ்டசாலியை தேடுகிறது கனடாவின் லொட்டோ மக்ஸ் ஜாக்பொட்!
[Monday 2012-12-24 07:00]

50 மில்லியன் டொலர் பரிசு பெற்றுள்ள ரொறாண்ரோ வாசியை லொட்டோ மக்ஸ் ஜாக்பொட் நிர்வாகிகள் தேடிவருகின்றனர். 50 மில்லியன் டொலர் பரிசு பெற்றுள்ள லொட்டோ மேக்ஸ் ஜாக்பொட் பரிசுச் சீட்டு ரொறான்ரோவில் தான் விற்பனையாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சீட்டிழுப்பில் பரிசு பெற்ற சீட்டின் எண் 7,8,17,18,20,40,41. போனஸ் 33 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசான 50 மில்லியன் டொலர்களை வென்றவர் இன்னும் பரிசுக்கு உரிமைகோரவில்லை. இந்தச் சீட்டு கேம்பிரிட்ஜ் பகுதியில் விற்பனையானதாக கூறப்படுகிறது.


ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் - உறைபனிப் பொழிவுக்கு 200 பேர்வரை பலி!
[Sunday 2012-12-23 22:00]

ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர்.


சோமாலியாவில் படகு கவிழ்ந்து 55 பேர் பலி!
[Sunday 2012-12-23 20:00]

சோமாலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பசாசோ துறைமுகத்திலிருந்து ஏடன் வளைகுடா கடல் வழியாகச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 23 பேரின் உடல்களை மீட்புப்படையினர் வெளியே எடுத்துள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. 5 பேர் மட்டும் நீந்தி கரையேறியுள்ளனர்.


பாகிஸ்தான் அணி இந்தியா சென்றால் தாக்குதல் நடத்துவோம் - தலிபான் எச்சரிக்கை!
[Sunday 2012-12-23 19:00]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் விளையாட உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் தெரிக் ஈ தலிபான் தீவிரவாத அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


இரகசியங்களைத் திருடிய சமையல்காரருக்கு மன்னிப்பு அளித்தார் போப்!
[Sunday 2012-12-23 19:00]

ஆவணங்களை திருடிய தனது சமையல்காரரை போப் ஆண்டவர் மன்னித்தார். வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டிடம் தலைமை சமையல்காரர் ஆக பணி புரிந்தவர் பாலோ கபிரியேல். இவர் போப் ஆண்டவரின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி அவற்றை பத்திரிகைகளில் வெளியிட்டார்.


பிரான்சில் எழுதப் படிக்கத் தெரியாதோர் தொகை 2.5 மில்லியன்! - ஆச்சரியமான புள்ளி விபரம்!
[Sunday 2012-12-23 08:00]

இது ஒரு ஆச்சரியமான புள்ளி விபரம் . புள்ளிவிபரம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் தேசிய நிறுவனம் (Institut national de la statistique et des études économiques (Insee)) பிரான்சில் 18 வயது முதல் 65 வயது வரையானவர்களில் 7 சதவீதமானமானவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று தனது ஆய்வின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியுள்ளது. இது 2.5 மில்லியன் பேராகும். ஆனாலும் இதற்கு முதல் Insee 2004ம் ஆண்டில் செய்த ஆய்வில் பிரான்சில் 18 வயது முதல் 65 வயதுவரையானவர்களில் 9 சதவீதமானோர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எனத் தெரிவித்திருந்தது.


டிவிட்டரை விட்டு ஓடிய கனேடிய எம்.பி!
[Sunday 2012-12-23 07:00]

கனடாவின் என் டி பி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட் மார்டின் டிவிட்டர் சமூகதளத்திலிருந்து வெளியேறியுள்ளார். இவர் எப்போதும் ஏதாவது பேசி பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் நடந்த ஒரு நிதி வழங்கும் விழாவுக்கு அவரை அழைக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த மார்டின், டிவிட்டர் மூலம் தகாதவார்த்தைகளை பயன்படுத்தி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.


ஒபாமாவின் சிறப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்!
[Sunday 2012-12-23 07:00]

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிறப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்மிதா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சர்வதேச மேம்பாட்டு கவுன்சில் ஒன்றை உருவாக்கியுள்ளார்.


குரானை அவமதித்த இளைஞரை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்!
[Sunday 2012-12-23 07:00]

பாகிஸ்தானில் மத அவதூறுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரை 1000 பேர் கொண்ட கும்பல் உயிரோடு எரித்துக் கொன்றது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சீதா கிராமத்துக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை வந்தார். அவர் அங்குள்ள மசூதியில் வழிபாடு நடத்திவிட்டு அங்கேயே இரவு தங்கினார்.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா