Untitled Document
October 24, 2026 [GMT]
 
ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள்!
[Thursday 2026-08-20 18:00]

பொதுவாகவே செரிமான மண்டலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதற்கு உதவக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தான் நார்ச்சத்து (fibre). ஆரோக்கியமான குடல் என்பது வயிற்றுப் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, சீரான மனநிலை மற்றும் ஆரோக்கியமான சருமத்துடனும் அது நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில், செரிமான மண்டல நிபுணரான டாக்டர் பால் (Dr. Pal), குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளைப் பரிந்துரைத்துள்ளார்.


கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால் பூமிக்கு என்ன ஆகும்?
[Thursday 2026-08-20 08:00]

பூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் சுமார் 71% பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகின் ஐந்து பெருங்கடல்கள் உள்ளிட்ட எண்ணற்ற கடல்களில் உப்பு நீரே நிறைந்துள்ளது. ஆனால், ஒருநாள் பூமியில் உள்ள அனைத்து கடல்நீரும் திடீரென நன்னீராக மாறிவிட்டால் என்ன நடக்கும் என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?


டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா: வீட்டிலேயே செய்வது எப்படி?
[Tuesday 2026-08-18 16:00]

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?அப்படியானால், ஒருமுறை இந்த டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா செய்து பாருங்கள். செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். டீ கடை இனிப்பு போண்டா செய்முறையை எளிய படிமுறைகளாக இந்த பதிவில் பார்க்கலாம்.


பீர் பாட்டில்களின் நிறத்திற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா!
[Monday 2026-08-17 17:00]

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இதை அருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். பீரில் மற்ற சில மதுபானங்களைக் காட்டிலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதும், அதன் சுவையும் பலரைக் கவரும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.


சன்டே ஸ்பெஷல்: கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு!
[Sunday 2026-08-16 17:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒரு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. வாரம் முழுவதும் வேலை, பள்ளி என பரபரப்பாக இருக்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ரசித்து சாப்பிடுவதும் ஒரு சிறிய கொண்டாட்டமாகவே மாறிவிடுகிறது. இன்றும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?எப்போதும் செய்வது போல சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 என ஒரே மாதிரியான உணவுகளைச் செய்வதற்குப் பதிலாக, இந்த முறை குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் சற்று வித்தியாசமான, மணமணக்கும் மற்றும் சுவையான சிக்கன் சைடு டிஷ் ஒன்றைச் செய்து பார்க்கலாம்.


உடல் எடை முதல் சரும ஆரோக்கியம் வரை: மக்கானாவின் அற்புத நன்மைகள்!
[Friday 2026-08-14 16:00]

அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பல்வேறு காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் மக்கானா (Makhana) என்ற உணவுப் பொருள் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, அதிக கவனம் பெற்று வருகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், எடை மேலாண்மைக்கும், சத்தான சிற்றுண்டியாகவும் மக்கானா பரிந்துரைக்கப்படுவது அதிகரித்துள்ளது. மக்கானா (Makhana) எனப்படுவது தாமரை காயிலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை விதையாகும். அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு!
[Thursday 2026-08-13 16:00]

இன்றைய காலகட்டத்தில் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, முறையற்ற உணவுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தலைமுடியைப் பராமரிப்பதில் நாம் செய்யும் சில தவறுகள் போன்ற பல காரணிகள் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.


இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் கட்டாயமாக பப்பாளியை தொடாதீர்கள்!
[Wednesday 2026-08-12 16:00]

எல்லா காலகட்டங்களிலும் மிக மிக குறைவாகவும் எல்லோரும் எளிதாக வாங்கி உடனடியாக சாப்பிடக்கூடிய பழமாக பப்பாளி பழம் இருக்கிறது. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, சி, இ போன்ற நிறைய சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. மேலும், இதில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும், பாப்பைன் என்னும் நொதிப் பொருளும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை தினமும் நாம் ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகள் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரிக்கிறது.


செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!
[Tuesday 2026-08-11 16:00]

கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது. கத்திரிக்காய் வைத்து செய்யப்படும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். அந்த வகையில், சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தலையில் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா?
[Monday 2026-08-10 16:00]

தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக முடி உதிர் தலை கட்டுப்படுத்தவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு. அதாவது முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் வரும் என்ற ஒரு செய்தி உள்ளது. உண்மையில் பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் நாம் எண்ணெய் தேய்க்கலாமா அதை பற்றி பார்ப்போம்.


நாவூரும் சுவையில் கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் குழம்பு!
[Sunday 2026-08-09 17:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் சற்று ஸ்பெஷலாக மட்டன் அல்லது சிக்கன் செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அப்படியானால், வழக்கமான குழம்பைத் தவிர்த்து ஒருமுறை கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை செய்து பாருங்கள். நறுமணமிக்க மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் இந்த நாடன் சிக்கன் கறி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அந்த வகையில், வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் குஷியாக்கும் கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை எளிமையாக எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


உடல் எடை குறைக்க உதவும் பச்சை பட்டாணி கிரேவி!
[Saturday 2026-08-08 16:00]

பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், கலோரிகள் குறைவாகவே உள்ளன. மேலும், நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ, கே, மாங்கனீஸ், இரும்புச்சத்து, போலேட், தயமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலையும் குறைக்கிறது.


இலவங்கப்பட்டையின் மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும்!
[Friday 2026-08-07 16:00]

health benefits of cinnamon : நமது சமையலறையில் மணத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, உணவின் சுவையையும் நறுமணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இலவங்கப்பட்டை, இன்று நவீன மருத்துவ ஆய்வுகளாலும் பல நன்மைகள் கொண்ட இயற்கை மூலிகையாகக் கருதப்படுகிறது.


அரிசி இல்லாமல் புரதம் நிறைந்த சிக்கன் புலாவ்!
[Thursday 2026-08-06 16:00]

ஆதிரா சேதுமாதவன்(Aathira Sethumadhavan), சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் உங்களுக்கான சுவையான அதேவேளை புரதச்சத்து நிறைந்த உணவு எப்படி செய்து என பரிந்துரைக்கிறார். கார்போஹைட்ரேட் குறைவாக புரதம் நிறைந்த சிக்கன் புலாவ் உணவை நாவூறும் ருசியிலும் மணத்திலும் தயாரிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது பாரம்பரிய அரிசிக்கு பதிலாக துருவிய காலிபிளவரை பயன்படுத்துவதால் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதுடன் முழுமையான சுவையையும் வழங்குகிறது.


Chia Seeds Water: 14 நாட்களில் உடலில் நடக்கும் அதிசயங்கள்!
[Wednesday 2026-08-05 16:00]

Chia Seeds Water Benefits: சியா விதைகளை தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கம் மிகவும் பிரபலமாகி வருகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த விதைகள், உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகள், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.


காரசாரமான கோலாப்பூரி மட்டன் குழம்பு செய்முறை!
[Tuesday 2026-08-04 16:00]

Kolhapuri Mutton Masala : ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவம் சமைப்பது ஒரு வழக்கமாக இருக்கும். குறிப்பாக மட்டன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பை செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக, காரமும் மணமும் நிறைந்த கோலாப்பூரி ஸ்டைல் மட்டன் குழம்பை செய்து பாருங்கள். பொதுவாக ரெஸ்டாரண்ட்களில் மட்டுமே சுவைக்கக் கிடைக்கும் இந்த கோலாப்பூரி மட்டன் குழம்பை, மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். இது இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி, நாண், சாதம் என எந்த உணவுடன் பக்காவாக பொருந்தும் இந்த குழம்பின் சிறப்பே அதன் நறுமணமும், காரம் கலந்த மசாலா சுவையும்தான். எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


ஆடிப்பெருக்கு 2026: தமிழர்களின் பாரம்பரிய திருநாளின் சிறப்புகள்!
[Monday 2026-08-03 16:00]

Aadi Perukku 2026: தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு மரபுகளைப் பிரதிபலிக்கும் முக்கியமான திருநாள்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அறியப்படுகின்றது. தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, இயற்கைக்கும், குறிப்பாக உயிரின் ஆதாரமான நீருக்கும் நன்றி செலுத்தும் நாளாகப் போற்றப்படுகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடப்படுகிறது. 'ஆடிப்பெருக்கு' என்ற பெயரே அதன் பொருளை உணர்த்துகிறது. 'பெருக்கு' என்பது உயர்தல், நிறைந்து வழிதல், செழித்து பெருகுதல் என்பதைக் குறிக்கிறது.


ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீர் கிரேவி!
[Sunday 2026-08-02 07:00]

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு பன்னீர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாக கருதப்படுகிறது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த உணவு, பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக வளரவும், அவற்றின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அளவோடு பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும். அதேபோல், பன்னீர் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசைகளின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் உடலின் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


தினசரி ஒரு கொய்யா சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்!
[Saturday 2026-08-01 15:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்ததே. விலையுயர்ந்த பழங்களை விடவும் எல்லா காலங்களிலும் மலிவான விலையிலேயே கிடைக்கக்கூடிய கொய்யாவில் அதிகளவில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது.


"வலி நிவாரணி முதல் ஞயாபக சக்தி வரை" - வெற்றிலையில் கிடைக்கும் நன்மைகள்!
[Friday 2026-07-31 16:00]

கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில், வெற்றிலையை சாப்பிடுவதால் உடலிற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.


பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அசத்தல் ரெசிபி!
[Thursday 2026-07-30 17:00]

பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். அதனால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காய், குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவாகவும் அறியப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும். பொதுவாக பெரும்பாலானவர்கள் பாகற்காயை பொரியலாக மட்டுமே செய்து சாப்பிட்டிப்பார்கள்.


சுவை நிறைந்த சப்பாத்தி கள்ளி பழம்: என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
[Wednesday 2026-07-29 16:00]

சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்றும் அழைக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில், இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்தப் பழம் வறண்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஆடு, மாடு மேய்க்கும் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இதை புத்துணர்ச்சி தரும் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.


பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத 7 உணவுகள்!
[Tuesday 2026-07-28 15:00]

பீப் என்பது அதிக புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிவப்பு இறைச்சி வகையாகும். பீப்பில் உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன. இது தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது, உடல் வலிமையைக் கூட்டுகிறது மற்றும் ஆற்றலைத் தருகிறது. எனவே, பீப் சாப்பிட்ட உடனே சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அஜீரணம், வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வகையில், பீப் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று குறித்து பார்க்கலாம்.


தினமும் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-07-27 16:00]

ஏலக்காய் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள் மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், குறைந்த அளவிலான கலோரிகளையும் அவசியமான தாதுக்களையும் வழங்குகிறது.


முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்!
[Sunday 2026-07-26 19:00]

மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.


இரவில் வெந்நீர் குடித்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்!
[Saturday 2026-07-25 17:00]

தினமும் இரவில் வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வெந்நீர் அருந்துவது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இவை உடல் நலத்திற்கு மிகவும் சிறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் காலையில் எழுந்ததும் இல்லாமல், இரவில் தூங்கும் முன்பு வெந்நீர் குடிப்பது பல நன்மையினை அளிக்கின்றதாம்.


கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா?
[Friday 2026-07-24 16:00]

தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். நாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட ஒரு பொருள் தான் மிளகு. இதை நாம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கிறது. இது மசாலாக்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது நம் பாரம்பரிய உணவுகளில் நிறைய சேர்ப்போம்.


நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? - மருத்துவர்களின் எச்சரிக்கை!
[Thursday 2026-07-23 16:00]

நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வேகமான வாழ்க்கையில் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் பலரும் செல்கின்றனர். சில இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் நூடுல்ஸை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். ஏனெனில் இதனை சீக்கிரம் தயாரிப்பதுடன், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும் காளான் பட்டாணி மசாலா!
[Wednesday 2026-07-22 16:00]

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக காணப்படுகின்றது. சுவை மட்டுமல்லாமல், காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற முக்கியமான பி-வகை வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.


மணமணக்கும் பன்னீர் பிரியாணி!
[Tuesday 2026-07-21 16:00]

சைவ பிரியர்களுக்கு பிடித்தமான பனீர் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பிரியாணி இருக்கின்றது. தற்போது பகல் நேரம் மட்டுமின்றி நள்ளிரவிலும் அதிகளவில் பிரியாணி கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் சாப்பிடும் வழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. சிறிது ஸ்ரெஸ்ஸாக இருந்தாலும் உடனே சென்று பிரியாணியை சாப்பிட்டு மனதை பக்குவ நிலைக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். இவ்வாறு பிரியாணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில், பனீர் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா