Untitled Document
November 27, 2024 [GMT]
 
அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா?
[Saturday 2024-06-08 18:00]

காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். காளான்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது. மேலும் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.

குளிர்காலத்தில் வேர்க்கடலை கட்டாயம்!
[Tuesday 2024-11-26 18:00]

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது. அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிடக்கூடிய பொருளாகவும் வேர்க்கடலை இருக்கின்றது. நம்முடைய உணவு முறை நமது ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருப்பது அவசியம். வேர்க்கடலையில் சிற்றுண்டி செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்!
[Monday 2024-11-25 18:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய காய்கியான செள செள காயில் அதிகமாக நீர் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் காணப்படுகின்றது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். சௌசௌ காயில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் இதில் காணப்படுகின்றது.


அசத்தல் சுவையில் பூண்டு மிளகு சிக்கன் வறுவல்!
[Sunday 2024-11-24 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகளை காரசாரமாக சாப்பிடுவது தான் பிடிக்கும். அப்படி பூண்டு மிளகு சேர்த்து அசத்தல் சுவையில் காரசாரமான சிக்கன் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


அரிசி உளுந்து இல்லாமல் பஞ்சு போன்ற இட்லி செய்யலாம் எப்படி தெரியுமா?
[Saturday 2024-11-23 18:00]

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவபை்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர். பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.


ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது?
[Friday 2024-11-22 18:00]

சில பிரதேசங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நடைமுறையில் ஒன்றாக திகழும் திகழும் விடயம் தான் ஒட்டகங்களுக்கு உயிருள்ள பாம்புகள் உணவாக கொடுக்கப்படுவது. ஆனால் இந்த அசாதாரண உணவு முறை பாரம்பரிய மருத்துவத்துடன் தொடர்புப்பட்டதாக நம்பப்படுகிறது. காரணம் பாம்புகளை உட்கொள்வது ஒட்டகங்களின் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.


கிராமத்து மண்வாசனையில் கத்தரிக்காய் குழம்பு!
[Wednesday 2024-11-20 18:00]

நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.


தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் அற்புத பானம்!
[Tuesday 2024-11-19 18:00]

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.


ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்!
[Monday 2024-11-18 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட் என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும். எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு முறை இப்படி சிக்கன் வறுவல் செய்து பாருங்க.


முடி அடர்த்தியாகவும் நீளமான கருகரு கூந்தல் வேண்டுமா?
[Monday 2024-11-18 06:00]

இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இப்படி அதிகமாக இருக்கும் பிரச்சனைக்காக பலர் எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருக்கும் அவசர கால கட்டத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.


குளிர்காலத்தில் இதயத்தை பலவீனமாக்கும் உணவுகள்!
[Friday 2024-11-15 17:00]

பொதுவாக காலநிலைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் நாம் நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். இதனால் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் இலகுவாக வந்து விடும்.


இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா?
[Thursday 2024-11-14 18:00]

எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம். பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது. அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.


மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-11-13 18:00]

முன்னைய காலங்களில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது, சமையலறையில் எந்த பொருட்களையும் தொடக்கூடாது, தனியறையில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுப்பாடுகளை பெரும்பாலான பெண்கள் இன்றுவரையில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளாகவே பார்க்கின்றார்கள்.


தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி!
[Tuesday 2024-11-12 18:00]

பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.


கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை!
[Monday 2024-11-11 18:00]

மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


கெட்ட கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்!
[Sunday 2024-11-10 17:00]

இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அவசியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. அத்துடன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.


புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Saturday 2024-11-09 18:00]

பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.


ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?
[Friday 2024-11-08 18:00]

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான நோய்கள் நம்மை வந்து சேரும். பாதாமில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ராலை குறைக்க உதவும். இதை எப்படி சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


எண்ணற்ற பலன்களை தரும் ஊற வைத்த அரிசி நீர்!
[Thursday 2024-11-07 18:00]

அரிசி ஊற வைத்த தண்ணீரை வெளியே கொட்டாமல் அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான வீடுகளில் அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி வீணடித்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லைாயம். ஆம் அரிசி கழுவும் தண்ணீரை வைத்து நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சடி!
[Wednesday 2024-11-06 19:00]

பொதுவாகவே ஆந்திரா பாணியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் காரசாரமாகவும் அசத்தல் சுவையிலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் காரத்திற்கு பெயர் போன இடம் என்றால் அது ஆந்திரா மாநிலம் தான். ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் காரசாரமான தக்காளி பச்சடியை எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். தங்காளியில் அதிகளவில் வைட்டமின் சி காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.


கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?
[Tuesday 2024-11-05 18:00]

பொதுவாகவே பெண்களுக்கு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் கேரள பெண்களின் கூந்தல் எப்போதும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நெல்லிக்காயை வைத்து தயாரிக்கும் சம்மந்தி தான். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக இருக்கின்றது. இதில் ஒரு ஆப்பிள் பழத்திற்கு நிகராக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.


முழங்கால் வலியை குணமாக்கும் நடைபயிற்சி!
[Monday 2024-11-04 18:00]

பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைபயிற்சி அவசியமாக பார்க்கப்படுகின்றது. நடைபயிற்சி எனக் கூறும் பொழுது பலர் முன்னோக்கி தான் நடப்பார்கள். ஆனால் முன்னோக்கி நடப்பதற்கு பதிலாக பின்னோக்கி நடந்தால் அதில் நன்மைகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. முழங்கால் வலி முதல் உடல் எடையை குறைப்பது வரையிலான பல பலன்கள் பின்னோக்கி நடப்பதால் இலகுவாக கிடைக்கின்றன. சிலர் என்ன செய்தாலும் எடை குறையாமல் இருக்கின்றது என கவலையில் இருப்பார்கள். இப்படியானவர்கள் பின்னோக்கி நடப்பது நல்லது. அப்படியாயின் பின்னோக்கி நடப்பதன் மூலம் எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


ஆபத்தான நோய்க்கு சிறந்த மருந்தாகும் கொய்யாப்பழம்!
[Sunday 2024-11-03 16:00]

பொதுவாக பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. மற்ற உணவுகளை விட மனிதர்களுக்கு ஆரோக்கியம் தருவதில் பழங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் கொய்யாப்பழங்கள் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தருகின்றது. ஏனெனின் கொய்யாப்பழங்களில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் உள்ளன.


மழைக்காலத்தில் தவறியும் காளான் சாப்பிடாதீங்க! ஏன் தெரியுமா?
[Saturday 2024-11-02 17:00]

கோடை காலத்தின் பின்னர் அதன் வெப்பத்தை தணிக்க மழை காலம் வரகிறது. இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவாகளுக்கு நோய் தொற்றும். எப்போதம் போல மழைக்காலத்தில் உணவுகளை உட்கொள்ள முடியாது. இந்த பருவத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.


கால் பிடிப்பை அடியோடு விரட்டும் காரசாரமான முருங்கைக்காய் ரசம்!
[Friday 2024-11-01 18:00]

நமக்கு நோய் வராமல் தடுப்பதற்கு உணவை சரிவர சாப்பிடுவது அவசியம். நாம் சத்தான உணவுகளை உட்கொண்டால் தான் நமது வாழ்வு மேன்படும். முருங்கைக்காய் உணவாக பலரும் பயன்படுத்துவார்கள். இந்த மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை.முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. பலரும் கால் வலி இடுப்புவலி போன்றவற்றால் சிரமப்படுவார்கள். இதற்காக முருங்கக்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


இருள் நீங்கி வாழ்வில் ஒளி பரவ அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
[Thursday 2024-10-31 17:00]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எமது வாசகர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மனிதன் வலைத்தளம் பெருமகிழ்ச்சி அடைகிறது. தீபாவளி பண்டிகையானது, அனைவரது அபிலாசைகளை நிறைவேற்றி சிறந்த ஒரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாகும்.


நாவூறும் சுவையில் பேரீச்சம்பழ பாயாசம்!
[Wednesday 2024-10-30 18:00]

எல்லோரது வீட்டிலும் எதாவது ஒரு விசேஷம் வந்தால் பாயாசம் செய்வது வழக்கம். எப்போதம் ஒரே பாயாசத்தை சாப்பிட்டால் சிலருக்கு பாயசம் மேல் இருக்கும் ஆசை கூட இருக்காது. தற்போது திபாவளி வருகிறது. இந்த நாளில் சுவையான இனிப்பு பண்டங்கள் எல்லோரும் செய்வார்கள். இந்த நெரத்தில் பாயாசம் செய்ய விரும்பும் சபர்களுக்காக பேரீச்சம்பழ பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.


1 ரூபா கூட செலவில்லாமல் முகத்தை பளபளபாக்க வேண்டுமா?
[Tuesday 2024-10-29 18:00]

பண்டிகை காலங்களில் புத்தாடை அணியும் போது மகம் எப்பொதம் அழகாக இருக்க வெண்டம் என அனைவரும் நினைப்பார். இதற்கு பார்லா சென்று அழகுபடுத்த நினைப்பார்கள். இது முகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பல ஆயிரம் செலவுகளும் அதிகரிக்கும். பிரகாசமான ஆரோக்கியமான சருமம் தான் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். இந்த செலவுகளை குறைத்த வீட்டில் நமக்கு தெரிந்த அழகு குறிப்புக்களை செய்து முகத்தை எப்படி அழகுபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


அசத்தல் சுவையில் ரவா லட்டு!
[Monday 2024-10-28 18:00]

பொவதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு அனைவரினது வீடுகளிலும் அதிகளவில் இனிப்பு பண்டங்களை செய்வது வழக்கம். ஆனால் பண்டிகை நாட்களில் நாம் செய்யும் இனிப்புக்களை உறவினர்கள் மற்றும் அயலர்களுக்கு கொடுப்பது போன்று அவர்களும் கொடுப்பார்கள். இதனால் நாம் வீடுகளில் அதிகமாக செய்யும் இனிப்புகள் அப்பயே இருக்கும்.


தீபாவளிக்கு முகம் கண்ணாடி போல பொலிவு பெற வேண்டுமா?
[Sunday 2024-10-27 18:00]

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பண்டிகை காலத்தில் பொலிவாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். இந்த பண்டிகையில் எதற்கு வீட்டில் அழகுப்பராமரிப்பு செய்ய வேண்டும் மேகப் செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் மேக்கப் இல்லாமல் முகம் ஒரு இயற்கை அழகு நிறைந்தாக வைத்திருக்க இந்த வழிமுறைகளால் முடியும்.


வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கா? - இந்த 4 செடிகளை வளர்த்தால் போதும்!
[Saturday 2024-10-26 16:00]

பொதுவாக எல்லோரத வீட்டிலும் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். நாம் தாவரங்கள் வளர்ப்பது வீட்டில் வளர்ப்பது அவசியம். கொசுத்தெல்லைக்கு வீட்டில் சில தாவரங்களை வளர்த்தால் அதற்கு முடிவு கட்டலாம். தற்போது வரும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை விரட்ட இந்த செடிகளை வளர்க்க வேண்டும். இந்த தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் கொசுக்களுக்கு இது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும். அந்த தாவரங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா