Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
திருவண்ணாமலை தேரில் விரிசல் - பக்தர்கள் பதறியடித்து ஓட்டம்!
[Sunday 2012-11-25 07:00]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோட்டத்தில், முருகன் தேரில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம், கடந்த 18ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு 6ம் நாள் உற்சவத்தில் வெள்ளித் தேர் பவனி வந்தது. இதைத் தொடர்ந்து, 7ம் நாள் உற்சவமான நேற்று பஞ்ச ரதங்கள் பவனி நடைபெற்றது.


பாகிஸ்தான் உளவாளி அன்சாரியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை!
[Saturday 2012-11-24 20:00]

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ராணுவ பயிற்சி மையங்கள், முக்கிய தளங்களை படம் பிடித்து, அவற்றை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கியூ பிரிவு பொலீசாரால் திருச்சியில் கைது செய்யப்பட்ட தமிம் அன்சாரியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


கேஜ்ரிவாலின் கட்சிக்குப் பெயர் சாதாரண மனிதர் கட்சி!
[Saturday 2012-11-24 20:00]

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் இருந்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகிய சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அரசியல் இயக்கத்துக்கு இன்று ஒரு புதுப் பெயர் கொடுப்பதாக அறிவித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இன்று புதிதாக ஏதாவது ஒரு பெயரை கட்சிக்குச் சூட்டி அறிவிப்பார் என்ற நிலையில், அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.


தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் மறைவு - வைகோ இரங்கல்!
[Saturday 2012-11-24 19:00]

புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் செய்தி, வெளியிட்டுள்ளார். தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞர், இலக்கியச்செம்மல் புலவர் இறைக்குருவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.


வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி-முருகன் சந்திப்பு!
[Saturday 2012-11-24 19:00]

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி-முருகன் சந்திப்பு இன்று நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ளார்.


தமிழக நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது மத்திய அரசு! - ஜெயலலிதா குற்றச்சாட்டு
[Saturday 2012-11-24 06:00]

தமிழக நலன்களுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து எழுதப்படும் கடிதங்களுக்கும் உரிய பதில் வருவதில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்துறை அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:


ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யக் கோரி மனு!
[Saturday 2012-11-24 06:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 2 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


பூந்தமல்லி சிறப்புமுகாமில் இலங்கைத் தமிழர் உண்ணாவிரதம்!
[Saturday 2012-11-24 06:00]

பூந்தமல்லி சிறப்பு முகாமிலுள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழரான பரமேஸ்வரன் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட பரமேஸ்வரன் பின்னர் பிணையில் விடுதலையானார்.


ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!
[Friday 2012-11-23 20:00]

எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலம் பலசோர் அருகே உள்ள கடற்கரையில் இந்த சோதனை நடந்தது. இன்று பகல் 12.52 மணியளவில் சண்டிபூர் கடற்பகுதியில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது.


மின்வெட்டுக் கொடுமையால் திருமண சீர்வரிசையில் இடம்பிடித்தது இன்வெர்ட்டர்!
[Friday 2012-11-23 20:00]

திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்' சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக விற்பனையாகிறது. திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது, என்பது பொதுவான சட்டம்.


காஞ்சி காமாட்சியம்மன் கோயில் தேர் ஓடுவதற்கு 3 பேரை நரபலி கொடுத்தார் கேரள அமைச்சர் - செப்பேட்டில் தகவல்!
[Friday 2012-11-23 18:00]

விஜயநகர பேரசர் காலத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் வெண்கலத் தேர் ஓடுவதற்கு கேரளாவைச் சேர்ந்த அமைச்சர் ஓருவர் தன் மனைவி, மகன் உள்பட 3 பேரை நரபலி கொடுத்து தேரை இழுத்தது குறித்து செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர பேரரசர் காலத்தைச் சேர்ந்த செப்பேட்டில் உள்ள தகவல்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ரமேஷ் கூறியதாவது:


பறவைக்காய்ச்சலால் இறந்தார் வீரபாண்டி? - கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி!
[Friday 2012-11-23 18:00]

முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அவரது உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போரூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.


திமுக முக்கிய தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்!
[Friday 2012-11-23 12:00]

முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.


கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்!
[Friday 2012-11-23 07:00]

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் ரகசியம் காக்கப்பட்டது எப்படி என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆர்தர் ரோடு சிறை மற்றும் எரவாடா சிறையில் உள்ள அதிகாரிகள் மூலம் சேகரித்த தகவல்கள் வருமாறு:


தேர்தலுக்காக ராமதாஸ் அமைதியைக் குலைக்கும் அரசியல் விளையாட்டு நடத்துகிறார்! - திருமாவளவன் குற்றச்சாட்டு
[Friday 2012-11-23 07:00]

தமிழகத்தில் சாதிய வன்முறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அணி சேர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.காதல் திருமணங்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுவதைத் தடுக்க பெரியாரிசம், மார்க்ஸிசம், லெனினிசம், தமிழ்த் தேசியம் இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


கொலையாளிகளுக்கு உற்சாகமூட்டுகிறார் வைகோ - இளங்கோவன் கண்டனம்!
[Friday 2012-11-23 07:00]

கொலையாளிகளை உற்சாகப்படுத்தி, தீவிரவாதத்தை ஆதரித்து பேசும், வைகோவின் செயல் கண்டத்துக்குரியது என, முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


ஆயுள்தண்டனை கைதி ஆயுள்காலம் முழுவதும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
[Thursday 2012-11-22 20:00]

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி தமது ஆயுள் காலம் முழுவதும் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 14 அல்லது 20 ஆண்டுகளில் விடுதலை செய்யக் குடாது என்று ஆயுள் தண்டனை வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பி. லோகூர் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.


ராஜீவ்கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கில் போடுமாறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!
[Thursday 2012-11-22 20:00]

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்தி பவனில், மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கசாப்பை, தூக்கிலிட்டதற்கு, மகிழ்ச்சி தெரிவித்து, இளைஞர் காங்கிரசார், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.


கருணாநிதி இனத்துரோகி! - வைகோ சீற்றம்
[Thursday 2012-11-22 20:00]

இலங்கைத் தமிழர்கள் நடத்திய விமானத் தாக்குதலை புகழாமல், இனத்துரோகி கருணாநிதி விமர்சனம் செய்தார் என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில், ம.தி.மு.க., சார்பில், "பாராளுமன்றத்தில் வைகோ' நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது. வைகோ பேசியதாவது:


4 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியை !
[Thursday 2012-11-22 18:00]

ஆந்திராவில் 4 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியை மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனன்பர்த்தியிலுள்ள சத்யபாமா பள்ளியில் பயிலும் 4 வயது சிறுவன் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிப்பறை செல்ல முயன்றுள்ளான்.


அப்சல் குருவுக்கு திரிக்கப்பட்ட கயிறு கசாப்பை நெரித்தது!
[Thursday 2012-11-22 18:00]

மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய பயங்கரவாதி அஜ்மல் கசாப் நேற்று தூக்கில் இடப்பட்டார். அவரது கழுத்தை இறுக்கிய கயிறு குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி அப்சல் குருவுக்காக ஒரு கயிறு தயாரானது.


போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ யாழ்ப்பாணத்தில் புதிய ஆதீனம்!
[Thursday 2012-11-22 13:00]

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் விதமாக அங்குள்ள யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆதீனம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணம் ஆதீன பொறுப்பாளராக பாலசுப்ரமணியம் ஜெயரத்னம் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக இருக்கும் மருதாசல அடிகளார் பங்கேற்றார்.


இலங்கைக் கடற்படை தாக்குதல் - இந்திய மீனவர்கள் காயம்!
[Thursday 2012-11-22 13:00]

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் நான்கு மீனவர்கள் காயமடைந்ததுடன், படகுகள் சேதமடைந்துள்ளன. கரைக்கு திரும்பிய மீனவர்கள் காயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றனர்.


மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்!
[Thursday 2012-11-22 13:00]

நாடாளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் மீராகுமர் தள்ளுபடி செய்துவிட்டார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளனது.


கசாப்பை தூக்கிலிட்டது மனிதநேயத்துக்கு எதிரானது - நெடுமாறன் கண்டனம்!
[Wednesday 2012-11-21 20:00]

அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டதை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வன்மையாகக் கண்டித்துள்ளார். தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.


சாதி உணர்வுகளை தூண்டும் ராமதாசை கைது செய்ய வேண்டும்! - செ.கு.தமிழரசன்
[Wednesday 2012-11-21 20:00]

ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி வரும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்,'' என, இந்தியக் குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:


எம்ஜிஆர் காலத்தில் பண்ருட்டியார் ஐ.நாவுக்குச் சென்றது ஏன்? - பக்ஸில் அனுப்பியிருக்கலாமே என்று கருணாநிதி கிண்டல்!
[Wednesday 2012-11-21 20:00]

டெஸோ தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு பக்ஸ் அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட கடித அறிக்கையில் கூறியிருப்பதாவது.


கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானாரா? - புதிய சர்ச்சை!
[Wednesday 2012-11-21 20:00]

தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா