Untitled Document
May 8, 2024 [GMT]
யே வேற யாராவது கேள்வி இருக்கா? - அவமானப்பட்ட கோபத்தில் கத்திய ரஜினி
[Thursday 2018-05-31 07:00]

தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் சற்று ஆவேசத்துடன் பேட்டியளித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்த பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றார் ரஜினி.


ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க: - பிரபல நடிகை கிண்டல்
[Wednesday 2018-05-30 07:00]

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழ அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க என்று பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 13 பேர் பலியாகினர்.


மூன்று இளைஞர்களின் உயிரை காவு வாங்கிய இயர்போன்!
[Wednesday 2018-05-30 07:00]

சமீப காலமாக இயர்போனை பயன்படுத்தி பாட்டு கேட்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இயர்போன் பயன்படுத்துவது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்லும் போது இயர்போன் பயன்படுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்படிப்பட்ட விபத்துகளில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.


கையில் தந்தையின் டெரர் கண்கள்: - விஜயகாந்த்தை உற்றுநோக்க வைத்த மகன்
[Tuesday 2018-05-29 18:00]

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று வந்த நடிகர் சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை' டாட்டூவாகக் கையில் வரைந்திருக்கிறார். இதைக் காண்பித்து விஜயகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மகன்.


துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை விவர அறிக்கையில் இடம் பெறவில்லை: - மு.க.ஸ்டாலின்
[Tuesday 2018-05-29 16:00]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விவர அறிக்கையை, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தாக்கல் செய்துள்ள நிலையில்,


இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி: - காதலன் கைது!
[Tuesday 2018-05-29 09:00]

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த அசோகனின் மகள் அசோனா (20). இவர், விருத்தாசலம் சரோஜினிநாயுடு நகர் முதல் தெருவில் உள்ள பல்முனை வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். நேற்று காலை, வேலைக்குச் செல்ல உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.


காதலித்து திருமணம் செய்ததற்காக இளைஞன் ஆணவக் கொலை: - அதிர்ச்சி சம்பவம்
[Tuesday 2018-05-29 08:00]

கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.


பச்சிளம் குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை!
[Tuesday 2018-05-29 08:00]

தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.< திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேண்டாவுக்கு சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மீண்டும் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.


காந்தத்தை விழுங்கிய 9 வயது சிறுமிக்கு காந்தம் மூலம் சிகிச்சை!
[Tuesday 2018-05-29 08:00]

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிய போது பொம்மையில் இருந்த காந்தத்தை விழுங்கி விட்டாள். இதனால் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை மங்களூரில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல டாக்டர் ஜெயதீர்த்தா ஜோஷி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது: - தமிழக அரசு அரசாணை வெளியீடு
[Monday 2018-05-28 18:00]

பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


மகளுடன் சந்தோஷமாக வாழாத புதுமாப்பிள்ளையை கொலை செய்த மாமனார்!
[Monday 2018-05-28 15:00]

கேரள மாநிலம் கோட்டயத்தில் புதிதாக திருமணம் செய்துகொண்ட நபர்,மனைவியின் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டுள்ளார், கெவின் மற்றும் நினுவுக்கு மே 19 ஆம் திகதி தான் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. மகளுடன் சந்தோஷமாக வாழாத மாப்பிள்ளை தேவையில்லை என நினுவின் தந்தை மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளனர்.


ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி: - 5 பேர் கவலைக்கிடம்
[Monday 2018-05-28 15:00]

தமிழகத்தின் நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பலர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.


ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்: - பன்னீர் செல்வம்
[Monday 2018-05-28 08:00]

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதர் வழக்கிய பன்னீர் செல்வம், ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.


கோடைகால கண்காட்சியில் ராட்டினம் நொறுங்கி விழுந்த விபத்தில் சிறுமி பலி!
[Monday 2018-05-28 08:00]

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கோடைகால பொருட்காட்சி நடைபெற்று வந்தது.விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.பொருட்காட்சியில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ராட்டினமும் இருந்தன. அங்கிருந்த


மகனை வரவழைத்துவிட்டு கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் !
[Monday 2018-05-28 08:00]

தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.


கர்நாடக சட்டமன்ற வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி!
[Friday 2018-05-25 18:00]

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குமாரசாமி தலைமைக்கு ஆதரவாக 117 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இவர்கள் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


தாய்ப்பாலை குடித்த சில நிமிடங்களிலே பரிதாபமாக இறந்த குழந்தை!
[Friday 2018-05-25 18:00]

இந்தியாவில் அம்மாவின் தாய்ப்பாலை குடித்த குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதை அறியாமல் அப்பெண் தன்னுடைய 3 வயது பெண் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்.


டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை!
[Friday 2018-05-25 08:00]
>

இந்தியாவில் தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரின் ராம்தர்பார் பகுதியைச் சேர்ந்தவர் உமா(34). இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார்.


மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: - பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
[Friday 2018-05-25 08:00]

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை 3-வது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.


தாறுமாறாக தாக்கப்பட்ட வாலிபரை கட்டிப்பிடித்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி!
[Friday 2018-05-25 08:00]

கோயிலில் நடைபெற்ற கலாட்டா சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர் ஒருவரை காவல்துறை அதிகாரி கட்டிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதி கோயில் ஒன்றிற்கு கடந்த 22ஆம் தேதி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கோயில் வளாகத்தில் ஒரு இடத்தில் தனது தோழியை சந்தித்து அவரோடு பேசியிருக்கிறார் இந்த இளைஞர். கோயிலுக்குள் வெகு நேரமாக சிரித்து பேசியபடி இருந்த இவர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் வந்திருக்கின்றனர்.


தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களைக் கேட்கும் போது வருத்தம் அளிக்கிறது: - வேதாந்தா குழுமத்தின் தலைவர்
[Thursday 2018-05-24 18:00]

'தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் உண்டாகிறது' என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நிகழ்த்த துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.


துப்பாக்கிச் சூடு ஒரு தற்காப்புக்காவே நடத்தப்பட்டது: - அலட்சியமாக பதிலளித்த தமிழக முதல்வர்
[Thursday 2018-05-24 16:00]

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த போது நான் ஆலோசனை கூட்டத்தில் இருந்ததாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


துபாயில் 240 கோடி பணத்திற்காக கொலை செய்யப்பட்ட நடிகை ஸ்ரீதேவி: - அதிர்ச்சி தகவல்
[Thursday 2018-05-24 08:00]

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? - மாவட்ட ஆட்சியர் பதில்
[Thursday 2018-05-24 08:00]

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கமல், ஸ்டாலின் உட்பட பல முக்கிய பிரபலங்கள் இப்படி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவிக்கும் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி!
[Thursday 2018-05-24 08:00]

பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 13 பேர் பலியாகியுள்ள நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த என் தம்பி: - நடிகர் தனுஷ் இரங்கல்
[Thursday 2018-05-24 08:00]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசார் 13 பேரை சுட்டு கொன்றனர்.

இதில் ரகு என்ற இளைஞரும் ஒருவராவார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரகுவின் மரணத்துக்கு தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஒரு மகன் துப்பாக்கி சூட்டிற்கு பலி மற்றொரு மகன் போலீஸ் பிடியில்: - கதறும் தமிழரசனின் தாய்
[Wednesday 2018-05-23 16:00]

தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பவர்களின் படங்கள் சமூக வலைதளங்களை துயரக் கோலமாக்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக தூத்துக்குடி மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அறவழியில் மேற்கொண்டு வருகின்றனர்.


மீண்டும் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: - போர்களமாக காட்சியளிக்கும் தூத்துக்குடி
[Wednesday 2018-05-23 16:00]

தமிழகத்தில் பொலிசார் மீண்டும் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில், மருத்துவமனையில் அவர்களின் உடல்களுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறவிருந்தது.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா