Untitled Document
May 20, 2026 [GMT]
 
தொங்கும் தொப்பையை காணாமல் ஆக்கும் நாவல்பழ சட்னி!
[Sunday 2025-10-12 16:00]

பொதுவாகவே காய்கறிகளையும் பழங்களையும் நாளாந்த உணவில் அதிகப்படியாக சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் ஆப்பில், ஆரஞ்சு, மாதுளம் போன்ற பழங்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த விலையிலேயே அதிகளவான ஊட்சத்தத்துக்களை கொடுக்கும் பழங்களின் பட்டியவில் நிச்சயம் நாவல் பழம் முக்கிய இடத்தை பெறுகின்றது. இது ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் இரண்டிலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் சுவை புளிப்பு-இனிப்பு மற்றும் சற்று துவர்ப்புத்தன்மை கொண்டது, மேலும் இது கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் ஒரு பழமாகும்.


உடலில் அற்புதங்கள் நிகழ்த்தும் இட்லி!
[Saturday 2025-10-11 16:00]

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும். ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஆண்களுக்கு உதவி செய்யும் கிவி பழம்!
[Friday 2025-10-10 16:00]

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. உணவினால் ஏற்படும் இந்த நோய்களை அதே உணவால் கட்டுபாட்டில் கொண்டு வர முடியும் என்றால் நம்ப முடிகிறதா? பெண்களை விட ஆண்கள் தவறான வாழ்க்கை முறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டால் கூட தற்போது உள்ள ஆண்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. என்ன தான் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் போன்று இருந்தாலும் சாதாரண காய்ச்சல் வந்தாலும் படுத்து விடுவார்கள். இதுவே தற்போதைய ஆண்களின் நிலையாக உள்ளது.


குளிக்கும் நீரில் இதை சேருங்கள்: சருமம் பளபளப்பாகும்!
[Thursday 2025-10-09 16:00]

பருவ கால மாற்றத்தால் பல பிரச்சனைகள் சருமத்தில் வரும். இந்த நேரத்தில் நாம் நமது சருமத்தை சிறப்பாக பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது சருமத்தில் இறந்த கலங்கள் சேரும். இந்த இறந்த கலங்கள் உடலில் சேர்ந்தால் அவை பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் பிக்மன்டேஷன் மற்றும் பொலிவிழப்பு போன்ற பிரச்சனைகள் வரும். எனவே குளிக்கும் போது குளிக்கும் நீரில் ஒரு பொருளை சேர்த்தால் உடலில் இறந்த கலங்கள் நீங்கி சருமம் பளபளக்கும்.


மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
[Wednesday 2025-10-08 16:00]

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாவும் சீராகவும் இயங்க வேண்டும் என்றால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஆரோக்கியமாக இயங்க வேண்டியது அவசியம். அந்தவகையில் நமது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படும் மூளை நமது தலை பகுதியில் காணப்படுகின்றது. மூளை அதன் தொழிற்பாடுகளை சரியாக செய்தால் தான் மற்ற பாகங்கள் சீராக இயங்க முடியும். இவ்வாறு மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும் மூளைக்கு ஓய்வு இருக்கின்றதா என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?


கிட்னியை சுற்றி பாதுகாப்பு வளையம் போடும் வாழைத்தண்டு!
[Monday 2025-10-06 17:00]

பொதுவாக வாழையில் உள்ள இலை முதல் தண்டு வரை அனைத்தும் மனித உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இலை, பழம், நார், பூ, தண்டு என அனைத்திலும் உணவுகளை சமைக்கலாம். இது கிட்னியில் கல் பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினை, செரிமான கோளாறுகள், சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பார்க்கப்படுகிறது.


21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?
[Sunday 2025-10-05 18:00]

பொதுவாக நாள்ப்பட்ட நோய்களுக்கு இளநீர் மருந்தாக செயற்படுகிறது. கோடைக்காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக ரோட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் இளநீரில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளநீர் ஆண்களுக்கு நீரேற்றம், தசை மீட்பு, இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சீராக்கம் உள்ளிட்ட பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருந்தாக செயற்படுகிறது. சிலருக்கு ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருக்கும்.


சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 5 செயல்கள்!
[Saturday 2025-10-04 17:00]

பொதுவாகவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சரியாக உணவு முறையை பின்பற்றுவது இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை விட முக்கியம் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது நாம் உண்ணும் உணவு சீராக செரிமானம் ஆகும் போது தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக அகத்துறிஞ்சப்படும்.


'தாம்பத்திய குறைபாடு முதல் எடை குறைப்பு வரை' - கடுக்காய் இருக்க பயம் ஏன்?
[Friday 2025-10-03 15:00]

‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ என உடல் நலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ கடுக்காய் என்கிறார் திருமூலர். வயோதிக பருவத்தில் ஏற்படும் உடல் உள்ளுறுப்புகள் சிதைவை தடுக்கக்கூடிய அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்ட மூலிகை கடுக்காய். தமிழர்கள் வகுத்த அறுசுவைகளுள், உப்பு சுவை நீங்கலாக மற்ற ஐந்து சுவைகளும் உடையதும் கடுக்காய். இப்படி இதன் மருத்துவ பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்! இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்நேரத்தில் சாப்பிட வேண்டும், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற பல கேள்விகளுக்கு விடையாகிறது இந்த கட்டுரை.


ராகி நெல்லி கஞ்சியின் நன்மை பற்றி தெரியுமா?
[Thursday 2025-10-02 17:00]

பலருக்கும் நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரியாது. நெல்லிக்காய் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட்களின் ஒரு அரிய சக்தி உணவு. அதே போல பலருக்கும் ராகி மாவை பிடிக்காது. இது வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க உதவும். கஞ்சி என்பது அரிசி அல்லது தானியங்களை நீர் சேர்த்துக் காய்ச்சி, ஒருவிதத்தில் சமைக்கப்படும் ஒரு வகை உணவு. இது பொதுவாக ஒரு மென்மையான, அடர்த்தியான திரவ உணவாக தயாரிக்கப்படும். இந்த கஞ்சியை நெல்லிக்காய் ராகி மாவு கொண்டு செய்தால் உடலுக்கு பல நன்மை கிடைக்கும்.


காபி கண்டுபிடிக்கப்பட்டது இப்படி தானாம்!
[Wednesday 2025-10-01 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ' காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் ஏராளம்.அப்படி உலகம் முழுவதும் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான். அப்படி நீங்களும் ஒரு காபி பிரியரா? 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ஆண்டுதோறும் பன்னாட்டு காபி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது உங்களுக்கு தெரியுமா? ஆம் இன்று சர்வதேச காபி பிரியர்கள் தினம்.


நாக்கிற்கு இதமான நாட்டுக்கோழி ரசம்!
[Tuesday 2025-09-30 16:00]

தற்போது மக்களுக்கு வரும் தொற்று காய்ச்சல் சளி இருமல் போன்ற நோய்களுக்கு ரசம் குடிப்பது வழக்கம். இது பருவகால மாற்றதால் தான் இடம்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் பலவினமாக இருக்கும் போது சத்தாக ரசம் வைத்து குடிக்க வணெ்டும் என்ற ஆசை இருந்தால் இந்த நாட்டுக்கோழி சூப் செய்து பாருங்கள். இந்த ரசத்தை நாங்கள் சொல்லும் பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். மறுநாளே சளி, இருமல் பறந்து போகும். உடலுக்கு சத்து கிடைக்கும்.


தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கணுமா?
[Monday 2025-09-29 16:00]

பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விடயம் தான். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பது, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.


தலைமுடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் அதிசய பானம்!
[Sunday 2025-09-28 18:00]

உலக நாடுகளில் அநேகமானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இது பல காரணங்களால் ஏற்படுகின்றது என்றாலும், உடலில் போதுமான ஊட்டசத்துக்கள் இல்லாமல் இருக்கும் பொழுதும் தலைமுடி அதிகமாக உதிர்கிறது. தன்னுடைய உடலில் எந்த வைட்டமின் குறைபாடு உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள முன்னர், ஏகப்பட்ட குறைபாடுகள் வந்து விடுகிறது.


எடை இழப்பிற்கு முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?
[Friday 2025-09-26 16:00]

முட்டை பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். இது எலும்புகளை வலுப்படுத்தவும், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த நிலையில் மக்கள் தற்போது பெரிய பிரச்சனையாக தெிர்கொள்வது எடை அதிகரிப்பு தான். இதற்காக பலரும் பல விதமாக முயற்ச்சிகளை செய்து எடையை குறைக்க முயற்ச்சி செய்கின்றனர்.


உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மொச்சை சுண்டல்!
[Wednesday 2025-09-24 18:00]

உடலில் சமநிலையை நிர்வகிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக அறியப்படும் சோடியத்தை சீரான அளவில் கொண்டுள்ள மொச்சை உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும் பங்க வகிக்கின்றது. இந்த வகைகயில், ஒரு கப் அளவிலான மொச்சையில் தோராயமாக 38 மி.கி அளவு சோடியம் காணப்படுகின்றது. எனவே மொச்சைக் கொட்டையானது உயர் இரத்தஅழுத்தத்தைத் கட்டுக்குள் வைப்பதில் பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது.


"இனி கொத்து கொத்தாக முடி கொட்டாது" - இரண்டு நாளில் தீர்வு!
[Tuesday 2025-09-23 16:00]

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தங்களின் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். இது முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக இல்லாமல் போகிறது. மெதுவாக கொட்ட ஆரம்பித்த தலைமுடி நாளடைவில் நன்றாக கொட்டி தலையையே வழுக்கையாக்கி விடுகிறது.


இரவு தாமதமாக சாப்பிடுறீங்களா? - அப்போ இந்த நோயின் தாக்கம் இருக்கும்!
[Monday 2025-09-22 16:00]

பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் உணவு எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனின் உணவு பழக்கங்கள் சரியாக இருந்தால் நீங்கள் இளமையாகவே நீண்ட நாட்களுக்கு வாழலாம். இதன்படி, ஒருவர் மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு பின்னர் தங்களின் அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்யலாம்.


கறி சுவையை மிஞ்சும் ஹைதராபாதி காளான் கிரேவி!
[Sunday 2025-09-21 19:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி உண்ணும், உணவுகளின் பட்டியலில் காளான் நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது. காளான் சுவைக்கா மட்டுமன்றி பல்வேறு மருத்துவ நன்மைகளுக்காகவும் பெரும்பாலானவர்களால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.


பன்னீர் விரும்பியா நீங்கள்? அதிகமாக சாப்பிட்டால் இந்த விளைவுகள் வரும்!
[Saturday 2025-09-20 15:00]

புரதத்தின் மூலமான பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் வரும் பக்க விளைவுகள் என்னவென்பதை பதிவில் பார்க்கலாம். பொதுவாக சைவ உணவுப்பிரியர்கள் பன்னீர் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். பன்னீர் புரதம், கால்சியம், மற்றும் புரதச்சத்து நிறைந்த ஒரு பால் பொருள். இது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது, மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை துவையல்!
[Friday 2025-09-19 19:00]

வீட்டில் இருககும் வல்லாரை கீரையில் ஒரு முறை வீட்டில் இருப்பவர்களுக்கு இப்படி துவையல் செய்து கொடுத்து பாருங்கள் வல்லாரை பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள். வல்லாரைக் கீரை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும். இது இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளைக் கொண்டுள்ளது. தனால் உடல் வலுப்பெறும், ரத்த விருத்தி ஏற்படும். மேலும், வல்லாரைக் கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், குடல் புண் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. இன்னும் பல நன்மைகள் வல்லாரை கீரை சாப்பிட்டால் கிடைக்கும். இப்போது இந்த கிரையில் எப்படி துவையல் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


மதிய உணவிற்கு பக்காவா பொருந்தும் நெல்லிக்காய் தயிர் ஊறுகாய்!
[Thursday 2025-09-18 16:00]

இதுவரையில் அதிகளவானோர் சாப்பிடாத ஊறுகாய் தான் நெல்லிக்காய் தயிர் ஊறுகாய். இது அதிக நாட்களுக்கு வைத்தும் சாப்பிடலாம். மதிய உணவு நீங்கள் என்ன செய்தாலும் இந்த நெல்லிக்காய் தயிர் ஊறுகாய் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை பிரமாதமாக இருக்கும். இதற்கு ஒரு கைப்பிடி நெல்லிக்காய் இருந்தால் போதும். ஒரு மாதம் வேண்டுமானாலும் இதை வைத்து சாப்பிடலாம். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.


மன அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பருப்பில் மொறு மொறு போண்டா!
[Wednesday 2025-09-17 16:00]

பொதுவாகவே ஏனைய பருப்பு வகைகளை போல்,பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. பாசிப்பருபில் புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை செரிந்து காணப்படுவதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடிவதுடன், வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.


பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள்!
[Tuesday 2025-09-16 17:00]

நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன, இது நாள்பட்ட தொற்று நோய்களிலிருந்து காப்பதுடன் வயதாவதை தடுக்கிறது. விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.


நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் உருளைக்கிழங்கு சுக்கா!
[Monday 2025-09-15 16:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களாலும் விரும்ப்படும் சைவ உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் உடல் எடை அதிகரி்க்கும் என்ற பயத்தில் பலர் உருளைக்கிழங்கு சாப்பிடுவதையே தற்காலத்தில் தவிர்த்து வருகின்றார்கள். ஆனால் அதனை பெரித்து சாப்பிடும் போது மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. உண்மையில், உருளைக்கிழங்கானது வைட்டமின் 'சி'யின் சிறந்த மூலமாகும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.


புற்றுநோயை தடுக்கும் பலாப்பழம்!
[Sunday 2025-09-14 16:00]

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதில் புரதச்சத்துக்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின்கள் ஏ, சி மற்றும் பி இருக்கின்றன. இதிலுள்ள விட்டமின் ஏ சத்து உடலுக்கும், மூளைக்கும் வலு சேர்க்கிறது. ரத்தத்தை விருத்தியாக்குவதுடன் நரம்புகளுக்கும் உறுதி தருகிறது. பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது, இதய நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.


வீட்டிலேயே எப்படி சுத்தமான நெய் தயாரிப்பது?
[Saturday 2025-09-13 15:00]

நெய் சுத்தமாக வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை படிமுறைகளுடன் பதிவில் பார்க்கலாம். நெய்யை கடைகளில் வாங்கி தற்போது அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது என்ன தான் சுத்தமான நெய் என்று விற்றாலும் இதில் ஏகப்பட்ட ரசாயனங்கள் கலந்திருக்கும். நாம் அந்த நெய்யை சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த நெய்யை நாம் வீட்டில் செய்து சாப்பிட்டால் சுவையும் இரட்டிப்பாக இருக்கும். இதை செய்யும் படிமுறை பற்றி பதிவில் பார்க்கலாம்.


வாயுத் தொல்லையா? நெஞ்சு சளியா? உங்களுக்கான எளிய பாட்டி வைத்தியம்!
[Friday 2025-09-12 16:00]

அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்று அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.


இந்த ரசம் குடிங்க: சரும பிரச்சினைகள் குறையும்!
[Thursday 2025-09-11 18:00]

சரும ஆரோக்கியத்தை இரட்டிப்பாகும் தக்காளியை வைத்து ரசம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: எலுமிச்சை பழச்சாறு- சில துளிகள், தக்காளி- 2, மிளகு- 1/2 தேக்கரண்டி, சீரகம்- 1 தேக்கரண்டி, தனியா- 2 தேக்கரண்டி, பூண்டு- 3, மிளகாய் வற்றல்- 3, மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி, கடுகு- 1/2 தேக்கரண்டி, உப்பு- தேவையான அளவு, கொத்துமல்லி- தேவையான அளவு, கறிவேப்பிலை- தேவையான அளவு, எண்ணெய், பெருங்காயத்தூள்


உடல் எடையை குறைக்கும் வாழைத்தண்டு துவையல்!
[Wednesday 2025-09-10 16:00]

கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரசம், சம்பல் வகைகள், துவையல்கள், சட்னிகள் அனைத்தையும் வித்தியாசமாக செய்வார்கள். அதில் நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை இருப்பதுடன் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருக்கும். இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடக் கூடிய துவையல்களும் ஒரு வகையான சட்னி தொக்கு தான். இதனை வழக்கமாக பருப்பு, இலை, தண்டு, காய், அல்லது பழங்களை பயன்படுத்தி காரம், புளிப்பு சுவையுடன் செய்வார்கள்.

 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா