Untitled Document
April 26, 2024 [GMT]
மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது: - முதல்வர் பழனிசாமி
[Wednesday 2018-09-05 19:00]

கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:


குழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு ரஜினி ஆறுதல்!
[Wednesday 2018-09-05 19:00]

சென்னையில், இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.


நாயின் காதுகளைக் கடித்துக்குதறிய குடிமகனுக்கு தர்ம அடி!
[Tuesday 2018-09-04 18:00]

மது போதையில் இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் செய்திகளை அன்றாடம் கடந்துசெல்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தில் ஒருவர், தெருவில் சுற்றித்திரிந்த நாயின் காதைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.


கணவனை கட்டையால் தாக்கி தற்கொலை நாடகமாடிய மனைவி
[Tuesday 2018-09-04 18:00]

ஆழ்வார் திருநகர், ஸ்ரீலட்சுமிநகர் 3வது தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி செளந்தரராஜன்(56), குடிக்காரர். இவரது மனைவி வள்ளி(48). நேற்று முன்தினம் இரவு செளந்தரராஜன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு வள்ளி தகவல் தெரிவித்தார். செளந்தரராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கோயம்பேடு போலீசார் அனுப்பினர். கட்டையால் தாக்கியதில் உயிரிழப்பு என பிரேதபரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. அதையடுத்து வள்ளியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கணவரை அடித்து கொலை செய்ததை வள்ளி ஒப்புக் கொண்டார்.


அதிமுக அரசு இருக்கும் தைரியத்தில் பாஜக செயல்படுகிறது: - - மு.க ஸ்டாலின்
[Tuesday 2018-09-04 18:00]

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.


தனிக்குடித்தனம் வர மறுத்தத கணவர்: - மனவேதனையில் புதுப்பெண் தற்கொலை
[Tuesday 2018-09-04 16:00]

கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.


அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? - கமல் ஹாசன்
[Tuesday 2018-09-04 16:00]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.


6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்து அறுத்து கொலை!
[Tuesday 2018-09-04 07:00]

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது. லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.


விஜய் ரொம்ப நல்லவர்... நான்தான் தவறு செய்துவிட்டேன்: - அபிராமி வாக்குமூலம்
[Monday 2018-09-03 16:00]

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும் தெரிவித்தனர்.


எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனோடு தப்பியோட்டம்!
[Monday 2018-09-03 16:00]

ஈரோட்டில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், திருமண ஏற்பாடுகள் நடந்துவந்த வேளையில், காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 83 ஆயிரம் வாக்குகள் பெற்று, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானவர், ஈஸ்வரன். 40 வயதான ஈஸ்வரனுக்கு, கடந்த சில மாதங்களாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்திருக்கின்றனர்.


மிரட்டிய உறவினர்கள்... பாதுகாத்த பெற்றோர்: - 24 விரல்கள் கொண்ட சிறுவனுக்கு உதவிய போலீஸ்!
[Monday 2018-09-03 16:00]

மனிதர்கள் இயல்பாக தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு கை, கால்களுடன் விரல்களுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. 10 விரல்களில் ஒரு விரல் இல்லையென்றாலும் சிரமம்தான். அதே நேரத்தில் 10-ல் ஒரு விரல் அதிகமாக இருந்தாலும் சிரமமே.


உடல் உறுப்பு தான ஊழலின் பின்னணியில் மிகப்பெரிய சதி: - அன்புமணி ராமதாஸ்
[Monday 2018-09-03 15:00]

உடல் உறுப்பு தான ஊழலின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் இது குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால்தான் வெளிக்கொண்டு வர முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சிறை தோஷத்தைப் போக்க ஒரு நாள் சிறையில் தங்கிப் பரிகாரம் செய்த தொழிலதிபர்!
[Monday 2018-09-03 15:00]

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் தன் ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தைப் போக்க ஒரு நாள் சிறையில் தங்கிப் பரிகாரம் செய்துள்ளார்.


பொது வாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும்: - விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
[Sunday 2018-09-02 17:00]

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.


சுவாமிக்கு நல்ல புத்தி கொடு: - பா.ஜ.கவினரின் வித்தியாசமான பிரார்த்தனை
[Sunday 2018-09-02 16:00]

சுப்பிரமணியன் சுவாமி பேசிவரும் கருத்துக்களை மத்திய பா.ஜ.க தலைமை கண்டிக்க வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகளே கூட்டம் போட்டு வித்தியாசமான முறையில் எதிப்பு தெரிவித்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்து பதிவிட்டாலோ அது சர்ச்சையில் தான் போய் முடியும். அது சம்பந்தமாக தமிழக பா.ஜ.கவினரிடம் கேட்டால்,


கள்ளக்காதல் தகராறில் குழந்தைகளை தீர்த்துக்கட்டிய கொடூர தாய் சிக்கியது எப்படி? - பரபரப்பு வாக்குமூலம்
[Sunday 2018-09-02 16:00]

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி பெயர் அபிராமி. 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய்க்கு தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் குடும்பத்தோடு குன்றத்தூர் பகுதியில் குடியேறினர். அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என விஜயின் குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாகவே சென்று கொண்டிருந்தது.


ஒழுக்கமாக வாழச் சொல்பவரை சர்வாதிகாரி என்கிறார்கள்: -பிரதமர் வேதனை
[Sunday 2018-09-02 15:00]

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தனது முதலாம் ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த வெங்கையா நாயுடு தனது முக்கிய அனுபவங்களை குறிப்பிட்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த நூலினை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி


ஏழு மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!
[Sunday 2018-09-02 15:00]

டெல்லியில் அதிதி கான் என்ற பெண்ணின் 7 மாத பெண் குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


கணித தேர்வில் 50க்கு 80 மதிப்பெண் வழங்கி அசத்திய ஆசிரியர்கள்!
[Sunday 2018-09-02 15:00]

குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் இந்த ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வுக்கு மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர் ஒருவர் கணிதத் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், கூடுதல் மதிப்பெண் கிடைத்ததற்காக மகிழ்ந்தார்.


அனிதா இறந்தும் தளராத விதிமுறைகள்: - நீட் தேர்வால் மாணவி அனிதா இறந்து ஓராண்டானது!
[Saturday 2018-09-01 18:00]

மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மாணவி அனிதா இறந்து ஓராண்டாகியும் நீட் தேர்வுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படாமல் மேலும் கடுமையாகியுள்ளன. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தபோதிலும் நீட் தேர்வில் தகுதி பெறவில்லை. இதனால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த ஆண்டு இதே நாளில் தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அப்போது அனிதாவின் மரணம் தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க வைகோ வலியுறுத்தல்!
[Saturday 2018-09-01 17:00]

வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.


காதலனுடன் தகராறு: - கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
[Saturday 2018-09-01 17:00]

தஞ்சை மானோஜிப் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 21). இவரும் தஞ்சை வைரம் நகரை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (20) என்பவரும் தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். ஜெயஸ்ரீ எம்.காம். படித்து வந்தார். விக்னேஷ் பிகாம். படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


ஏழுமலையான் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும்: -
[Saturday 2018-09-01 17:00]

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடிக்கப்பட்டது.


மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்ற பெண் கைது!
[Saturday 2018-09-01 09:00]

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லி கொண்டிருந்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முகம் கருகிய சைய்யது பஸ்ருதீன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.


ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட முயன்றதாக தமிழகத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை!
[Saturday 2018-09-01 09:00]

ஆந்திராவில் செம்மரம் கடத்த வந்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பதி- சேஷாசலம் வனப்பகுதியில் கொல்லப்பள்ளி என்ற இடத்தில் செம்மரம் கடத்தியதாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.ஆந்திரபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்தார். சேஷாசலம் வனப்பகுதியில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது.


மறைந்தார் பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளார்!
[Friday 2018-08-31 18:00]

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். ஆதீன முறைப்படி இறுதிச் சடங்குகள் முடித்து அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் சிவராமசாமி அடிகளார் - கற்பினி அம்மையார் தம்பதிக்கு மகனாக கடந்த 1925-ம் ஆண்டு பிறந்தவர் பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி.


17 வயது சிறுமிக்கு திருமணமான சில மணி நேரத்தில் குழந்தை பிறந்ததால் பரபரப்பு!
[Friday 2018-08-31 17:00]

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக் கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.


கற்பழித்தவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண் தீயிட்டு தற்கொலை!
[Friday 2018-08-31 17:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா