Untitled Document
November 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
30 வருடப் போர் காரணமாக வடக்கு கிழக்கில் 65,000 பேருக்கு மேல் மனநலம் பாதிப்பு! - பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க
[Saturday 2012-11-17 11:00]

வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


லண்டனில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர் ரெரி கிறிஸ்டியன் ஞானகுமார் என அடையாளம் காணப்பட்டார்! Top News
[Saturday 2012-11-17 11:00]

கடந்த சனிக்கிழமை இரவு 9.20 மணியளவில், லூசியம் நூல் நிலையத்துக்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறிப்பிட்ட தமிழ் இளைஞனை ஆபிரிக்க இனத்தவர் குழு ஒன்று தாக்கியதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவம் நடைபெற்றவேளை அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அருகில் உள்ள மக்கள் சிலர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால் கறுப்புப்பட்டியல்: - சிறிலங்காவுக்கும் ஐ-ஒ எச்சரிக்கை!
[Saturday 2012-11-17 10:00]

சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


LLRC அறிக்கை எதிர்கால ஈழத்துக்கு அடித்தளமாக அமையுமாம்..! நிறுத்தக் கோரி வழக்கு போடப்பட்டது!
[Saturday 2012-11-17 10:00]

சிறிலங்காவினது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளைச் செயற்படுத்துவதனை நிறுத்துமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி சிங்கள ஜாதிக பெரமுனவின் செயலாளர் ஜயந்த லியனகே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதை விடுத்து, அரசு இராணுவத்தினருக்கு வீடுகளை அமைத்து வருகிறது: சீ.யோகேஸ்வரன்
[Saturday 2012-11-17 08:00]

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வருமான வழிகள் உறுதி செய்யப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதை விடுத்து அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகளை அமைத்து கொடுத்து வருகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் கிடையாது. மக்கள் வேலையில்லா பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 104 பேர் கடற்படையினரால் கைது.
[Saturday 2012-11-17 08:00]

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட மேலும் 104 பேர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கைதானவர்களில் 96 தமிழர்களும், 6 சிங்களவர்களும், 2 முஸ்லிம்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, மன்னார், ஜா-எல, நீர் கொழும்பு, வத்தளை, ராகமை மற்றும் கற்பிட்டி போன்ற பகுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மேலும் எட்டு இலங்கையர்கள் ஆஸியில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
[Saturday 2012-11-17 07:00]

சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று புகலிடம் கோரிய 8 இலங்கை அகதிகள் சுயவிருப்பில் மீண்டும் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி நெளரு முகாமில் உள்ள 5 பேருடன் சேர்த்து 8 இலங்கை அகதிகள் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஹாப்பருடன் கமரூன் இணைந்து கொண்டால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்..!
[Saturday 2012-11-17 07:00]

சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாட்டையே, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார். கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், "கனேடியப் பிரதமரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம். மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லையென்றால், மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அவர் கூறுவதற்கு உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம்.


சர்வதேசம் இலங்கையை பாதுகாப்பான நாடாக அங்கீகரித்துள்ளது: ஜீ. எல்.பீரிஸின் கண்டுபிடிப்பு
[Saturday 2012-11-17 06:00]

இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாலேயே இங்கிருந்து தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவு மிகுந்த ஆரோக்கியமாக தொடர்வதாகவும் இது சீனாவுடனான இலங்கையின் நல்லுறவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார். பிரித்தானியா, சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்களை திருப்பியனுப்பியுள்ளன. இலங்கை பாதுகாப்பான நாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாலேயே அந்த நாடுகள் இலங்கையர்களைத் திருப்பியனுப்பி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


பொலிஸ் சீருடையில் சென்று கொள்ளையடித்த திருடர்கள்: வெள்ளவத்தையில் சம்பவம்
[Saturday 2012-11-17 06:00]

வெலிக்கடைச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் பதுங்கியிருப்பதாக கூறி கொழும்பு வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் உள்ள தமிழ் வர்த்தகர் வீட்டினுள் நால்வர் நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்தவர்கள் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 25 பவுண் நகைகளையும், 7 ஆயிரம் டொலர்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இப்பகல் கொள்ளை பற்றி வீட்டில் இருந்த பெண் தெரிவிக்கையில்,இப்பகுதியில் அமைந்திருக்கும் எம் வீட்டில் நானும் எனது பெற்றோருமே வசித்து வருகின்றோம். எனது தந்தை ஒரு வர்த்தகர்.


கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் ஓரினச் சேர்க்கை - ஆண்கள் இருவருக்கு அபராதம்!
[Saturday 2012-11-17 00:00]

பொதுமக்கள் நடமாட்டம் மிக்க இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆண்கள் இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தலா 1500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர், அரச நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் என கண்டறியப்பட்டுள்ளது.


அனைத்து சமூகங்களும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கின்றன: மஹிந்த எச்சரிக்கை
[Friday 2012-11-16 21:00]

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தொடர்பில் சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒழுக்கமுடைய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து சமூகங்களும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பற்றி கவனிக்கின்றன. பிள்ளைகளை பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஷிரானிக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது: கமலேஷ் சர்மா
[Friday 2012-11-16 20:00]

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் கவனிக்கப்பட்டு வருவதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குற்றச்சாட்டுக்களை, ஷிரானி ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியிட்ட அரச ஊடகங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: சமல்
[Friday 2012-11-16 20:00]

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து நிதானமாக கருத்து வெளியிட வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில், ஆளும் கட்சியின் பிரதம கொறடா கருத்து வெளியிட்டிருந்தார். இந்த சம்பாசனை தொடர்பிலேயே சபாநாயகர் சமால் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டங்களின் போது பேசப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கருத்து வெளியிடும் தரப்பினரை கூட்டங்களுக்கு அனுமதிப்பது பற்றி மீள்பரிசீலனை செய்ய நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்: பிரபா கணேசன்
[Friday 2012-11-16 19:00]

இனப்பிரச்சினை தீர்வில் மேலதிகமாக பெறுவதனை விடுத்து இருப்பதை காப்பாற்ற முடியாத நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைமை உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வாக பெடரல், சமஷ்டி முறையினை கூட கொடுப்பதற்கு சிங்கள அரசு தயாராக இருந்தது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வித தீர்வினையும்பெறாமல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தமை தமிழ் மக்களின் துரதிஷ்டம். யுத்த வெற்றிக்குப் பின்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்லை.


எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதிலளிக்க 40 இலட்சம் ரூபா செலவு செய்தது அரசு: தினேஷ் குணவர்தன
[Friday 2012-11-16 18:00]

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்க அரசாங்கம் 40 இலட்சம் ரூபாவை செலவிட்டிருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று வியாழக்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டும்: ஷிராணி உத்தரவு!
[Friday 2012-11-16 17:00]

சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் சிலரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த மனுவை பரிசீலிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் அரசுதரப்பு சட்டத்தரணிக்கு கூறப்பட்டுள்ளது.


அப்பாவி மக்களை பலியிட்டுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மையை, ஐநா உள்ளக அறிக்கை இன்று பகிரங்கமாகியுள்ளது: - மனோ கணேசன்
[Friday 2012-11-16 17:00]

40,000க்கு மேற்பட்ட பெருந்தொகை அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்துதான், இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மையும், இது தொடர்பில் ஐநா காத்திரமாக செயல்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது.


கடன் அட்டை மூலம் பணம் திருடிய பௌத்த துறவி கைது.
[Friday 2012-11-16 16:00]

பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை பாதுகாக்கவே மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டன: ஐ.நா.
[Friday 2012-11-16 16:00]

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


லண்டன் உலகத் தமிழர் மாநாடு, ஈழத்தமிழர் வரலாற்றில் அழுத்தமான முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது: கா.அய்யநாதன்
[Friday 2012-11-16 16:00]

லண்டனில், ஜனநாயகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 7, 8 ஆம் திகதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ள கா.அய்யநாதன், இம்மாநாடு, ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு அழுத்தமான முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டமை குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.


சடலத்துடன் அவுஸ்திரேலியா சென்றடைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்..!
[Friday 2012-11-16 16:00]

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் அடங்கிய படகிலிருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அகதிகள் படகில் 62 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் அனைவரும் தற்போது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சடலம் குறித்த விசாரணைகளை கிறிஸ்மஸ் தீவின் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ். மறைமாவட்ட ஆயர் கே.லக்மன் விபத்தில் உயிரிழப்பு..
[Friday 2012-11-16 10:00]

யாழ்ப்பாணம் புதுக்காட்டு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். மறைமாவட்ட குருவான கே. லக்மன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். யாழ். மறைமாவட்ட குருவான இவர் எழுவை தீவைச் சேர்ந்தவராவார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமாவட்ட குருவாக இவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது மறைவு யாழ். மறைமாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என்று யாழ். மறைமாவட்டத்தினர் விடுத்த அனுதாப் செய்தியில் தெரிவித்துள்ளனர்.


கட்சியிலிருந்து விலகியது ஏன்? அர்ஜுன, டிரான் அலஸ் சரத் பொன்சேகாவிற்கு கடிதம்..
[Friday 2012-11-16 09:00]

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையில் இயங்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியிலிருந்து விலகியமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து சரத் பொன்சேகாவுக்கு அவர்கள் நேற்று கடிதம் அனுப்பியுள்ளனர். சரத் பொன்சேகா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தான் அவரது விடுதலைக்காக பாடுபட்டதை அவர் மறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


அமைச்சரின் தடையையும் மீறி, தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிப்பு!
[Friday 2012-11-16 09:00]

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடல்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என முல்லைத்தீவு கடல்தொழிலாளர் சங்கங்கள் கூறுகின்றன. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 5ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.


ஷிரானிக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து ஆசிய நீதித்துறை மாநாட்டில் ஆராய்வு!
[Friday 2012-11-16 08:00]

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.'லோ ஏஷியா' (LAW ASIA) என்னும் சட்ட உயர் மாநாடு இந்த மாநாட்டில் இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆராயப்படவுள்ளது. இது அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 'லோ ஏஷியா' அமைப்பு சட்டத்துறை நிறுவனங்கள், நீதிபதிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள ஓர் உயர் அமைப்பாகும். இதன் 25ஆவது சர்வதேச மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 21 ஆம் திகதி புதன்கிழமை வரை இந்தோனேஷியா பாலி தீவில் வெஸ்ட்டின் சர்வதேச சுற்றுலா விடுதியில் நடைபெறவுள்ளது.


அவுஸ்திரேலியா நவுறு தீவிலுள்ள முகாம்களது நிலை மிக மோசமாகவுள்ளது - தேவையான உணவின்றி தடுத்துவைப்பு! - நவனி அம்மையார் குற்றச்சாட்டு.
[Friday 2012-11-16 08:00]

அவுஸ்திரேலியாவின் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களின் நிலைமை மிக மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் அமைந்துள்ளதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றமசாட்டியுள்ளார்.


சீரற்ற காலநிலை தொடர்வதால் ஆறுகள் சில பெருக்கெடுப்பு - மாத்தறையில் வெள்ளப்பெருக்கு.
[Friday 2012-11-16 07:00]

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் ஆங்காங்கே போக்குவரத்துகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ கொடபிட்டிய வழியாக பிட்டபத்தர வீதியின் பாணதுகம பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் வீதிகளில் நீர் புகுந்து நில அரிப்பு ஏற்ப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா