Untitled Document
October 24, 2026 [GMT]
 
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டியவை!...
[Friday 2020-01-24 18:00]

கொரோனா வைரஸ் என்னும் உயிரைக் குடிக்கும் வைரஸ் தாக்கத்திலிருநு்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம். வருவதற்கு முன்பும் வந்த பின்பும் என்னென்ன தடுப்பு முறைகளைப் பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.

மீந்து போன சாதத்தில் சப்பாத்தி செய்யலாமா?
[Saturday 2026-10-24 15:00]

வீட்டில் மீதமான சாதத்தில் அசத்தலான சப்பாத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு பழைய சாதமாக மாற்றி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் மீதமான சாதத்துடன் சில பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை வடகமாகவும் செய்வார்கள்.


மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.


கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.


தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.


ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.


நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.


தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!


நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.


அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.


வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.


தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.


கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.


வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


வீடுகளிலே எளிதாக இயற்கையான பன்னீர் தயாரிக்கலாம்!
[Wednesday 2026-10-07 16:00]

பன்னீர் என்பது எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதற்கு பன்னீர் ஒரு நல்ல மாற்றமான சத்தான உணவாகவும் இருக்கிறது. அந்த வகையில், வீடுகளிலேயே தண்ணீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். அடிகனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு பால் பொங்கி வரும் பொழுது தீயை குறைத்து விட்டு எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து அதனை மெதுவாக பாலில் ஊற்ற வேண்டும்.


சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்: கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
[Tuesday 2026-10-06 16:00]

நெய் வெண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. சூடான சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் ஒன்றாகும். நெய், உணவுக்கு சுவையை அதிகரிப்பதுடன், சில ஆரோக்கிய நன்மைகளையும் தரும்.


எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க!
[Monday 2026-10-05 16:00]

எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பிரண்டையை எவ்வாறு சமைத்து சாப்பிடுவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சாதாரணமாக கொடி போன்று வளரும் பிரண்டையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் நல்ல பலனை பெற முடியும். அதிக கால்சியம் சத்து கொண்ட பிரண்டையை துவையலாக சாப்பிடலாம். எலும்பு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பிரண்டையை எவ்வாறு துவையலாக சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


தரை துடைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை – அசத்தும் புதிய தலைமுறை ரோபோக்கள்!
[Monday 2026-10-05 09:00]

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ‘டாவ் ரோபோடிக்ஸ்’ நிறுவனம், வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள், படிக்கட்டுகள், கார்பெட்கள் மற்றும் பல்வேறு தரைகளில் எளிதாகச் சென்று வேலை செய்யும் திறன் கொண்டவை.


புரட்டாசி மாத ஸ்பெஷல்: மீல்மேக்கர் பிரியாணி!
[Friday 2026-10-02 08:00]

புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே பலரது உணவுப் பழக்கத்திலும் ஒரு சிறிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள், இந்த ஒரு மாத காலம் இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் அல்லது கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் அவற்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதுவும் பிரியாணி போன்ற உணவுகளை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு ஆசை வந்துவிடும்! அப்படிப்பட்ட நேரங்களில் அசைவ உணவின் மீதான ஆசையை ஓரளவு குறைக்க, அசைவ உணவைப் போன்ற சுவையும், மணமும், திருப்தியும் தரக்கூடிய சைவ உணவுகளைத் தேடுவது இயல்புதான்.


தொப்பை குறையணுமா? - ராஜ்மா மசாலாவை முயர்ச்சி செய்து பாருங்க!
[Thursday 2026-10-01 16:00]

உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். ஆனால், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பது பலருக்கும் சவாலாகவே உள்ளது. உடல் எடையை சீராகக் கட்டுப்படுத்துவதில் சரியான உணவுமுறைக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ராஜ்மா, ஆரோக்கியமான உணவாகும்.


5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம்!
[Wednesday 2026-09-30 16:00]

ஐஸ்க்ரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி என விதவிதமான சுவைகளில் சில நூறு அல்லது அதிகபட்சம் சில ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கிச் சாப்பிடுவோம். ஆனால் ஒரு ஐஸ்க்ரீமின் விலை ரூ.5.5 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா? ஜப்பானிய நிறுவனமான செல்லாட்டோ (Cellato) தயாரித்துள்ள ‘பியாகுயா (Byakuya)’ என்ற ஐஸ்க்ரீம் தான் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீமாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.


தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை: வியக்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
[Tuesday 2026-09-29 16:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைகக்கூடியதும் அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளக்கூடியதுமான வேர்க்கடலையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலிசாச்சுரேட்டட் (PUFA) கொழுப்புகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL-ஐ குறைத்து, நல்ல கொழுப்பான HDL-ஐ அதிகரிக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.


பச்சை திராட்சை மற்றும் கருப்பு திராட்சை: எது உடல்நலத்திற்கு சிறந்தது?
[Monday 2026-09-28 16:00]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் திராட்சையும் ஒன்று. பச்சை மற்றும் கருப்பு திராட்சைகள் இரண்டுமே உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் எது அதிக இனிப்பு, எது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பச்சை மற்றும் கருப்பு திராட்சைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இருப்பினும், கருப்பு திராட்சையில் சர்க்கரை அளவு சற்று அதிகமாக இருப்பதால், அவை அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.


வாழைப்பழத்தோலில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா?
[Saturday 2026-09-26 16:00]

பொதுவாக வாழைப்பழங்களில் மட்டுமல்லாமல் வாழைப்பழத்தோலிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, பொட்டாசியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிரிப்டோபான் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், வாழைப்பழத்தோலில் லூட்டின் மற்றும் கரோட்டினாய்டுகளும் காணப்படுகின்றன. வாழைப்பழத்தோலில் உள்ள லூட்டின் ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு கண்களை ஆக்ஸிடேட்டிவ் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.


ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மலேசிய ஸ்டைல் முட்டை சம்பல்!
[Friday 2026-09-25 16:00]

குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும், அதேநேரம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைப் பட்டியலிட்டால், அதில் முட்டைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் முட்டை, உடலுக்குத் தேவையான உயர்தர புரதத்தை வழங்கும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும், சேதமடைந்த செல்களைச் சீரமைப்பதற்கும் உதவுவதுடன், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும் துணைபுரிகிறது. அதுமட்டுமல்லாமல், முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமையைப் பாதுகாக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்திற்கும், சருமத்தின் இயற்கையான பொலிவைப் பேணுவதற்கும் உதவுகின்றன.


கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் 5 இயற்கை மூலிகைகள்!
[Thursday 2026-09-24 16:00]

கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும், மெழுகு போன்ற தன்மை கொண்ட ஒரு கொழுப்புப் பொருளாகும். உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் அவசியம். செல்களின் அமைப்பு, சில ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் வைட்டமின் D உருவாக்கம் போன்ற முக்கிய செயல்பாடுகளிலும் இது பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் பொதுவாக HDL மற்றும் LDL எனப்படும் இரண்டு முக்கிய வகைகளாக அறியப்படுகின்றது.


அஸ்ஸாம் பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு!
[Wednesday 2026-09-23 18:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் ஞாயிறு மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்களும் ஏராளம். வாரம் முழுவதும் வேலை, பள்ளி என பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே மாறிவிடுகிறது.


வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தாகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு!
[Tuesday 2026-09-22 16:00]

கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் முக்கியமான கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி. சிறிய மிளகு அளவில் நறுமணமிக்க பழங்களைத் தருவதால், சில பகுதிகளில் இதை “மிளகு தக்காளி” என்றும் அழைக்கின்றனர். மணத்தக்காளியின் இலைகளும் பழங்களும் பாரம்பரியமாக பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் கீரையும் பழங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மணத்தக்காளி வத்தல் நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொடர்பான சில பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா