Untitled Document
May 2, 2024 [GMT]
தேவையான உதவிகளை வழங்கத் தயார்!- மைத்திரியிடம் மோடி உறுதி Top News
[Friday 2019-05-31 18:00]

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
[Friday 2019-05-31 18:00]

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தை வலையால் மூடி கத்தியால் குத்தினோம். அவர் சத்தம் போட்டுவிட்டார். காலால் உதைத்தார். இதனால், திடுக்கிட்டு வீதியில் நின்றிருந்த பொலிஸார், துப்பாக்கியை தூக்கிவிட்டார். உடனடியாக லொக்போட்டு மடக்கிப் பிடித்து கத்தியால் குத்தினோம்” என தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


அரசியல் இலாபங்களுக்காகவே தெரிவுக்குழு! - சுரேஷ்
[Friday 2019-05-31 18:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறியும் நோக்கத்திலிருந்து விலகி, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே அரசாங்கத்தினரும் எதிரணியினரும் தற்போது செயற்பட்டு வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.


உண்ணாவிரப் போராட்டத்தில் குதித்தார் அத்துரலிய ரதன தேரர்! Top News
[Friday 2019-05-31 18:00]

அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர், கண்டி-தலதா மாளிகைக்கு அருகில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தொடக்கம் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .


சிக்கியது சஹ்ரானின் மடிகணினி! - 50 இலட்சம் ரூபாவும் மீட்பு Top News
[Friday 2019-05-31 18:00]

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மடிகணினி, 50 இலட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் என்பவற்றை, அம்பாறை பாலமுனை ஹுசைனியா நகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பொலிஸார் இன்று கைப்பற்றினர்.


தாலிக்குளத்தில் வீடு புகுந்து தாக்குதல்! - 7 பேர் காயம்.
[Friday 2019-05-31 18:00]

வவுனியா- தாலிக்குளத்தில் நேற்று மாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த இளைஞர் குழு, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


நொச்சியாகம விபத்தில் காயமுற்ற வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியரும் மரணம்!
[Friday 2019-05-31 18:00]

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்று நொச்சியாகம பகுதியில் கடந்த 26ஆம் திகதி விபத்திற்குள்ளாகியது.


கிணற்றில் விழுந்த யானைக்குட்டி! - மீட்க முயற்சி. Top News
[Friday 2019-05-31 18:00]

வவுனியா வடக்கு- கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணறு ஒன்றில், யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. இதையடுத்து, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு பாரம் தூக்கியின் உதவியுடன் யானைக் குட்டியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொஸார், கிளிநொச்சி வனபரிபலனத்திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் யானைக் குட்டியை மீட்க உதவி வருகின்றனர்.


சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2019-05-31 18:00]

முன்னாள் பாராளுமன்ற, மற்றும் வட மாகாண சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அம்பாந்தோட்டையில் புத்தர் சிலை உடைப்பு! Top News
[Friday 2019-05-31 18:00]

அம்பாந்தோட்டை ரூவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்துக்கு முன்பாவிருந்த மூன்று அடி உயர புத்தர் சிலை நேற்று இரவு, உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் அதிகாரி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். புத்தர் சிலையானது இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


ஊடகவியலாளர் நடேசனின் 15 ஆவது நினைவு நிகழ்வு! Top News
[Friday 2019-05-31 18:00]

மட்டக்களப்பில் 2004 ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15 ஆவது நினைவு தின நிகழ்வு, காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.


ஐஎஸ் தீவிரவாதத்தை அழிக்கக் கோரி யாழ். முஸ்லிம்கள் போராட்டம்! Top News
[Friday 2019-05-31 18:00]

யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டும், குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டனையை வழங்கக் கோரியுமே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இரவோடு இரவாக 77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பு
[Friday 2019-05-31 09:00]

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இந்த அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.


நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி! Top News
[Friday 2019-05-31 09:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். புதுடெல்லியில்நேற்று மாலை நடந்த இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


பாற்சோறு வழங்கி கொண்டாடிய முஸ்லிம்களைப் போல நாம் செயற்படக் கூடாது! - சிறிதரன் எம்.பி
[Friday 2019-05-31 09:00]

மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக முஸ்லிம் தலைவர்களும், சில மக்களும் பள்ளிவாசல்களிலும், தென் பகுதிகளில் சில பிரதேசங்களிலும் பாற்சோறு வழங்கி சிங்கள மக்களுக்கும் இராணுவத்துக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை விபத்தில் காயமுற்றவர் மரணம்!
[Friday 2019-05-31 09:00]

வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று மதியம் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். முன்னாள் பாடசாலை அதிபரான வையாபுரிநாதனின் மனைவியான 82 வயதான திலகவதி என்பவரே மரணமடைந்தவர் ஆவார்.


முத்துஐயன்கட்டு விபத்தில் 7 பேர் காயம்! Top News
[Friday 2019-05-31 09:00]

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேற்று மாலை மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


மகப்பேற்று நிபுணருக்கு எதிராக இதுவரை 335 தாய்மார் முறைப்பாடு!
[Friday 2019-05-31 09:00]

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, நேற்று மாலை வரை 335 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மஹிந்தவிடம் சரணடைந்து அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார் ரணில்!- பேராசிரியர் சரத் விஜேசூரிய
[Friday 2019-05-31 09:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல சந்தர்ப்பங்களில் அரசியல் அநாதையாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதி அடைந்து, அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய விசனம் தெரிவித்தார்.


சிசிர மெண்டிசின் புலனாய்வு அறிக்கை ஊடகங்களில் கசிந்தது! Top News
[Friday 2019-05-31 09:00]

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ரிசாத்துக்கு எதிராக அமைச்சர் சம்பிக்க போர்க்கொடி!
[Friday 2019-05-31 09:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சரான சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.


மோதகத்துக்குள் அட்டை! - அதிர்ச்சியடைந்த மாணவன் Top News
[Friday 2019-05-31 09:00]

யாழ்ப்பாணம், சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணி – சங்கானை பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் மோதகம் வாங்கிக் கொடுத்தனர்.


குண்டுதாரிகளின் தொடர்பில் இருந்த 1800 தொலைபேசி இலக்கங்கள்! - சிஐடி விசாரணை
[Thursday 2019-05-30 17:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரிகளாக செயற்பட்டவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபட்ட தொலைபேசி இலக்கங்கள் என 1800 க்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2019-05-30 17:00]

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தனக்கு முன்னர் அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.


தெரிவுக்குழு விசாரணையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - துமிந்த திஸாநாயக்க
[Thursday 2019-05-30 17:00]

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் திறந்த விசாரணையால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நல்லைக் கந்தனுக்கும் சிறை - வெளி வீதியுலா நிறுத்தம்!
[Thursday 2019-05-30 17:00]

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இன்று நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் சுவாமி வெளிவீதி வலம் வரும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணத்துக்காக இந்த வெளி வீதிவலம் வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.


புதுடில்லியில் ஜனாதிபதி மைத்திரி! Top News
[Thursday 2019-05-30 17:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்தியா பயணமானார். இன்று காலை 8.20 மணியளவில் இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.282 விமானத்தில் ஜனாதிபதி புதுடில்லி நோக்கி பயணமானார். ஜனாதிபதியுடன் மேலும் 12 பேர் கொண்ட குழுவும் புதுடில்லி சென்றுள்ளது.


ஓமந்தையில் மரத்துடன் மோதியது கார்- மூவர் படுகாயம்! Top News
[Thursday 2019-05-30 17:00]

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார், ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா