Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உணவுக் கறைகளைப் போக்க நவீன சலவை இயந்திரங்கள்..
[Saturday 2017-03-11 21:00]

இந்திய பாவனையாளர்களின் வேண்டுகோளையடுத்து, தமது சலவை இயந்திரங்களில் ‘கறி’ கறைகளைப் போக்குவதற்கென்று தனியாக ஒரு சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் பத்து சதவீதமானோரே சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும், சலவை இயந்திரங்கள் ஆடைகளில் பிரளும் கறிகளின் கறைகளை முழுவதுமாக நீக்குவதில்லை என்று புகார் அளித்தனர். இதன்மீது கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் பின்னர், ‘கறி’க் கறைக்கென்றே ஒரு தனியான சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிவித்துள்ளது.


இயற்கைக்காட்சிகள் மனிதருக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது..
[Saturday 2017-03-11 20:00]

இந்த இயற்கைக்காட்சிகளை காண்கையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? இயற்கைக் காட்சிகளை காண்பது உங்களை மகிழ்வூட்டும் என்று பிபிசி எர்த் செய்த ஆய்வு கூறுகிறது. ஆண்களைவிட பெண்களின் மனநிலையில் அதிக மாற்றம் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. 16 முதல் 24 வயதிலிருப்பவர்களிடம் இந்த காட்சிகள் பதட்டத்தையும் பயத்தையும் குறைக்க உதவுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் இணையம் மூலம் இந்தஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


செவ்வாயில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை..!!
[Friday 2017-03-10 21:00]

பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது. பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது.


14 வயதுச் சிறுவனின் வியத்தகு கண்டுபிடிப்பு!
[Friday 2017-03-10 19:00]

சரித்திர பாட வகுப்புக்காக தனது வயலை ஆராய்ச்சி செய்த சிறுவன் ஒருவன், இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தப்பட்ட விமானத்தின் பெரும்பாகத்தையும், விமானியின் உடல் எச்சங்களையும் கண்டுபிடித்துள்ளான். டேனியல் க்றிஸ்டியான்சென் (14) என்ற சிறுவன் டென்மார்க்கைச் சேர்ந்தவன். சரித்திர பாடத்தில் ஆர்வம் உள்ள டேனியல், பழைய இரும்புத் துண்டுகள் ஏதேனும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில், இரும்பைக் கண்டறியும் ‘மெட்டல் டிடெக்ட்டரு’டன் தனது தந்தைக்குச் சொந்தமான வயல் வெளியில் ஆராய்ந்துகொண்டிருந்தான்.


நிலத்தடி காய்கறிகளில் உள்ள சத்துக்கள்..
[Friday 2017-03-10 19:00]

முள்ளங்கி தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும். அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன.


அகதிகளுக்கு உதவும் இலவச "எந்திர வழக்கறிஞர்"..
[Thursday 2017-03-09 19:00]

தொடக்கத்தில் போக்குவரத்து அபராதத்திலிருந்து தப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஒன்று, இப்போது சட்ட கோரிக்கைகளோடு வருகின்ற அகதிகளுக்கு உதவி வருகிறது. சுத்தியுடன் எந்திர மனிதர்படத்தின் செயலியை வடிவமைத்தபோது, உலகின் முதலாவது எந்திர வழக்கறிஞர் என்று அதனை அழைத்தார். உரையாடும் எந்திர கணினி செயலியான இது, எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் உரையாடல் மேற்கொள்கிறது.


காற்று மாசைக் குறைக்க சீனாவில் மின்சார காருக்கு அரச மானியம்..
[Thursday 2017-03-09 19:00]

உலக அளவில் அதிகமான காற்றுமாசுள்ள நாடுகளின் ஒன்று சீனா. சீனாவின் காற்று மாசில், மூன்றில் ஒரு பங்கு அதன் கார்களால் ஏற்படுகிறது. காற்றை மாசுபடுத்தும் மோசமான கார்களை குறைப்பதன் மூலம் சீன வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையை குறைத்து, நாட்டின் வான்பரப்பை மீண்டும் நீலமாக்கப்போவதாக சீன அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மின்சார கார்களை அதிரிப்பதன் மூலம் அந்நாட்டின் பல மில்லியன் கார்கள் வெளியிடும் நச்சுப்புகையைக்குறைக்க சீனஅரசு முயல்கிறது. நிலக்கரி மற்றும் பெட்ரோல் சார்பிலிருந்து விடுபட்டு, மீளுருவாக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் சீன அரசு மும்முரம் காட்டுகிறது.


இளநரையை போக்கும் இயற்கை வைத்தியம்!
[Thursday 2017-03-09 19:00]

இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.


சூரிய புயலை கண்டறியும் புதிய தொழில்நுட்பம்..
[Wednesday 2017-03-08 19:00]

தற்போது இயக்கத்தில் இல்லாத கோலார் தங்கச் சுரங்கத்தில் பல தசாப்தங்களுக்கும் மேலாக மண்ணில் புதைக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகு குழாய்களுக்கும் பூமியின் காந்த வெளியில் இருக்கும் சூரிய புயலைப் பற்றிய பரப்பான அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் என்ன தொடர்பு? ஆம் நிறைய தொடர்பு உள்ளது. மிக குறிப்பிடத்தக்க அறிவியல் ஆய்வில் 3,700க்கும் மேலான அம்மாதிரியான குழாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


சருமத்திற்கு பளிச்சிடும் அழகைத் தரும் சந்தனம்..
[Wednesday 2017-03-08 19:00]

சருமத்தை பாதுகாப்பதில் இயற்கையான மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் முந்தைய நாளில் இயற்கையான மூலிகைகள், இலைகள் கொண்டே தங்கள் அழகை மேம்படுத்தி வந்தனர். முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும் என வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி, தயிர், முல்தானி மட்டி, கடலை பருப்பு, தேன், நெல்லிக்காய் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இவை முற்றிலும் சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்தை போஷிக்கவும் செய்யும். பெண்கள் வீட்டில் இம்மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்த சில குறிப்புகள்...


எத்தியோப்பிய பச்சை மாமிச விருந்து
[Wednesday 2017-03-08 18:00]

சமைக்காத பச்சை மாமிசம் என்பது எத்தியோப்பியர்களின் விருப்ப உணவு. ஆனால் அது ஆபத்தானது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். உணவு விடுதிகள் முதல் கொண்டாட்ட விருந்துகள் வரை பச்சை மாமிச உணவு எத்தியோப்பியாவில் மிகவும் பிரபலம். இந்த பழக்கம் எப்படி தோன்றியது என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் இல்லை.போர்க்காலத்தில் இராணுவத்தினர் சமைக்க முடியாமல் பச்சை மாமிசம் சாப்பிட நேர்ந்ததே இந்த பழக்கம் உருவாக காரணமாக இருக்கலாமென கருதப்படுகிறது.


பருமனைக் குறைக்கும் 'முட்டைக்கோஸ்'
[Tuesday 2017-03-07 18:00]

முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் ‘ முட்டைக்கோசு’ முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம்.


வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் பெறும் வழி இதோ..
[Tuesday 2017-03-07 18:00]

வறட்டு இருமல், தொண்டை வலி, சளி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றி விரைவில் நிவாரணம் பெறலாம்.வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் வைத்தியம் இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.


யூ டியூப் அறிமுகப்படுத்தும் நவீன வசதி
[Monday 2017-03-06 20:00]

வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ டியூப் வலைத்தள காணொளி சேவையானது, தற்போது கட்டண முறையிலான தொலைக்காட்சி சேவையை தொடங்கவுள்ளதாக, யூ டியூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜிகி தெரிவித்துள்ளார்.


எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணும் உணவுகள்!
[Monday 2017-03-06 19:00]

எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.


பதின்ம வயதினரின் ஆரோக்கியம் குறித்த கையேடு ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தால் வெளியீடு
[Monday 2017-03-06 19:00]

பதின்ம வயதினரின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் அடங்கிய இந்திய அரசாங்கத்தின் கையேடு, பாலியல் குறித்து முற்போக்கான கருத்துக்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளதால், பாராட்டைப் பெற்றுள்ளது. ஐ.நா. மக்கள் தொகை நிதியத்துடன் இணைந்து, தேசிய சுகாதார இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த தொகுப்பானது, இளம் பருவத்தை எட்டும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் மேம்பாடு குறித்த பிரச்சனைகளை விவாதிக்கும் நோக்கில் இளம் கல்வியாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.


தூங்கும்போது கட்டாயம் கவனிக்கவேண்டிவை..
[Saturday 2017-03-04 20:00]

கூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் மாசு, வெயில் போன்ற காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.சாதாரணமாகவே பகலில் இறுக்கிய குதிரை வால் போடுவது தவறு. இரவுகளில் குதிரை வாலுடனோ அல்லது இறுக்கி கூந்தலை பின்னுவதாலோ ரத்த ஓட்டம் குறைந்து முடி பலமிழக்கும். இதனால் அடர்த்தி குறைய வாய்ப்புகள் அதிகம். அதனால் தூங்கும்போது தலைமுடியை ஃப்ரீயாக விடுவது நல்லது.


வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்:
[Saturday 2017-03-04 18:00]

உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.‘பிரம்மி’ என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் தலை சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன.


தாங்க முடியாத பல் வலியா? - இதை செய்யுங்க நொடியிலே பறந்து போகும் !
[Saturday 2017-03-04 08:00]

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.


சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது வெந்தயம்
[Friday 2017-03-03 20:00]

கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத நார்பொருளே மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


இலகுவில் உடல் பருமனைக் குறைக்கும் வழி இதோ..
[Friday 2017-03-03 20:00]

தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறலாம். உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.


இந்த பானத்துடன் சிறிது தேன்! - இனிமேல் முதுகு வலியே வராது..!
[Thursday 2017-03-02 22:00]

பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது. ஏன் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்பு மூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும். இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை ஒரு இயற்கை பானத்தைக் குடிப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். இங்கு முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் வழிமுறைகள்..
[Thursday 2017-03-02 22:00]

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். விரல் நகங்களை பராமரிப்பது எப்படி? நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.


நாம் குளிப்பது அழுக்கை நீக்க அல்ல; காரணம் இதோ..
[Thursday 2017-03-02 18:00]

*உண்மையில் நம் மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*


அதிகபட்ச நினைவாற்றலுள்ள யானைகள் தூங்கும் நேரம் மிகக்குறைவு..
[Thursday 2017-03-02 18:00]

யானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள். ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். போட்ஸ்வானா யானைகளை கண்காணித்த ஆய்வாளர்கள், அவை சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். ஆரோக்கியமான தூக்கமே நினைவாற்றலுக்கு அடிப்படை என்று பல ஆய்வுகள் காட்டியுள்ளன. ஆனால் அதிகபட்ச நினைவாற்றல் கொண்ட பாலூட்டிகளான யானைகள், மிகக்குறைவான நேரமே தூங்கினாலும் அவற்றின் நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதன் ரகசியம் என்ன?


சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..
[Thursday 2017-03-02 18:00]

மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது.


அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தர்பூசணி
[Wednesday 2017-03-01 19:00]

வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம்.


மனப் பதற்றம், மன அழுத்தத்தைக் குறைக்கும் நடைப்பயிற்சி..
[Wednesday 2017-03-01 13:00]

நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்று சொல்வதை விட நேரம் ஒதுக்க விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தில் வேறு வேலை ஏதாவது செய்து விடலாம் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு உள்ளது.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா