Untitled Document
May 20, 2026 [GMT]
 
உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு இதுதான்!
[Wednesday 2026-02-18 15:00]

பொதுவாகவே உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்று தனித்தனியே தங்களின் தொழிலை சீராக செய்ய வேண்டியது அவசியம். அந்தவகையில், உடலில் அதிகப்படியான தொழிலை செய்யும் உறுப்புகளுள் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது. உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்றான கல்லீரல் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலை செய்கின்றது.


வெயில் காலங்களில் மண்பானை தண்ணீர் ஏன் சிறந்தது?
[Tuesday 2026-02-17 16:00]

மண்பானை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மண்பானை எனப்படுவது, களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரம் ஆகும். இதில் சமையல் செய்வது, தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது என்பதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவை உடல் ஆரோக்கியத்தினை வலுப்படுத்துகின்றது. இந்த பானையில் தண்ணீர் சேமித்து குடித்து வர பல ஆரோக்கிய நன்மையினை பெற முடியும். மண்பானைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால் இயற்கை முறையில் தண்ணீர் குளிர்விக்கப்படுகின்றது.


சளி, இருமலுக்கு உடனே முடிவு கட்டும் தூதுவளை!
[Monday 2026-02-16 15:00]

பொதுவாகவே மூலிகைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு நிச்சயம் தூதுவளையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமல் ஏற்பட்டு வாட்டி எடுக்கும். உடல் வலிமையாக இருப்பவர்களுமே சளி, காய்ச்சல் ஏற்படும் போது குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள். சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதில் தூதுவளை சிறந்த மூலிகையாக அறியப்படுகின்றது.


கண் பார்வையை சீராக்கும் கேரட் பொரியல்!
[Saturday 2026-02-14 17:00]

அன்றாடம் உணவுகளில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் கேரட் முக்கிய இடம் வகிக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் இதுவும் ஒன்று. கேரட்டில் நமது உடலுக்கு தேவையான பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் செரிந்து காணப்படுகின்றது. மேலும் கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் நீர்சத்துக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுவதுடன் செரிமான ஆரோக்கயத்தையும் மேம்படுத்துகின்றது.


கோதுமை மாவு ரொட்டிகள் உடலுக்கு நல்லதா?
[Friday 2026-02-13 15:00]

நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் கோதுமை மாவு ரொட்டிகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உண்மையில் எவ்வளவு நல்லது என்பதை குடல் நிபுணர் விளக்கி உள்ளார். பொதுவாக நாம் இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் ஷப்பாத்தி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவோம். இது சிலர் டயடில் இருப்பதற்கும் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் நாம் அடிக்கடி கோதுமை மாவில் செய்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்குமா என்பது பலரும் அறியாத விடயம்.


தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?
[Thursday 2026-02-12 16:00]

தொப்பையினை மிகவும் சுலபமான முறையில் குறைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. வேகமாக அதிகரித்துவிடும் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது. அதிலும் தொப்பை கொழுப்பு அதிகமாகிவிட்டால் அதை எளிதில் கரைக்க முடிவதில்லை. ஆதலால் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி நிலையம் செல்வது, உணவில் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.


நீரிழிவு நோயாளிகள் ராகி கூழ் குடிக்கலாமா?
[Wednesday 2026-02-11 15:00]

சக்கரை நோயாளிகள் ராகி கூழ் குடிப்பதால் அவர்களுடைய நீரிழிவு நோய் குணமாகுமா இல்லை அதிகரிக்குமா என்பதை பதிவில் பார்க்கலாம். சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு உணவுகள் பற்றிய வழிப்புணர்வு மிகவும் முக்கியம். 2025ம் ஆண்டில் இந்தியாவில் எடக்கபட்ட கணக்கின்படி பெண்கள் ஆண்கள் என இருபாலாரும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனுர் என கூஙறப்படுகின்றது.


முடியின் நீளத்தை அதிகரிக்கும் இந்த 3 விதைகள்!
[Monday 2026-02-09 15:00]

நீண்ட அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு மூன்று விதைகள் சாப்பிட்டால் போதும் எனப்படுகின்றது. தலைமுடி நம் அழகை மேம்படுத்துகிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நமது தலைமுடி நமக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு தலைமுடி பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாகி விட்டது. இதற்கு ஒரு காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ரசாயன அடிப்படையிலான பொருட்களின் அதிகப்படியான பயன்பாடுதான்.


இறாலில் உள்ள நரம்பை நீக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
[Sunday 2026-02-08 17:00]

இந்த உலகில் இருக்கும் மனிதர்களுக்கு கடல் உணவு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அசைவ உணவுகளில் அதிகம் பேர் விரும்பும் ஒன்று இறால். ஏனென்றால் இறாலில் சுவை மற்றும் உடலில் தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. ஆனால் அதை சுத்தம் செய்வதும் குறிப்பாக அதிலுள்ள கருப்பு நரம்பை எடுப்பது மிகவும் கடுமையான ஒன்று. அந்த கருப்பு நிற நரம்பு தான் அதின் செரிமான பாதையாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த நரம்பில் தான் கழிவுகள் மற்றும் செரிமானம் ஆகாத உணவுகள் இருக்குமாம்.


பக்கவாதம் வராமல் இருக்க ஜப்பானியர்கள் என்ன செய்கின்றனர்?
[Saturday 2026-02-07 05:00]

பக்கவாதம் வராமல் இருப்பதற்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் வழியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு பிரச்சனைகள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான் பக்க வாதத்திற்கு காரணமாகும். அதே போன்று இதய ஆரோக்கியம் சரியாக இல்லை என்றாலும் பக்கவாதம் அபாயம் ஏற்படும். அதாவது ரத்தக்குழாயில் அடைப்பு, சீரற்ற இதய துடிப்பு இவற்றினால் இஸ்கிமிக் பக்வாதம் ஏற்படலாம்.


தினமும் ரசம் சாதம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
[Friday 2026-02-06 15:00]

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம். பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்கு நிச்சம் ரசம் இல்லாமல் இருக்காது. அப்படி வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் போன்ற முக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், செரிமான அமைப்பின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரியும்.


வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய்: நறுமணத்துடன் எப்படி செய்வது?
[Thursday 2026-02-05 15:00]

வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் வீட்டிலேயே எப்படி கலப்படம் இல்லாத நெய் செய்யலாம் என்பதை பார்க்கலாம். தமிழர்களின் உணவு பண்பாட்டில் நெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நாம் கடைகளில் வாங்கும் போது சிலது கலப்படம் செய்து விற்கப்படுகின்றது. இந்த காரணத்தினால் பலரும் வீட்டில் சிரமத்தை பார்க்காமல் நெய் தயாரிக்கின்றனர். அப்படி கலப்படம் இல்லாத அரோக்கியமான நெய் எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.


ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி!
[Wednesday 2026-02-04 15:00]

காலையில் ஆரோக்கியமான சத்தான சட்னி செய்ய ஆசைப்பட்டால் வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடுங்க. வீட்டில் எப்போதும் இட்லி தோசை செய்தால் கட்டாயம் எதாவது ஒரு சட்னி செய்வது வழக்கம். ஆனால் எல்லோரும் மிகவும் இலகுவாக இருக்கும் தேங்காய் சட்னியை தான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் என்ன சட்னி செய்தாலும் வேர்க்கடலை சட்னி தரும் சுவை வேறு எந்த சட்னியும் தராது. வேர்க்கடலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.


நாவூரும் சுவையில் கொங்குநாடு கோழிக்குழம்பு!
[Tuesday 2026-02-03 16:00]

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலாவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக வித்தியாசமான முறையில் சமைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். அந்தவயைில், இன்று வீட்டில் உள்ள சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், கொங்கு நாடு கோழி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.


கல் உப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு வருமா?
[Monday 2026-02-02 16:00]

எல்லோரது வீட்டிலும் கல் உப்பு மிகவும் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு சமையல் பொருளாகும். ஆரோக்கியமான உணவை சாப்பிட அனைவரும் கல் உப்பை உணவில் சேர்த்து கொள்வார்கள். அதிலும் கல் உப்பு சேர்த்தால் தான் உணவில் அதிகமான சுவை கிடைக்கும் என நினைத்து அனேகமான மக்கள் உணவில் கல் உப்பை சேர்க்கின்றனர். கல் உப்பு சாப்பிடுவது நல்லது, ஆனால் அதை நீண்ட காலமாக உட்கொள்வது பாதுகாப்பானதா என்பதை யாராவது யோசித்து உள்ளீர்களா? இந்த கல் உப்பில் உள்ள தாதுக்கள் இரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.


ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுக்கு காரணமான ஒற்றை சூப்!
[Sunday 2026-02-01 17:00]

ஜப்பானியர்கள் தங்களது நீண்ட கால ஆயுளுக்கு எடுத்துக் கொள்ளும் சீக்ரெட் சூப்பான மிசோ சூப் எவ்வாறு செய்வது என்பதையும் இதன் பயன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஜப்பான் மக்களைப் பார்த்து மற்ற நாடுகளில் உள்ள மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கை முறை, இளமை, அழகு, கல்வி, ஆக்கம், கண்டுபிடிப்பு என அனைத்தும் வித்தியாசமாகவும், மற்றவர்களை வாயடைக்க வைக்கும் நிலையிலும் இருக்கும்.


"வேகவைத்த அரிசி நீரில் இந்த பொருளை கலந்து குடிங்க" - நன்மைகள் ஏராளம்!
[Saturday 2026-01-31 17:00]

அரியை வேகவைத்த பின்னர் அதன் தண்ணீரை சிலர் சிங்கில் ஊற்றி விடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த அரிசி வேக வைத்த நீரில் பல நன்மைகள் உள்ளது. ஆயுர்வேதத்தில் அரிசி நீர் ஒரு அமிர்தமாகக் கருதப்படுகிறது. இது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குகிறது. குறிப்பாக செரிமானத்தை மேம்படுத்துதல், பலவீனத்தை நீக்குதல் மற்றும் உடலை குளிர்வித்தல் போன்ற வேலைகளை செய்கிறது.


தூங்கும் முன்பு இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
[Friday 2026-01-30 15:00]

இரவில் தூங்கும் முன்பு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் நள்ளிரவில் சாப்பிடுவது, இரவு நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது இவற்றினால் சரியான தூக்கம் இல்லாமல் பலரும் கஷ்டப்படுகின்றனர். பலரது வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள் மாறியுள்ளது. இரவு வேலை என்பதால் பகலில் தூங்கிவிட்டு, நள்ளிரவில் செரிமானம் ஆகாத உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


அடர்த்தியான கூந்தலுக்கு ஸ்ருதி ஹாசன் என்ன செய்றாங்கன்னு தெரியமா?
[Thursday 2026-01-29 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் கூந்தல் மீது தனி பிரியம் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான விடயம் தான். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் உதிர்வுக்கு கூந்தல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கின்றது.


அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
[Wednesday 2026-01-28 18:00]

தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் பட்டியலில், தைராய்டு புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. தைராய்டு சுரப்பி எனப்படுவது, கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராய்டு சுருப்பிகளில் ஏற்படும் கட்டி, தைராய்டு புற்றுநோய் எனப்படுகிறது. உயிர் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ள, எளிதில் சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக அறியப்படும் இந்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது மிகவும் சவாலானதாகவே இருக்கும்.


உப்பு காலாவதியாகுமா?
[Tuesday 2026-01-27 16:00]

உணவுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த உப்பு காலவதியாகுமா என்ற சந்தேகம் யாருக்காவது வந்துள்ளதா? அதை பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம். சமையலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் உப்பு. நாம் எவ்வளவு விலைமதிப்பான உணவை வாங்கினாலும் சமைத்தாலும் அதில் ஒரு சொட்டு உப்பு இல்லை என்றால் அது குப்பையில் தான் போட வேண்டும். அது தான் "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என ஒரு தமிழ் பழமொழி உள்ளது.


குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா?
[Monday 2026-01-26 15:00]

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் தயிர் மிகவும் முக்கியமானது ஆகும். பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஆனால் சிலருக்கு தயிரை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறு தயிர் எடுத்துக் கொள்வதால் சளி பிடிக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது.


குழந்தைகள் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மருந்துகள்!
[Sunday 2026-01-25 17:00]

வீட்டில் நாம் அவசர தேவைகளுக்காக சில மருந்துகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன் பட்டியலை பதிவில் பார்க்கலாம். பொதுவாக அவசர கால தேவைக்காக சில அடிப்படை மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் இது மிகவும் அவசியம். காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிறு உடல்நலக் குறைகள் அடிக்கடி ஏற்படக்கூடும். குளிர்காலம் மற்றும் பனிக்காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் அதிகமாக காணப்படும்.


மருத பட்டை நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
[Saturday 2026-01-24 17:00]

மருதப்பட்டை பல ஆயுள்வேத நன்மைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இதை அவித்து அந்த தண்ணீரை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் மருதப் பட்டை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக இதயத்திற்கு, இது ஒரு மூலிகையாகக் கருதப்படுகிறது. மருதப்பட்டையை உட்கொள்வது இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மருதப்பட்டை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


கீரையில் இப்படி சட்னி வைத்து சாப்பிடுங்க!
[Friday 2026-01-23 16:00]

முருங்கை கீரையை வைத்து சுவையான சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றது. அதிலும் முருங்கை கீரையில் அதிக சத்துக்கள் காணப்படுவதுடன், குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் அனைவருக்கும் சிறந்ததாகவும் இருக்கின்றது. முருங்கை கீரையை பொரியல், கூட்டு என வைத்து சாப்பிட்டிருக்கும் நிலையில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


100 கிராம் கருவாடு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
[Thursday 2026-01-22 16:00]

அசைவ பிரியர்களில் சிலருக்கு மிகவும் பிடித்தது கருவாடு தான். கருவாடு விலை குறைவாகவும் சந்தையில் கிடைக்கிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு சாப்பிடும் பழக்கம் மிகவும் அதிகம். மீனை காய வைத்து பெறப்படும் இந்த கருவாட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பத பலருக்கும் தெரியாது. கருவாட்டு குழம்பு கருவாட்டு தொக்கு சாதத்துடன் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருப்பதுடன் சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றது.


நெல்லையின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு!
[Tuesday 2026-01-20 17:00]

திருநெல்வேலியின் பாரம்பரிய கருப்பட்டி குழல் புட்டு, நீராவியில் வேக வைக்கப்படும் சத்தான உணவு இதை செய்யும் முறை பற்றி பார்க்கலாம். புட்டு என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய காலை உணவாகும். காலப்போக்கில் இது தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் அதிகமாக பிரபலமானது. எளிமையான பொருட்களால் தயாரிக்கப்படும் புட்டு, சத்தும் சுவையும் நிறைந்த உணவாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்பட்டு உண்ணப்படுகின்றது.


கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்!
[Tuesday 2026-01-20 10:00]

கருப்பு அரிசியில் பல ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் அது நீரிழிவு நோயாளாகளுக்கு எகந்ததா என்பதை பதிவில் பார்க்கலாம். நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில் கருப்பு நிற அரிசி விகையைச் சார்ந்தது இந்த கருப்பு கவுனி. இந்த அரிசி வகை சீனாவில் இருந்து வந்தது என்றும் அதை ஆரம்ப காலத்தில் மன்னர்கள் மட்டும் சாப்பிடும் அரிசி வகையாக இருந்தது என்நு கூறப்படுகிறது.


பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்?
[Sunday 2026-01-18 16:00]

பெண்கள் இயற்கையாகவே அழகு என்றாலும், அவர்கள் இந்த ஆடை, அலங்காரம் எல்லாம் கூடுதல் அழகுதான். அப்படி ஒரு அழகுதான் மூக்கு குத்துவது. முந்தைய காலத்தில் எல்லாம் கட்டாயம் 2 பக்கமும் மூக்கு குத்த வேண்டும். ஆனால் அது கால போக்கில் ஒரு பக்கம் மட்டும் குத்துவது என்று ஆனது. அதுவும் குறிப்பாக வலது பக்கம் மட்டும் குத்துவார்கள். பிறகு குத்தினால் குத்தலாம் இல்லையென்றால் தேவையில்லை என்று தற்போது உள்ளது.


இஞ்சி தண்ணீரை எத்தனை நாட்கள் குடித்தால் உடல் எடை குறையும்?
[Saturday 2026-01-17 15:00]

இஞ்சி தேநீர் அல்லது காய்கறிகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. இஞ்சி நீர் குடிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இதை எப்படி எப்போது குடிக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம். குளிர்காலம் என்பது இஞ்சிக்கான பருவம். தேநீர் முதல் காய்கறிகள் வரை அனைத்திலும் இஞ்சியைச் சேர்ப்பது அதன் சுவையை அதிகரிக்கிறது. இஞ்சி ஒரு மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா